தீ விபத்தில் சிக்கியவர்களுக்கு முதலுதவி - First Aid for Fire Accident?

தீ விபத்தில் சிக்கியவர்களுக்கு முதலுதவி - First Aid for Fire Accident?
first-aid-for-fire-accident


தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

தீக்காயத்தால் பாதிக்கப்படுபவர்களுக்கு முதலுதவி என்பது முக்கியமானது. தீக்காயம் அடைந்தவர்களுக்கு எப்படி முதலுதவி செய்ய வேண்டும் என்பதை தெரிந்துகொள்வோம்.

தீக்காயத்தால் பாதிக்கப்படுபவர்களுக்கு முதலுதவி என்பது முக்கியமானது. அதுவே காயத்தின் வீரியத்தை கட்டுக்குள் வைப்பதற்கு உதவும் முதல்கட்ட சிகிச்சையாகும். தீக்காயம் அடைந்தவர்களுக்கு எப்படி முதலுதவி செய்ய வேண்டும் என்பதை தெரிந்துகொள்வோம்.

* விபத்துகளின் மூலமாக ஏற்படும் காயத்திற்கும், தீக்காயத்திற்கும் நிறைய வேறுபாடுகள் இருப்பதால், இரண்டுக்கும் ஒரே மாதிரியான சிகிச்சையை நாமாகவே எடுத்துக்கொள்ளக்கூடாது.

* தீப்புண்ணில் கிருமிகள் தொற்று ஏற்படும் ஆபத்து அதிகம். எனவே பிறர் கைகளில் உள்ள அசுத்தம் மற்றும் கிருமிகள் தாக்குதல் புண்ணில் படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

* கடுமையான தீக்காயங்களுக்கு அதன் மீது காற்றுப்படாமல் மூடி பாதுகாக்க வேண்டும். இது வலியை குறைக்கும்.

* தீ விபத்தில் உடலின் மீது துணி ஒட்டிக்கொண்டிருந்தால் அவசரப்பட்டு அந்தத் துணியை அகற்றக்கூடாது.

* தீக்காயங்கள் அதிகம் ஏற்பட்டிருந்தால் பாதிக்கப்பட்டவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.

* மண்எண்ணெய், பெட்ரோல் உள்ளிட்ட எண்ணெய் பொருட்களால் தீ விபத்து நிகழ்ந்தால் அங்கே தண்ணீர் ஊற்றக்கூடாது. மீறி ஊற்றினால் அது எரிகின்ற எண்ணெய்யை மேலும் பரவச் செய்து விடும்.

* ஒருவரின் ஆடையில் தீப்பற்றிவிட்டால், உடனே தண்ணீரை அவர் மேல் ஊற்றி தீயைப் பரவவிடாமல் அணைக்கலாம். அல்லது கம்பளி, ஜமுக்காளம் போன்ற தடிமனானத் துணியைக்கொண்டு பாதிக்கப்பட்டவர் மீது போர்தி தரையில் உருளச்செய்தாலும் தீ அணைந்துவிடும்.

* வீடுகளில் சமைக்கும்போது கொதிக்கும் வெந்நீர் அல்லது எண்ணெய் கைத்தவறி உடம்பில் பட வாய்ப்பு உண்டு. இதனால் தோல் பாகம் வெந்து கடும் எரிச்சல் ஏற்படும். இம்மாதிரியான சமயங்களில், பாதிக்கப்பட்ட இடத்தில் ரசாயனக் கலவையான பேனா மை, காபி பொடி போன்றவைகளை பூசக்கூடாது. இது மேலும் புண்களில் நோய்த்தொற்றுக்கு வழிவகுக்கும்.

* தீக்காயத்தை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். மேல் தோல் மட்டும் சிவந்துவிடுதல் முதல்நிலைப் பாதிப்பு, தோலின் மேல் கொப்புளங்கள் உண்டாவது இரண்டாம் நிலை, மேல் தோல், கீழ் தோல், அதற்கு அடியில் உள்ள திசுக்கள் வரையிலும் ஆழமாகத் தீயால் கருகிவிடுவதை மூன்றாம்நிலை என்கிறார்கள்.

* தீப்பிடித்தவர் பதற்றத்தில் அங்கும் இங்குமாக ஓடினால் தீயின் வேகம் கூடி பாதிப்பு அதிகரிக்கும். ஆகவே, பதற்றப்படாமல் கவனமாக அவரை காப்பாற்ற முயற்சிக்க வேண்டும்.

* பாதிக்கப்பட்டவரின் உடம்பில் சுத்தமான காற்றுபடுமாறு பார்த்துக்கொள்வது நல்லது. ஒருபோதும் தீக்காயத்தின் மீது சோப் உபயோகித்து கழுவது கூடாது.

* அமிலத்தால் ஏற்பட்ட தீ விபத்துகளுக்கு மணலை உபயோகித்து நெருப்பை அணைக்க முயலுங்கள். மற்ற தீ விபத்துகளை நீருற்றி அணைக்க முயற்சி செய்யுங்கள்.