சுக்கான் கீரை மருத்துவப் பயன் கொண்ட கீரையாகும்

சுக்கான் கீரை மருத்துவப் பயன் கொண்ட கீரையாகும்



தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 


சுக்கான் கீரை மருத்துவப் பயன் கொண்ட கீரையாகும். இந்தக் கீரையின் மருத்துவக் குணம் பலருக்கும் தெரியாத காரணத்தால் இதை மக்கள் பயன்படுத்துவது குறைவு. இதனால் இதனை பயிரிடுவதில்லை.  ஆனால் இது தானாக பல இடங்களில் வளர்கிறது.  இந்தக் கீரையின் விதைகளை வாங்கி வீட்டுத் தோட்டத்தில் பயிரிட்டு வளர்க்கலாம்.

உணவுமுறை மாறுபாடு,  மன அழுத்தம் போன்ற காரணங்களால் குடலில் புண்கள் உருவாகின்றன. இவர்கள் சுக்கான் கீரையை புளி சேர்க்காமல் பாசிப் பருப்புடன் கலந்து வேகவைத்து மதிய உணவில் சேர்த்துக்கொண்டால் குடல்புண் குணமாகும். இதனை சட்னி செய்தும் சாப்பிடலாம்.  அதிக இரத்த அழுத்தம், குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இதயத் துடிப்பு சீராக இருக்காது.  இவர்கள் சுக்கான் கீரையை தொடர்ந்து உணவில் சேர்த்துக்கொண்டால் இதயம் நன்கு பலப்படும், சீராக இயங்கும்.  சுக்கான் கீரையின் வேரை நிழலில் உலர்த்தி பொடி செய்து தினமும் காலையில் பல் துலக்கி வந்தால் பற்கள் பலப்படுவதுடன் பல் ஈறுகள் உறுதியாகும்.  சிலருக்கு சாப்பிட்ட உணவு எளிதில் சீரணமாகாது. மேலும் பசி என்பதே இவர்களுக்கு இருக்காது.   இவர்கள் சுக்கான் கீரையோடு பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி சட்னிபோல் செய்து சாப்பிட்டு வந்தால் ஜீரண சக்தி அதிகரிக்கும். நன்கு பசியைத் தூண்டும்.  மது, புகை, போதை வஸ்துக்கள் பயன்படுத்துபவர்களுக்கு ஈரல் வெகு விரைவில் பாதிக்கப்படும். இவர்கள் சுக்கான் கீரையை சூப் செய்து அருந்தி வந்தால் ஈரல் நன்கு பலப்படும்.  சிலருக்கு எது சாப்பிட்டாலும் ஜீரணமாகாமல் நெஞ்சில் எரிச்சலை உண்டாக்கும். இவர்கள் சுக்கான் கீரையுடன் பாசி பருப்பு சேர்த்து கூட்டு செய்து சாப்பிட்டு வந்தால் நெஞ்செரிச்சல் நீங்கும்.  இரத்தம் தூய்மையாக இருந்தால் தான் மனிதன் ஆரோக்கியமாக வாழ முடியும்.  சுக்கான் கீரை இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. சுக்கான் கீரையை நன்கு நீர்விட்டு அலசி அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, தேங்காய் சேர்த்து நன்கு வதக்கி பின் சட்னியாக அரைத்து காலை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தப்படும்.  தேள் கொட்டினால் விஷம் ஏறி கடுப்பையும், மூர்ச்சையையும் உண்டாக்கும்.   எனவே தேள் கடித்த உடனே கடி பட்ட இடத்தில் சுக்கான் கீரையின் சாறு விட்டு வந்தால் வலி குறையும், மூர்ச்சை ஏற்படாது. விஷமும் விரைவில் இறங்கும்.