சைனஸ் பிரச்னை தடுக்கும் வழிகள்

சைனஸ் பிரச்னை தடுக்கும் வழிகள்


பங்கு சந்தைக்கு புதியவரா நீங்கள்?

Share Market Training : Whatsapp : 9841986753
பங்கு சந்தை பயிற்சி : Whatsapp : 9094047040

பங்குச்சந்தை பற்றி நன்கு அறிந்த பின்னரே முதலீடு செயவும்

பங்குச்சந்தையில் வெற்றிக்கான மந்திரம்
Click Below Link


"தனக்கு வந்தால்தான் தெரியும் தலைவலியும் காய்ச்சலும்" என்பார்கள். சைனஸ்காரர்களைக் கேளுங்கள் "வலியில் கொடிது சைனஸ் தலைவலி" என்று அலறுவார்கள். குளிர் காலங்களில் "அச்... அச்சென" தும்மிக்கொண்டே தலையைப் பிடித்துக்கொண்டு தவிப்பதைப் பார்க்கவே பாவமாக இருக்கும். என்ன பிரச்னை இது சைனஸ்?

அனைவருக்கும் ஏற்பட வாய்ப்பு உள்ள பொதுவான பிரச்னைகளில் ஒன்று சைனசைடிஸ். சுருக்கமாக, சைனஸ். இது சிறுவர்களிலிருந்து பெரியவர்கள் வரை யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். குறிப்பாக, இலையுதிர்காலத்தில், காற்று அடிக்கும்போது பாக்டீரியாத் தொற்று ஏற்பட்டு சைனஸ் வரலாம். இதனால் மூக்கின் உள் பகுதியான மியூக்கோஸ் தோல் அடுக்கு வீங்கத் தொடங்கும். மூக்குத் துவாரங்களின் அளவு சிறிதாகும். மியூக்கோஸ் படலம் மிகவும் மிருதுவானது. இவற்றில் உள்ள உணர்ச்சிமிக்க முடிகள், காற்றில் உள்ள தூசுக்களை வடிகட்டி அனுப்பும். இதனால் தலைவலி, மூக்கு, கன்னம் வீக்கம் மற்றும் தாடை வலி ஏற்படும்.

சைனஸ் பிரச்னை இரண்டு வகைப்படும். ஒன்று, ‘அக்யூட் ரியோ சைனஸைட்டீஸ்’ எனப்படும், இரண்டு வாரங்கள் மட்டுமே நீடிக்கும் குறுகிய கால சைனஸ். மற்றொன்று, ‘கிரானிக்  ரியோ சைனஸைட்டீஸ்’ எனப்படும் 10 முதல் 12 வாரங்கள் நீடிக்கும் நீண்ட கால சைனஸ். பொதுவாக, நெடுங்கால சைனஸ் பிரச்னை உள்ளவர்களுக்கு தூசு, புகை, மலரின் மகரந்தம் ஆகியவற்றை முகர்ந்தால் அடுக்குத் தும்மல் ஏற்படும்.

கண்களின் மேல் மற்றும் கீழ்ப்புறங்களில் நீர்கோப்பது, தசை வீக்கம், மூக்கு மற்றும் தொண்டையில் தொடர் அரிப்பு,  அடுக்குத் தும்மல், சளி,  படுத்தவுடன் இருமல், மூச்சுத் திணறல் மற்றும் அடிக்கடி கண்ணீர் வழிவது ஆகியவை இதன் முக்கியமான அறிகுறிகள். காற்றில் பரவும் இன்ஃப்ளூயன்ஸா (influenza) வைரஸ் மூலமாக சளி பிடிக்கிறது.  சரியாகப் பராமரிக்கப்படாத நீச்சல் குளங்களில் ஃபங்கஸ் இருக்கும். அவை மூக்கின் உள் பகுதியான மியூக்கோஸ் தோல் அடுக்குக்குள் புகுந்து சைனஸை உருவாக்கலாம். சிலருக்கு மூக்குத் துவார தடுப்புத் தண்டு, பிறவியிலிருந்தே வளைந்து இருக்கும். இதனால் ஒரு துவாரம் பெரிதாகவும், மற்றொரு துவாரம் சிறிதாகவும் இருக்கும். இதனால் சைனஸ் தாக்கும்போது இவர்களுக்கு பாதிப்பு அதிகமாக இருக்கும்.

சைனஸைத் தடுக்கும் வழிகள்:

கதவு தாழ்ப்பாள், கைப்பிடிகள் , கிரில் கம்பிகள் ஆகியவற்றில் வைத்த கையால் உடனே  முகத்தைத் துடைக்கும்போதோ, மூக்கில் படும்போதோ தூசுகள் உள்ளே போக வாய்ப்புள்ளது. எனவே, கையை அவ்வப்போது சுத்தமாகக் கழுவ வேண்டும்.

பொதுவாக , குளிர்காலங்களில் பாக்டீரியாத் தொற்று அதிகமாக இருக்கும். காலை நடைப்பயிற்சி செல்லும்போது முகத்தில் மஃப்ளர் கட்டிக்கொண்டு செல்வது நல்லது.

சைனஸ் பிரச்னை உள்ளவர்கள் முடிந்தவரை ஏசியைத் தவிர்ப்பது நல்லது. அப்படியே பயன்படுத்த வேண்டிய கட்டாயம் வந்தால், அதனை வாரத்துக்கு ஒருமுறை சுத்தம் செய்ய வேண்டும். அப்போதுதான்  தூசு படியாமல் இருக்கும்.

புகைபிடிக்கும் பழக்கத்தை அடியோடு விட்டுவிட வேண்டும். மியூக்கோஸ் படலத்தை சிகரெட் புகை எளிதில் பாதிக்கும். அரிப்பு, எரிச்சல் மற்றும் ஒவ்வாமையை ஏற்படுத்தும்.

நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு எளிதில் சைனஸ் தொற்று பரவும். முறையான உடற்பயிற்சி, அதிக காய்கறி மற்றும் பழங்களை உணவில் சேர்த்துக் கொள்ளுதல் ஆகியவற்றின் மூலம் சைனஸ் பிரச்னையைத் தடுக்கலாம்.

தூசு உள்ளே புகாமல் இருக்க மியூக்கோஸ் பகுதி எப்போதும் மெலிதான ஈரத் தன்மையுடன் இருக்கும். சைனஸ் பாதிக்கப்பட்டபின் வீங்கிய நிலையில் இருக்கும் மியூக்கோஸ் பகுதி வறண்டு காணப்படும். மேலும், வலி அதிகமாகும். இதனைத் தவிர்க்க வெந்நீர் ஆவியை சுவாசிக்கலாம். இதன்முலம் வீக்கம் குறையும், வறண்ட பகுதியில் ஈரப்பதம் அதிகரிக்கும்.

ஆன்டிபயாட்டிக்ஸ், பாக்டீரியல் தொற்றை மட்டுமே தடுக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
வைரல் தொற்றை ஆன்டிபயாட்டிக்ஸ் மருந்துகள் மூலம் குணப்படுத்த முடியாது.  எனவே, சைனஸ் பிரச்னைக்கு மருத்துவரிடம் ஆலோசனை பெறாமல் அவற்றை எடுத்துக்கொள்ளக் கூடாது.

தொடர் சைனஸ் பிரச்னை உள்ளவர்கள் கிரானைட் தயாரிக்கும் தொழிற்சாலை போன்ற, காற்றில் துகள்கள் பரவும் இடங்களுக்கு அடிக்கடி செல்வதைத் தவிர்க்க வேண்டும். போகவேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், சைனஸ் பாதிப்பு உள்ளவர்களுக்கென்று பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்டுள்ள மாஸ்க்கை அணிந்து செல்லவேண்டும்.

உடுத்தும் ஆடைகளில் எப்போதும்  சுத்தத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். முக்கியமாக, கைக்குட்டையைத் துவைத்துச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.