உங்களுக்கு பிடிச்ச கலர சொல்லுங்க - உங்கள பத்தி சொல்றோம்

உங்களுக்கு பிடிச்ச கலர சொல்லுங்க - உங்கள பத்தி சொல்றோம்.
ஒவ்வொருவருக்கும் தங்களுக்குப் பிடித்தமான நிறம் என்று ஒன்று இருக்கும். நாம் வாங்கும் பெரும்பாலான பொருட்கள் அந்த நிறத்திலேயே வாங்கி சேர்ப்போம். அதில் முக்கியமான விஷயம் ஆடை.

நிறங்கள் என்பது நம்முடைய எண்ணங்களையும் குணங்களையும் கூட வெளிப்படுத்தும் தன்மையுடையது. அதனால் நமக்குப் பிடித்த நிறத்தை வைத்தே நம்மைப்பற்றி கணித்துவிட முடியும்.

வெள்ளை நிறம்

உங்களுக்குப் பிடித்தது வெள்ளைநிறம் என்றால் நீங்கள் நிச்சயம் இப்படித்தான் இருப்பீர்கள். வெள்ளைநிறம் என்பது தூய்மையின் அடையாளமாகக் கருதப்படுகிறது. எளிமை, தீங்கின்மை ஆகியவற்றின் மீதான சித்தாந்தங்களைக் கொண்டிருக்கிறது.

வயது முதிர்ந்த பின் உங்களுக்கு வெள்ளை நிறம் பிடித்தால் நீங்கள் பூரணத்துவம் மற்றும் இயலாத கொள்கைகளை முழுமையாக நம்பிக் கொண்டிருப்பீர்கள்.

சிவப்பு

வலிமை, ஆரோக்கியம் மற்றும் உற்சாகத்தைக் குறிக்கும் நிறம் சிவப்பு.

அதிகமாக உணர்ச்சி வசப்படக்கூடியவராக இருப்பார்கள்.

நம்பிக்கை மிகுந்தவர்களாக இருப்பீர்கள். அமைதி சற்று குறைவு. நடந்த தவறுகளுக்கு அடுத்தவர்களை குறை கூறுவார்கள்.

மெரூன் (கருஞ்சிவப்பு)

பெரும்பாலானவர்களுக்கு மெரூன் கலர் பிடிக்கும். பெருந்தன்மை உள்ளவர்களாக இருப்பார்கள். நல்ல குணநலன்களை கொண்டிருப்பார்கள். கடுமையான அனுபவமுடையவராக இருப்பார்கள்.

பிங்க்

பிங்க் நிறத்தைப் பிடித்தவர்கள் பேரார்வம் இன்றி அன்பும் காதலும் கொண்டவர்களாகவும் பிறருடைய அன்பையும் அதிகம் எதிர்பார்ப்பார்கள். தான் பிறரால் காதலிக்கப்பட வேண்டுமென நினைப்பவர்களாக இருப்பார்கள்.

பாதுகாப்பாக இருக்க வேண்டுமெனவும் தங்களை மேன்மையாகக் காட்டிக் கொள்ள விரும்புவார்கள்.

வசீகரமானவர்களாக இருப்பார்கள்.

ஆரஞ்ச்

மனதளவில் குதூகலமானவர்களாக இருப்பார்கள். புகழ்பெற்றவர்களாக இருப்பார்கள். ஆடம்பரம் மற்றும் இன்பத்தைக் குறிக்கும் நிறம் ஆரஞ்சு. இவர்கள் சற்று நாடகத் தன்மையுடையவர்களாக இருந்தாலும் மென்மையான குணமுடையவர்களாக இருப்பார்கள். ஆரஞ்சு அமைதியின்மையை குறிக்கும்.

மஞ்சள்

மன ரீதியாக துணிவுடையவர்கள். சந்தோஷம், அறிவு மற்றும் கற்பனைக்கான நிறமாக மஞ்சள் இருக்கிறது. நல்ல வணிகத்தலைமை இவர்களுக்கு உண்டு.

பச்சை

நல்லிணக்கம் மற்றும் சமநிலையின் நிறமே பச்சை. நம்பிக்கையையும் அமைதியையும் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.

அமைதியை அதிகமாக விரும்புவார்கள். சுய புறக்கணிப்பு, எளிமையாகவும் இருப்பதால் மற்றவர்கள் எளிமையாக இவர்களை ஏமாற்ற நினைப்பார்கள்.

மரியாதைக்குரியவர்களாகவும் சமூக அக்கறை கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.

நீலம்

மென்மையான, இரக்க மற்றும் அக்கறை குணங்களைக் கொண்டவர்களுக்கு நீலம் மிகப் பிடிக்கும். பொறுமையும் விடாமுயற்சியும் சுயக்கட்டுப்பாடும் கொண்டவர்களாக இருப்பார்கள். தான் பிறரால் பாராட்டப்பட வேண்டும் என்று நினைப்பார்கள்.

நீலமும் பச்சையும்

நீலமும் பச்சையும் கலந்த ராமர் பச்சை என்று கூறக்கூடிய நிறத்தை விரும்புபவர்களுக்கு ரசனை அதிகம். வசீகர குணம் உடையவர்கள். யாருக்கும் உதவி செய்ய மாட்டார்கள். வழிகாட்டவும் செய்ய மாட்டார்கள். இவர்களைப் பற்றி மட்டுமே சிந்திப்பார்கள்.

லாவண்டர்

எப்போதும் நேர்த்தியாகவும் உயர்வான வாழ்க்கையையும் வாழ விரும்புவார்கள். படைப்புத்திறனும் மென்மைத் தன்மையும் கொண்டவர்கள்.

ஊதா

தனித்துவம் வாய்ந்த நபராகவும் உணர்ச்சிவசப்படக் கூடியவராகவும் இருப்பார்கள்.