"காசி" நகரம் இந்துக்களின் போற்று தலுக்குரிய ஸ்தலமாக மாறிப்போனது எதனால்..?

"காசி" நகரம் இந்துக்களின் போற்று தலுக்குரிய ஸ்தலமாக மாறிப்போனது எதனால்..?

இதை முழுவதுமாக படியுங்கள்.
காசி என்பது 168 மைல் பரப்பளவில் சிவபெருமானால் (சிவசக்தியால்) அமைக்கப்பட்ட ஒப்பற்ற, நினைப்ப தற்கே அரிய ஓர் சிவ சக்தி யந்திரம்.
வருடத்தின் எல்லா நாட்களும், ஒரு நாளின் எல்லா மணிநேரமும் ஓய்வின்றி செயல்படும் ஒப்பற்ற சிவ சக்திநிலை இங்கே இருப்பதாக அனைவரின் நம்பிக்கை.
சிவன் வடிவமைத்த காசியின் 168 மைல் சுற்றளவில் 468 சக்தி மையங்கள்.
அவற்றில் 108 அடிப்படை சக்தி மையங்கள்.
இதில் 54 ஆண்தன்மை நிறைந்த சக்தி வடிவங்கள், 54 பெண் தன்மை நிறைந்த சக்தி மையங்களாக சிவனால் அமைக்கப்பட்ட தென்பது வரலாறு.
நிலவின் சுழற்சிக் கணக்கில், மூன்று வருடத்திற்கு ஒரு முறை 13 மாதங்கள் இருக்கும்.
நம் சூரிய குடும்பத்தில் இருப்பது 9 கோள்கள்.
4 திசைகள் அல்லது பஞ்ச பூதங்களில் ‘ஆகாஷ்’ தவிர்த்து நான்கு அடிப்படைக் கூறுகள்.
ஆக, 13*9*4 = 468.
நம் உடலில் இருக்கும் சக்தி சக்கரங்கள் 114.
இதில் 2 நம் உடல் தாண்டி இருக்கிறது.
மீதம் இருக்கும் 112ல், 4 சக்கரங்களுக்கு நாம் ஏதும் செய்ய அவசியம் இருக்காது.
மற்ற 108ம் சரியாய் இருந்தால், இந்த நான்கும் தானாய் மலர்ந்திடும்.
இந்த 108ல் 54 பிங்களா (ஆண்தன்மை), 54 ஈடா (பெண் தன்மை).
அதனால் 108 அடிப்படை சக்தி ஸ்தலங்களில் 54 சிவன், மற்றும் 54 தேவி கோவில்கள் காசியில் அமைக்கப் பட்டன.
காசி நகர அமைப்பே வடிவியல் (geometry) அளவிலும் கணிதவியல் அளவிலும் மிகக் கச்சிதமான, அற்புதமான வடிவமைப்பு.
பிரபஞ்சத்தின் சிறு அம்சமான மனிதனும், அந்தப் பிரபஞ்சமும் தொடர்பு கொள்வதற்கான மிக நேர்த்தியான அமைப்பு.
இது முழு உயிரோட்டத்தில் இயங்கும் ஒரு மாபெரும் மனித உடலின் பிரதிபலிப்பு.
முழு உயிரோட்டத்தில், முழுமையான சக்தி அமைப்பில் ஒரு உடல் இயங்கினால், அதுவே பிரபஞ்சத்தை அவனிற்குத் திறந்து வைக்கும்.
இப்படி பிரபஞ்சத்துடன் தொடர்பு கொள்ளக் கூடிய இடமாகத்தான் சிவசக்தியினால் காசி உருவானதாம்.
இங்கே ஒருவர் வாழமுடிந்தால், பிரபஞ்சத்துடன் இவ்வழியில் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள முடிந்தால், எவர் தான் காசியை விட்டு வெளியேற சம்மதிப்பார்..?
468 கோவில்களில், 108 போக, மீதத்தில் 56 விநாயகர் கோவில்கள், 64 யோகினி கோவில்கள், 12 சூரியன் கோவில்கள், 9 நவதுர்கை கோவில்கள், 9 சண்டி கோவில்களும் அடங்கும்.
இதில் 56 விநாயகர் கோவில்கள் 8 திசைகளில், 7 பொதுமையம் கொண்ட வட்டத்தில் அமைக்கப் பட்டிருக்கிறது.
இந்த வட்டத்தில் நடக்க ஆரம்பித்தால், இதன் முடிவு காசி விஸ்வநாதர் கோவிலில் முடியும்.
அதோடு சூரியனின் 12 கோவில்களும் தக்ஷிணாயனத்தில் இருந்து உத்தராயணத்திற்கு நகரும் சூரியனின் திசையை ஒத்து இருக்கிறது.
இப்படி படைப்பை உற்று நோக்கி, ஒவ்வொரு மாறுதலுக்கும் ஏற்ற வகையில் இயங்கும் வண்ணம் காசி அமைக்கப்பட்டது.
இது தவிர சிவன், சப்தரிஷிகளை உலகின் வெவ்வேறு மூலைக்கு அனுப்பிய போது, அவர்கள் அவரைப் பிரிய மனமில்லாமல் ஏங்கியதால், அவர்களுக்கு ‘சப்தரிஷி’ பூஜையை கற்பித்து, அதை அவர்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் செய்தால், சிவனுடன் இருக்கும் உணர்வைப் பெறுவார்கள் என்றும் சொல்லி அனுப்பினாராம்.
இன்றளவிலும் இப்பூஜை விஸ்வநாதர் கோவிலில் இரவு 7 மணியளவில் நடைபெறுவது இக்கோவிலின் சிறப்பு.
அப்பூஜையை உணர்ந்தால் தான் புரியும்.
அப்பூஜையை செய்பவர்களுக்கு அதன் மகத்துவம் தெரியவில்லை எனினும், அதைச் சிறிதும் பிசகாமல் செய்வதால், அவ்விடத்தில் நம்பற்கரிய சக்தி உருவாகிறது.
அக்காலத்தில், இந்தப் பூஜை ஒரே நேரத்தில், காசியின் 468 கோவில்களிலும் செய்யப்பட்டது.
இதன் தாக்கத்தை வார்த்தைகளில் அடக்கிட முடியாது.
இப்படியொரு மாபெரும் உயிரோட்டத்தில் காசிதிளைத்திருந்ததை நாம் அனுபவிக்காமல் போனது, நம்முடைய மிகப்பெரும் துரதிர்ஷ்டம் என ஆன்றோர்கள் கூறுகிறார்கள்.
இதை நாம் கவனித்துப் பார்த்தால், எல்லையில்லாமல் வளர வேண்டும் என்கிற ஆசை ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டு.
இது வெறும் ஆசையாய் இருந்தால் போதாது என்று, அதை நிறை வேற்றிக் கொள்வதற்குத் தேவையான கருவியாய் காசி உருவாக்கப்பட்டது.
இது ஒரு சக்தி உருவம்.
இந்த உருவத்திற்கு ஏற்றாற்போல், அதைச் சுற்றி ஒரு ஊர் தானாக உருவானது.
அதனால் காசி என்பதை ஊராகப் பாக்காமல், அதை ஒரு வாய்ப்பாகப் பார்க்க வேண்டும்.
இந்த மகத்தான வாய்ப்பை உணர்ந்துதான் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக மக்கள் காசியை இன்றும் போற்றி வருகின்றனர்.

தீட்டு என்பது

தீட்டு என்பது

தீட்டு என்பது, தீண்டத் தகாததைத் தீண்டுவது. தீட்டுடன் இறைவனைக் கும்பிட்டால், இறைவன் ஏற்கமாட்டான் என்பார்கள். தீட்டுப் பட்டால் துடைத்து விடும், தீட்டுக் கூடாது என்பார்கள்.
ஆண், பெண் கலந்தாலும் தீட்டு, குழந்தைகள் பிறந்தாலும் தீட்டு, பெண்கள் மாதவிடாயும் தீட்டு, இறந்தாலும் தீட்டு! இப்படிப் பார்த்தால்,தீட்டில் உருவான நமது உடலே ஒரு தீட்டு தானே! அதனால் தான் இறந்த பிறகு உடலைப் பிணம் என்று பெயர் வைத்துப் பிணத்தைத் தொட்டால் தீட்டு என்பார்கள்.
தீட்டுடைய இந்த உடலை வைத்து, எப்படிக் கடவுளை வழிபட முடியும்? சிந்தித்துப் பாருங்கள். இதுவல்ல உண்மையான தீட்டு. இவை நாம் சுகாதாரமாய் இருப்பதற்கு. இறைவனை பெயரைச் சொல்லி ஏற்படுத்திய ஒழுக்கங்கள். அப்பொழுது தான் பயபக்தியோடு சுத்தமாக இருப்போம் என்பதற்காகத்தான் இவற்றைச் சொன்னார்கள்.
தீட்டு என்பது வேறு, அவை காமம், குரோதம், லோபம், மதம், மாற்சரியம் என்னும் பஞ்சமா பாதங்கள்!
1. காமத் தீட்டு:
காமம் என்பது ஆசை. நாம் எந்தப்பொருள் மீதாகிலும் ஆசை வைத்தால், அந்தப் பொருளின் நினைவாகவே ஆகிவிடுகின்றோம். நம் உள்ளத்தில் எந்த நேரமும், அந்தப் பொருள் மீதே ஞாபகமாக இருப்போம். அதற்காகவே முயற்சிச் செய்வதும், அலைவதுமாக இருப்போம். அந்தப் பொருள் கிடைத்து விட்டால், மனத்தில் சந்தோசம் உண்டாகும். இல்லையென்றால் மனத்தில் சதா வேதனை ஏற்படும். இப்படிப்பட்ட நேரங்களில் இறைவனைப் பற்றிச் சிந்தனை செய்ய முடியாது. இதனால் தான், ஆசைக்கு அடிமை ஆகாதே, அதை தீண்டாதே என்றார்கள்.
2. குரோதத் தீட்டு:
குரோதம் என்பது கோபம். யாராக இருந்தாலும் கோபம் வந்துவிட்டால், முன்னே பின்னே பாராமல், தாய், தந்தையர், சகோதரர்கள், உறவினர்கள் என்றும் சிந்திக்காமல், கொடூரமாகப் பேசுவதும், கேவலமான நிலைக்கு ஆளாவதும் நேர்கின்றன. சிலர் கொலை செய்துவிட்டு ஆயுள்பூராகவும் துன்பம் அனுபவிப்பார்கள். சிலர் தூக்கில் இடப்படுவார்கள். கோபத்தைப்போல் கொடியது உலகத்தில் வேறு எதுவும் இல்லை. கோபத்தால் அழிந்தவர்கள் கோடான கோடிப்பேர்,
கோபம் எழும் பொழுது நம் உடலில் உள்ள எத்தனையோ ஜீவ அணுக்கள் செத்து மடிகின்றன. ஆயுளும் குறைந்து விடுகிறது. கோபத்தால் உணர்ச்சி வசப்பட்டவர்கள் எதையுமே செய்யத் துணிவார்கள். இவர்களால் இறைவனைப் பற்றிச் சிந்தனை செய்ய முடியாது. இதனால் தான் கோபத்திற்கு அடிமை ஆகாதே, அதைத் தீண்டாதே என்பர். குரோதம் என்னும் கோபமே இரண்டாவது தீட்டு.
3. லோபத் தீட்டு:
லோபம் என்பது சுயநலம், பிறரைப் பற்றிச் சிந்திக்காமலும், இறக்கம் என்பதே இல்லாமலும், சுயநலத்துடன் பொருள்களைச் சேர்த்துவைத்து அழகு பார்ப்பதும், கஞ்சத்தனமும், எல்லாவற்றையும் தானே அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணமும், தீய வழியில் பொருள்களைச் சம்பாதிக்கக் கூடிய நோக்கமும், வஞ்சனை செய்து, பிறர் பொருளை அபகரித்துத் தானே வாழ நினைக்கும் குணமும், எப்பொழுதும் தன் பொருள்களைப் பற்றுடன் பாதுகாப்பதும் எல்லாம் சுயநல வேகமே. இப்படிப் பட்ட நேரங்களில் இறைவனைப் பற்றிச் சிந்தனை செய்ய முடியாது. அதனால் தான் சுயநலத்திற்கு அடிமை ஆகாதே, அதைத் தீண்டாதே என்பார்கள் இது லோபம் என்னும் மூன்றாவது தீட்டு.
4. மதத் தீட்டு:
மதம் என்பது கர்வம் (ஆணவம்) ஒருவரையும் மதிக்காது மனதையோடு இருப்பது இது. எதையும் தானே சாதிக்க முடியும் என்ற கர்வமும் இது. தான் என்னும் அகந்தையால் திமிர் பிடித்து அலைவதும் இது. ஆணவ நெறியால் யாவரையும் துன்பப் படுத்தித் தான் மகிழ்ச்சி அடைவதும் இது. இப்படிப்பட்ட நேரங்களில் இறைவனைப் பற்றிச் சிந்தனை செய்ய முடியுமா? இதனால் தான் கர்வத்திற்கு அடிமை ஆகாதே என்பர். அதைத் தீண்டாதே என்பர். கர்வமாகிய மதமே நான்காவது தீட்டு.
5. மாற்சரியத் தீட்டு:
மாற்சரியம் என்பது பொறாமை. பிறர் வாழ்வதைக் கண்டு பொறுக்க முடியாமல் வேதனைப்படுவது இது. எந்த நேரமும் நாம் நல்லபடியில்லையே என்று தன்னையே நொந்து கொள்வதும் இது. எல்லாரும் சுகமாக இருக்கின்றார்களே, இவர்கள் எப்பொழுது கஷ்டப் படுவார்கள், எப்பொழுது செத்துப் போவார்கள் என்பதும் இது.
தான் மட்டும் சுகமாக இருக்கவேண்டும் சாகக் கூடாது என்பதே இவர்கள் எண்ணம். பிறரைப் பார்க்கும் பொழுது தீய எண்ணங்களுடன் பெருமூச்சு விடுவார்கள். தாழ்வு மனப்பான்மையோடு, யாரைப் பார்த்தாலும் சகிக்க முடியாமல் எரிச்சலோடு இருப்பார்கள். இப்படிப் பட்ட நேரங்களில் இறைவனைப் பற்றிச் சிந்தனை செய்ய முடியுமா? இதனால் தான் பொறாமைக்கு அடிமை ஆகாதே, அதைத் தீண்டாதே என்றனர். இதுதான் ஐந்தாவது தீட்டு.
இவை ஐந்தும் மாபெரும் தீட்டுகள். இந்தத் தீட்டுக்களையுடைவர்கள் இறைவனை வழிபட முடியாது. இறைவன் இருக்கும் இடத்தில் இந்தத் தீட்டுகள் ஆகாது. இறைவனோ நம் உள்ளத்திலேயே உறைந்திருக்கிறான். நம் உடலில் இருக்கும் சத்துபோய்விட்டால், பிணம்தான். (இதைத்தான் செத்துப் போய்விட்டான் என்பது) பிணம் ஆனபிறகு இறைவனை அடையமுடியாது.
சிவலோகப் பதவி, வைகுண்டப் பதவி என்பதெல்லாம் உடலுக்கு இல்லை. பிணத்தைச் சுடுகாட்டில் அடக்கம் செய்வார்கள். உயிர் எங்கு சென்றது என்பதே யாருக்குமே தெரியாது. சத்து என்னும் உயிரே இறைவன் இதை உணர்ந்து உண்மையைக் தெரிந்து கொண்டால், எல்லாம் நமக்குப் புரியும். அரிவாள் உயர்ந்து, அன்பால் தழைத்தால், அருள் தானே நம்மை வந்தடையும்.

நல்வழி காட்டும் சாஸ்திரம்

நல்வழி காட்டும் சாஸ்திரம்

சாஸ்திரத்தை இன்று கடைபிடித்தால் நாளையே பலன் கிடைத்துவிடும் என்று எண்ணுவது தவறு. போன மாதம் வேலை செய்ததற்கு இந்த மாதம் சம்பளம் வாங்குகிறோம். அதுபோலதான் சாஸ்திரங்களை கடைபிடிக்கும்போதே பெரிய முன்னேற்றம் தெரியவில்லையே என்று நினைக்கக் கூடாது. நல்ல விஷயங்கள் செய்து வரும்போது இன்று இல்லையென்றாலும் ஒருநாள் மாபெரும் வெற்றியை அடைய செய்கிறது.
சாஸ்திரங்களை நம்பிக்கையுடன் கடைபிடித்தால் நிச்சயம் பலன்தரும். எப்படி நிலக்கரி மண்ணுக்குள் அதிக வருடம் பொறுமையாக கிடந்து வைரமாக மாறுகிறதோ அப்படிதான் நம்பிக்கையும் நிச்சயம் வாழ்க்கையை வைரமாக ஜொலிக்கச் செய்யும்.
மாலை வணக்கம்.

மாணவர்களுக்கு நினைவாற்றல் மேம்பட.....!

மாணவர்களுக்கு நினைவாற்றல் மேம்பட.....!

“பரீட்சைக்கு நல்லாத்தான் படிச்சேன். ஆனா தேர்வு அறைக்குள்ள நுழைஞ்சு வினாத்தாளை வாங்கிய உடனே எதுவுமே ஞாபகத்துக்கு வர மாட்டேங்குது. படிச்சது எல்லாம் மறந்து போகுது” என்று புலம்பும் மாணவச் செல்வங்கள் ஏராளம்.
“நினைவாற்றல் என்பது எல்லோருக்கும் பொதுவானதே. எல்லோருடைய மூளைக்குள்ளும் ஒரு நூலகம் போன்ற நினைவு அடுக்குகள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் நீங்கள் தகவல்களை சேமிக்கும் முறையை வைத்து, உங்கள் நினைவுத்திறன் அமைகிறது” என்று விஞ்ஞானம் சொல்கிறது.
நூலகப் புத்தகங்களை அகர வரிசைப்படி தொகுக்காவிட்டால், தனியொரு புத்தகத்தைத் தேடிக் கண்டுபிடிப்பது எவ்வளவு சிரமமோ; அதே போன்று நினைவு அடுக்குகளில் படிக்கும் தகவல்களை முறைப்படி தொகுக்கவில்லை எனில் தேவையான போது வெளியே எடுப்பது கடினம்.
சரியான முறையில் படித்தால் தகவல்கள் பிசிறில்லாமல் நேரடியாக மூளையின் நினைவகத்தில் தொகுக்கப்பட்டு விடுகிறது. எனவே, மாணவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள நிபந்தனைகளைப் பின்பற்றி பாடங்களைப் படித்தால் அவர்களின் நினைவாற்றல் திறன் மேம்படும் என்று வல்லுனர்கள் கூறி உள்ளனர்.
சரியான முறையைப் பின்பற்றி பாடங்களைப் படிக்க சில நிபந்தனைகள்:
1. பொருள் உணர்ந்து படி:
ஆர்வம் இருந்தால் எந்த ஒரு செயலும் வெற்றி பெறுவது எளிது. அதே போன்று படிப்பதை வெறும் கடமையாக நினைக்காமல், ஆர்வத்துடன் கற்க முயற்சிசெய்யுங்கள். மேலும் ஒருவரி படித்தாலும் அதன் உட்பொருளை உணர்ந்து படிக்கும் பழக்கத்தை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
2. படிக்கும் சூழல்:
இரைச்சல் மிகுந்த இடங்களில் வசித்தாலும் கருத்தூன்றி படித்து சிறந்த மதிப்பெண் வாங்கும் மாணவர்களும் இருக்கிறார்கள். அமைதியான சூழலில் கவனமின்றி படித்து தேர்வில் தோல்வி கண்ட மாணவர்களும் இருக்கிறார்கள். படிக்கும் இடத்தை விட, படிக்கும் போது உங்கள் மனம் தெளிவாக குழப்பமின்றி இருப்பதே முக்கியம்.
3. நினைவுக்குக் கொண்டு வருதல்:
படிக்கும் பாடத்தை அடிக்கடி நினைவுகூர்வது சிறந்த மாணவர்களுக்கு அழகு. படித்த விஷயங்களை அடிக்கடி மனத்திரையில் ஓடவிட்டு பயிற்சி செய்வது ஞாபகத்திறனை அதிகப்படுத்தும் வழிகளில் முக்கியமானது. இதனால் பாடங்கள் மறக்காமல் இருப்பதுடன், தேர்வு பயமும் தோன்றாது.
4. மனப்பாடம் கூடாது:
மாணவர்களின் கற்கும் முறைகளில் உள்ள பெரிய குறைபாடு மனப்பாடம் செய்தல். பாடப் புத்தகத்தில் உள்ள வரிகளை உருக்குலையாமல் அப்படியே மனப்பாடம் செய்து எழுதுவதில் எந்தவொரு பலனும் இல்லை. அதில் மாணவர்களுக்கான எழுத்து நடை கொஞ்சமும் இருக்காது. கல்லூரி மாணவர்களை விட, பள்ளி மாணவர்களே மனப்பாடம் செய்வதில் கில்லாடியாக உள்ளனர். கல்லூரி படிப்பிற்குத் தேவையான அடிப்படை பாடங்கள் பிளஸ்1, பிளஸ்2 வகுப்புகளில் நடத்தப்படுகின்றன. அப்போது நீங்கள் பாடத்தைப் புரிந்து படிக்காமல் மனப்பாடம் உத்தியை செயல்படுத்தினால் கல்லூரியில் திண்டாட வேண்டி இருக்கும்.
அதாவது கல்லூரி பேராசிரியர் நீங்கள் பள்ளியில் படித்த அடிப்படை பாடத்தை மேலோட்டமாக நடத்தி விட்டு, அடுத்த பகுதிக்கு சென்றால் கல்லூரியிலும் நீங்கள் விழிக்க வேண்டி இருக்கும். அதே நேரத்தில் புரிந்து படித்தால் அது காலத்திற்கும் மறக்காது என்பதால், கல்லூரியிலும் நீங்கள் கலக்க உதவியாக இருக்கும்.
5. அன்றே படிக்க வேண்டும்:
பாடங்களை அனுதினமும் படித்தால் பாடச்சுமை என்ற பேச்சுக்கே இடமில்லை. படிக்கும் போது முக்கிய குறிப்புகளைத் தனியாக ஒரு டைரியில் பாடத் தலைப்பு ரியாக குறித்துக் கொள்ளுங்கள். இப்படி தொடர்ந்து செய்வதால் மொத்தப் பாடத்திற்கான குறிப்புகளும் அந்த டைரியினுள் அடங்கிவிடும். அடிக்கடி அந்த குறிப்புரைகளைக் கொண்டு நீங்கள் படித்ததை அடிக்கடி நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். இதனால் தேர்வின் போது பாடப்புத்தகம் முழுமையையும் மீண்டும் படிக்க வேண்டிய அவசியம் இருக்காது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் ! ! !

திருவண்ணாமலைத் தலம் நடுநாட்டுத் தலங்களுள் முதன்மையானது. பஞ்சபூதத் தலங்களுள் இது அக்னித் தலம். நால்வராலும் பாடப்பட்ட தலம். எங்கிருந்து நினைத்தாலும் முக்தி கொடுக்கும் தலம் இதுதான். இத்தலத்தில்தான் திருப்புகழ், கந்தர் அனுபூதி, திருவெம்பாவை, திருவம்மானை, அருணாச்சல அஷ்டகம் போன்ற புனித நூல்கள் பிறந்தன.

மூர்த்தி, தலம், தீர்த்தம் என மூவகை சிறப்புகள் கொண்ட தலம் இது. பிரம்மன், திருமாலின் ஆணவம் அழிந்த தலம். அர்த்தநாரீஸ்வரர் கோலம் கொண்ட தலம். கார்த்திகை தீபத்தின் மூலத் தலம். ஆதாரத் தலங்களுள் இது மணிப்பூரகத் தலம். இத்தல மலையுச்சியில் ஏற்றப்படும் மகா தீபத்தால், இது உலகப் புகழ்பெற்ற தலம்.

நகரின் மையத்தில், மலையடிவாரத்தில் !

அண்ணாமலையார் ஆலயம் 24 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்துள்ளது. ஆலயத்தில் ஒன்பது கோபுரங்கள் உள்ளன. கோபுரங்கள் மலிந்த ஆலயம் இது. இவ்வாலயத்தின் உள்ளே ஆறு பிராகாரங்கள் உள்ளன. 142 சந்நிதிகள், 22 பிள்ளையார்கள், 306 மண்டபங்கள், 1,000 தூண்கள் கொண்ட ஆயிரங்கால் மண்டபம், அதனடியில் பாதாள லிங்கம் (பால ரமணர் தவம் செய்த இடம்), 43 செப்புச் சிலைகள், கல்யாண மண்டபம், அண்ணாமலையார் பாத மண்டபம் என அமைந்த ஆலயம்.

ஆலயத்தின் உள்ளேயே சிவகங்கைத் தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் என்ற இரு பெரிய குளங்கள் உள்ளன. கொடிக்கம்பம் அருகே செந்தூர விநாயகர் பிரம்மாண்டமாக காட்சி தருகிறார். பஞ்ச லிங்கங்களும், நான்கு முகங்கள் கொண்ட பிரம்ம லிங்கமும் உள்ளன. காலபைரவர் சந்நிதியும் உண்டு.



மூன்று இளையனார்!

இங்கே முருகப்பெருமான் இளையனார் என்னும் பெயரில் மூன்று இடங்களில் வணங்கப் பெறுகிறார்.

அருணகிரியுடன் சவால் விட்டான் சம்பந் தாண்டான். அதற்காக முருகன் அருணகிரிக்கு கம்பத்தில் காட்சி தந்தார். இவர்தான் கம்பத்திளையனார் என்ற பெயரில் வளைகாப்பு மண்டபத் தூணில் காட்சி தருகிறார்.

அருணகிரி வல்லாள கோபுரத்தின் மீதேறி கீழே குதித்து உயிர்விட முயன்றபோது, தடுத்தாட்கொண்டு அருள்புரிந்து திருப்புகழ் பாட வைத்தவர் கோபுரத்திளையனார்.

கோபுரம் அருகிலேயே சந்நிதி. பிச்சை இளையனார் சந்நிதி, கிளிகோபுரம் அருகே யுள்ளது.

காமதகனம் நடக்கும் சிவாலயம் இது ஒன்றுதான். ஆடிப்பூரத்தன்று மாலை, ஆலயத்தின் உள்ளேயே உண்ணாமுலையம்மன் சந்நிதிமுன் தீமிதி விழா நடத்தும் ஆலயமும் இது ஒன்றுதான். திருவிழா நாட்களில் திட்டிவாசல் வழியே உற்சவமூர்த்திகள் வெளிவருவதும் இவ்வாலயத்தில் மட்டும்தான். அருணகிரிக்கு விழா எடுக்கும் ஆலயமும் இதுதான்.

ஒன்பது கோபுரங்கள்!

கிழக்கே ராஜகோபுரம் (217 அடி உயரம்), வீரவல்லாள கோபுரம், கிளி கோபுரம் (81 அடி உயரம்); தெற்கே திருமஞ்சன கோபுரம் (157 அடி உயரம்), தெற்கு கட்டை கோபுரம் (70 அடி உயரம்); மேற்கே பேய் கோபுரம் (160 அடி உயரம்), மேற்கு கட்டை கோபுரம் (70 அடி உயரம்); வடக்கே அம்மணி அம்மன் கோபுரம் (171 அடி உயரம்), வடக்கு கட்டை கோபுரம் (45 அடி உயரம்).

சிவபெருமானே அண்ணாமலையாகக் காட்சி தருகிறார். இதை காந்த மலை என்பர். காரணம், இம்மலையை தரிசிக்க வருவோரை மீண்டும் மீண்டும் காந்தம்போல கவர்ந்து இங்கு வரவழைக்கும்.

கிருத யுகத்தில் இது அக்னி மலையாகவும், திரேதா யுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் தாமிர மலையாகவும், இக்கலியுகத்தில் கல் மலையாகவும் திகழ்கிறது.

மலையின் உயரம் 2,688 அடி. (800 மீட்டர்). கிரிவலப் பாதையின் தூரம் 14 கிலோமீட்டர். இப்பாதையில் 20 ஆசிரமங்களும், 360 தீர்த்தங் களும், பல சந்நிதிகளும், அஷ்ட லிங்கங்களும் உள்ளன. 26 சித்தர்கள் வாழ்ந்துள்ளனர். அடிக்கு 1,008 லிங்கம் அமைந்துள்ளது என்பர். மலையை ஒவ்வொரு இடத்தில் நின்று பார்த்தால் ஒவ்வொரு வகை தரிசனமாக 27 வகை தரிசனம் காணலாம்.



உமைக்கு இடபாகம் கொடுத்த ஈசன்!
திருக்கயிலாயத்தில் ஆழ்நிலை தியானத்தில் இருந்த சிவபெருமானின் கண்களை அன்னை பராசக்தி விளையாட்டாக மூடியதால் இப்பிரபஞ்சமே இருண்டது. அனைத்து ஜீவராசிகளும் துன்பத்திற்கு ஆளாகி தவித்தன. இதனால் ஏற்பட்ட பாவத்தை போக்க பூவுலகில் காஞ்சிபுரம் கம்பை நதிக்கரையில் அன்னை காமாட்சியாக தவம் இருந்தாள். ஒருநாள் கம்பை நதி வெள்ளத்தில் தான் அமைத்த சிவலிங்கம் கரையாமல் இருக்க மார்போடு சேர்த்து அணைத்தார் அன்னை காமாட்சி. இதனால் அன்னையின் பாவத்தை சிவபெருமான் நீக்கினார். அய்யனே நீங்கள் எப்போதும் என்னை பிரியாதிருக்க தங்கள் திருமேனியில் எனக்கு இடபாகம் தந்தருள வேண்டும் என சக்தி வேண்டினார். அதற்கு சிவபெருமான், அண்ணாலை சென்று தவம் செய் என உத்தரவிட்டார்.

அவ்வாறே உமையும் தவம் செய்தாள். கார்த்திகை மாதத்தில் பவுர்ணமியும், கிருத்திகையும் சேரும் நாளில் மலையின்மீது பிரகாசமான ஒளி ஒன்று உண்டானது. அப்போது ‘மலையை இடதுபுறமாக சுற்றிவா’ என அசரீரி ஒலித்தது. அதன்படி கிரிவலம் சென்ற அன்னையை அழைத்து தனது மேனியில் இடபாகத்தை அளித்து ஆட்கொண்ட சிவபெருமான் அர்த்தநாரீஸ்வரராக காட்சியளித்தார். இதையும் நினைவுகூர்ந்தே அண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.

மலையளவு பயன்!

நரசிம்மர் இரணிய வதம் செய்தபோது, அருகிலிருந்த சிறுபாலகனான பிரகலாதனை நரசிம்மரின் உக்கிரம் தாக்கவில்லை. காரணம் இரணியன் மனைவி கர்ப்பமாக இருந்தபோது நாரதர் யோசனைப்படி கிரிவலம் வந்தாள். அப்போது பெய்த அமுத மழைத் துளி மலைமீதுபட்டு அவள் வயிற்றில் பட்டது. அது குழந்தைக்கு தக்கபலம் கொடுத்ததால்தான் இரணியன் மகன் பிரகலாதனுக்கு சக்தி கிடைத்தது.

கிரிவலம் செல்ல நினைத்து ஓர் அடி எடுத்து வைத்தால் முதல் அடிக்கு ஒரு யாகம் செய்த பலன் கிடைக்கும். இரண்டாம் அடிக்கு ராஜசூய யாகம் செய்த பலனும், மூன்றாம் அடிக்கு அனைத்து யாகங்களையும் செய்த பலனும் கிட்டும். திருவண்ணாமலை என உச்சரித்தாலே ஐந்தெழுத்தை மூன்று கோடி முறை உச்சரித்த பலன் கிட்டும். மகாதீப தரிசனம் கண்டால், அவர்களின் 21 தலை முறையினருக்கும் புண்ணியம் கிட்டும்.

கிரிவலப் பாதையிலுள்ள இடுக்குப் பிள்ளையார் சந்நிதிக்கு மூன்று வாயில்கள்- நேர்க்கோட்டில் இருக்காது. இதன்வழியே படுத்துநெளிந்து, வளைந்துதான் வெளிவர வேண்டும். இதனால் குழந்தைப்பேறு கிட்டும்; கருப்பைக் கோளாறுகள் நீங்கும்.

மலையின் கிழக்கே இந்திரலிங்கம், தென் கிழக்கே அக்னிலிங்கம், தெற்கே எமலிங்கம், தென்மேற்கே நிருதிலிங்கம், மேற்கே வருணலிங்கம், வடமேற்கே வாயுலிங்கம், வடக்கே குபேரலிங்கம், வடகிழக்கே ஈசான்ய லிங்கம் அமைந்துள்ளன. இந்த எட்டு லிங்க தரிசனம் முடிக்கவும் கிரிவலமும் முடிந்துவிடும்.

பாவம் போக்கும் அண்ணாமலை திருப்பாதம்!
கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பது ஆன்றோர் வாக்கு. அதைப்போன்றே இறைவனின் திருப்பாத தரிசனம் நமது முற்பிறவி பாவங்களை எல்லாம் தீர்க்கும் என்பது ஐதீகம். திருஅண்ணாமலையார் கோயிலில் அண்ணாமலையார் பாதம் அமைந்துள்ளது. கோயிலுக்கு உள்ளே பே கோபுரத்துக்கு வலது புறத்தில் அண்ணாமலையார் பாதம் உள்ளது. அடி முடி காணாத பரம் பொருளின் பாத தரிசனம் காண வேண்டி அடியார்களும், அருளாளர்களும் மேற்கொண்ட கடும் தவத்தின் பயனாக விஸ்வரூப மூர்த்தியாக அண்ணாமலையார் எழுந்தருளிய இடத்தில் அமைந்துள்ளதே திருப்பாதம். அண்ணாமலையார் பாதம் தனி சன்னதியாக அமைந்துள்ளது. கோயிலில் தரிசனம் செய்யும் பக்தர்கள் தவறாமல் பாத தரிசனம் செய்வது நன்மை தரும்.

பாத தரிசன சன்னதியில் தினமும் மலர் அலங்காரத்துடன் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது. பாதத்தை சுற்றியுள்ள தூண்களில் விநாயகர், முருகர், கோதண்டராமர், சக்திதேவியின் திருவடிவங்கள் காட்சி தருகின்றன. மேலும் மலை உச்சியிலும் அண்ணாமலையாரின் திருப்பாதம் அமைந்திருக்கிறது. தீபம் ஏற்றப்படும் மலை உச்சியின் வலது புறத்தில் பாத தரிசனத்தை நாம் காணலாம். திருவண்ணாமலையை தரிசித்து தவமிருந்து பேறு பெற்ற சித்தர்கள், மகான்கள், அருளாளர்கள் ஏராளம்.

அவர்களில் இடைக்காட்டு சித்தர், அருணகிரிநாதர், ஈசான்ய ஞானதேசிகர், குரு நமச்சிவாயர், குகை நமச்சிவாயர், ரமணமகரிஷி, தெய்வசிகாமணி தேசிகர், விருப்பாட்சிமுனிவர், சேஷாத்ரி சுவாமிகள், இசக்கிசாமியார், விசிறி சாமியார், அம்மணியம்மன், கணபதி சாஸ்திரி, சடைசாமிகள், தண்டபாணி சுவாமி, கண்ணாடி சாமியார், சடைச்சி அம்மாள், பத்ராசல சுவாமி, சைவ எல்லப்பநாவலர், பாணி பத்தர் உள்ளிட்டவர்கள் முக்கியமானவர்கள்.

கார்த்திகை ஜோதி மகத்துவம்!
அண்ணாமலையார் தீபம் என்பது திருவிளக்கின் விஸ்வரூபம். தீபம் என்பது லட்சுமி தேவியின் வடிவத்தையும் (சுடர்), சரஸ்வதி தேவியின் பிம்பத்தையும் (ஒளி), பார்வதியின் சக்தியையும் (வெப்பம்) ஒன்றாக சேர்த்தது. திருவிளக்கு தீபச்சுடரில் மூன்று தேவிகளின் வடிவத்தை காணும் அனைவரும் நற்கதி அடைவர் என்பது ஆன்றோர் மொழி. எனவேதான் தீபம் என்றாலே விசேஷமாக கருதப்படுகிறது. கார்த்திகை தீபத்தன்று தீபமேற்றி வழிபட்டால், சிவனின் அருளுடன், மூன்று தேவியரின் அருளும் சேர்ந்து கிடைக்கும். தீப ஒளி தீய சிந்தனைகள் ஏற்படாத வண்ணம் தடுக்கிறது. இதன் அடிப்பாகத்தில் பிரம்மா, தண்டு பாகத்தில் மகாவிஷ்ணு, நெய், எண்ணெய் நிறையுமிடத்தில் சிவபெருமான் வாசம் செய்கின்றனர்.

வேத புராணங்களும்கூட விளக்கேற்றுவதால் மிகச் சிறந்த பலன் கிடைக்கும் என்கின்றன. எத்தனை எத்தனையோ அரசர்கள், கோயில்களில் தீபம் ஏற்றுவதையே மிகச் சிறந்த திருப்பணியாகச் செய்துள்ளனர். எல்லா நாளுமே தீபம் ஏற்றி வழிபட உயர்வான பலன் தரும் என்றாலும், கார்த்திகை மாதத்தில் ஆலயங்களில் தீபம் ஏற்றி வைப்பதும், இல்லத்தில் இருவேளைகளும் விளக்கேற்றுவதும் எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வை ஒளிமயமாக்கும்.

தீபஜோதி வழிபாடானது இருள் போன்று நம்மை சூழ்ந்து நிற்கிற தடைகள், இடையூறுகளையும் ஏழரை சனி, அஷ்டமச்சனி போன்றவற்றால் ஏற்படக் கூடிய கெடுபலன்களையும் போக்கி ஒளிமயமான, வளமான வாழ்வை அருளும் என்பது நம்பிக்கை. சிவபெருமானே மலையாகி நிற்கும் அண்ணாமலையின் உச்சியில் மகாதீப வடிவில் காட்சி தரும் சிவபெருமானை வணங்கி வளமான வாழ்வு பெறுவோம்.

தீபத் திருவிழா!

உலகப் புகழ்பெற்ற தீபத்திருவிழா 12 நாட்களுக்கு திருவண்ணாமலையில் நடைபெறும். தினமும் காலையும், மாலையும் பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்துடன் பலவகை வாகனங்களில் பவனி வருவார்கள். ஐந்தாம் நாள் வெள்ளி ரத உற்சவமும், ஏழாம் நாள் ரத உற்சவமும் சிறப்பாக நடைபெறும். பஞ்சமூர்த்திகளும் தனித்தனி தேர்களில் உலா வருவார்கள். சுவாமி தேர் பெரியது. அடுத்தது அம்மன் தேர். இதை பெண்களே வடம் பிடித்து இழுப்பார்கள்.

பரணி தீபம்!

பத்தாம் நாள் அதிகாலை 4.00 மணிக்கு, மூலவர் கருவறைமுன் மிகப்பெரிய கற்பூரக் கட்டியில் ஜோதி ஒளி ஏற்றி, தீபாராதனை காட்டி, அதில் ஒற்றை தீபம் ஏற்றுவார்கள். இந்த ஒற்றை நெய்தீபத்தால் நந்திமுன் ஐந்து பெரிய அகல் விளக்கு ஏற்றுவார்கள். அதன்பின் உண்ணாமுலை அம்மன் சந்நிதியிலும் ஐந்து பெரிய அகல் விளக்கில் தீபம் ஏற்றுவார்கள். இந்த பரணிதீபம் காலையில் நடக்கும்.

மகாதீபம்!

மாலை 6.00 மணிக்கு இந்த பத்து தீபங்களும் மேள தாளத்துடன் வெளியே எடுத்துவந்து கொடிக் கம்பம் அருகேயுள்ள தீபக் கொப்பரையில் ஒன்றுசேர்த்து எரிய விடுவார்கள். அந்த நிமிடத்தில் அர்த்தநாரீஸ்வரர் வெளிவந்து காட்சி கொடுத்துவிட்டு உடனே உள்ளே சென்றுவிடுவார். இது இரண்டு நிமிட தரிசனம்தான். அப்போதே வாசல் வழியே பெரிய தீவட்டியை (ஜலால ஒளியை) ஆட்டி மலைக்கு அடையாளம் காட்டுவார்கள். இதற்காகவே காத்திருந்தோர் மலைமீது உடனே மகாதீபம் ஏற்றிவிடுவர். மக்கள் கோஷமாக "அண்ணாமலைக்கு அரோஹரா' எனக்கூறி தரிசனம் கண்டபின், இல்லம் சென்று வீடு முழுவதும் தீபமேற்றி மாவிளக்கேற்றி பூஜை செய்துவிட்டு விரதம் முடிப்பார்கள்.

ஏழடி உயரமுள்ள செப்புக் கொப்பரையில் தான் மகாதீபம் ஏற்றப்படுகிறது. 3,000 கிலோ பசுநெய், 1,000 மீட்டர் காடாதுணி திரி, 2 கிலோ கற்பூரம் இட்டு தீபம் ஏற்றுவார்கள்.

தீபம் ஏற்றும் உரிமையுடையோர் மீனவ இன பரத்வாஜ குலத்தவர்கள்தான். இவர்களின் பரம்பரையினர்தான் இப்போதும் தீபம் ஏற்றுகிறார்கள். தீப விழாவன்று இவர்கள் ஆலயத்தில் கூடுவார்கள். ஆலயத்தார் இவர்களை கௌரவித்தபின் தீபம் ஏற்றும் பொருட்களைக் கொடுத்தனுப்புவார்கள். மூன்று மணி நேரத்தில் மலை உச்சியையடைந்து விடுவார்கள். ஜலால தீப அடையாளம் கண்டபின் தீபம் ஏற்றி விடுவார்கள். இத்தீபம் 11 நாட்கள் எரியும். இரவில் பத்து கிலோமீட்டர் தூரம் வரை தெரியும்.

திருப்புகழ் மண்டபம் ஆலயத்தில் அமைந் துள்ளது. இங்குதான் சமயச் சொற்பொழிவுகள் நடைபெறும். இவ்வாலயம் முழுவதும் சுற்றிப் பார்க்க மூன்று மணி நேரம் ஆகும்.

லட்சக்கணக்கான பக்தர்களைத் தன்பால் ஈர்க்கும் அண்ணாமலையை தரிசிப்போம்! பிறவிப் பிணி நீங்கி நல்வாழ்வு பெறுவோம்!

“தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி”

ஈழ தேசத்தில் உள்ள புராதனமான ஐந்து சைவத்திருக்கோயில்கள்.

தென்னாடுடைய சிவனே போற்றி!! எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி!!

ஈழ தேசத்தில் உள்ள புராதனமான
ஐந்து சைவத்திருக்கோயில்கள்.


வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே சிவபூமியாக விளங்கிய ஈழத்தின் பஞ்ச ஈஸ்வரங்கள்

கிழக்கே திருக்கோணேஸ்வரம்
வடமேற்கே திருக்கேதீஸ்வரம்
வடக்கே நகுலேஸ்வரம்
மேற்கே முனீஸ்வரம்
தென்கிழக்கே தொண்டீஸ்வரம்
என்பனவாகும்.

ஆரூர் அமர்ந்த அரசே போற்றி!!
சீரார் திருவையாறா போற்றி!! போற்றி!!

இலங்கை சைவத் திருக்கோயில் -- திருக்கேதீஸ்வரம்

தென்னாடுடைய சிவனே போற்றி!! எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி!!


இலங்கை சைவத் திருக்கோயில் -- திருக்கேதீஸ்வரம்

திருக்கேதீஸ்வரம் திருக்கோயில் வரலாறு.

புராதன இலங்கையின் சிறப்பு வாய்ந்த ஐந்து ஈஸ்வரங்கள் என அன்புடன் அழைக்கப்படும் ஐந்து சிவன் திருக்கோயில்களுள் திருக்கேதீஸ்வரம் ஒன்றாகும். தமிழில் ‘கந்த புராணம்‘ -என்ற புராண நூலிலும் இலங்கைத் தீவின் அழகும், அத்தீவில் நிலவிய சிவ வழிபாடும், மக்களின் வாழ்க்கை முறைகளும் சிறந்த முறையில் எடுத்தியம்பப்படுகின்றன. இராமாயணக் கதை இலங்கைத் தீவு பற்றிக் குறிப்பிடும் உண்மைகளைப் பார்ப்போம்: திருக்கேதீஸ்வரத் திருக்கோயில் இராமாயண காவியத்திலேயே சிறந்த முறையில் குறிப்பிடப்படுகின்றது.
இராவணனின் மனைவியர் பலர். அவர்களுள், பேரழகு மிக்கவளும் , பட்டத்து ராணியாக விளங்கியவளுமான மண்டோதரி சிறந்த கற்புக்கரசி. இவள் மயன் என்ற சிற்றரசனின் மகள். மயன் ஆட்சி செய்த இடத்தின் பெயர் மாதோட்டம் என்ற மாந்தை. மண்டோதரி சிறந்த சிவபக்தை என்பதும், அவள் மாதோட்டத்தில் இருந்த திருக்கேதீஸ்வரத் திருக்கோயிலில் சிவபெருமானை வழிபாடு செய்ததையும் பண்டைய இதிகாசங்கள் நமக்கு எடுத்துரைக்கின்றன.

திருக்கேதீஸ்வரத் திருக்கோயிலில் பிருகு என்ற மகாமுனிவர் சிவபெருமானை வழிபட்டதை ‘மகா முனிவர்கள் வரலாறு‘ நமக்கு எடுத்துரைக்கின்றது. நவக்கிரகங்களில் ஒருவரான கேது பகவான் இத் திருக்கோயிலில் சிவபெருமானை வழிபட்டுத் தமது சாபம் நீங்கப்பெற்றார் என்று ‘தக்ஷிண கைலாச மான்மியம்‘ என்ற பண்டைய வரலாற்று நூல் கூறுகின்றது. கேது பகவான் பக்தியுடன் பூசித்ததாலேயே இத் திருக்கோயிலுக்குத் ‘திருக்கேதீஸ்வரம்’ என்னும் பெயர் உண்டாயிற்று.
இந்து மதத்தின் மிகப் பெரிய புராண நூலான ‘ஸ்கந்த புராண’த்தில் (இது முருகப்பெருமானின் வரலாற்றுச் சிறப்புகளைக் கூறும் நூல் என்பது உங்களுக்குத் தெரியும். மேலும், முருகப்பெருமான் குற வள்ளியைத் திருமணம் செய்த திருத்தலம் இலங்கையிலுள்ள கதிர்காமம்தான் என்பதும் ஒரு கர்ண பரம்பரைக் கூற்று.) மூன்று அத்தியாயங்களில் இலங்கையைப் பற்றியும், அத்தீவின் அழகைப் பற்றியும் அங்கே வாழ்ந்த மக்களின் வாழ்க்கை முறைகளையும் பற்றி விளக்கிவிட்டு, இலங்கையின் முக்கியமான இரண்டு புராதனமான சிவன் திருக்கோயில்களான திருக்கேதீஸ்வரம், திருக்கோணேஸ்வரம் ஆகியவற்றின் தோற்றத்தைப் பற்றி நமக்கு எடுத்துரைக்கின்றது.

அப் புராணத்தின்படி, முன்னொரு காலத்தில், வாயுதேவனுக்கும், ஆதிசேடனுக்கும் யுத்தம் மூண்டபோது, ஆதிசேடனைத் தாக்குவதற்காக வாயுதேவன் மகா மேரு மலையின் சிகரங்களில் மூன்றை எடுத்து வீசினார். அந்தச் சிகரங்களில் இரண்டு இலங்கைத் தீவில் வீழ்ந்தன. ஒன்று திருக்கேதீஸ்வரமாகியது. மற்றொன்று, திருக்கோணேஸ்வரமாகியது. மகா மேரு மலை இறைவன் உறையும் புனிதமான மலையாகையால், சிவபெருமான் இத் திருத்தலங்களையும் தமது உறைவிடங்களாக்கிக் கொண்டார். ஆகையால், மகா மேரு மலையின் புனிதத்துவமும், பெருமையும் திருக்கேதீஸ்வரத் தலத்துக்கும் உள்ளது.

இந்த வரலாற்றுச் சிறப்புகள் ‘தக்ஷிண கைலாச மான்மியம்’ என்ற பண்டைய தமிழ் வரலாற்று நூலிலும் விளக்கப்பட்டுள்ளது. புராண காலத்தைக் கடந்து வரும்போது, அடுத்ததாக, சைவ சமயத்தின் சமய குரவர்களான திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் ஏழாம் நூற்றாண்டிலும், சுந்தர மூர்த்தி நாயனார் எட்டாம் நூற்றாண்டிலும் இந்தத் திருக்கோயிலுக்கு வருகை தந்து இத் திருக்கோயிலில் உறையும் திருக்கேதீஸ்வரரின் சிறப்பைப் பற்றியும், அதன் அருகே அமைந்துள்ள புனிதமான பாலாவித் தீர்த்தத்தின் மகிமைகளைப் பற்றியும் தமது தேவாரங்களில் பாடியுள்ளார்கள்.

இந்தியாவிலும், இலங்கையிலும் அமைந்துள்ள 275 தேவாரப் பாடல் பெற்ற சிறப்புத் தலங்களுள் இத் திருக்கோயிலும் ஒன்றாகும். ஈழத்திலுள்ள சிவன் திருக்கோயில்களுள், திருக்கேதீஸ்வரமும், திருக்கோணேஸ்வரமும் மட்டுமே இவ்வாறு பாடல்பெற்ற தலங்களாக விளங்குவது இவற்றின் தனிச் சிறப்பாகும்.

திருக்கேதீஸ்வரம் திருக்கோயில் இலங்கையில் மன்னார் மாவட்டத்தில், மன்னார் நகருக்கு ஏழு மைல் தொலைவில், மாதோட்டம் என்ற புராதனமான துறைமுக நகரத்தில் அமைந்துள்ளது. பண்டைக் காலத்தில் இத் திருக்கோயிலும், மாந்தை என்று அழைக்கப்படும் மாதோட்டத் துறைமுகமும் உலகப் புகழ் பெற்று விளங்கின. மாதோட்டத் துறைமுகம் முக்கியமான வியாபாரத் துறைமுகமாக விளங்கியது. கிரேக்கர்களும், ரோமானியர்களும், அராபியர்களும், எத்தியோப்பியர்களும், பெர்சியர்களும், சீனர்களும், ஜப்பானியர்களும் மற்றும் பர்மியர்களும் கடல் கடந்து இத் துறைமுகத்துக்குக் கப்பல்களில் வந்திறங்கினார்கள். இலங்கையிலிருந்து வியாபாரப் பொருட்களை வாங்கிச் சென்றார்கள்.

பிற்பட்ட காலகட்டத்தில், இலங்கையைப் போர்த்துக்கேயர்கள் கைப்பற்றியபோது, அவர்கள் கிறிஸ்தவ மதத்தைப் பரப்புவதற்காகவும், இந்துத் திருக்கோயில்களில் நிறைந்திருந்த செல்வங்களைக் கொள்ளையடிப்பதற்காகவும் இந்துக் கோயில்கள அனைத்தையும் இடித்துத் தரைமட்டமாக்கினார்கள்.
அவ்வாறே, திருக்கேதீஸ்வரத் திருக்கோயிலும் 1505 ஆம் ஆண்டளவில் போர்த்துக்கேயர்களால் இடித்துத் தரைமட்டமாக்கப் பட்டது.

அந்தத் திருக்கோயிலின் அழகும், வலிமையும் வாய்ந்த கருங்கற்கள் மன்னார் கோட்டையையும், ஊர்காவற்றுறை (Kayts) கடற்கோட்டையையும் மற்றும் ஒரு கிறிஸ்தவ தேவாலயத்தையும் கட்டுவதற்கு உபயோகிக்கப்பட்டன. அப்போது திருக்கோயிலிலிருந்த செல்வங்கள் யாவும் கொள்ளையடிக்கப் பட்டன. ஏராளமானோர் கொல்லப்பட்டனர்.
மூன்று நூற்றாண்டுகளுக்குப்பின்னர், புராதனமான இத் திருக்கோயிலின் இடிபாடுகளில் மீதமிருந்த பொருட்கள் 1894 ஆம் ஆண்டு நிகழ்ந்த புதைபொருள் ஆராய்வின்போது கிடைக்கப்பெற்றன.

அந்த ஆராய்ச்சியின்போது, திருக்கேதீஸ்வரப் பெருமானின் சிவலிங்கமும் மேலும் பல வழிபாட்டுத் திருவுருவங்களும் கூட இறைவனருளால் கிடைக்கப் பெற்றன. அன்றிலிருந்து, இத் திருக்கோயிலை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும் என்ற ஆவல் ஈழத்துச் சைவப் பெருமக்கள் மனங்களில் உதயமானது.

ஆம், சைவ சமயம் தழைத்தோங்கப் பல வழிகளிலும் பாடுபட்ட ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் அவர்களின் அருமுயற்சியாலும், ஈழத்துச் சைவப் பெருமக்களின் ஒன்றுசேர்ந்த உழைப்பாலும் 1910 ஆம் ஆண்டில் இத் திருக்கோயில் புதிய பொலிவுடன் சிவாகம விதிகளுக்கு இணங்க மீண்டும் கட்டப்பட்டது. பாலாவிப் புனித தீர்த்தக் குளமும் புதுப்பிக்கப்பட்டது.

1952 ஆம் ஆண்டு ஆவணி மாதத்தில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) செய்யப்பட்டது. மேலும் சில அகழ்வாராய்ச்சிகளின்பின்னர், இத் திருக்கோயிலில் மீண்டும் 1976 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நான்காம் திகதி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. பண்டைய அழகுத் திருக்கோயில் தற்போது இல்லையென்றாலும், சிவாகம விதிகளுக்கு இணங்கவும், திராவிடச் சிற்பக்கலை முறைகளுக்கிணங்கவும் தற்போதுள்ள திருக்கோயில் அழகும் சிறப்பும் ஒருங்கே அமையும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. ஈழத் திருநாட்டின் பல பகுதிகளிலிருந்தும் இத் திருக்கோயிலில் இறைவனை வழிபடுவதற்காக மக்கள் கூடி வருகின்றார்கள். மகா சிவராத்திரி விழா இத் திருக்கோயிலில் வெகு விமரிசையாக வருடந்தோறும் கொண்டாடப்பட்டு வருகின்றது.

அருள்மிகு திருக்கேதீஸ்வரப் பெருமான் திருவடிகள் போற்றி!!

ஆரூர் அமர்ந்த அரசே போற்றி !! சீரார் திருவையாறா போற்றி!! போற்றி!!

பூஜைக்கு எது அவசியம்.?

பூஜைக்கு எது அவசியம்.?

மகா பாரதத்தில் ஒரு கதை வரும்.
அர்ஜுனனுக்கு தான்தான் பெரிய சிவ பக்தன் என்ற கர்வம்.

ஒருநாள் அவன் கண்ணனுடன் கைலாயத்தை நோக்கி நடந்து போய்க்கொண்டிருந்தபோது சிவ கணங்கள் மலை மலையாய் பூக்களை அள்ளிக் கொண்டு ஒரு இடத்தில கொட்டிக்கொண்டிருந்ததை கண்டான்.

அதைக் கண்ட அர்ஜுனன் யார் இவ்வளவு மலர்களை சிவபெருமானுக்கு
அர்ச்சிக்கிறார்கள் என்று அவர்களிடம் கேட்டான்.

யாரோ பூலோகத்தில் பீமனாம் அவன் செய்யும் பூஜையில்தான் இவ்வளவு மலர்கள் குவிகின்றன ,

இன்னும் நிறைய குவிந்துள்ளதை அப்புறப்படுத்தவேண்டும் , உங்களிடம் பேசக்கூட நேரமில்லை நாங்கள் வருகிறோம். என்று அவன் பதிலுக்குக் கூட காத்திராமல் சென்றுவிட்டனர்.

அவனுக்கு தெரிந்து பீமன் என்றும் சிவ பூஜை செய்து பார்த்ததே கிடையாது.

வயிறு முட்டத் தின்றுவிட்டு உறங்குவதைத்தான் பார்த்திருக்கிறான். அர்ஜுனன்.

உடனே அவன் கண்ணனை இது எப்படி சாத்தியம் என்று கேட்டான்.

அது மிக எளிது.

பீமன் மனதினாலேயே இந்த அகிலத்தில் பூக்கும் அத்தனை மலர்களையும் சிவனுக்கு அர்ப்பணித்துவிடுகிறான்.

அவை முழுவதும் சிவனின் திருவடிகளில் போய் விழுந்துவிடுகின்றன என்றான்

அத்துடன் அர்ஜுனன் கர்வம் அகன்றது.

இறைவனை பூஜிக்கும்போது அர்ப்பணிப்புத்தான் முக்கியமே அன்றி.
கர்வம் கொள்ளுதல் கூடாது என்பதை உணர்ந்தான்..

இரத்த அழுத்தத்தை குறைக்கும் பச்சை பயறு

இரத்த அழுத்தத்தை குறைக்கும் பச்சை பயறு


உயர் ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்க கூடியதும், முடி உதிர்வை தடுக்க கூடியதுமான பச்சை பயறு குறித்து நாம் இன்று பார்ப்போம்: பல்வேறு சத்துக்களை கொண்ட பச்சை பயறு, உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. மேல் பூச்சு மருந்தாகவும் பயன்படக் கூடியது. பச்சை பயறில் புரதம், மினரல், வைட்டமின் அதிகம் உள்ளன. பச்சை பயறை கொண்டு உயர் ரத்த அழுத்தம், கொழுப்பு அதிகம் உள்ளவர்களுக்கான உணவு தயாரிக்கலாம்.

ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் விட்டு, அதில் 2 பல் பூண்டு, மிளகு தட்டி போடவும். லவங்க பட்டை சேர்க்கவும். இதில், வேகவைத்து அரைத்து வைத்த பச்சை பயறை போட்டு நீர்விட்டு கொதிக்க வைக்கவும். சுவைக்காக உப்பு சிறிதளவு சேர்க்கலாம். 5 நிமிடத்தில் பச்சை பயறு சூப் தயார். இதை சாப்பிட்டுவர பிபி, கொழுப்பின் அளவு குறையும்.முளைவிட்டு இருக்கும் பச்சை பயறில் அதிக வைட்டமின் உள்ளது. ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படாமல் தடுப்பதால், ரத்த ஓட்டம் சீராகும். சர்க்கரை நோயின் அளவை குறைக்கும் தன்மை கொண்டது பச்சை பயறு.

2ஸ்பூன் பச்சை பயறு மாவு, சிறிதளவு மஞ்சள், கால் ஸ்பூன் குப்பை மேனி இலைப்பொடி, பசும்பால் ஆகியவற்றை கலந்து பெண்கள், முகத்தில் தடவி வரவேண்டும். அவ்வாறு செய்தால் முகத்தில் முடி வளர்வது தடுக்கப்படும். மேலும், முகம் பொலிவு பெறும். சுருக்கங்கள் மறைந்து முகம் மென்மை பெறும்.பச்சை பயறை கொண்டு பெண்களுக்கு மார்பகங்களில் ஏற்படும் வலியை குறைக்கும் மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம். பச்சை பயறை ஊற வைத்து அரைத்து பசை எடுத்துக் கொள்ளவும். அதில் கொஞ்சம் நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். அதை சிறிது நேரம் கிளறினால் களி போன்று வரும். இதை இளஞ்சூடு பதத்தில் வீக்கம் இருக்கும் இடத்தில் தடவ வேண்டும்.

இது, பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு அதிகம் பால் சுரப்பால் ஏற்படும் மார்பக வீக்கத்தை சரி செய்யும். பால் சுரப்பை சமப்படுத்தும். அக்குளில் ஏற்படும் நெறிக்கட்டியை சரி செய்யும். பச்சை பயறை கொண்டு முடி உதிர்வதை தடுக்கும் உணவு தயாரிக்கலாம். அடுப்பில் நல்லெண்ணெய் காய்ந்தவுடன், சிறிது சிவப்பு மிளகாயை போடவும். அதில் பச்சை பயறு, தேவையான உப்பு சேர்த்து கிளறியபின் எடுத்து சாப்பிடலாம். இது முடி உதிர்வை தடுக்கும்.

பச்சை பயறில் புரதச்சத்து நிறைந்திருக்கிறது. ஆரோக்கியத்தை தரக்கூடிய இதில் நார்ச்சத்து மிகுதியாக உள்ளது. கேன்சரை தடுக்க கூடியது. வைட்டமின் ஏ, பி, இ உள்ளது. மெக்னீசியம், கால்சியம், இரும்பு சத்து அதிகளவில் உள்ளது. அரிசியோடு பச்சை பயறு சேர்த்து பொங்கலாக சாப்பிட்டுவர உடல் ஆரோக்கியம் பெறும்.

கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்களுக்கான கண் பயிற்சிகள்

கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்களுக்கான கண் பயிற்சிகள்

கம்ப்யூட்டர் திரையை நீண்ட நேரம் உற்று பார்த்து வேலை செய்வதால் பார்வை மங்குவது, கண் வலி, கண்களில் இருந்து நீர் வடிவது, கண் எரிச்சல் போன்றவை ஏற்படுகின்றன.
இவற்றைத் தவிர்க்க வேண்டுமானால், தினமும் கண்களுக்கு போதிய கண் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சில எளிய கண் பயிற்சிகள் பார்க்கலாம்.
* முதலில் அமைதியாக ஒரு இடத்தில் அமர்ந்து கொள்ள வேண்டும். தரையிலும் அமரலாம். நாற்காலியிலும் அமர்ந்து செய்யலாம். தினமும் கீழே உள்ள இந்த பயிற்சிகளை 30 செய்து வந்தால் நல்ல பலன் கிடைப்பதை காணலாம். அலுவலகத்தில் வேலையின் இடைவேளையில் கூட இந்த பயிற்சிகளை செய்து வரலாம்.
* முதலில் கருவிழிகளை மேலும் கீழுமாக நகர்த்த வேண்டும். இப்படி 1 நிமிடம் செய்ய வேண்டும். பின் கண்களை ரிலாக்ஸ் செய்யவும். பின் கருவிழிகளை இடதுபுறம் வலதுபுறமாக நகர்த்த வேண்டும். இப்பயிற்சியை 1 நிமிடம் தொடர்ந்து செய்து, பின் சில நொடிகள் கண்களை ரிலாக்ஸ் செய்யவும்.
* அடுத்து கருவிழிகளை குறுக்காக நகர்த்த வேண்டும். அதில் முதலில் வலதுபுறத்தில் இருந்து ஆரம்பித்து ஒரு நிமிடம் செய்ய வேண்டும். பின் சில நொடிகள் கண்களை ரிலாக்ஸ் செய்யயும். பின் இடதுபுறத்தில் இருந்து ஆரம்பித்து 1 நிமிடம் கருவிழிகளை குறுக்காக நகர்த்த வேண்டும். பின் கண்களை ரிலாக்ஸ் செய்ய வேண்டும்.
* அடுத்து கருவிழிகளை இடதுபக்கம் நோக்கி 10 முறை வட்டமாக சுழற்ற வேண்டும். பின்பு சில நொடிகள் ரிலாக்ஸ் செய்யவும். பின் கருவிழிகளை வலது பக்கம் நோக்கி 10 முறை வட்டமாக சுழற்ற வேண்டும். பிறகு சில நொடிகள் ரிலாக்ஸ் செய்யவும்.
* அருகில் உள்ள ஒரு பொருளையும், தொலைவில் உள்ள ஒரு பொருளையும் 1 நிமிடம் பார்க்க வேண்டும். இப்படி செய்த பின் சில நொடிகள் கண்களை ரிலாக்ஸ் செய்யவும்.
* கண்களை மூடிக் கொண்டு கைவிரல்களால் கண்களுக்கு அழுத்தம் கொடுத்து 1 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும்.
இந்த பயிற்சிகளை தொடர்ந்து தினமும் செய்து வந்தால் கண்களின் அனைத்து பிரச்சனைகளும் தீரும். கம்ப்யூட்டரில் அதிக நேரம் வேலை செய்பவர்கள் இந்த பயிற்சிகளை கண்டிப்பாக செய்ய வேண்டியது அவசியம்.

40 வயதுக்கு மேல் ஜாக்கிங் வேண்டாம்... வாக்கிங் போதும்

40 வயதுக்கு மேல் ஜாக்கிங் வேண்டாம்... வாக்கிங் போதும்

சிலருக்கு முழங்கால் மூட்டு வலி இருந்து கொண்டே இருக்கும்; இதைக் கால் வலி என்று தவறாக நினைத்துக்கொண்டிருப்பர்; அதற்காக, ஆங்கில மருந்து முதல் ஆயுர்வேத ஆயில் வரை பயன்படுத்துவர். எனினும், வலி தொடர்ந்து கொண்டிருக்கும்.
இதற்கு உண்மையான காரணம், மருத்துவ ஆலோசனை இல்லாமல், நானும் உடற்பயிற்சி செய்கிறேன் என்று ஜாகிங் கிளம்பிவிடுவது தான். மற்ற உடற்பயிற்சி போலத்தான் ஜாகிங்கும். ஆனால், எல்லா வயதினரும் இதை செய்யக் கூடாது; வாக்கிங் போகலாம்; ஜாகிங் என்றால் ,ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பது டாக்டர்கள் கருத்து.
நாற்பது வயதுக்கு மேல் என்றால், ஜாகிங் செய்ய டாக்டரிடம் அனுமதி பெற வேண்டும். ரத்த அழுத்தம், ரத்த அளவு போன்றவையும் கூட இதனால் பாதிக்க வாய்ப்புண்டு. ஜாகிங்கை பல ஆண்டாக செய்து வருவோருக்கு பெரிய அளவில் பிரச்னை வராது. திடீரென ஆரம்பிப்போருக்கு தான் எல்லா கோளாறும் வரும். கால் மட்டுமல்ல, மூட்டு உட்பட உடலின் பல பகுதிகளை ஜாகிங் பாதிக்கும்.
ஜாகிங்கால், புத்துணர்ச்சியை ஊக்குவிக்கும் மூளையில் உள்ள என்டோர்பின் ரசாயனம் குறைந்து விடும். இதனால், பொதுவான சுறுசுறுப்பு குறைந்து விடும். ஜாகிங் போவதை விட, விறு விறுப்பாக "வாக்கிங்' போவதே நல்லது. அதனால், உடலில் கலோரி எரிக்கப்பட்டு, உடல் எடை குறைகிறது; பல வகையில் ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது

இளம் வயதில் முகத்தில் சுருக்கம் வருவதை தடுக்கும் வழிகள்

இளம் வயதில் முகத்தில் சுருக்கம் வருவதை தடுக்கும் வழிகள்

இளம் வயதிலேயே சில பெண்களுக்கு முகத்தில் சுருக்கம் விழுவதைக் காணலாம். இதற்குக் காரணம் “பாஸ்ட் புட்’ உணவு வகைகளை இவர்கள் அதிகம் உண்பதுதான் எனக் கூறப்படுகின்றது. இது கட்டாயமாகத் தவிர்க்கப்பட வேண்டியது அவசியம். உணவு விடயத்தில் சிறிது கவனம் செலுத்தினால் இவர்களது கவலை மறைந்தே போவது உறுதி. இதோ சில குறிப்புகள் உங்களுக்கு:
* காய்கறி பழ வகைகளைத் தவறாமல் சாப்பிடுங்கள். இயற்கையான காய்கறி, பழ வகைகளில் உள்ள விட்டமின் மற்றும் சத்துக்கள் தோலில் சுருக்கம் ஏற்படுவதைத் தவிர்க்கக் கூடியவை.
* வாரத்தில் ஒன்றிரண்டு தடவையாவது ஆரஞ்சு, கரட் ஜூஸ் குடித்து வந்தால் சருமம் பளபளப்படையும்.
* துவர்ப்பு சுவை இளமைக்குப் பாதுகாப்பு தரும். வாழைப்பழம், வாழைத்தண்டு, நெல்லிக்காய் போன்ற துவர்ப்பு சுவையுள்ள உணவை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
* வெந்தயக் கீரையை பாசிப்பருப்பு, சீரகம் சேர்த்து வேகவைத்து மசித்து வாரத்தில் 2 அல்லது 3 தடவை சாப்பிட்டு வந்தால் உடல் குளுமையாக இருக்கும். சுருக்கம் எட்டியும் பார்க்காது.
* நல்லெண்ணெய், பாதாம் எண்ணெய் இரண்டையும் சமமாக எடுத்து முகம் மற்றும் உடல் முழுவதும் தடவி, சிறிது ஊறவிட்டு கடலை மாவினால் தேய்த்துக் கழுவுங்கள். இதனை தினமும் செய்யலாம் அல்லது ஒருநாள் விட்டு ஒருநாள் செய்யலாம்.
* கறிவேப்பிலையிலுள்ள விட்டமின் ஏ இளமையான சருமத்தைத் தக்க வைத்துக் கொள்ள பெரிதும் உதவும். அடிக்கடி துவையல் செய்து சாப்பிடலாமே.
* தினமும் 2 லிட்டர் கண்டிப்பாக குடிக்க வேண்டும். அப்போது உடலில் தங்கியுள்ள தேவையற்ற கழிவுகளை நீக்க முடியும்.
- இந்த வழிமுறைகளை தினமும் பின்பற்ற வந்தால் விரைவில் இளம் வயதில் முகத்தில் வரும் சுருக்கத்தை தடுக்கவும்.

உங்கள் குழந்தைகளை உறக்கத்திலிருந்து எழுப்புவதற்கு

உங்கள் குழந்தைகளை உறக்கத்திலிருந்து எழுப்புவதற்கு 5 நிமிடங்களுக்கு முன்னிருந்தே அவர்கள் அருகே அமர்ந்து அவர்களை தொட்டு எழுப்புங்கள்.

1. உங்கள் குழந்தைகளை உறக்கத்திலிருந்து எழுப்புவதற்கு 5 நிமிடங்களுக்கு முன்னிருந்தே அவர்கள் அருகே அமர்ந்து அவர்களை தொட்டு எழுப்புங்கள்.
2. அவர்கள் தூங்குமிடத்திற்கு சென்று அவர்களோடு நாளைய அவர்களது வேலைகளை ஞாபகப்படுத்தி அவர்களது உள்ளங்களை குளிரச் செய்து அவர்களை தூங்க வையுங்கள் அது அவர்கள் காலை வேளையில் உற்சாகமாகமாகவும் சுறுசுறுப்புடன் எழும்புவதற்கு
துணை புரியும்.
3. உங்கள் பிள்ளைகளுக்கு அருகில் அமர்ந்து அவர்களிடம் நான் உங்களை அதிகம் நேசிக்கிறேன் உன்னால் நான் அதிகம் பெருமைப் படுகிறேன்
உனக்கு ஏதாவது நான் உதவிகள் செய்து தரவேண்டுமா?
நீ நல்ல ஒரு திறமை சாலி ஆற்றல் மிக்கவன் என்று சொல்லுங்கள்
அவர்களை அன்பாக அனைத்து முத்தமிடுங்கள்.
4. காலையில் நித்திரையிலிருந்து எழும்பிய உடன்
டீவி பார்ப்பதையோ ஐபேட் மொபைல் போன்ஸ் போன்றவைகள் பாவிப்பதையோ ஒருகாலமும் அனுமதித்து விடாதீர்கள்.
ஏனெனில் அதன் கதிர்கள் தூங்கி எழும்பிய நிலையில் இருக்கும் கண்களுக்கு பாதிப்பை உண்டு பண்ணிவிடும்.
5.உங்கள் குழந்தைகள் உறங்கும் முன் அவர்களது முதுகை தடவி விடுங்கள்.
அது உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும்
இடையே ஓர் உணர்வு பூர்வமான தொடர்பை உண்டு பண்ணும்.
சிறந்த முறையில் குழந்தை நித்திரை கொள்வதற்கும், சாப்பிட்ட உணவு விரைவில் செரிமானமாவதற்கும் காரணமாய்
அமையும்
6.குழந்தைகள் சற்று வளர்ந்து விட்டாலும் வாரத்தில் ஒரு நாளாவது குடும்பமாக
கணவன் மனைவி குழந்தைகள் என்று ஒரே இடத்தில் உறங்குங்கள்.
அது உங்கள் குழந்தைகளின் உள்ளத்திலிருக்கும் பாரத்தை
மனக் கவலைகளை நீக்கி
உங்கள் மீது அவர்களையறியாத
ஓர் உள்ளார்ந்த பிணைப்பை ஏற்படுத்தி விடும்.
7. குழந்தைகளின் வேண்டுதல்கள் தேவைகள் நிறைவேறாத பொழுது அவர்கள் அழுது மன்றாடி ஒரு பொருளை அடைய முயற்சிப்பதை தடுத்து நிறுத்துங்கள்.
ஏனெனில் அழுதால் ஒரு பொருள் கிடைக்கும் என்ற மனப்பதிவை அது அவர்களுக்கு உண்டு பண்ணி பிடிவாதத்தால் சாதிக்க நினைக்கின்ற எண்ணம் அவர்களிடம் உண்டாகி விடும்.
8. உண்மை, நேர்மை,
துணிவு,
விட்டுக் கொடுத்தல், மன்னித்தல்,
அன்பு காட்டல் போன்ற நல்ல பண்புகள் மீது அவர்களுக்கு ஆர்வத்தை
ஊட்டுங்கள்.
9. பொய், ஏமாற்று,
திருட்டு, அநீதியிழைத்தல், பெருமை, பொறாமை, சூழ்ச்சி செய்தல் போன்ற கெட்ட குணங்களை வளரவிடாமல் அவர்களை எச்சரித்து வையுங்கள்.
10. பாதை ஒழுங்குகளைக் கற்றுக்கொடுங்கள்.
பாதையில் செல்லும் போது அமைதியாகவும், நிதானமாகவும் நடந்து கொள்ளப் பழக்குங்கள்.
உங்கள் குழந்தைகள் உங்களை அப்படியே பின்பற்ற முயற்சிப்பர். எனவே, நீங்கள் நல்ல முன்மாதிரியாக நடந்து அவர்களை வழிநடத்துங்கள்.
11. குழந்தைகளை படிக்கும் படி திணிக்காதீர்கள்.
கல்வியின் முக்கியத்துவம்,
ஏன் கற்க வேண்டும் என எடுத்துரையுங்கள்.
12. பிறருக்கு மத்தியில் குழந்தைகளை திட்டாதீர்கள்.
பெற்றோர்களாகிய நீங்கள் குழந்தைகளுக்கு முன் சண்டை பிடிக்காதீர்கள்.
அது உளவியல் பிரிவினைகளை ஏற்படுத்தும்.
13. அவர்களின் விளையாட்டு, ஓய்வு நேரம், மகிழ்ச்சிகரமான நேரங்களில் நீங்களும் அவர்களுடன் பங்கெடுங்கள்.
அவர்கள் பூரண பாதுகாப்புடனும், அன்பான அரவணைப்புடனும் வாழ்கின்றனர் என்பதை அவர்கள் உணரும் வண்ணம் நடந்துகொள்ளுங்கள்.
14. பிள்ளைகளின் அறிவை கண்ணியப்
படுத்துங்கள்;
அவர்கள், பிரச்சினைகளை எப்படி எதிர்கொள்கின்றனர் என்பதை அவதானியுங்கள்.
15. குழந்தைகள் நவீன தொழில் நுட்பத்தைக் கற்றுக்கொள்ள உதவுங்கள்;
கணினி-இணையப் பயன்பாட்டை அவர்கள் அறிந்துகொள்ளவும்,
அதன் மூலம் பயன்பெறவும் வழிகாட்டுங்கள்.
16. சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்கு நீதிக்கதைகளை போதிக்க வேண்டும்.
அது எதிர்காலத்தில் நேர்மையானவர்களாக வாழ்வதற்கு உதவியாக இருக்கும்.
17. அவர்கள் உடல் ஆரோக்கியம் மிக்க விளையாட்டுக்களில் ஈடுபட வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுங்கள்.
18. இயற்கை உபாதைகளை அடக்கி வைக்க கூடாது என்பதை கற்றுக்கொடுங்கள்.
குறிப்பாக சிறுநீரை அடக்கி வைப்பது ஆபத்தானது
(பயந்த
சுபாவத்தையும்
தாழ்வு மனப்பான்மையையும் உண்டுபண்ணும்,
சிறுநீரகத்தில் மற்றும் சிறுநீர்ப் பாதையில் கற்கள் உருவாகும்) என்பதை புரியவையுங்கள். தொடர்ந்து பழக்கப்படுத்திக் கொண்டால் பிள்ளைகளிடம் நல்லவிதமான மாற்றங்களை விரைவில் காண்பீர்கள்

🌷நம் தவறான வாழ்கைமுறையால் ஏற்படும் தொந்தரவுகளுக்கு
எந்த மருந்துகளாலும் மருத்துவ
முறைகளாலும் நிரந்தராமான
தீர்வை தர இயலாது

உங்க கையும், காலும் கருப்பா இருக்கா? அதை வெள்ளையாக்க இதோ சில வழிகள்!

உங்க கையும், காலும் கருப்பா இருக்கா? அதை வெள்ளையாக்க இதோ சில வழிகள்!

அழகு பராமரிப்பு என்று வரும் போது முகத்திற்கு தான் அதிக அக்கறை காட்டுவோம். ஆனால் முகம் மட்டும் பளிச்சென்று இருந்து, கை, கால்கள் கருமையாக இருந்தால் நன்றாக இருக்குமா என்ன?
அதிலும் தற்போது அடிக்கும் வெயிலில் சிறிது நேரம் நடத்தாலே சரும நிறம் மாற ஆரம்பிக்கும் அளவில் வெயில் கொளுத்துகிறது. எனவே உங்கள் அழகு மேம்பட வேண்டுமானால், கை, கால்களுக்கு போதிய பராமரிப்புக்களைக் கொடுக்க வேண்டியது அவசியம்.
இங்கு கை மற்றும் கால்களில் உள்ள கருமையைப் போக்க சில வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து தினமும் பின்பற்றி வந்தால், கை மற்றும் கால்களில் உள்ள கருமையை விரைவில் போக்கலாம்.
வெள்ளரிக்காயை அரைத்து, அத்துடன் தேன் சேர்த்து கலந்து, கை மற்றும் கால்களில் தடவி வர வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், உங்கள் கை மற்றும் கால்களில் உள்ள கருமை நீங்கும்.
தினமும் ஆலிவ் ஆயில் கொண்டு கை மற்றும் கால்களை மசாஜ் செய்து வர, கருமை மறைவதோடு, சருமமும் மென்மையாக இருக்கும். இன்னும் சிறப்பான பலன் கிடைக்க ஆலிவ் ஆயிலுடன் குங்குமப்பூ சிறிது சேர்த்துக் கொள்ளுங்கள்.
இளநீர் கூட கை, கால்களை வெள்ளையாக்க உதவும். அதற்கு வாரத்திற்கு இரண்டு முறை அல்லது தினமும் இளநீரை கைகளில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும். இதனால் சீக்கிரம் கருமை நீங்கும்.
எலுமிச்சை சாற்றினை வெள்ளரிக்காய் சாற்றுடன் சேர்த்து கலந்து, கை, கால்களில் தடவி ஊற வைத்து கழுவ, அதில் உள்ள ப்ளீச்சிங் தன்மையால் சருமத்தில் உள்ள கருமை மறையும்.
தயிரும் சருமத்தில் உள்ள கருமையைப் போக்கும். இதற்கு தயிரில் உள்ள லாக்டிக் அமிலம் மற்றும் ஜிங்க் தான் காரணம். மேலும் தயிரை தினமும் கை, கால்களுக்கு தடவி மசாஜ் செய்து வர, சரும வறட்சியும் நீங்கும்.
தக்காளியை அரைத்து அதனை கை, கால்களில் தடவி ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வருவதன் மூலம், சரும நிறத்தை மேம்படுத்தலாம்.
உங்களுக்கு எண்ணெய் பசை சருமம் என்றால், முட்டையின் வெள்ளைக்கருவைப் பயன்படுத்துங்கள். அதுவும் வாரத்திற்கு 2 முறை முட்டையின் வெள்ளைக்கருவை நன்கு அடித்து, கை, கால்களில் தடவி உலர வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள். இதன் மூலம் சருமத்தில் உள்ள கருமை விரைவில் அகலும்.
ஓட்ஸை பொடி செய்து, அத்துடன் தயிர் மற்றும் தக்காளி சாறு சேர்த்து கலந்து, கை, கால்களுக்கு தடவி 30 நிமிடம் ஊற வைத்து கழுவ, கை, கால்களில் உள்ள கருமை நீங்கும் மற்றும் சருமத்தில் உள்ள இறந்த செல்களும் போய்விடும்.
கை, கால்கள் வெள்ளையாக வேண்டுமானால், பால் பவுடருடன் தேன் மற்றும் மசித்த பப்பாளி சேர்த்து கலந்து, தடவி நன்கு ஊற வைத்து கழுவ, சருமத்தின் நிறம் மேம்பட்டிருப்பதைக் காணலாம்.
காய்ச்சாத பாலை கை, கால்களில் தடவி உலர வைத்து, நீரில் நனைத்த பஞ்சு பயன்படுத்தி துடைத்து எடுக்க வேண்டும். இப்படி தினமும் வெளியே வெயிலில் சென்று வந்ததும் செய்தால், சருமத்தில் உள்ள கருமை சீக்கிரம் போய்விடும்.
இரவில் நீரில் ஊற வைத்த பாதாமை அரைத்து பேஸ்ட் செய்து, கை, கால்களில் தடவி ஊற வைத்து கழுவ, கை, கால்களில் இருக்கும் கருமை நீங்கி, வெள்ளையாகும்.
முல்தானி மெட்டி பொடியுடன், சந்தன பொடியை சேர்த்து தண்ணீர் ஊற்றி கலந்து பேஸ்ட் செய்து, கை, கால்களில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 3 முறை செய்து வந்தால், சரும கருமை சீக்கிரம் போய்விடும்.
சீரகத்தை நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து இறக்கி, பின் குளிர வைத்து அந்நீரால் கை, கால்களை தினமும் பலமுறை கழுவ வேண்டும். இப்படி ஒரு வாரம் தொடர்ந்து செய்து வந்தால் நல்ல மாற்றத்தைக் காணலாம்.
மைசூர் பருப்பை பொடி செய்து, அத்துடன் தயிர் அல்லது பால் சேர்த்து கலந்து, கை, கால்களில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து பின் கழுவ, சரும நிறம் அதிகரித்திருப்பதைக் காணலாம்.
ஆரஞ்சு பழத்தின் தோலை உலர வைத்து பொடி செய்து, அந்த பொடியுடன் பால் சேர்த்து பேஸ்ட் செய்து, கை, கால்களில் தடவி உலர வைத்து, பின் கழுவ வேண்டும். இப்படி செய்வதால் கை, கால்களின் நிறத்தை அதிகரிக்கலாம்.
எலுமிச்சையின் ஒரு துண்டை எடுத்து, கை, கால்களில் தேய்த்து, பின் கழுவ, அதில் உள்ள ப்ளீச்சிங் தன்மையால் கருமை விரைவில் நீங்கும். ஆனால் எலுமிச்சையை பயன்படுத்திய பின், கை, கால்களுக்கு மாய்ஸ்சுரைசர் எதையேனும் தவறாமல் பயன்படுத்த வேண்டும்.
வெள்ளையான சருமம் வேண்டுமானால், உருளைக்கிழங்கை சாறு எடுத்து, அந்த சாற்றினை தினமும் கை, கால்களில் தடவி உலர வைத்து, பின் நீரில் நனைத்து பஞ்சு கொண்டு துடைத்து எடுக்க வேண்டும்.
பட்டை பொடியுடன் தேன் சேர்த்து கலந்து, கை, கால்களில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவ, கை, கால்களில் உள்ள கருமை நீங்கி, சருமமும் மென்மையாக இருக்கும்.

நவகிரக பரிகார கோயில்கள் எப்படி வழிபடுவது..?

நவகிரக பரிகார கோயில்கள் எப்படி வழிபடுவது..?


1.சூரியன்;
சூரியனார் கோவில்;
இங்கு வந்து முதலில் நவக்கிரகங்களுக்கு அருள் புரிந்த திருமங்கலங்குடி ஸ்ரீ பிராண நாதேஸ்வரரை வழிபட்டு பின்பு சூரியனார் கோவில் சென்று கருவறையில் சூரிய சக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. சூரியனை வழிபடுவதாலும் இங்குள்ள நவக்கிரகங்கள் வழிபடுவதாலும் அனைத்து தோஷங்களும் நீங்கப் பெறுவர். ஞாயிறு வழிபாடு சிறப்பு.
வழித் தடம்;
கும்பகோணம்- மயிலாடுதுறை சாலையில் ஆடுதுறையிலிருந்து 2 கி.மீ. தூரத்தில் உள்ளது.
திருவலஞ்சுழி;
தஞ்சாவூர் அருகிலுள்ள திருவலஞ்சுழியில் உள்ள சுபர்தீஸ்வரர் கோவிலில் சூரியன், சனி ஆகிய இரண்டு கிரகங்களும் நேருக்கு நேர் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு இருவரும் நட்பு நிலையில் இருப்பதாக சொல்கிறார்கள் சூரியன் மற்றும் சனி பகவானால் ஜாதகத்தில் தோஷம் உள்ளவர்கள் இத்திருக்கோவில் சென்று அர்ச்சனை செய்தால் தோஷம் நிவர்த்தியாகும்.
சூரக்குடி;
சூரியனுக்கு சாபம் நீக்கி அருள் தந்த சுந்தரேசர் சன்னதி. சூரிய, சனி தோஷங்களை நீக்கும் ஸ்தலம்.
வழித் தடம்;
குன்றக்குடி கிழக்கே 12 கி.மீ. தொலைவில் உள்ளது.

2. சந்திரன்;
திங்களுர்;
தாய்க்குப்பீடை நோய், மன நிலை பாதிப்பு, சந்திரன் ஜாதகத்தில் நீசம், மறைவு, பாப கிரக சேர்க்கை உள்ளவர் இங்குள்ள கைலாச நாதர் கோவிலில் உள்ள சந்திரனை வழிபடுவதால் தோச நிவர்த்தியாகும்.
வழித் தடம்
; கும்பகோணம்- திருவையாறு சாலையில் உள்ளது.

3.செவ்வாய்;
வைத்தீஸ்வரன் கோவில்;
ஜாதகத்தில் செவ்வாய் பாதிப்பு, திருமணத்தடை, தொழில் சிக்கல், வீடு, மனை வாங்க, அடிக்கடி விபத்து போன்றவை ஏற்பட்டாலும், செவ்வாய் தெசை நடைபெறும் காலங்களிலும் இங்கு தனி சன்னதியில் உள்ள செவ்வாய்க்கு தீபம் ஏற்ரி தரிசனம் செய்ய எத்தகைய கடுமையான செவ்வாய் தோசமும் நீங்கும்
வழித் தடம்;
மயிலாடுதுறையிலிருந்து 14 கி.மீ. தூரத்தில் உள்ளது
பழநி- திருவாவின்குடி;
செவ்வாய்க்கிழமை மதியம் உச்சிகால பூஜையில் முருகனுக்குப் பால் அபிசேகம் செய்து வழிபட தோசம் நீங்கும்.
வழித் தடம்;
திண்டுக்கல்லிருந்து சுமார் 60 கி.மீ. தூரத்திலுள்ள பழனியில் அடிவாரத்திலுள்ள கோவில்.

4. புதன்;
திருவெண்காடு; குழந்தைகளுக்கு கல்வியில் ஆர்வமின்மை, தடங்கல்கள் ஏற்படும் போது இங்குள்ள புதன் வழிபட்ட ஸ்ரீ ஸ்வேதா ரண்யேஸ்வரரையும் தரிசித்து பின்பு அங்கு எழுந்தருளியுள்ள புதனையும் வழிபட்டால் தோசங்கள் நீங்கும்.
வழித் தடம்;
மயிலாடுதுறையிலிருந்து பூம்புகார் சாலையிலுள்ளது.

5.குரு; ஆலங்குடி; திருமணத்தடை, புத்ர தோஷம், குடும்ப ஒற்றுமை நிம்மதி குறைவு, ஜாதகத்தில் குரு தோஷம் உள்ளவர் வியாழக்கிழமை இங்குள்ள குரு பகவானை நெய் தீபம் ஏற்றி, வழிபடுவது சிறந்த பரிகாரமாகும்.
வழித் தடம்;
கும்பகோணம்- மன்னார்குடி சாலையில் உள்ளது.
தென்குடி திட்டை; அருள் மிகு வசிஷ்டேஸ்வரர் திருக்கோயிலில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் இடையில் ராஜ குருவாக நின்ற கோலத்தில் தனி சந்நிதியில் அருள் பாலித்து வருகிறார். எனவே, இத்தலமே குரு பரிகாரம் செய்வதற்கு சிறந்த தலம் என்பது பெரியோர் கருத்து.
வழித் தடம்;
தஞ்சாவூர்- திருக்காவூர் சாலையில் பள்ளி அக்ஹாரம் வழியாக மெலட்டூர் செல்லும் பாதையில் உள்ளது.
தாருகாபுரம்;
இங்குள்ள சிவன் கோவிலில் உள்ள தட்சிணாமூர்த்தி பாதத்தில் சுற்றிலும் ஒன்பது நவகிரகங்கள் உள்ளன. இவரை வழிபட்டால் குரு எந்த ராசிக்கு மாறினாலும் நற்பலன் கிடைக்கும்.
வழித் தடம்;
ராஜபாளையம் அருகிலுள்ள வாசுதேவ- நல்லூரிலிருந்து பேருந்து வசதி உண்டு.

6. சுக்கிரன்;
கஞ்சனூர்;
சுக்கிர தோஷம், பலஹீன, உள்ளவர் இங்குள்ள மூலவர் சுக்ரீஸ்வரரை சுக்கிர பகவானாக் கருதி வழிபட்டால் தோஷம் நீங்கும்.
வழித் தடம்
சூரியனார் கோவிலுக்கு அருகில் உள்ளது.
திருநாவலூர்;
இங்குள்ள பார்கவீஸ்வரரை வழிபட சுக்கிர தோஷம் நீங்கும். சுக்கிர தெசை பாதிப்புக்கும் உரிய ஸ்தலம்.
வழித் தடம்;
விழுப்புரம்- உளுந்தூர் பேட்டை சாலையில் உள்ளது.

7. சனி
திருநள்ளாறு;
ஜாதகப்படி 7 1\2 சனி, அஷ்டம சனி, அர்த்தாஷடம் சனி ஏற்படும் காலங்களில் இங்குள்ள நள தீர்த்தத்தில் நீராடி தர்ப்பாரண்யேஸ்வரரையும் போக மார்த்த அம்மனையும் வழிபட்ட பிறகு சனீஸ்வரர் சன்னதி சென்று எள் தீபம் ஏற்றி வழிபட தோசம் நீங்கும்.
வழித் தடம்;
மயிலாடுதுறையிலிருந்து 30 கி.மீ. தூரத்திலுள்ளது.
குச்சனூர்;
7 1\2 சனி, அஷ்டம சனி, அர்த்தாஷடம சனி , கண்டச்சனி ஆரம்பிக்கும் பொழுது இங்கு சுயம்புவாய் எழுந்தருளியுள்ள சனீஸ்வர பகவானை சனிக்கிழமை எள் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். சனி பகவானின் பிரம்ம ஹாத்தி தோசம் நீங்கிய ஸ்தலம்.

வழித் தடம்;
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகில் உள்ளது.
சேந்தமங்கலம்;
சனி நடைபெறும் காலங்களிலும்சனி தெசை, சனி புத்தி நடைபெறும் காலங்களிலும் இங்குள்ள தத்தகிரி முருகன் கோவிலில் உள்ள சனீஸ்வரரை சனிக்கிழமை வழிபட வேண்டும்.
வழித் தடம்;
சேலம், நாமக்கல் அருகில் கொல்லிமலை செல்லும் வழியில் 12 கி.மீ. தூரத்தில் உள்ளது.
திருவாதவூர்;
சனி பாதிப்புள்ள்வர் இங்குள்ள சனீஸ்வரனை சனிக்கிழமை வழிபட வேண்டும். சனி, ஈஸ்வரனைப் பிடிக்க முயன்ரு, கால் முடமாகி, கால் சரியாக ஈஸ்வரனை நோக்கி தவமிருந்த இடம்.
வழித் தடம்;
மதுரை மேலூர் சாலையில் உள்ளது.
ஸ்ரீ வை குண்டம்;
மனிதனின் மன நிம்மதியை நிர்ணயிப்பவர் சனி பகவான். அவரவர் செய்யும் வினையைப் பொறுத்து நல்லதயும் கெட்ட்தையும் தருவார். சனிபகவானின் அம்சத்துடன் சிவ பெருமான் இத்தலத்தில் காட்சி தருகிறார்.
இத்தலத்தில் சனி திசையால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் பரிகாரம் செய்தால் தடைபட்ட திருமணங்கள் நடக்கும், இழந்த சொத்துக்களை மீண்டும் பெறலாம்.
திருநல்லாறு சனீஸ்வரன் திருக்கோவிலுக்கு ஈடானது இக்கோவில்
வழித் தடம்;
திரு நெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் 1 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது.
திருநாரையூர்;
சனீஸ்வரர் தனது இரு மனைவிகள் மந்தா தேவி. ஜேஷ்டா தேவி ஆகியோருடன் இவ்வாலயத்தில் அருள் பாலிக்கிறார். மூலவருக்கு இல்லாத கொடி மரம் இங்கே சனீஸ்வரருக்கு உண்டு. பலிபீடமும், காகவாகனமும் கொண்ட்து சனீஸ்வரரின் தனிச்சிறப்பு.
தம்பதி சமேதராய் மட்டுமல்ல, இவ்வாலயத்தில் சனீஸ்வரர் தனது இரு மகன்களுடன் [குளிகன், மாந்தி] குடும்ப சமேதராய் அருள் புரிகிறார்.
வழித் தடம்;
கும்பகோணத்துக்கு அருகே நாச்சியார் கோவிலுக்கு பக்கத்தில் திருநாரையூர் உள்ளது.

8. ராகு
திருநாகேஸ்வரம்;
ராகுவினால் ஏற்படும் அனைத்து தோசங்களினால் திருமணத்தடை, பத்ர தோசம், மாங்கல்ய தோசம் ஏற்படும். இங்கு வெள்ளிக்கிழமை காலை 10.30 மணி முதல் 12 மணி, ஞாயிறு மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை ராகுவிற்கு பாலாபிசேகம், அர்ச்சனை செய்து வழிபட நாக தோசம் நீங்கும்.
வழித் தடம்;
கும்பகோணத்திலிருந்து 6 கி.மீ தூரத்தில் உள்ளது.
ஸ்ரீ பெரும் புதூர்;
ஆதிசேஷன் அவதாரமான ஸ்ரீ மத் ராமானுஜர் எழுந்தருளியுள்ள இத்தலம் சென்று நெய் தீபம் ஏற்றி, ஸ்ரீ மத் ராமானுஜரையும், ஸ்ரீ ஆதி கேசவப் பெருமாள் ஸ்ரீ யதிராஜ நாதவல்லித் தாயாரையும் திருவாதிரை நட்சத்திரம் வரும் நாளில் வழிபட நாக தோசம் நீங்கும். கால சர்ப்ப தோஷம் பரிகார தோசம்.
வழித் தடம்;
செங்கல்பட்டுக்கு அருகில் உள்ளது.
கதிராமங்கலம்;
இங்குள்ள வன துர்க்கை முன் பக்கம் பார்ப்பதற்கு பென் உருவமாகவும் பின்பக்கம் பார்ப்பதற்கு நாகம் படம் எடுத்த்து போன்றும் தோன்றும். கம்பர் வழிபட்ட ஸ்தலம். ராகு, கேது தோசம், கால சர்ப்ப தோசம் உள்ளவர் துர்க்கைக்கு அபிசேகம் செய்து வழிபட கிரக தோசம் நீங்கும். இத்துர்க்கை ல்லித சகஸ்ர நாமத்தில் வரும் வித்யா வன துர்க்கையாகும்.
வழித் தடம்;
கும்பகோணம்- மயிலாடுதுறை சாலையில் குத்தாலத்திலிருந்து 3 கி.மீ. தூரம்

9.கேது;

திருக்காளத்தி;
பஞ்ச லிங்கங்களில் வாயு லிங்கம் உள்ள இடம். கண்ணப்பனுக்கு காட்சி தந்த ஸ்தலம். இங்குள்ள காளத்தீஸ்வரருக்கு ருத்ரா பிசேகம் செய்து அர்ச்சனை செய்ய கேதுவினால் ஏற்படும் தோசம் நீங்கும். கால சர்ப்ப தோச பரிகார ஸ்தலம்.

வழித் தடம்;
திருப்பதிக்கும் சென்னைக்கும் நடுவில் உள்ள

கீழ்ப்பெரும் பள்ளம்;
இங்குள்ள நாகநாத சாமி கோவிலில் தனி சன்னதியில் உள்ள கேதுவை வழிபட கேதுவினால் ஏற்படும் தோசம் நீங்கும்.
வழித் தடம்;
மயிலாடுதுறை- பூம்புகார் சாலையில் பூம்புகாரிலிருந்து 3 கி.மீ. தூரத்திலுள்ளது.

நவதிருப்பதி திருத்தலங்கள்

பாண்டிய நாட்டில் உள்ள நவதிருப்பதி திருத்தலங்கள்

தசாவதாரமும் நவகிரகங்களும்:

பொதுவாக சிவன் கோயில்களில் மட்டுமே நமக்கு நவகிரகங்களின் தரிசனம் கிடைக்கும். பெருமாள் கோயில்களில் நவகிரகங்களுக்கு பதிலாக, சக்கரத்தாழ்வாரை தரிசனம் செய்வோம். வைணவ ஸ்தலமான மதுரை கூடலழகர் திருக்கோயிலில் நவகிரகங்களின் சன்னதி உள்ளது.

ஒன்பது கிரகங்களையும் வணங்கும் விதமாக தசாவதார சுலோகம் உள்ளது.

ராமாவதார சூர்யஸ்ய சந்திரஸ்ய யதநாயக
நரசிம்ஹோ பூமிபுதரஸ்ய யௌம்ய சோமசுந்த்ரஸ்யச
வாமனோ விபுதேந்தரஸிய பார்கவோ பார்கவஸ்யச :
கேதுர்ம் நஸதாரய்ய யோகசாந்யேயிசேகர ... !!!

என்ற ஸ்லோகத்தை அடிப்படையாகக் கொண்டு,

ஸ்ரீ ராமாவதாரம் - சூரியன்
ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் - சந்திரன்
ஸ்ரீ நரசிம்மவதாரம் - செவ்வாய்
ஸ்ரீ கல்கியவதாரம் - புதன்
ஸ்ரீ வாமனவதாரம் - குரு
ஸ்ரீ பரசுராமாவதாரம் - சுக்ரன்
ஸ்ரீ கூர்மவதாரம் - சனி
ஸ்ரீ மச்சாவதாரம் - கேது
ஸ்ரீ வராகவதாரம் - ராகு
ஸ்ரீ பலராமவதாரம் - குளிகன்

என்று, பெருமாளின் அவதாரங்கள் கிரகங்களோடு தொடர்புடையவைகளாக கூறப்பட்டுள்ளது.

அதுபோலவே, சோழ நாட்டில் உள்ள நவகிரக ஸ்தலங்களைப் போல, பாண்டிய நாட்டில் உள்ள நவ திருப்பதிகளும் நவகிரக ஸ்தலங்களாகக் கருதப்படுகின்றன. அவை,

ஸ்ரீவைகுண்டம் - சூரிய ஸ்தலம்
வரகுணமங்கை (நத்தம்) - சந்திரன் ஸ்தலம்
திருக்கோளூர் - செவ்வாய் ஸ்தலம்
திருப்புளியங்குடி - புதன் ஸ்தலம்
ஆழ்வார்திருநகரி - குரு ஸ்தலம்
தென்திருப்பேரை - சுக்ரன் ஸ்தலம்
பெருங்குளம் - சனி ஸ்தலம்
இரட்டைத் திருப்பதி (தேவர்பிரான்) - ராகு ஸ்தலம்
இரட்டைத் திருப்பதி (அரவிந்த லோசனர்) - கேது ஸ்தலம்

உங்கள் விரல் நகங்கள் கூறும் 10 எச்சரிக்கை அறிகுறிகள்.

உங்கள் விரல் நகங்கள் கூறும் 10 எச்சரிக்கை அறிகுறிகள்.

நாம் நம் நகங்களையும் பரிசோதிக்க வேண்டும் என நமக்கு யாரும் சொல்லியிருக்க மாட்டார்கள். ஆனால் நாம் நம் நகங்களின் மீது கவனம் எடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது.
நம்பினால் நம்புங்கள், உங்கள் நகங்கள் சில பிரச்சனைகளால் அவதிப்படலாம். அது உங்கள் உடல்நலத்தில் ஏற்பட்டுள்ள பெரிய பிரச்சனைக்கான அறிகுறியாக கூட இருக்கும். அதனால் உங்கள் நகங்களை உன்னிப்பாக கவனிக்க வேண்டிய நேரம் இது!
கீழே கூறப்போகும் ஏதேனும் எச்சரிக்கை அறிகுறிகள் தென்பட்டால், உங்கள் மருத்துவரை உடனே சந்தியுங்கள்.
1) வெளிரிய மற்றும் மெல்லிய நகங்கள்
உங்கள் நகங்கள் வெளிரி போய் மெல்லியதாக இருந்தால், உங்கள் உணவில் இரும்புச்சத்து அதிகமாக சேர்க்கப்பட வேண்டும் என்பதற்கான எச்சரிக்கையாகும். இரும்புச்சத்து குறைபாடு இருக்கும் போது உடலுக்கு தேவையான ஆக்ஸிஜென் சப்ளை குறைந்துவிடும்.
அதனால் கீரை, பச்சை காய்கறிகள் மற்றும் மாட்டிறைச்சியை அதிகமாக உண்ணுங்கள். இரத்த சோகை ஏற்படுவதாலும் கூட வெளிரிய மற்றும் மெல்லிய நகங்களை காணலாம். இந்த அறிகுறியோடு சோர்வும் சேர்ந்து வந்தால், மருத்துவரை அணுகுவது நல்லது.
2) நகங்களின் அடிப்பகுதியில் நீல நிறம்
நகங்களின் அடிப்பகுதியில் நீல நிறத்தை கண்டால், அது இன்சுலின் குறைபாடு அல்லது சர்க்கரை நோயின் அறிகுறியாக இருக்கலாம். அப்படியானால் சர்க்கரை உட்கொள்ளும் அளவை குறைத்துக் கொள்ளவும். உங்கள் குறைகளை மருத்துவரிடமும் எடுத்துச் செல்லுங்கள்.
3)வெளிரிய அல்லது வெண்ணிற கோடுகளை கொண்ட நகங்கள்
வெளிரிய அல்லது வெண்ணிற கோடுகளை உங்கள் நகங்களின் மீது கண்டால், உங்கள் உணவில் புரதச்சத்து குறைவாக இருப்பதற்கான அறிகுறியாகும். அதனால் மெல்லிய இறைச்சி, நட்ஸ், பச்சை காய்கறிகள், சோயா, விதைகள் மற்றும் மீன் உண்ணுவதை அதிகரித்துக் கொள்ளவும்.
4)மஞ்சள் நிற நகங்கள்
மஞ்சள் என்பது பூஞ்சை தொற்றுக்கான அறிகுறியாகும். இதனை நீக்குவது ரொம்பவும் கஷ்டமாகும். இதற்கு பொதுவாக மருத்துவர்கள் மருந்துகளை பரிந்துரைப்பார்கள். ஆனால் அவற்றினால் பக்க விளைவுகள் உண்டாகலாம். அதனால் ஆப்பிள் சிடர் வினீகர், ஆலிவ் இலைச்சாறு அல்லது டீ ட்ரீ எண்ணெய் போன்ற இயற்கை சிகிச்சைகளை முயற்சி செய்து பாருங்கள். உங்கள் நகங்களின் வளர்ச்சி மெதுவாக இருந்து,
5)சிவப்பு நிற நகங்கள்
உங்கள் நகங்களின் பிங்க் நிற பகுதிகள் சிவப்பு நிறத்தில் காணப்பட்டால், உடனே மருத்துவரை அணுக வேண்டும். அதற்கு காரணம், இதயத்தில் உள்ள கோளாறுக்கான அறிகுறியாகும் இது. பதப்படுத்தப்பட்ட கொழுப்புகள் அடங்கிய உணவுகள் உட்கொள்வதை குறைத்துக் கொண்டு,
ஒமேகா-3 கொழுப்பமிலங்கள் (மீனில் இருப்பவை) மற்றும் வைட்டமின் டி3 (ஆலிவ், பாதாம், பாமாயில் மற்றும் வெண்ணெய் பழங்களில் இருக்கும்) ஆகிய உணவுகள் உண்ணுவதை அதிகரிப்பதால், இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். பொதுவாகவே வைட்டமின்கள் உட்கொள்ளுதலை அதிகரித்துக் கொள்ளுங்கள்.
6)நீல/ஊதா நிற நகங்கள்
நீல/ஊதா நிற நகங்களை நீங்கள் கண்டால், உங்களின் இரத்த ஓட்டம் மிகவும் மோசமாக உள்ளதென்று அர்த்தமாகும். உங்கள் மருத்துவரிடம் பரிசோதனைக்கு சென்று உங்கள் குறைகளை கூறுங்கள். அதுப்போக உங்களுக்கு நீங்களே உதவிக் கொள்ளலாம். அமைதியாக இருந்து, ரோஸ்மேரி எண்ணெய்யை கொண்டு, மிதமான உடற்பயிற்சிகளை தினமும் செய்யுங்கள்.
7)கருமையான கோடுகள்
உங்கள் நகங்களில் கருமையான பழுப்பு நிற கோடுகள் காணப்பட்டால், அது மெலனோமாவிற்கான (சரும புற்று நோய்) அறிகுறியாகும். சரும புற்றுநோய்க்கான சந்தேகம் இருந்தால், உடனே மருத்துவரை அணுகுங்கள்.
இதுப்போக உங்கள் உணவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்களின் அளவை அதிகரித்துக் கொள்ளவும். இது உங்கள் அணுக்களில் உள்ள இயக்க உறுப்புகளின் பாதிப்புகளை தடுக்க உதவும்.
8)நகங்களில் குழிகள்
நகங்களில் சிறிய குழிகள் தென்பட்டால், அது சொரியாசிஸ் (உங்கள் உடலில் காணப்படும் வலி மிகுந்த சொரிகளை கொண்டுள்ள அழற்சி நிலையாகும்) நோய்க்கான அறிகுறியாகும்.
இந்த நிலையால் நீங்கள் பாதிக்கப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டுமென்றால், மருத்துவரை அணுகுங்கள். இதுப்போக, ஆப்பிள் சிடர் வினீகர், கேப்சாய்சின் ஆயின்மெண்ட் மற்றும் உப்பு அல்லது ஓட்ஸ் போன்ற சில வீட்டு சிகிச்சைகளையும் நீங்கள் முயற்சி செய்யலாம்.
9)மெல்லிய அல்லது உடையக்கூடிய நகங்கள்
உங்கள் நகங்கள் மெல்லிய அல்லது உடையக்கூடிய வகையில் இருந்தால், உங்கள் உணவில் போதிய ஊட்டச்சத்துக்கள் இல்லை என்றே அர்த்தமாகும். இருப்பினும் உங்கள் நகங்கள் அடிக்கடி உடைகிறது என்றால், உங்கள் மருத்துவரை நீங்கள் அணுக வேண்டும்.
10)பிரிக்கப்பட்ட நகங்கள்
உங்களுக்கு காயம் ஏற்படாத போதும் கூட உங்கள் நகங்கள் தானாக பிரிக்கப்பட்டால், அது மேற்கூறிய பிரச்சனைகளுக்கு எதிர் மாறானதாகும். உங்கள் உடலில் அளவுக்கு அதிகமான தைராய்டு ஹார்மோன் உள்ளதென்று அர்த்தமாகும்.

புத்திரதோஷம் :-

புத்திரதோஷம் :-


5ல் சூரியன் இராகு சேர்ந்து இருந்தால் புத்திரபிராப்தி இருக்காது.

5ல் சனி கேது சேர்ந்து இருந்தால் புத்திரபிராப்தி இருக்காது.

5ல் சூரியன் இராகு நட்சத்திரத்தில் இருந்தால் புத்திரபிராப்தி இருக்காது.

5ல் சூரியன் கேது நட்சத்திரத்தில் இருந்தால் புத்திரபிராப்தி இருக்காது.

5ல் சனி இராகு நட்சத்திரத்தில் இருந்தால் புத்திரபிராப்தி இருக்காது.

5ல் சனி கேது நட்சத்திரத்தில் இருந்தால் புத்திரபிராப்தி இருக்காது .

5ல் குரு சந்திரன் சேர்ந்து இருந்தால் புத்திர தோஷம், தாமத குழந்தை.

5ல் சூரியன் சனி சேர்ந்து இருந்தால் புத்திர தோஷம், தாமத குழந்தை
செவ்வாய் சனி 12ல் சேர்ந்து இருந்தால் கடுமையான புத்திரதோஷம்.

செவ்வாய் சனி 5ல் சேர்ந்து இருந்தால் கடுமையான புத்திரதோஷம்.

கேது 5ல் இருந்தால் புத்திரதோஷம்.

பெண் - இலக்கினத்தில் உச்ச கிரகம் இருந்தால் செயற்கை குழாய் குழந்தை பிறக்கும் நிலையைத்தருகிறது ( அல்லது வேறு நபர் மூலம் குழந்தையை பெறும் நிலையைத்தருகிறது ).

ஆனால் உயர் கணித தேவ சார
ஜோதிடத்தில்,

1. குரு கெட்டுயிருந்தாலும்
(குழந்தைக்கு காரகன்)

2. 5பாவம் கெட்டுயிருந்தாலும்

3. தலைமை பாவம் அதாவது லக்ன பாவத்தில் கொடுப்பினை
இருந்தாலே 100% குழந்தை
உண்டு .

சீரகத்தின் மருத்துவப் பயன்கள்...!!!

சீரகத்தின் மருத்துவப் பயன்கள்...!!!


1. சீரகத்தை வாழைப்பழத்துடன் பிசைந்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ரத்த மூலம் தீரும்.
 2. சீரகத்தையும், உப்பையும் சேர்த்து மென்று தண்ணீர் குடித்தால் வயிற்று வலி உடனே தீரும்.
 3. சீரகத்துடன் கற்கண்டை கலந்து மென்று தின்றால் இருமல் போகும்.
 4. சீரகப்பொடியோடு தேன் கலந்து சாப்பிட்டால் விக்கல் அகலும்.
 5. சீரகத்தை அரைத்து மூல முளையில் பூசினால் மூலம் வற்றும்.
6. சீரகத்தை அரைத்து உடம்பில் பூச அரிப்பு நிற்கும். 7. சீரகத்தை மென்று தின்றாலே, வயிற்று வலி நீங்கி செரிமானம் நன்றாக ஏற்படும்.
 8. சீரகப்பொடியோடு எலுமிச்சைச் சாறு சேர்த்து குழைத்துச் சாப்பிட்டால் பித்தம் அகலும்.
 9. நல்லெண்ணெயில் சீரகத்தை போட்டுக் காய்ச்சி, எண்ணெய் தேய்த்து குளித்தாலும் பித்தம் நீங்கும். 10. சீரகப்பொடியோடு தேன், உப்பு, நெய் சேர்த்து தேள் கொட்டிய இடத்தில் பூசினால் விஷம் முறியும்.
 11. சீரகத்தை வறுத்து சுடு நீரில் போட்டு பால் கலந்து சாப்பிட பசி கூடும், மிளகுப்பொடியோடு கலந்து காய்ச்சி வடிகட்டிக் குடித்தால் அஜீரணம் மந்தம் நீங்கும்

காயத்ரி மந்திரத்தினைப் பற்றி சுவாமி விவேகானந்தர்

காயத்ரி மந்திரத்தினைப் பற்றி சுவாமி விவேகானந்தர் குறிப்பிடும் பொழுது, ‘மந்திரங்களின் கிரீடம் காயத்ரி மந்திரம்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஜேபிஎஸ் ஹால்டேன் என்ற பிரபல விஞ்ஞானி (1892-1964) காயத்ரி மந்திரத்தினைப் பற்றி குறிப்பிடும் பொழுது காயத்ரி மந்திரம் ஒவ்வொரு இரசாயன கூடங்களின் வாயில் கதவிலும் காயத்ரி மந்திரம் பொறிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கீதையில் ‘நதிகளில் நான் கங்கையாகவும், மலைகளில் நான் விந்திய மலையாகவும், மந்திரங்களில் நான் காயத்ரி மந்திரமாகவும் இருக்கின்றேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

சுவாமி இராம கிருஷ்ண பரமஹம்சர் கூறுகையில் ‘பெரிய பெரிய கடுந்தவ முயற்சிகளில் மனிதர்கள் ஈடுபடுவதனைக் காட்டிலும், காயத்ரி மந்திரத்தினை ஜபிப்பது மிகப்பெரிய சாதனையாகும். இது மிக சிறிய மந்திரம்தான். ஆனால், மிக மிக சக்தி வாய்ந்தது எனக் குறிப்பிட்டுள்ளார்.

பிரபல மேலை நாட்டு ஞானி ஆர்தர் கொயெஸ்ட்லர் ‘காயத்ரி மந்திரம் 1000 ஆட்டம் பாம்களுக்குச் சமம்’ எனக் குறிப் பிட்டுள்ளார்.

ஜெர்மன் தத்துவ ஞானி மெக்ஸ் முல்லர் (1823-1900) அவர்கள் ‘ஒளியினை தவம் செய்து நம் மூளை, மனதினை உயர்த்துவோம்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

மகாத்மா காந்தி (1869-1948) அவர்கள் ‘யார் ஒருவர் காயத்ரி மந்திரத்தினை ஜபிக் கின்றாரோ அவன் நோய்க்கு ஆளாக மாட்டார்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

காயத்ரி மந்திரத்தினை சொல்லுவதன் பொருள் ‘உயர் அறிவு சக்தியினை அளித்து, அறியாமையை நீக்க வேண்டும்’ என்பதாகும்.

இம்மந்திரம் சொல்லப்படும் பொழுது எழும் அதிர்வுகள் உடலில் 24 சுரப்பிகளை ஊக்குவிக்கின்றது. இதன் காரணமாக 24 வகை சக்திகள் உடலில் உண்டாகின்றன.
காயத்ரி மந்திரத்திற்கு ஜாதி, மதம் என்ற எந்த பிரிவும் கிடையாது.

தத் - வெற்றி
ச - வீரம்
வி - பராமரிப்பு
து - நன்மை
வ - ஒற்றுமை
ரி - அன்பு
நி - பணம்
யம் - அறிவு
ஃபர் - பாதுகாப்பு
க்கோ - ஞானம்
த்தி - அழுத்தம்
வா - பக்தி
ஸ்யா - நினைவாற்றல்
ஃத்தி - மூச்சு
மா - சுய ஒழுக்கம்
யோ- விழிப்புணர்வு
யோ- உருவாக்குதல்
நஹ- இனிமை
பரா- நல்லது
சோ- தைரியம்
த்தா- ஞானம்
யட் - சேவை

காயத்ரி மந்திரம் என்றால் என்ன?

வேதத்திலிருந்து வந்த அனைவருக்கும் பொதுவான மந்திரம் தான் காயத்ரி மந்திரம்.
ஓம் - தெய்வீக சக்தி, ஒலி சின்னம்
ப்பூ - உடல் விமானம்
புவஹா - நிழலிடா விமானம்
ஸ்வ - வான விமானம்
தத் - அந்த தலை தெய்வத்தின்
ஸவித்து - பிரபஞ்சம் தயையும் சக்தி
வரேன்யம் - வணங்க வேண்டும்
பர்கோ - பிரபல
தேவஸ்ய - பிரகாசமிக்க
தீமஹி - நம் த்யானம்
தியோ - அறிவினை
யா - யார்
நஹ - எங்கள்
ப்ரசோதயாத் - தெளிவுப்படுத்துங்கள்
ஓம் பூர் : புவ : ஸீவ :
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ : யோந: ப்ரசோதயாத்

நம் புத்தியை இயங்கச் செய்யும் பரமாத் மாவை நாம் வணங்குவோம் என்பது சுருக்கமான பொருள்.

இம் மந்திரம் ரிஷி விஸ்வாமித்திரரால் கண்டுபிடிக்கப்பட்டது. சூரிய பகவானை நோக்கி வழிபடுவதாக இம் மந்திரம் அமைந்துள்ளது. மிக அதிக சக்தி கொண்டது. அதிர்வுகள் மூலம் ஆக்கப்பூர்வ சக்தியினை ஏற்படுத்துவது. வேதங்களின் தாய் தான் காயத்ரி தேவி. இம் மந்திரம் சொல்லப்படும் இடங்களில் எல்லாம் இத்தேவி இருப்பாள். இத் தேவிக்கு சாவித்திரி, சரஸ்வதி என்ற பெயரும் உண்டு.

காயத்ரி ஐம்புலன்களின் அதிபதி. சாவித்திரி ப்ராண சக்தி. சாவித்திரி என்பது உண்மையைக் குறிக்கின்றது. சரஸ்வதி வாக்கின் அதிபதி. ஆக, உண்மையான சிந்தனை, சொல், செயல் இவற்றினை குறிப்பதாக அமைகின்றது. காயத்ரி மந்திரம் வேதத்தின் சாரம். இதனை முழு கவனத்தோடே சொல்ல வேண்டும். காலை, மாலை இருவேளையும் சொல்லலாம். அனைவரும் சொல்லலாம். இருதயம் சுத்தமாகும். தீய எண்ணங்கள், கவலைகள் நீங்கும். குறிப்பாக, பள்ளி மாணவர் திறமையாகப் படிப்பார்கள்.

காயத்ரி மந்திரம் ஜபிப்பதன் பலன்கள்

* கம்பீரத் தோற்றம்
* தரமான பேச்சு
* வறுமை, குறை நீங்குதல்
* பாதுகாப்பு வட்டம்
* கண்ணில் அறிவு தெரிதல்
* அபாயம், தேவையற்ற சூழ்நிலை நீங்கும்
* நரம்புகளும், சுரப்பிகளும் ஊக்குவிக்கப்படும்
மேலும்
* அமைதியாய் இருப்பர்
* நற்செயல்களில் ஈடுபடுவர்
* காந்த சக்தி ஆகியவை உருவாகும்.
மேலும்
* வாழ்க்கையில் தடைகளை நீக்கும்
* மூளையை பிரகாசிக்கச் செய்யும்
* உள்ளுணர்வினை தெளி வாக்கும்
* உயர் உண்மைகள் தெரிய வரும்
- என்றும் கூறப்படுகின்றது.

டாக்டர் ஹெவார்ட் ஸ்டியன் கெரில் என்ற அமெரிக்க விஞ்ஞானி காயத்ரி மந்திர பலன்களாக பல செய்திகளை வெளியிட்டுள்ளார். ஆனால், இதற்கு மேலும் ஆதாரப்பூர்வம் தேவைப்படுகின்றது. கடந்த சில ஆண்டுகளில் சில வெளிநாடுகளில் காலை 7 மணிக்கு சுமார் 15 நிமிடங்கள் தொடர்ந்து காயத்ரி மந்திரத்தினை ஒலிபரப்புவதாக கூறப்பட்டுள்ளது.

இம்மந்திரம் முழுக்க முழுக்க ஒளியினை வணங்குவதும், மனதின் இருளினை நீக்க வேண்டுவதாக அமைந்துள்ளதால், இம் மந்திரம் பெரிதும் வரவேற்கப்படுகின்றது.

ஒரு மந்திரமோ, தியானமோ, யோகவோ, உடற்பயிற்சியோ ஆரம்பிப்பதற்கு முன்னால் உங்கள் மருத்துவர் ஆலோசனை பெறுவது அவசியம்.
ஒரு பழக்கம் உங்களை விட்டு நீங்க (உ-ம்) காபி, டீ பழக்கம் போன்றவை நீங்க 40 நாட்கள் ஆகும்.
த்யானமோ, மந்திரமோ அது பழக்கமாக ஆரம்பிக்கும் பொழுது அது உங்களுக்கு கை கூடி வர, பழக்கப்பட 90 நாட்கள் ஆகும்.
120 நாட்களில் புதுப்பழக்கம் நன்கு பழகி விடும்.

120 நாட்களில் கை விட்ட பழக்கமும் நம்மிடம் நன்கு நீங்கி விடும்.

1000 நாட்களில் நீங்கள் செய்யும் சாதனையோ, கடைப்பிடிக்கும் பழக்கமோ நீங்கள் மாஸ்டர் ஆகி விடுவீர்கள். (உ-ம்) தொடர்ந்து நீங்கள் 1000 நாட்கள் காலை 4 மணிக்கு எழுந்தால், வாழ்நாள் முழுவதும் அவ்வாறே செய்வர்.

* மந்திரத்தைத் தொடர்ந்து 3 நிமிடங்கள் ஜபிப்பது உங்களைச் சுற்றியுள்ள மின்சார காந்த அலைகளை தாக்கும். ரத்த ஓட்டம் சீர்படும்.

* ஏழு நிமிடம் தொடர்ந்து ஜபிப்பது உங்கள் மூளை செயல் திறனைக் கூட்டும். உடல் வலுவினைக் கூட்டும். உடலைச் சுற்றியுள்ள காந்த அலைகளில் நல்ல மாறுதல்கள் ஏற்படும்.

* 11 நிமிடம் தொடர்ந்து மந்திரம் ஜபிப்பதும், தியானம் செய்வதும் நரம்பு மண்டலத்திலும், சுரப்பிகளிலும் நல்ல மாற்றத்தினை ஏற்படுத்தும்.

* 22நிமிடங்கள் தொடர்ந்து மந்திரம் ஜபிப்பதும், தியானம் செய்வதும் ஒருவரின் அழிவுப்பூர்வ, ஆக்கப்பூர்வ இரண்டும் இல்லாத நிலைகளில் தடுமாறும் மனதினை நிலைப்படுத்தி தெளிவாக சிந்திக்க வைக்கும். உள் உணர்வினைக் கூட்டும்.

* 31 நிமிடங்கள் தொடர்ந்து ஜெபிப்பது சுரப்பிகளை சீர்ப்படுத்தும். மூச்சு சீராகின்றது. அனைத்துத் திசுக்களும் சீர்படத் தொடங்குகின்றன.

* 62 நிமிடங்கள் தொடர்ந்து ஜபிக்கும் பொழுது மூளையில் ‘க்ரே’ பகுதியில் மாற்றம் ஏற்படுகின்றது. பிட்யூட்டரி, பீனியல் சுரப்பிகள் நன்கு இயங்குகின்றன.

* இரண்டரை மணிநேரம் தொடர்ந்து ஜெபிக்கும் பொழுது உயர்நிலையினை மனம், மூளை அடைகின்றது. நாள் முழுவதும் ஆக்கப் பூர்வமாகவே செயல்படுவர்.

- மேற்கூறப்பட்டுள்ள கருத்துக்கள் விஞ்ஞான ஆய்வு முடிவுகள் இல்லை. என்றாலும், பல அனுபவ ரீதியான கருத்துக்களாக வெளியிடப்பட்டுள்ளன.
மந்திரம் சொல்வதற்கென சில முறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன.

* காலை 4 மணிக்கு எழுந்து நாலரை மணிக்குள் தயாராகுங்கள்.
* கிழக்கு முகமாக அமருங்கள்.
* ஞான முத்திரை பரிந்துரைக்கப்படுகின்றது.
* மந்திரத்தினை பொறுமையாய் 108 முறை சொல்லுங்கள்.

மகாத்மா காந்தி அவர்கள், அவர்களது ‘இயற்கை வைத்தியம்’ என்ற புத்தகத்தில் ‘ஒரு மருத்துவரின் கடமை நோயாளியின் உடலுக்கு கவனம் செலுத்துவது மட்டுமல்ல. அவரது ஆன்மாவிற்கும் கவனம் செலுத்த வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

அந்த வகையில் அவர்கள் ‘ராம’ நாமத்தினை பரிந்துரைக்கின்றார். மேலும் ‘ராம’ நாமம் அனைத்திற்கும் தீர்வு என்று குறிப்பிடுகின்றார். இந்த நாமத்தினை சொல்பவர்கள் சிறிய முயற்சியிலேயே அரிய செயல்களை சாதிக்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

‘ரா’ என்பது ‘ஓம் நமோ நாராயணா என்பதிலிருந்தும், ‘ம’ என்பது ‘ஓம் நம சிவாய’ என்பதிலிருந்தும் சேர்க்கப்பட்டதால், இரட்டிப்பு பலன் என்றும் கூறப்படுகின்றது.

கந்தர் சஷ்டி கவசத்தில் கூட ‘ரஹன பவச ரரரர, ரிஹண பவச ரிரிரிரி’ என சொல்லப்படுகின்றது. ‘ரா’ என்ற எழுத்தும் ‘ம’ என்ற எழுத்தும் உச்சரிக்கப்படும் பொழுது உடலில் ஏற்படும் அதிர்வுகள் அவரது உடல் நலத்தினையும், ம ன நலத்தினையும் காப்பதாக விளக்கப்படுகின்றது. ஆக, மந்திரங்களும் அமிர்த மருந்தே என்பதை அறிவோமாக.

இருக்கு வேதம் - ரிக்வேத

இருக்கு வேதம் - ரிக்வேத

இருக்கு வேதம் (சமசுகிருதம்: ऋग्वेद - ரிக்வேத) இந்து சமயத்தின் அடிப்படையாகக் கொள்ளப்படும் நான்கு வேதங்களுள் ஒன்று. இந் நான்கு வேதங்களில் மிகப் பழமையானதும் இதுவே.
சமசுகிருத மொழியில் அமைந்த சுலோகங்களின் தொகுப்பான இது, எந்தவொரு இந்தோ ஐரோப்பிய மொழியிலும் எழுதப்பட்டு இன்று கிடைக்கக்கூடிய மிகப் பழைய நூலாகவும் திகழ்கிறது. இது ஆக்கப்பட்ட காலம் சரியாக நிறுவப்பட முடியாவிட்டாலும், பொதுவாக கி.மு 1500 - 1100¹ க்கும் இடைப்பட்ட காலத்தில் தொகுக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
இருக்கு வேதம்² என்றாலே செய்யுள் என்றுதான் பொருள். இருக்கு வேதம் முழுவதும் செய்யுட்களாக உள்ளது. சிறப்பான ஏழு சந்தங்களால் அமையப்பட்டது . அவைகள் காயத்திரி, உஷ்ணிக், அனுஷ்டுப், பிரஹதி, விராட், த்ரிஷ்டுப், ஜகதி ஆகும். இதில் காயத்திரி சந்தஸ் அதிக புழக்கத்தில் உள்ளது.
இருக்கு வேதம், பல ருக்குகள் அடங்கியுள்ளதால் இதற்கு ருக்வேதம் என காரணப்பெயர் ஆயிற்று. ருக்வேதத்தில் எட்டு அஷ்டகங்கள் அல்லது பத்து மண்டலங்கள், 64 அத்தியாயங்கள், 85 அனுவாகங்கள், 1028 சூக்தங்கள், 2024 வர்க்கங்கள், 10647 ருக்குகளாக(மந்திரங்கள்) பிரிக்கப்பட்டுள்ளது. ’ருக்’ என்பதற்கு எதனால் தேவர்கள் துதிக்கப்படுகிறார்களோ, அல்லது தெளிவாக அறியப்படுகிறார்களோ, அதற்கு ’ருக்’ என்று பெயர். இந்த 1028 சூக்தங்களில் பல வேள்விக் கிரியைகளில் பயன்படுத்துவதற்காக உருவானவை.
இதில் அடங்கியுள்ள பெரும்பான்மையான சூக்தங்கள், தங்களுக்கு நல்ல உணவு, நல்ல பானம் (சோமபானம்), நல்ல மழை, தானிய விளைச்சல், தானம்,(தட்சனை) அதிக பால் தரும் பசுக்கள், யாகங்கள் செய்திட செல்வம், வேகமாக செல்லும் குதிரைகள், உறுதியான தேர்கள், நல்ல உடல் நலம், மன உறுதி, வேத மந்திரங்களை நினைவில் வவைத்துக்கொண்டு வேத மந்திரங்களை பாட நல்ல வாக்கு மற்றும் தங்களின் வெற்றிக்காகவும், எதிரிகளின் வீழ்ச்சிக்காகவும் தேவர்களின் உதவி வேண்டி அவர்களைபோற்றும் நோக்கிலே அமைந்தவை. மேலும் தங்கள் மன்னர்களின் சில வரலாற்றுக் குறிப்புகளும் ஆங்காங்கே காணப்படுகின்றன. முக்கியமாக ஆரியர்களுக்கும், அவர்களது எதிரிகளான தாசர் எனபடும் அசுர இனத்தாருக்கும் மற்றும் கிராதர்கள் என்ற இனத்தாருக்கும் இடையிலான போர்கள் பற்றிய குறிப்புக்கள் குறிப்பிடத்தக்கவை.
கடவுள்கள்
இருக்கு வேதத்தில் முதன்மையாகக் குறிப்பிடப்படும் கடவுள்கள், தீக்கடவுளான அக்கினி, தேவர்கள் தலைவனும், வீரனுமான இந்திரன், சோமன் என்போராவர். இவர்களைவிட மித்திரன், வருணன், உஷை (விடியற்காலை), அஸ்வினிதேவர்கள் என்போரும், சவிதா, விஷ்ணு, உருத்திரன், பூஷண், பிரகஸ்பதி, தியாயுஸ் (பிதா), பிரிதிவி, சூரியன், வாயு, பர்ஜன்யன் (மழை), அத்ரி, அந்தரிச்சன், துவஷ்டா, வசுக்கள், மருத்துக்கள், ஆதித்தர்கள், விஸ்வதேவர்கள், சரசுவதி, அர்யமா, அதிதி, ரோதசி, மித், ரிபுட்சா, நாசத்ய, தாதா, யக்ஞன், கிராவா, சேத்திரபதி, இளா, விராட் புருஷன், பிரசாபதி, மன்யு, வாசஸ்தோஷ்பதி, விசுவகர்மா, பிதுர்கள், நான்கு திசைகள், நீர், நதிகள், மலைகள் போன்ற தேவர்களும் இந்நூலில் போற்றப்படுகிறார்கள்.
இருக்கு வேதத்தில் காணப்படும் வேறு கடவுள்களின் பெயர்கள் சில, வேறு இந்தோ-ஆரிய மக்களினங்கள் மத்தியிலும் புழக்கத்தில் இருந்து வந்திருப்பதைக் காணலாம். கிரேக்கர்களின் ஸேயுஸ் (Zeus), லத்தீன் மொழியிலுள்ள ஜுபிட்டார் (Jupiter) (தேயுஸ் பேட்டர் (deus-pater)என்னும் சொல்லிலிருந்து பெறப்பட்டது) என்பவை இருக்கு வேதக் கடவுட் பெயரான தியாயுஸ் பிதா என்பதுடன் பொருந்தி வருவதைக் காணலாம்.
முனிவர்கள்
இருக்கு வேதத்தில் குறிப்பிடப்படும் முதன்மையான ரிக்வேத கால முனிவர்கள், வசிட்டர், விசுவாமித்திரர், பரத்துவாசர், வாமதேவர், அகத்தியர், கிரத்சமத், கக்ஷிவான், தீர்க்கதமா, கோதமர், மேதாதிதி, சியாவாஷ்வ, குதச, மதுச்சந்தா, அபாலா (பெண் முனிவர்), அஷ்டக், பிரஸ்கண்வர், ஜமதக்கினி, அயாஸ்வா, அஜிகர்த்தன், கன்ஹஷேப், பராசரர், சக்தி மற்றும் அத்ரி ஆவர்.
அரசர்கள்
இருக்கு வேதத்தில் குறிப்பிடப்படும் அரசர்களில், திவோதாஸ், சுதாஸ், மனு, புரூரவா, நகுசன், யயாதி, மாந்தாதா, புரு, குசிக், திரிச்சு மற்றும் குசிகர் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
இருக்கு வேதத்தில் குறிப்பிடும் பகையரசர்கள் மற்றும் படைத்தளபதிகளில் முதன்மையானவர்களில் சிலர், தஸ்யூக்கள் [அசுரர்கள்], இமயமலைவாழ் கிராத இனத்து அரசர்களான சம்பராசூரன், விருத்திராசூரன், சுஷ்ணன், குத்ஸன், பிப்ரு, வங்கிருத், கரஞ்ச், பர்ணய், மற்றும் வர்ச்சி.
பெண்கள்
இருக்கு வேத்தில் குறிப்பிடப்படும் பெண்களில் குறிப்பிடத்தக்கவர்கள், அதிதி, இந்திரத் தாய்கள், இந்திராணி, ஊர்வசி, கக்ஷிவான் மகள் கோஷா, ஜுஹூ, தட்சிணா, நிபாவரி, யமீ, வைஸ்வதி, ராத்திரி, லோபமுத்ரா [அகத்தியரின் மனைவி], வசுக்கரனின் மனைவி, வாக், விவ்ருஹா, விஷ்பல, விஸ்வவாரா, சசி, சஷ்வதி, சிகண்டினி, காஷ்யபி, சிரத்தா காமயானி, ஸர்மா[ பெண் நாய்], சார்ப்ப ராக்ஞி, சிக்தா, மன்னன் சுதாசின் மனைவி சுதேவி மற்றும் சூர்யா.
உணவு வகைகள்
ரிக்வேத கால மக்கள் சிறிய அளவில் பயிர்த்தொழில் செய்து வந்தாலும், பசுக்கள், குதிரைகள், ஆடுகள் ஆகியவைதான் பெருஞ்செல்வமாக கருதினர். பால், தயிர் மற்றும் நெய்யும் முக்கியமானது என்றாலும் ‘புரோடாஷ்’ என்பது அவர்களுக்கும், அவர்கள் வணங்கும் தேவர்களுக்கும் விருப்பமான உணவாகும். இருக்கு வேதத்தில் அரிசி பற்றிய குறிப்புகள் காணப்படவில்லை. அவர்கள் அருந்தும் சிறப்பான பானம், சோம பானம் ஆகும்.(இருக்கு வேதத்தின் ஒன்பதாம் மண்டலத்தின் அனைத்து 114 சூக்தங்களும் சோமபானத்தை பற்றியது தான்) ஆனால் அவர்கள் சுரா பானம் அருந்துவது இல்லை. சவ்வரிசி முதன்மையான உணவாக இருந்தாலும், வறுத்த தாணியத்தை ‘தானா’ என்றும், தினை மாவை ’கரம்ப’ என்றும், ரொட்டியை ‘அபூப்’ என்றும், அழைத்து அதை உண்டனர். மேலும் பழ வகைகளும் உண்டனர்.
அரசியல் அமைப்புகள்
ஆரிய மக்கள் வாழம் இருப்பிடங்களை ‘கிராமங்கள்’ என்றும், ராஷ்டிரங்கள் என்றும் பிரிக்கப்பட்டுள்ளது. கிராமத் தலைவரை ‘கிராமணி’ என்றும், ராஷ்ட்டிரத் தலைவரை ‘ராஜா’ என்றும் அழைத்தனர். ’சாம்ராட்’, ஸ்வராட், ஷாஸ், ஈஷான், பதி, பூபதி, பூதி மற்றும் நிருபதி என்ற சொற்களால் ராஜாவை அழைத்தனர். ராஜாவின் மகன்களை ராஜபுத்திரர்கள் என்றழைத்தனர். அவர்களிடையே சபை, சமிதி, போன்ற சமூக அமைப்புகள் இருந்தன. சமூகத் தலைவர்களை ‘குல்ப்’ (குலத்தலைவர்) என்றும் ’விரஜாபதி’ (சமூகத்தலைவர்), ’கணபதி’ ஆகியவர்கள் குற்ற வழக்குகள், சிவில் வழக்குகளில் விசாரித்து நீதி வழங்கினர். இருக்கு வேதத்தில் புரோகிதர் (பிரதமர்) பணிகள், வேள்வி செய்வதும், செய்வித்தலும் மற்றும் மத தொடர்பான விடயங்களில் மன்னனுக்கு ஆலோசனை கூறுவதும் ஆகும்.
நதிகள்
இருக்கு வேதம் சப்த சிந்துவின் எழு சகோதரிகள் பாயும் நதிகள் பற்றி குறித்துள்ளது.1 பருஷ்ணி (ராவி ஆறு), 2 அசிக்னி (செனாப் ஆறு), 3 சிந்து ஆறு, 4 விபாஷ் (ஜீலம் ஆறு),5 சுதுத்ரி (சத்லஜ் ஆறு), 6 திருஷ்த்வதி (சரசுவதி ஆறு), 7 கக்கர் (யமுனை) நதியின் பெயரைக் குறிப்பிட்டாலும் அது சப்தசிந்து பகுதியின் எல்லைப்புற நதியாகும். சிந்துஷித் என்ற முனிவர் கங்கை நதியைப் பற்றி ஒரே ஒரு இடத்தில் குறிப்பிட்டாலும் (ரிக்வேதம்10-75-6) அது சப்தசிந்து பிரதேச நதி அல்ல. இன்று புனிதமான நதியாக விளங்கும் கங்கை ஆறு, இருக்கு வேதகாலத்தில் ஆரியர் அல்லாத பெயரில் “கிராத்’ என்ற பெயரில் (கிராதர்கள்வாழ்ந்த பகுதி) அழைக்கப்பட்டது. இருக்கு வேதகால மக்களுக்கு சரசுவதி நதியும் சிந்து நதியுமே புனித நதிகளாக இருந்தது.
இருக்குவேத இந்திரனின் 26 சிறப்பு பெயர்கள்
1. காற்றிலிருந்து மூன்று உலகங்களில் பரவி நிற்பதால் ’வாயு’ என்பர் ரிசிகள்.
2. மழையால் மூவுலகங்களை நனையச் செய்வதால் ‘வருணன்’ என்பர்.
3. வானில் கர்ஜனை செய்வதால் ’உருத்திரன்’ என்பர்.
4. நான்கு விதமான பொருள்களுக்கு, நிலையான உயிர் நிலயமாகி, அவன் அரசு புரிவதால், ’இஷ்டெ’ (இந்திரன்) என்பர்.
5. சரியான காலத்தில் பூமியை நீரால திருப்தி படுத்துவதாலும், மக்களிடம் மகிழ்ச்சியுடன் இருப்பதால் ‘பர்ஜன்யன்’ என்பர்.
6. இரண்டு பெரிய உலகங்களுக்கு தலைவனாக (புருஷனாக) இருப்பதால் ‘பிரகசுபதி’ என்பர்.
7. வாக்கு, சத்தியம், மனம், பூமண்டலம் அறிவைத் தரும் கருவிகளாக இருப்பதால் ’பாதுகாப்பவன்’ அல்லது ‘பிராம்மணஸ்பதி’ என்பர்.
8. சரியான காலத்தில் பூமியில் உள்ள சீவராசிகளுக்கு உணவு தருவதால் ’நிலங்களின் தலைவன்’ அல்லது ‘சேத்திராதிபதி’ என்பர்.
9. பூமியின் நடுவில் இருந்து மக்களை பாதுகாப்பதால் ’வாஸ்தோஷ்பதி’ என்பர்.
10. சத்தியத்தால் சத்தியத்திலேயே இருப்பதால் ‘ருதம்’ என்பர்.
11. வேதம் வாக்கிலே அறியப்படுவதால், சொல்லால் சந்தஸ் சொல்லப்படுவதால் ’வாசஸ்பதி’ என்பர்.
12. எங்கும் சுற்றிக் கொண்டும், எதனாலும் பாதிக்கப்படாதவனாக இருப்பதால் ‘அதிதி’ என்பர்.
13. படைப்புகளுக்கு பாதுகாவலனாக இருந்து கொண்டு, கருத்தில் சுகத்தை விரும்புவதால் "ஹிரண்யகர்பன்” என்பர்.
14. படைத்த சீவராசிகளை, மரணத்திற்கு பின் அழைத்துச் செல்வதால் ‘எமன்’ என்பர்.
15. இவன் அனைவரிடம் நன்கு பழகுவதால் ‘மித்திரன்’ என்பர்.
16. வெயிற்காலத்திற்கு பின் நல்ல மழை அளித்து, அனைத்தையும் நன்கு செயல்பட வைப்பதால் ‘விஸ்வகர்மன்’ என்பர்.
17. இந்திரனுக்கு மூவுலகில் நெய்க்குளம் இருப்பதால் அவனை ‘சரசுவதி’ என்பர்.
18. வேன பார்க்கவ முனிவர் என்பவர் இந்திரனை ‘வேனன்’ என்பர்.
19. ’மன்யுதாபச முனி’ இந்திரனை ‘மன்யு’ (கோபக்காரன்) என்பர்.
20. மரணவேளையில், உயிர்களை இழுத்துச் செல்வதால் ’சுருநபந்து’ அல்லது ‘அசுனீதி’ என்பர்.
21. கோடைகால முடிவின் போது அவன் தோண்றுவதால் ‘கிருத்சமதன்’, ‘அபாம்நபதன்’, அல்லது ‘சலமகன்’ என்பர்.
22. வானில் கார்மேகங்களை தாங்கி நிற்பதால் ‘நிரந்ததி’ அல்லது ‘ தசீகரன்’ என்பர்.
23. கர்ஜனை செய்து கொண்டு பூமியில் ஒன்பது மாதம் ஜனனக் கிருமியாவதால் ‘தாத்ரி’ என்பர்.
24. அந்தரிட்சத்தில் வசிப்பதாலும், வேகமாக நழவி விழுவதாலும் ‘தர்க்‌ஷியர்’ என்பர்.
25. வானத்தில் கர்ஜித்துக் கொண்டு,சூரியோதயத்திற்கு சென்று, அடித்தளத்திலிருந்து நீரை விடுவதால் ‘ஊர்வசி புரூரவன்’ என்பர்.
26. பெரும் ஒலியுடன் இறந்தவனை எடுத்துச் செல்வதால் இறந்த அவனை எமனின் கடைசி மகன் ’மிருத்யு’ என்பர்.
இருக்கு வேதத்தின் உபநிடதம்
இருக்கு வேதத்தின் இறுதியில் அமைந்துள்ள ஒரே உபநிடதம் ஐதரேய உபநிடதம்↑ ஆகும். இது 'ஐதரேயர்’ என்ற முனிவர் மூலம் வெளிப்பட்டதால் இதனை ஐதரேய உபநிடதம் என்பர்.