எந்த டிரஸ் போட்டாலும் குண்டா தெரியறீங்களா?

எந்த டிரஸ் போட்டாலும் குண்டா தெரியறீங்களா?


இலவச பங்கு சந்தை பயிற்சி : பதிவு செய்யுங்கள் -91- 9841986753

தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

டயட் இருப்பதும் உடலைக் குறைக்க நினைப்பதுவும் ஆரோக்கியமானது தான். அப்படியே வயிற்றைக் கட்டி டயட் இருந்தாலும் அவ்வப்போது நண்பர்கள் கொடுக்கும் பார்ட்டிகளில் எதையாவது சாப்பிட்டு விட்டு பின்பு எந்த டிரஸ் போட்டாலும் செட்டாவதில்லை என்று புலம்புவது நம் எல்லோருக்குமே வாடிக்கையான ஒன்று தானே...

இதுபோன்று விஷயங்களை ஒரே நாளில் சரிப்படுத்தி உடல்எடையைக் குறைத்துவிட முடியாது தான். ஆனால் நாம் அணியும் ஆடைகள் எந்த சிரமமும் இல்லாமல் நம்முடைய எடையைக் குறைத்துக் காட்டினால் கசக்கிறதா என்ன?


பெண்களைப் பொருத்தவரையில் மிடி என்பது அவர்களுடைய அழகை மேலும் கூட்டிக் காட்டும் ஒரு ஆடையாகவே இருக்கிறது. அதிலும் சற்று எடை கூடிய பெண்கள் முழு நீள மிடியை அணியாமல் முழங்கால் வரை அணிவது மிகப்பொருத்தமாக இருக்கும்.

மிக இறுக்கமான ஓவர் கோட், ஜாக்கெட்டுகளை அணியக் கூடாது. அது உங்களுடைய முழு எடையையும் வெளிக்காட்டும். கொஞ்சம் லூசாக இருக்கும் ஜாக்கெட்டுகளை அணிவது நல்லது.

உங்களது டெனிம் ஆடைகளுக்கு ஏற்ற ஹீல்ஸ் அணிவது உங்களுடைய கூடுதல் எடையைக் குறைத்து, சிக்கெனக் காட்டும்.

சரியான அளவில் நீங்கள் அணியும் பிராக்கள் உங்களுடைய உடல்வாகை சிக்கெனக் காட்டும். சரியான அளவில் பிரா அணியும் போது, மார்பகங்கள் தளராமல், தேவையில்லாத இடங்களில் சதை வெளியே பிதுங்காமல் அழகாக இருக்கும்.

ஒல்லியாகவும் அழகாகவும் காட்டும் கலர்கள் என இரண்டு கலர்கள் தான் உலக அளவில் நம்பப்படுகின்றன. அந்த இரண்டு கலர் கருப்பும் அடர்ந்த சிவப்பும் தான். அந்த இரண்டு கலர்களையும் உங்களின் நிறத்தையும் வடிவழகையும் மேம்படுத்திக் காட்டும்.

அதிக நீளமுள்ள, பேண்ட்டுகளைத் தவிர்ப்பது நல்லது. அதேபோல் தொப்புளுக்குக் கீழே பேண்ட் அணியுங்கள். இடுப்புக்கு மேலே பேண்ட் அணிவதைத் தவிர்க்க வேண்டும்.

நீளவாக்கில் கோடுகள் (வெர்ட்டிக்கிள் ஸ்டிரைப்ஸ்) ஆடைகளைத் தேர்ந்தெடுங்கள். அது உங்களுடைய உடல் எடையைக் குறைத்துக் காட்டும்.



இவை மட்டும் போதாது. இந்த ஆடைகளுக்குப் பொருத்தமான ஷூ அல்லது காலணிகள் அணிவது மிக முக்கியம்.