ஆண்கள் அழகாக காட்சியளிக்க தவறாமல் பின்பற்ற வேண்டியவைகள்!

ஆண்கள் அழகாக காட்சியளிக்க தவறாமல் பின்பற்ற வேண்டியவைகள்!

தற்போது ஒவ்வொரு ஆணும் தங்கள் அழகின் மீது அதிக அக்கறை காட்டுகிறார்கள். அதே சமயம் ஆண்களுக்கு சிம்பிளாக அழகை அதிகரிப்பது எப்படி என்று தெரிந்து கொள்வதில் ஆர்வம் அதிகம்.
ஒரு ஆண் அழகாக காட்சியளிக்க பல க்ரீம்களை பயன்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. தினமும் ஒருசில விஷயங்களைப் பின்பற்றினாலே போதும்.
1. இங்கு அப்படி அழகாக காட்சியளிக்க ஆண்கள் தினமும் தவறாமல் பின்பற்ற வேண்டியவைகள் என்னவென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து பின்பற்றினாலே போதும்.
2. அதிகாலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் 1 லிட்டர் தண்ணீரைக் குடிக்க வேண்டும். இதனால் உடல் மற்றும் இரத்தத்தில் உள்ள டாக்ஸின்கள் அனைத்தும் வெளியேறி, சருமத்தின் பொலிவு அதிகரிக்கும். அதுமட்டுமின்றி, இச்செயல் உடல் எடையைக் குறைக்கவும் உதவும்.
3. வாரம் ஒருமுறை முகத்தில் வளரும் தாடியை ட்ரிம் செய்யவும். அதுமட்டுமின்றி மூக்கினுள் வளரும் முடிகளையும் தவறாமல் வாரம் ஒருமுறை நீக்குங்கள்.
4. புன்னகை ஒருவரின் அழகை இன்னும் அதிகரித்துக் காட்டும். அப்படி புன்னகைக்கும் போது பற்கள் மஞ்சள் நிறத்தில் இருந்தால் நன்றாகவா இருக்கும். எனவே தினமும் இரண்டு முறை பற்களைத் துலக்குவதோடு, நாக்கை தினமும் மறக்காமல் சுத்தம் செய்யுங்கள். இதனால் வாய் துர்நாற்றம் தடுக்கப்படும்.
5. கோடைக்காலம் ஆரம்பமாக போகிற நிலையில், சூரியக்கதிர்களின் தாக்கம் சருமத்தைப் பொசுக்கும் வகையில் இருக்கிறது. எனவே சருமத்தைப் பாதுகாக்கும் வகையில் வெயிலில் செல்லும் முன் சன்ஸ்க்ரீன் லோசனை தவறாமல் பயன்படுத்தவும்.
6. சரியான தூக்கம் இல்லாமலிருப்பதும், அழகிற்கு கேடு விளைவிக்கும். அதிலும் கருவளையங்களை உண்டாக்கும். எனவே தினமும் தவறாமல் 7 மணிநேர தூக்கத்தை ஒவ்வொருவரும் மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
7. கூன் போட்டு இருப்பதைத் தவிர்த்து, நேரான நிலையில் எப்போதும் இருங்கள். இது உங்களை தைரியமானவராக மற்றும் வலிமையானவராக வெளிக்காட்டும். ஒரு ஆணுக்கு இதைவிட அழகு வேறு எதுவும் இல்லை.
8. எப்போதும் உங்களுக்கு பொருந்தும் உடையை அணியுங்கள். அதைவிட்டு மிகவும் தளர்வான அல்லது மிகவும் இறுக்கமான உடைகளை அணியாதீர்கள். இது உங்களை மிகவும் கேவலமாக வெளிக்காட்டும். எனவே உடுத்தும் உடையில் முதலில் அக்கறை காட்டுங்கள்.
9. என்ன தான் காலை அல்லது மாலையில் உடற்பயிற்சி செய்திருந்தாலும், வெளியே பார்ட்டி அல்லது வேறு நிகழ்ச்சிக்கு செல்லும் முன் 10 நிமிடம் புஷ்அப் செய்யுங்கள். இதனால் உங்கள் தசைகள் இறுகி, உங்கள் தோற்றம் சிறப்பாக காட்சியளிக்கும்.
10. உதடு வறட்சியைப் போக்க பெண்கள் மட்டும் தான் லிப்-பாம் பயன்படுத்த வேண்டும் என்பதில்லை. ஆண்களுக்கு உதடு வறட்சியடைந்தாலும், லிப்-பாம் பயன்படுத்தலாம். வறட்சியான உதடுடன் கேவலமாக இருப்பதோடு, லிப்-பாம் பயன்படுத்தி அழகாக மிளிருங்கள்.
11. தினமும் சருமத்திற்கு மாய்ஸ்சுரைசர் பயன்படுத்துங்கள். இதனால் வறட்சியான சருமத்தைத் தவிர்க்கலாம். மேலும் சருமம் ஆரோக்கியமாகவும், புத்துணர்ச்சியுடனும் காணப்படும்.
12. ஒவ்வொரு முறை வெளியே சென்று வீட்டிற்கு வந்ததும், முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். அதுமட்டுமின்றி, இரவில் படுக்கும் முன் தவறாமல் முகத்தைக் கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேறும்.