வீட்டிலேயே செய்யலாம் ரோஜா குல்கந்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வீட்டிலேயே செய்யலாம் ரோஜா குல்கந்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வீட்டிலேயே செய்யலாம் ரோஜா குல்கந்து

வீட்டிலேயே செய்யலாம் ரோஜா குல்கந்து:!!!

ரோஜா பூக்கள் காதலுக்கு மட்டும் அடையாளமான மலரல்ல. இது மருத்துவ குணம் நிறைந்தது. ரோஜா பூவில் இருந்து தயாரிக்கப்படும் “குல்கந்து” இதயத்திற்கு பலம் தரும் மருந்தாகவும், ஆண்மை பெருக்கியாகவும் செயல்படுவதாக ஆயுர்வேத மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

செய்முறை:

பூச்சிகள் இல்லாத, கிருமிநாசினி தெளிக்காத செடிகளிலிருந்து புதிதாகப் பூத்த ரோஜாக்களாகத் தெரிந்து பறித்துக் கொள்ளவும். பூக்களைப் பறிக்கக் காலை வேளையே ஏற்றது. பூக்களின் இதழ்களைப் பிரித்து எடுக்கவும்.

இதழ்களை ஓடும் நீரில் அலம்பிக் கொள்ளவும்.
நீரை வடிய விட்டு எடுக்கவும். (சாலட் ஸ்பின்னரில் போட்டு சுற்றினால் விரைவாக வடிந்து விடும்.)
நீர் வடிந்ததும் இதழ்களை நிறுத்துக் கொள்ளவும்.
இதழ்களின் ஒன்றரை மடங்கு எடை கற்கண்டு நிறுத்து எடுத்துக் கொள்ளவும்.

கற்கண்டை உரலில் போட்டுப் பொடிக்கவும்.
அதனோடு ரோஜா இதழ்களையும் சேர்த்து இடிக்கவும்.
அனைத்தையும் சுத்தமான, உலர்ந்த சீசா ஒன்றில் போட்டு, வாயை துணியால் கட்டி இரண்டு நாட்கள் வெயிலில் வைக்கவும்.

மூன்றாவது நாள் (அல்லது கலவை அதிகம் வரண்டு காணப்படும் சமயம்) மூன்று மேசைக்கரண்டி தேன் சேர்த்துக் கலந்து மீண்டும் வெயிலில் வைக்கவும்.
காலநிலையைப் பொறுத்து நான்கு அல்லது ஐந்து நாட்களில் ரோஜா இதழ்கள் பதமாகி இருக்கும். அதன் பின்னர், சீசாவை இறுக்கமாக மூடி வைத்து தேவையான போது பயன்படுத்தலாம். எடுப்பதற்கு எப்பொழுதும் சுத்தமான உலர்ந்த கரண்டியைப் பயன்படுத்தவும்.
ஜீரணக் கோளாறு நீங்கும் குல்கந்து வயிறு கோளாறுகளை நீக்கும். உடலின் பித்த அளவை சீராக்குகிறது. ஜீரண சக்தியை அதிகரித்து, பித்த பிரட்டலை குறைக்கும். அதிக அமில சுரப்பை குறைக்கும். அல்சர்களுக்கு மருந்தாகும். மலமிளக்கியாக செயல்பட்டாலும், குல்கந்து மலச்சிக்கலுக்கும் நல்லது.

ஆண்மை பெருக்கி குல்கந்து ஆண்மை பெருக்கி. உடலுக்கு வலிமை ஊட்டும். இதன் இதழ்களில் உள்ள எண்ணை ஆண்மை வலிமையை அதிகரிப்பதாக கருதப்படுகிறது. எனவே தான் காதலர்கள் மற்றவர்களை விட, ரோஜாவை பயன்படுத்து கின்றனர் என்று கூறப்படுகிறது.

பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலிகளை குறைக்கிறது. வெள்ளைப் போக்கை கட்டுப்படுத்தகிறது. இதயத்திற்கு ஏற்றது ரோஜா இதயத்திற்கு நல்லது. எனவே குல்கந்து இதய நோயுள்ளவர்களுக்கு நல்ல இதமான மருந்தாக செயல்படுகிறது. இது மன அழுத்தத்தை போக்குகிறது. இரவில் தூக்கம் வராமல் தவிப்பவர்கள் காய்ச்சி ஆறவைத்த பாலில் அரை ஸ்பூன் குல்கந்து சேர்த்து சாப்பிடலாம் நன்றாக உறக்கம் வரும்.
இது முகப்பரு, உடல் நாற்றம் இவற்றை குறைக்கும். குல்கந்தை சிறுவர்கள் 1/2 தேக்கரண்டியும் பெரியவர்கள் 1 தேக்கரண்டியும், தினமும் காலை இரவு உறங்கும் முன்பும் சாப்பிட்டு வரலாம்.