ஆலமரத்தின் மருத்துவ குணங்கள்

ஆலமரத்தின் மருத்துவ குணங்கள்:-


  தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 


அதிக நிழல் தரும் மரமாகிய ஆலமரம் இந்தியாவின் தேசிய மரம் . பல தலைமுறைகளையும் கண்டு கம்பீரமாக நிற்கக் கூடிய ஆலமரத்திற்கு நிகர் ஆலமரம் தான். ஆலமரம் என்றால் Ficus benghalensis எனும் இனத்தை குறிக்கும்.

ஆலமரத்தின் பழங்களை தின்னும் பறவைகளின் மூலம் இதன் விதைகள் பரப்பப்படுகிறது. ஆல மரத்துப் பால், இலைகள், பட்டை, கனிகள், விதைகள், மொட்டுகள், வேர், விழுதுகள் யாவும் மருத்துவப் பொருட்களாகப் பயன்படுகின்றன.

சுற்றுச்சூழலுக்கு பேருதவி புரியும் ஆலமரத்திற்கு பல அற்புதமான மருத்துவக் குணங்கள் இருக்கின்றன.
மாற்றடுக்கில் அமைந்த அகன்ற இலைகளையுடைய பெருமரம். கிளைகளிலிருந்து விழுதுகள் வளர்ந்து ஊன்றி மரத்தைத் தாங்கும் அமைப்புடையது. நிழல் தரும் மரமாகத் தமிழகமெங்கும் வளர்க்கப்படுகிறது. சாறு பால் வடிவாக இருக்கும். இலை, பூ, பழம், விதை, பால், பட்டை, விழுது ஆகியவை மருத்துவப் பயனுடையவை.

ஆல் போல் தழைத்து அருகுபோல் வேரோடி என திருமண தம்பதிகளுக்கு வாழ்த்துத் தெரிவிப்பதை இன்றும் கூட நம் கிராமங்களில் காணலாம்.
ஆலமரம் விழுதுகள் விட்டு பல நூறு ஆண்டுகள் வாழும் தன்மை கொண்டது. மழை, வறட்சி இவைகளால் அதிகம் பாதிக்கப்படாதது. அதுபோல் குடும்ப உறவை விழுதுகள் போல் அனைவரும் தாங்கி வருவதற்காகவே ஆலமரத்தைச் சொல்கின்றனர்.

நீண்ட நெடிய பல விழுதுகளைக் கொண்டு பரந்து விரிந்து பசுமையாகக் காணப்படும் மரம்தான் ஆலமரம். மரத்தின் கிளைகளைத் தாங்கி நிற்கவே விழுதுகள் தோன்றி அவை மண்ணில் ஊன்றுகின்றன.

இன்றும் கிராமங்களில் சாலைகளிலும், குளக்கரைகளிலும், பொதுமக்கள் கூடும் இடங்களிலும் நிழல் தரும் மரமாகத் திகழ்கிறது. பண்டைய காலத்தில் மன்னர்கள் ஆலமரம், புங்கமரம் இவற்றை நட்டு வளர்த்தனர். அதன் பயனை பலநூறு ஆண்டுகளுக்குப் பின் நாம் இன்றும் அனுபவித்து வருகிறோம். ஆலமர நிழல் ஆரோக்கியத்திற்கு நல்லது. அரசமர நிழல் எவ்வாறு ஆரோக்கியத்தைத் தருகிறரோ அதேபோல் ஆலமர நிழலும் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
இந்தியாவின் தேசிய மரமாக ஆலமரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் எல்லா இடங்களிலும் வளரக்கூடியது.

இதனை இயக்கு ரோதம், காமரம், சோளி, தோல்மரம், பாமரம், பூதம், வடம், பானோக்கி என்ற பெயர்களில் அழைக்கின்றனர். இதன் இலை, பழம், பூ, விழுது, பால் அனைத்தும் மருத்துவக் குணம் வாய்ந்தவை.
அச்சரம் புண்கிரந்தி யாவும் பயந்தோட
வச்சமற மேகமுந்தீ யாகுமே-இச்சகத்தில்
நாதனென மூவருக்கு நற்றுணையா மாக்கைக்கும்
பூத மதிபதியைப் போல்

– தேரையன் வெண்பா பொருள் – நாள்பட்ட புண்கள்,
மேகம், வயிற்றுக் கடுப்பு, நீரிழிவு இவைகளைப் போக்கி உடலுக்கு வன்மையைக் கொடுக்கும்.
சொல்லுகின்ற மேகத்தைத் துட்ட அகக்குப்பைக்
கொல்லக்கின்ற நீரிழிவை கொல்லுங்காண்- நல்லாலின்
பாலும் விழுதும் பழமும் விதையும் பூவும்
மேலும் இலையுமென விள்
– அகத்தியர் குணபாடம்

உடலில் உண்டான கட்டிகளுக்கு ஆல இலையை அரைத்து கட்டிகள் மீது தடவினால் கட்டி உடைந்து சீழ் வெளியேறும்.

அதுபோல், ஆலமரத்தின் பழுத்த இலைகளை சுட்டு சாம்பலாக்கி, நல்லெண்ணெயில் கலந்து, கரப்பனுக்கு பூசி வந்தால் கரப்பான் எளிதில் காணாமல் போகும்.
ஆலம்பட்டையை சிதைத்து காயவைத்து தேங்காய் எண்ணெய் விட்டு காய்ச்சி அடிபட்ட புண்கள் மீது தடவலாம்.

வெள்ளை படுதல் குணமாக

வெள்ளை படுதல் பெண்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கும். மேலும் அவர்கள் மெலிந்து காணப்படுவார்கள். இவர்கள் ஆலமரத்தின் சிறு வேர்ப்பட்டைகளை உரித்து நன்கு இடித்து நீரில் கொதிக்க வைத்து பிறப்புறுப்பின் மீது கழுவி வந்தால், வெள்ளை படுதல் குணமாகும்.

நீரிழிவு நோயாளிகளுக்கு

நீரிழிவு நோயாளிகளுக்கு ஆறாத புண்கள் மீது ஆலம்பாலைத் தடவி வந்தால் புண்கள் எளிதில் ஆறும்.

எலும்பு முறிவுக்கு

எலும்பு முறிவு, சுளுக்கு, இரத்தக்கட்டு, போன்றவற்றிற்கு மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று கட்டு மீதும், சுளுக்கு, இரத்தக்கட்டு மீதும் ஆலம் பாலைத் தடவி வந்தால் எலும்புகள் இணைவதுடன், இரத்தக்கட்டு, சுளுக்கும் நீங்கும். எலும்புகள் பலமாகும்.

வாய்ப்புண் நீங்க

ஆலம்பட்டையை இடித்து நீரில் கொதிக்க வைத்து குடிநீராக்கி வாயில் ஊற்றி கொப்பளித்து வந்தால், வாய்ப்புண், வாய் நாற்றம், நாவெடிப்பு, ஈற்றுப்புண் இவைகள் நீங்கும். இரண புண்களுக்கு இந்த நீரைக் கொண்டு கழுவலாம்.

பல் பாதுகாப்பு

ஆலும் வேலும் பல்லுக்குறுதி
நாலு மிரண்டும் சொல்லுக்குறுதி
என்பது நம் முன்னோர்களின் பழமொழி.
பல் வலிக்கும் நேரத்தில் ஆலம் மொட்டினை வாயில் அடக்கிக் கொண்டிருந்தால் பல்வலி போகும். ஆலம் விழுதுகளைக் கொண்டு பல் துலக்கினால் பற்கள் நன்கு வலுவுடன் பளிச்சிடும். ஆலம் பால் ஆடும் பற்களை உறுதிப்படுத்தும். பல் ஈறுகளில் இரத்தம் வடிதலை நீக்கி ஈறுகளை பலப்படுத்தும்.

மூலநோய் குணமாகும்

ஆலம்பழத்தை பொடி செய்து சர்க்கரை கலந்து சாப்பிட்டு வர மூலநோய் குணமாகும். சரும பளபளப்பிற்கு ஆலம்பழம் ஏற்றது. குளியல் சோப்பு தயாரிப்பதில் பயன்படுத்தப்படுகிறது.
மலடு நீங்கும்

ஆண்கள், பெண்களின் மலட்டுத்தன்மையை நீங்க ஆலம்பழம் பயன்படுகிறது. மரத்தில் கனிந்துள்ள பழங்களை பறித்து அதில் பூச்சிகளை நீக்கிவிட்டு நிழலில் உலரவைக்கவேண்டும். பின்னர் அவற்றை நன்றாக இடித்து பொடி செய்து காற்றுப்புகாத பாத்திரத்தில் அந்த பொடியை போட்டுவைத்துக்கொள்ளவேண்டும். தினமும் காலை, மாலை இரண்டு வேலை பசும்பாலை காய்ச்சி அதில் இந்த பொடியை ஒரு கரண்டி போட்டு கலந்து குடிக்கவேண்டும். நாற்பத்தி எட்டு நாட்கள் இந்தபொடியை குடித்து வர மலடு நீங்கி குழந்தை பிறக்கும்.சிறுவர்கள் முதல்பெரியவர்கள் வரை அவர்களின் உடல் நலனைப் பொருத்து தினசரி ஒரு ஸ்பூன் பாலில் கலந்து அருந்தலாம்.

தசை வலி நீங்கும்

ஆலம் பழம் தசைவலிகளை நீக்கும். இது பெண்களின் மாதவிலக்குப் பிரச்சினைகளை நீக்கவல்லது.
விழுது, பட்டை, இலை, ஆகியவை உடல் பலம் பெருக்கியாகவும் வெப்பு அகற்றியாகவும் செயற்படும்.
ஆலமரப்பட்டை, வேர்ப்பட்டை, மொட்டு, கொழுந்து, பழம், விழுது வகைக்கு 40 கிராம் 2 லிட்டர் நீரில் சிதைத்துப் போட்டு அரை லிட்டராகக் காய்ச்சி காலை மாலையாக ஒவ்வொரு நாளும் குடித்து வர மேக எரிச்சல், மேகப்புண், மேக ஒழுக்கு தீரும்.
ஆலம் பால் 20 துளி சர்க்கரையுடன் காலையில் சாப்பிட்டுப் புளி, காரம் நீக்கி உண்ண ஒரு மண்டலத்தில் கொறுக்கு தீரும்.

ஆலம் பாலை காலை மாலை தடவி வர வாய்ரணம், நாக்கு, உதடு ஆகியவற்றில் வெடிப்பு, கை, கால் வெடிப்பு, பல் ஆட்டம் ஆகியவை தீரும்.
ஆலம் பட்டை, ஆத்திப்பட்டை, அவுரிவேர்ப்பட்டை வகைக்கு 40 கிராம், 10 கிராம் மிளகுடன் சிதைத்து 8 லிட்டர் நீரில் போட்டு 2 லிட்டராகக் காய்ச்சி வேளைக்கு 250 மி.லி. வீதம் தினம் 3 வேளை குடித்து வர பாதரசபாசாணங்களின் வேகம் குறையும்.
ஆலமரப்பட்டை, வேர்ப்பட்டை வகைக்கு 200 கிராம் சிதைத்து 4 லிட்டர் நீரில் இட்டுக் காய்ச்சிக் காலையில் மட்டும் ஒரு குவளை குடித்து வரலாம். 4 நாள்களுக்கு ஒரு முறை தயாரித்துக் கொள்ளலாம். 1 முதல் 4 மண்டலம் வரை சாப்பிட மதுமேகம் தீரும்.

ஆலம் பழம், விழுது, கொழுந்து சம அளவு அரைத்து எலுமிச்சை அளவு காலை மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர 120 நாள்களில் விந்து அணுக்கள் உற்பத்தியாகும்.

விழுது துளிரையும் விதையையும் அரைத்து 5 கிராம் அளவுக்குக் காலையில் மட்டும் பாலில் கொடுத்து வரத் தாய்ப்பால் பெருகும்.

துளிர் இலைகளை அரைத்து 5 கிராம் அளவுக்குத் தயிரில் கலந்து கொடுத்து வர இரத்த பேதி நிற்கும்.
விழுதைக் கொண்டு பல் தேய்த்து வரப் பற்கள் உறுதிப்படும்.

கனிகளை உலர வைத்து அரைத்து 12 கிராம் அளவு எடுத்துப் பாலுடன் கலந்து குடித்தால் இந்திரியம் திடப்படும். ஞாபகமறதி நீங்கும்.

ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி என்பது பழம் மொழி. ஆலமரக் குச்சிகளில் பற்களைத் தேய்த்து வந்தால் பற்களும் ஈறுகளும் வலிமை பெறும்.

நன்றாகப் பழுத்த ஆலம் பழத்தை நிழலில் உலர வைத்துச் சாப்பிட்டால் ஞாபக சக்தி மேம்படும். உடல் கட்டுக்கோப்பாக இருக்கும்.

பூக்காம்புகளை, அத்தி மரப்பட்டையில் கலந்து பவுடராக்கிக் கொண்டு, இதனுடன் சம எடையளவு சர்க்கரை சேர்த்து பாலுடன் கலந்து பயன்படுத்தலாம். இதனால் இந்திரியத்தில் உயிரணுக்களின் எண்ணிக்கை கூடும்.

தளர்ச்சியான மார்பகங்கள் சீர்படவும், கவர்ச்சி பெறவும் பயன்படுகின்றன. விழுதுகளின் தலைப்பகுதியில் மஞ்சளும், சிவப்பும் கலந்துள்ள பகுதிகளை எடுத்து அரைத்து மார்பகங்கள் மீது பூசினால் வளர்ச்சி பெறும். ஆலம் விழுதுகளை அரைத்து 1 கிராம் முதல் 3 கிராம் வரை சாப்பிட்டால் நீர்த்த இந்திரியம் கெட்டிப்படும்.
ஆலம் இலைகளை நிழலில் உலர வைத்து நன்றாக அரைத்துச் சம அளவு கலந்து சாப்பிடுவது மாதவிலக்குப் பிரச்னைகளுக்கும், வெள்ளைபடுவதற்கும் சிறந்த மருந்து.

ஆலமரத்து வேர்ப்பட்டை 12 கிராம் அளவு எடுத்து, தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, கஷாயமிட்டுக் குடிக்க வேண்டும். இதன் மூலம் சர்க்கரை நோய் குணம் பெறுகிறது. சர்க்கரை நோய், காய்ச்சல், வெட்டை, கர்ப்பப்பை வீக்கம், உடலுறவின் போது வெகு சீக்கிரத்தில் இந்திரியம் வெளியாகுதல், புண், அதிக மாதவிடாய், இரத்தப் போக்கை கட்டுப்படுத்தும்.இம்மரத்தின் வேர் மீது உள்ள பட்டையை வெட்டி எடுத்துக் . இதைப் பவுடராக்கி மருந்தாகப் பயன்படுத்தலாம்.

வெட்டை நோயைக் குணப்படுத்த புதிய ஆலமரத்துப் பட்டையை உலர்த்தி அரைத்து, சம அளவு வெண்ணெய் கலந்து காலை, மாலை வேளைகளில் 4 கிராம் அளவு வரையில் சாப்பிட்டு வரலாம். மேலும், ஆண்களுக்கு ஏற்படும் துரிதஸ்கலிதம் நோயும் வெட்டையும் குணம்பெறும்.

மரப்பட்டையை தண்ணீரில் நனைத்து அதன் சாற்றைக் குடிப்பதன் மூலம் சீதபேதியைக் குணப்படுத்தலாம்.
கனிகளை நன்றாக உலர்த்தி, அரைத்து, 12 கிராம் அளவு பாலில் கலந்து கொடுக்கலாம். கனியை நிழலில் உலர்த்தி பவுடராக்கி, சம அளவு சர்க்கரை கலந்து காலை, மாலை 5 கிராம் அளவில் கொடுத்து வந்தால் மூலம், சிறுநீர்ப்பை சம்பந்தமான குறைபாடுகள் குணப்படுகின்றது.

ஆலமர விழுதுகளின் மெல்லிய இலைகள் ஆறு கிராம் அளவு எடுத்து தண்ணீரில் அரைத்து வடிகட்டி அதில் வெண்ணெய் கலந்து குடிக்கச் செய்தால் வாந்தி நின்றுவிடும்.

ஆலமர விழுதுகளை எரித்து தண்ணிரில் சிறிது நேரம் ஊற வைத்து தண்ணீரை வடித்துக் தெளிந்த நீரைக் குடிப்பதால் வாந்தி கட்டுப்படுகிறது.
ஆலமர இலைகளைக் கஷாயமிட்டு, அதனைப் பாகுபோல் செய்துகொண்டு சாப்பிடுவதால் இந்திரியத்தில் உயிரணுக்கள் எண்ணிக்கை குறைந்து போதல், ஞாபக மறதி நோய், கிரந்தி நோய்கள் குணப்படுகிறது.

ஆல இலைகளை எரித்து அதன் சாம்பலை வெற்றிலையுடன் சேர்த்துச் சாப்பிடுவது தவறான உடல் உறவினால் வரும் வெட்டை நோய்க்கு நிவாரணமாக அமைகிறது.

ஆல மரத்தின் ஒவ்வொரு பாகத்திலும் பால் வடியும். இதைச் சேகரித்து மருந்தாகப் பயன்படுத்தலாம். இது காது, மூக்கு, பல் நோய்கள், சீக்கிரத்தில் இந்திரியம் வெளியாகுதல், மூல நோய், கட்டிகள், வலிகள் நீங்க பயன் தருகிறது.

ஆலமரத்துப் பாலையும், எருக்கம்பாலையும் சம அளவில் கலந்து புண்களின் மீது வைத்துப் பூசுவதனால் புண்கள் ஆற விடுகின்றது.

இத்தகைய சிறப்பு வாய்ந்த மரத்தை நாம் அவசியம் வளர்க்க வேண்டும். வீட்டுக்கு ஒரு ஆல மரத்தை வளர்ப்பது என்பது சிரமம் எனவே தெருவுக்கு அல்லது ஊருக்கு ஒரு ஆலமரம் வளர்ப்போம், வளம் பெறுவோம் !!

பிடித்திருந்தால் பக்கத்தை share & Like செய்யுங்கள்.. மட்றவர்களுக்கு பயனுறும்...!