பெண்கள் உடல் ஆரோக்கியத்திற்காக செய்ய வேண்டியவை

பெண்கள் உடல் ஆரோக்கியத்திற்காக செய்ய வேண்டியவை



               தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 


பெண்கள் எப்பொழுதும் தங்கள் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க நேரம் ஒதுக்குவதேயில்லை. பெண்கள் தங்கள் ஆரோக்கியத்திற்காக செய்ய வேண்டியவை என்னவென்று பார்க்கலாம்.

பெண்கள் எப்பொழுதும் தங்கள் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க நேரம் ஒதுக்குவதேயில்லை. குடும்பம், உறவுகள் போன்றவற்றை பாதுகாப்பதிலேயே அவர்களின் நேரம் கரைந்து விடுகிறது. குடும்பத்தை கவனிக்க கூடாது என்று கூற வரவில்லை. தங்களுக்காகவும் வாழ கற்றுக் கொள்ள வேண்டும் என்பதே இந்த கட்டுரையின் நோக்கம்.

* கண்டிப்பாக காலை உணவைத் தவிர்க்கக் கூடாது. இரவு உணவுக்கும் காலை உணவிற்கும் இடையில் 12 மணிநேர இடைவெளி இருக்கிறது. சாப்பிடாமல் இருப்பது உடலுக்கும் மனதிற்கும் சோர்வைத் தரும். சாப்பிட நேரம் இல்லையென்றால் குறைந்தபட்சம் பாதாம் போன்ற பருப்புகளையும், வாழைப்பழத்தையுமாவது சாப்பிட வேண்டும்.

* வயிறு மற்றும் இடுப்புச் சதையைக் குறைக்க முயற்சிப்பது நல்லது. கை, கால் போன்ற பகுதிகளில் இருக்கும் கொழுப்புகள் நம் உடம்பில் சரியான இரத்த சர்க்கரை இருக்குமாறு பார்த்துக் கொள்கின்றன. மாறாக வயிறு மற்றும் இடுப்புப்பகுதியில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பானது உடலுக்கு தீங்கு விளைவிக்கும். சாப்பாட்டு நேரம் வந்துவிட்டது என்பதற்காக சாப்பிடாமல், பசித்தால் மட்டுமே சாப்பிடுவது என்ற பழக்கத்தை கடைபிடிப்பது நல்லது. வறுப்பது, பொரிப்பது போன்றவற்றை விட்டுவிட்டு, வேக வைத்த உணவுகளை அதிகமாக சாப்பிடுவது நல்ல பலனைக் கொடுக்கும்.

* அதிகப்படியாக ஈஸ்ட் சேர்த்த உணவுகளை சாப்பிடுவது நல்லதல்ல. இவற்றை அதிகமாக சாப்பிடுவதால் உற்சாகமின்மை ஏற்படும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உற்சாகமும் மகிழ்ச்சியும் நம்மிடமே இருக்க வேண்டுமென்றால் பேக்கிங் செய்யப்பட்ட உணவுகள், வினிகர் போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.

* மெனோபாஸ் காலத்தை நெருங்கும்போது முகத்தில் வெயிலினால் ஏற்படும் தாக்குதல்கள் அதிகமாக இருக்கும். இந்த காலகட்டத்தில் ஈஸ்ட்ரோஜனும் நம்முடைய உதவிக்கு வராது. அதனால் கண்டிப்பாக சூரிய ஒளிக்கதிர்களிலிருந்து பாதுகாக்கும் க்ரீம்களைப் போட்டுக் கொள்ள வேண்டும்.



* இந்தியாவில் உள்ள பெண்களில் பெரும்பாலானவர்கள் இரும்புச் சத்து குறைபாடு உடையவர்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதனால் தினமும் கீரை, உலர்ந்த திராட்சை, வெல்லம் போன்றவற்றை சாப்பிடுவதால் இந்த குறைபாட்டை நீக்க முடியும், அல்லது இரும்புசத்து மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனைப்படி சாப்பிடலாம்.

* தினசரி வாழ்க்கையில் சுலபமான யோகாசனங்களை நடைமுறைப்படுத்தலாம். கீழே விழுந்த பொருட்களை எடுப்பதற்கு முதுகை வளைத்து நன்றாக குனிந்து எடுக்கலாம். உட்காரும்போது நன்றாக சம்மணமிட்டு உட்காரலாம். ஐம்பதுகளில் இருந்தாலும் இதை செய்வது நல்ல பலனைக் கொடுக்கும்.

* அதிகப்படியான புரதச்சத்து புற்றுநோயை உண்டாக்கும். புரதச்சத்தானது நம்முடைய உணவில் 20 சதவீதத்திற்கு மேல் அதிகமாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆனால் இந்தியர்கள், குறிப்பாக சைவ பிரியர்கள் இந்த 20 சதவீதத்தைக் கூட முழுமையாக சாப்பிடுவதில்லை. இதனால்தான் நம்முடைய உணவு நிபுணர்கள் அதிகப்படியான புரத சத்துள்ள உணவை சாப்பிட வலியுறுத்துகின்றனர்.

* பெண்களில் 80 சதவீதத்தினர் சரியான அளவிலான உள்ளாடைகளைத் தேர்ந்தெடுப்பதில்லை என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. தவறான அளவிலான உள்ளாடைகளை உபயோகிப்பதால் மார்பு பகுதியில் கட்டிகள், வலி போன்றவை ஏற்படும். மேலும் முதுகுவலி, தோள்வலி, சோர்வு, மூச்சுவிடுவதில் சிரமம் போன்றவையும் ஏற்படும். அதனால் சிரமம் பார்க்காமல் சரியான அளவு உள்ளாடையை தேர்ந்தெடுத்து அணிவது நல்லது.

* பெண்களுக்கு சோயா மிகவும் நல்லது. அதிகப்படியாக அருந்தப்படும் பசும்பால், எருமைப்பால் போன்றவை கொழுப்புச்சத்தை அதிகரித்துவிடும். இதற்கு பதிலாக சோயா பாலிலிருந்து கிடைக்கும் கால்சியம் மிகவும் நல்லது. மேலும் சோயாவில் புரதச்சத்து உள்ளது. இதை உட்கொண்டால் பெண்களின் உடலில் ஈஸ்ட்ரோஜன் அளவும் அதிகரிக்கும்.