பிறந்த தேதி - எளிய பரிகாரங்களை செய்து பலனடைவோம்

பிறந்த தேதி - எளிய பரிகாரங்களை செய்து பலனடைவோம்!

 தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

#பிறந்த தேதியை கூட்டினால் வரும் எண் 1 எனில்
1,10,19,28 ஆகிய தேதியில் பிறந்தவர்கள் மரத்தால் செய்த புல்லாங்குழலை வீட்டின் வடக்கு திசையில் வைத்திருப்பது சிறந்தது. புல்லாங்குழலில் நுழையும் காற்று எப்படி இசையாக மாறுகிறதோ அதுபோல அவர்களது வாழ்வில் வரும் இன்ப துன்பங்கள் அனைத்தும் அவர்களுக்கு இறுதியில் மகிழ்ச்சியையே தரும்.

#பிறந்த தேதியை கூட்டினால் வரும் எண் 2 எனில்
2,11,20,29 ஆகிய தேதியில் பிறந்தவர்கள் வெள்ளை நிறத்தால் செய்யப்பட்ட ஏதேனும் பொம்மையை வீட்டின் வட-தென் திசையில் வைத்திருப்பது நல்லது. இப்படி செய்வதன் மூலம் அந்த பொம்மை அவர்களின் வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும். இதனால் அந்த வீட்டில் சண்டை சச்சரவுகள் இருக்காது.

பிறந்த தேதியை கூட்டினால் வரும் எண் 3 எனில்
3,12,21,30 ஆகிய தேதியில் பிறந்தவர்களுக்கு அதிஷ்டம் தரக்கூடிய பொருள் ருத்ராட்சம். இவர்கள் தங்கள் வீட்டின் வடகிழக்கு திசையில் ஒரு முழு ருத்ராட்சத்தை வைப்பது சிறந்தது. இதனால் வீட்டில் நிம்மதி நிலைக்கும்.

#பிறந்த தேதியை கூட்டினால் வரும் எண் 4 எனில்
4,13,22,31 ஆகிய தேதியில் பிறந்தவர்கள் ஒரு நிலைக்கண்ணாடியை வீட்டின் தென்மேற்கு திசையில் திசையில் வைப்பது நல்லது. இதன் மூலம் அந்த வீட்டில் நல்ல நிகழ்வுகள் ஏற்படும். தென்மேற்கு திசையில் வைக்கப்பட்டுள்ள கண்ணாடியை எப்போதும் உடையாமல் பார்த்துக்கொள்ளவேண்டியது அவசியம்.

#பிறந்த தேதியை கூட்டினால் வரும் எண் 5 எனில்
5,14,23 ஆகிய தேதியில் பிறந்தவர்கள் வீட்டின் வடக்கு திசையில் குபேரர் படத்தையோ அல்லது லட்சுமி படத்தையோ வைத்திருப்பது நல்லது. குபேரர் படம் என்பது சிரிக்கும் புத்தர் படமோ பொம்மையோ அல்ல. உன்மையான குபேரர் படத்தை வைத்திருக்க வேண்டும். இதனால் வீட்டில் செல்வம் சேரும்.

#பிறந்த தேதியை கூட்டினால் வரும் எண் 6 எனில்
6,15,24 ஆகிய தேதியில் பிறந்தவர்கள் வீட்டில் வைத்திருக்க வேண்டிய பொருள் மயில் இறகு. வீட்டின் தென்கிழக்கு திசையில் இவர்கள் மயில் இறகை வைத்திருப்பதன் மூலம் எப்போதும் வீட்டில் செல்வம் குறையாமல் இருக்கும்.

#பிறந்த தேதியை கூட்டினால் வரும் எண் 7 எனில்
7,16,25 ஆகிய தேதியில் பிறந்தவர்கள் வீட்டில் வைத்திருக்க வேண்டிய பொருள் ருத்ராட்சம். வீட்டின் தென்கிழக்கு திசையில் இவர்கள் ருத்ராட்சம் வைத்திருப்பதன் மூலம் வீட்டில் நிம்மதி நிலவும். இவர்கள் வைத்திருக்கும் ருத்ராட்சமானது நல்ல கருஞ்சிவப்பு ருத்ராட்சமாக இருக்கவேண்டும்.

#பிறந்த தேதியை கூட்டினால் வரும் எண் 8 எனில்
8,17,26 ஆகிய தேதியில் பிறந்தவர்கள் வீட்டின் தென் திசையில் கருப்பு நிற கிரிஸ்டலை வைத்திருப்பது சிறந்தது. இப்படி செய்வதன் மூலம் அந்த வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரித்து எதிர்மறை ஆற்றல் குறையும். இதனால் வீட்டில் பல நல்ல விடயங்கள் நிகழும்

#பிறந்த தேதியை கூட்டினால் வரும் எண் 9 எனில்
9,18,27 ஆகிய தேதியில் பிறந்தவர்கள் வீட்டில் வைத்திருக்க வேண்டிய பொருள் பிரமீடு. வீட்டின் தென் திசையில் இவர்கள் பிரமீடு வடிவத்தில் ஏதேனும் ஒன்றையோ அல்லது பிரமிடையோ வைத்திருப்பதன் மூலம் வீட்டில் நல்ல எண்ணங்கள் நிலைத்திருக்கும்.