நிமிஷாம்பாள் பௌர்ணமி விரதம்

நிமிஷாம்பாள் பௌர்ணமி விரதம்
Nimishamba-pournami-viratham
பயம் போக்கும் நிமிஷாம்பாள் பௌர்ணமி விரதம்


தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 


கர்நாடக மாநிலம் மைசூரு அருகிலுள்ள கஞ்சாம் நிமிஷாம்பாள் கோயிலில் ஒவ்வொரு மாதமும் வரும் பவுர்ணமி அன்று விரதமிருந்து வழிபட்டால் பயம் நீங்கும்.

கர்நாடக மாநிலம் மைசூரு அருகிலுள்ள கஞ்சாம் நிமிஷாம்பாள் கோயிலில் பவுர்ணமி விரதமிருந்து வழிபட்டால் பயம் நீங்கும். முக்தராஜன் என்னும் அம்மன் பக்தன் இப்பகுதியை ஆட்சி செய்தான். ஜானு சுமண்டலன் என்னும் அசுரன் முக்தராஜனைத் துன்புறுத்தினான். அவனை அரசனால் அடக்க முடியவில்லை. தன் இஷ்ட தெய்வமான பராசக்தியை நோக்கி தவத்தில் ஆழ்ந்தான்.

பராசக்தி மன்னனின் கோரிக்கையை ஏற்று, அசுரனை அழிக்கப் புறப்பட்டாள். அசுரனின் முன் நின்று கண்களை இமைத்தாள். நிமிஷ நேரத்தில் அவன் சாம்பல் ஆனான். தனக்கு அருள் செய்த அம்பிகைக்கு கோயில் கட்டி ‘நிமிஷாம்பாள்’ என பெயரிட்டான். ‘கண நேரத்தில் வரம்  அளிப்பவள்’ என்பது பொருள்.

‘கிருஷ்ண சிலா’ என்னும் கருப்பு சிலையாக இருக்கும் அம்பாளின் கைகளில் சூலம், உடுக்கை உள்ளது. தர்மத்தை நிலைநாட்டும் விதத்தில் அம்மனின் தலைமீது தர்ம சக்கரம் குடையாக நிற்கிறது.

பவுர்ணமியன்று விரதமிருந்து அம்மனை தரிசிக்கின்றனர். எதிரி பயம், திருமண தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் உண்டாகவும் விரதம் மேற்கொள்கின்றனர். துர்க்கையின் அம்சமாக நிமிஷாம்பாள் இருப்பதால் ராகுகாலம், அஷ்டமியன்று பாலபிஷேகம் செய்கின்றனர்.

வலம் புரிச்சங்கு பூஜை சிறப்பு - பலனும்!

வலம் புரிச்சங்கு பூஜை சிறப்பு - பலனும்!


தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்



1.ஒரு வீட்டில் இச்சங்கு அலங்காரமாக வைக்கப்பட்டிருந்தால் குபேரன் அருள், மகாலட்சுமியின் நித்திய வாசம் தொடர்ëந்து இருக்கும்.

2. கடலில் உள்ள ஒரு வகை நத்தையின் கழிவு மூலம் ஓடு போன்று உருவாகி வருவதே சங்கு என்றாலும் குபேரன் அருளைப் பெற்றுத் தருவது.

3. வலம்புரிச் சங்கில் தீர்த்தம் துளசி இட்டு பூஜை செய்து மங்கள ஸ்நானம் செய்தால் நமக்கு பிரம்மகத்திதோஷம் இருப்பின் போய்விடும். இதையே தர்ம சாஸ்திரம். ``சங்க மத்யே ஸ்திதம் தோயம் ப்ராமிதம் சங்கரோ ஸ்ரீ! அங்க லஷணம் மனுஷ்யானாம் ப்ரம்மஹத்யாயுதம் தாகத்'' என்று விளக்குகிறது. சுவாமிக்கு அபிஷேகம் செய்தாலும் நமக்கு உள்ள தோஷம் நீங்கிவிடும். கார்த்திகை சோமவாரத்தில் 108 சங்கு அபிஷேகத்தில் நடுவில் வலம்புரிச்சங்கு உருவில் குபேரன் இருப்பார்.

4. நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் சங்கு நாதத்தால் ஆழ்வார்கள் பக்திப் பரவசம் அடைவதை, பேதாண்டப் பெதுவி என்ற வார்த்தையால் குறிப்பிடுகின்றனர்.

5. வாஸ்து தோஷம் உள்ள வீட்டில் துளசி தீர்த்தத்தை சங்கில் இட்டு பிரதி வெள்ளி தெளித்து வர தோஷம் விலகி நலம் உண்டாகும்.

6. செவ்வாய் தோஷம் உள்ள பெண்கள் செவ்வாய் தோறும் வலம்புரிச்சங்கில் பால் வைத்து அங்காரக பூஜை செய்ய தோஷம் விலகி திருமணம் நடந்து விடும்.

7. அதிகக் கடன் வாங்கியவர்கள் பௌர்ணமி தோறும் சங்குக்கு குங்கும், அர்ச்சனை செய்து வர கண்ணுக்குத் தெரியாமல் கடன் தீரும். 16-வலம்புரிச் சங்கு கோலமிட்டு நடுவில் தீபம் ஏற்றிட கடன் தீரும்.

8.சுத்தமான உண்மையான வலம்புரிச்சங்கு பூஜிக்கப்படும் வீட்டில் பில்லி சூன்யங்கள், ஏவல்கள் நெருங்காது. ஓடிவிடும்.

9. ஒரு தெய்வத்துக்கு சங்கால் அபிஷேகம் செய்வதால் 10 பங்கு அபிஷேகம் செய்த பலனைப் பெறுகிறோம்.

10. பிறந்த குழந்தைக்கு ஜுரம் வந்தால் சங்கில் நீர்விட்டு உத்ராட்சம் இட்டு அது ஊறிய நீரை மட்டும் ஊட்டி விட ஜுரம், தோஷங்கள் அனைத்தும் விலகும்.

11. பூஜை அறையில் ஒரு சிறு தட்டில் அரிசி போட்டு அதில் சங்கை வைத்து பூ, பொட்டிட்டு வணங்கி வருவதால் உணவுக்குப்பஞ்சமே வராது —

வெற்றிவேல் முருகனுக்கு 118 அரோகரா

வெற்றிவேல் முருகனுக்கு 118 அரோகரா



          தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
      Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
                      Click Here : Register for Free Training
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 

1. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
2. கந்தனுக்கு அரோகரா
3. குமாரகுருதாசருக்கு அரோகரா
4. பாம்பன் சுவாமிகளுக்கு அரோகரா
5. மயூரநாதருக்கு அரோகரா
6. கார்த்திகை மைந்தனுக்கு அரோகரா
7. சஷ்டிப் பிரியருக்கு
8. சுப்ரமணியருக்கு அரோகரா
9. வள்ளிக்கு அரோகரா

10. தெய்வானைக்கு அரோகரா
11. அறுபடை வீட்டுக்கு அரோகரா
12. ஷன்முகருக்கு அரோகரா
13. பழனிமலை முருகனுக்கு அரோகரா
14. திருத்தணிகை முருகனுக்கு அரோகரா
15. சுவாமிமலை முருகனுக்கு அரோகரா
16. திருப்பரங்குன்றத்துக்கு அரோகரா
17. ஆவினன்குடி முருகனுக்கு அரோகரா
18. திருசெந்தூர் முருகனுக்கு அரோகரா
19. பழமுதிர்சோலைக்கு அரோகரா

20. மருதமலை முருகனுக்கு அரோகரா
21. இடும்பனுக்கு அரோகரா
22. வீரவாகு தேவருக்கு அரோகரா
23. வீரகேசரி தேவருக்கு அரோகரா
24. வீர மகேந்திரதேவருக்கு அரோகரா
25. வீர மகேச தேவருக்கு அரோகரா
26. வீர புரந்திரதேவருக்கு அரோகரா
27. வீர ராக்கதேவருக்கு அரோகரா
28. வீர மார்த்தாண்ட தேவருக்கு அரோகரா
29. வீராந்தக தேவருக்கு அரோகரா
30. வீர தீர தேவருக்கு அரோகரா

31. சரவனத்தானுக்கு அரோகரா
32. கார்த்திகேயனுக்கு அரோகரா
33. சிவசுப்ரமணியனுக்கு அரோகரா
34. திருமகள் மருகனுக்கு
35. எழிற்குரிஞ்சிக்கோனுக்கு அரோகரா
36. அறுமுகனுக்கு அரோகரா
37. ஏரகத்தேவனுக்கு அரோகரா
38. கௌரி நந்தனனுக்கு அரோகரா
39. திருச்சோலை மலையனுக்கு அரோகரா
40. அயில்வேலுக்கு அரோகரா

41. திருக்கைவேலுக்கு அரோகரா
42. சஷ்டி நாதனுக்கு அரோகரா
43. சானவிமுளை வேலுக்கு அரோகரா
44. ஐ வேலுக்கு அரோகரா
45. பாவகி கூர்வேலுக்கு அரோகரா
46. சயவேலுக்கு அரோகரா
47. பெருஞ்சக்தி வடிவேலுக்கு அரோகரா
48. எம்பிரான் திணிவேலுக்கு அரோகரா
49. இகலுடை கரவேலுக்கு அரோகரா
50. ஓம் ஐம் ரீம் வேலுக்கு அரோகரா

51. மஹா கந்த சஷ்டிக்கு அரோகரா
52. குருசாமிக்கு அரோகரா
53. முருக அடியாருக்கு அரோகரா
54. சஷ்டி யாத்திரைக்கு அரோகரா
55. அழகப்பனுக்கு அரோகரா
56. பாலமுருகனுக்கு அரோகரா
57. பாலசுப்ரமணியனுக்கு அரோகரா
58. கந்தசாமிக்கு அரோகரா
59. குமரனுக்கு அரோகரா
60. குமரேசனுக்கு அரோகரா

61. மயூர கந்தனுக்கு அரோகரா
62. மயூரவாகனனுக்கு அரோகரா
63. முருகவேலுக்கு அரோகரா
64. பழனிவேலுக்கு அரோகரா
65. ராஜசுப்ரமணியத்துக்கு அரோகரா
66. சக்திபாலனுக்கு அரோகரா
67. சரவணபவனுக்கு அரோகரா
68. சக்திபாலனுக்கு அரோகரா
69. சேனாபதிக்கு அரோகரா
70. செந்தில்வேலனுக்கு அரோகரா


71. சிவகுமரனுக்கு அரோகரா
72. சுப்பையாவுக்கு அரோகரா
73. சுவாமிநாதருக்கு அரோகரா
74. தண்டபாணிக்கு அரோகரா
75. தணிகைவேலனுக்கு அரோகரா
76. தண்ணீர்மலையானுக்கு அரோகரா
77. வைரவேலுக்கு அரோகரா
78. விசாகனுக்கு அரோகரா
79. அழகனுக்கு அரோகரா
80. அமுதனுக்கு அரோகரா

81. ஆறுமுகவேலனுக்கு அரோகரா
82. ஞானவேலுக்கு அரோகரா
83. குகனுக்கு அரோகரா
84. குகானந்தனுக்கு அரோகரா
85. குருபரனுக்கு அரோகரா
86. குருநாதனுக்கு அரோகரா
87. இந்திரமுருகனுக்கு அரோகரா
88. மாலவன் முருகனுக்கு அரோகரா
89. ஸ்கந்தகுருவுக்கு அரோகரா
90. கதிர்காமனுக்கு அரோகரா

91. கதிர்வேலுக்கு அரோகரா
92. கந்தவேலுக்கு அரோகரா
93. குமரகுருவுக்கு அரோகரா
94. முத்துக்குமரனுக்கு அரோகரா
95. பழநிநாதனுக்கு அரோகரா
96. பரமகுருவுக்கு அரோகரா
97. பழனிச்சாமிக்கு அரோகரா
98. முத்துவேலுக்கு அரோகரா
99. பரமபரனுக்கு அரோகரா
100. பேரழகனுக்கு அரோகரா

101. ராஜவேலுக்கு அரோகரா
102. செல்வவேலுக்கு அரோகரா
103. செங்கதிர்வேலனுக்கு அரோகரா
104. செவ்வேலுக்கு அரோகரா
105. சிவகார்த்திகேயனுக்கு அரோகரா
106. சித்தனுக்கு அரோகரா
107. சூரவேலுக்கு அரோகரா
108. தமிழ்செல்வனுக்கு அரோகரா
109. தேவசேனாதிபதிக்கு அரோகரா

110. தமிழ்வேலுக்கு அரோகரா
111. தங்கவேலுக்கு அரோகரா
112. திருஆறுமுகதுக்கு அரோகரா
113. திருமுகத்துக்கு அரோகரா
114. திரிபுரபவனுக்கு அரோகரா
115. திருச்செந்திலுக்கு அரோகரா
116. உமைபாலனுக்கு அரோகரா
117. வேலைய்யாவுக்கு அரோகரா
118. வெற்றிவேலுக்கு அரோகரா.
#முருகாசரணம்

வெந்தயம்(Fenugreek) - மருத்துவ குணங்கள்

 வெந்தயம்(Fenugreek) - மருத்துவ குணங்கள் 
Fenugreek-health-benefits.
தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

வெந்தயத்தில் நீர்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்பு சத்து, மாவுச்சத்து போன்ற பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. வெந்தயத்தை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.

வெந்தயத்தில் நீர்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்பு சத்து, மாவுச்சத்து போன்றவைகள் உள்ளன. மேலும் சுண்ணாம்பு சத்து, மணிச்சத்து, இரும்புச்சத்து, சோடியசத்து, பொட்டாசியம் போன்ற தாதுப் பொருட்களும், தயாமின், ரிபோபிளேவின், நிகோடினிக் அமிலம், வைட்டமின் “ஏ” போன்றவைகளும் அடங்கியுள்ளன.

வெந்தயத்திலுள்ள எண்ணெய் பசை தலைமுடிக்கு வளர்ச்சியை, கருமை நிறத்தை தருகிறது. எனவே கூந்தல் தைலங்கள் தயாரிப்பில் பயன்படுகிறது.

வெந்தயம் குளிர்ச்சியை உண்டாக்கும். சிறுநீரை பெருக்கும். துவர்ப்புத் தன்மை உடையது. விதையிலுள்ள ஆல்கலாய்டுகள் பசியைக் கூட்டும். நரம்புகளைப் பலப்படுத்தும். கீரை குளிர்ச்சியை உண்டாக்கும் தன்மை கொண்டது.

சித்த, ஆயுர்வேத வைத்திய முறைகளில் வெந்தயம், சீதபேதி, மூலநோய் இவைகளை குணப்படுத்த, முடி உதிர்தல், தோல் நோய், வாய்வுத்தொல்லையை போக்கவும் பயன்படுத்தப்படுகிறது. வெந்தயத்தை வறுத்து, நீர் விட்டு காய்த்து தேன் சேர்த்து சாப்பிட வயிற்று கடுப்பு தீரும். திடீரென ஏற்படும் வயிற்று வலிக்கு வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடியாக்கி மோரில் கலந்து குடிக்க தீரும்.

20 கிராம் வெந்தயத்தை வறுத்து, இடித்து 50 கிராம் வெல்லம் சேர்த்து பிசைந்து ஒரு நாள் நான்குமுறை சாப்பிட சீதபேதி நிற்கும். சிறிதளவு வெந்தயத்தை மோரில் ஊறவைத்து அரைத்து, மோரில் கலக்கி குடிக்க குணமாகும்.

வெந்தயத்தை இளநீரில் ஊற வைத்து அரைத்து குடிக்க சீதபேதி கடுப்பு தீரும். வெந்தயத்தை வாழைப் பழத்திற்குள் வைத்து மூடி இரவு பனியில் வைத்து காலையில் மூன்று நாட்கள் சாப்பிட சீதபேதி குணமாகும்.

மோரில் வெந்தயத்தை ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் உண்ண வாய்வு, பொருமல் நீங்கும். வெந்தயம், கடுகு, பெருங்காயம், மஞ்சள், இந்துப்பு இவைகளை சம அளவு எடுத்து நெய் வறுத்து பொடியாக்கி உணவுடன் உண்ண வயிற்று வலி தீரும்.

ஐந்து கிராம் வெந்தயம், பூண்டு, பெருங்காயம், முருங்கை ஈர்க்கு இலைகளை எடுத்து நீர் சேர்த்து அரைத்து, நீரை வடிகட்டி, மூன்று வேளை ஒரு அவுன்ஸ் வீதம் குடிக்க வயிற்று கடுப்பு தீரும். இரவில் வெந்தயத்தை தயிரில் ஊற வைத்து, காலையில் அரைத்து சிறிதளவு தேன் சேர்த்து சாப்பிட வயிற்றுப் போக்கு தீரும்.

வெந்தயத்தை நீராகாரத்தில் ஊற வைத்து இரவில் படுக்கும் முன் சாப்பிடவும். 20 கிராம் வெந்தயம் 50 கிராம் வெங்காயம் இரண்டையும் அரை லிட்டர் விளக்கெண்ணையில் காய்த்து, வடிகட்டி, பாலில் அரை கரண்டி எண்ணெய் விட்டு காலையில் இருபது நாட்கள் குடிக்க கணைச்சூடு தீரும்.

100 கிராம் வெந்தயத்தை வறுத்து, பொடியாக்கி, 200 கிராம் சர்க்கரை சேர்த்து உண்ண பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் வயிற்று வலி, இடுப்பு வலி நீங்கும். வெந்தயத்தை கஷாயமாக்கி குடித்தாலும் வலி தீரும்.

200 கிராம் வெந்தயத்தை பாலில் ஊற வைத்து, மீண்டும் இளநீரில் ஊற வைத்து, உலர்த்தி பொடியாக்கி, கற்கண்டை சேர்த்து, காலை உணவுக்குப் பின் ஒரு கரண்டி சாப்பிட்டு சுடுநீர் அல்லது பால் சாப்பிட்டு வர (40 நாள்) உடல் பலம் ஏற்படும். ஆரோக்கியம் பெருகும். தோசைக்கு சேர்க்கும் உளுந்துடன் சிறிதளவு வெந்தயம் சேர்க்க பலம் ஏற்படுவதோடு தோசை நிறமாக இருக்கும்.

தேங்காய் எண்ணையில் வெந்தயம், கற்பூரத்தை போட்டு ஊற வைத்து தேய்த்து குளிக்க பேன், பொடுகு ஒழியும். பாலில் ஊற வைத்த வெந்தயத்தை அரைத்து தேய்த்து குளிக்க பேன், பொடுகு தீரும்.

வெந்தயம், பாசிப்பயறு இவற்றை இரவு ஊற வைத்து காலையில் அரைத்து உடலில் தேய்த்து குளிக்க கற்றாழை நாற்றம் நீங்கும். இதை தலையில் தேய்த்து குளிக்க முடி உதிராது. கண் குளிர்ச்சி ஏற்படும். தலைச்சூடு நீங்கும். பேன், பொடுகு, அரிப்பு நீங்கும்.

வெந்தயத்தை மாவாக்கி, இனிப்பு சேர்த்து களி போல கிளறி உண்டு வந்தால் நோய்கள் நீங்கும். உடல் சூட்டையும் கட்டுப்படுத்தும். மேலும் ஊற வைத்த வெந்தயத்தை அரைத்து பருக்கள் உள்ள இடத்தில் பூச, பரு மறையும்.

சிறுதானிய முளைகட்டிய சத்தான பயறு சாலட்

 சிறுதானிய முளைகட்டிய சத்தான பயறு சாலட்
millets-Sprout-moong-dal-salad


        தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

தினமும் சாலட் சாப்பிடுவது உடல்நலத்திற்கு மிகவும் நல்லது. இன்று சிறுதானியங்கள், முளைக்கட்டிய பயறு சேர்த்து சத்தான சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

வரகு - 2 தேக்கரண்டி
பனி வரகு - 2 தேக்கரண்டி
தினை - 2 தேக்கரண்டி
முளைகட்டிய பாசிப்பயறு - 3 தேக்கரண்டி
முளைகட்டிய ராகி - 2 தேக்கரண்டி
முளைகட்டிய வேர்க்கடலை - 1 தேக்கரண்டி
துருவிய கேரட் - 2 தேக்கரண்டி
உப்பு - 1 சிட்டிகை,
எலுமிச்சை சாறு - 2 தேக்கரண்டி
மிளகு சீரகப் பொடி - 1/4 தேக்கரண்டி

செய்முறை :

பாசிப்பயறு, ராகி மற்றும் வேர்க்கடலை ஆகியவற்றை முதல் நாள் காலையில் ஊறவைத்து, இரவு, வலை போல் இருக்கும் துணியில் கட்டி வைத்தால் அவை மறுநாள் காலையில் முளைத்து விடும். இவ்வாறு ராகியையும், பயிரையும் முளைகட்டிக்கொள்ள வேண்டும்.

வரகு, பனி வரகு மற்றும் தினையை சற்று ஊறவைத்து தண்ணீருடன் சேர்த்து 5 நிமிடம் வேகவைத்தால் நன்கு வெந்துவிடும். அவற்றையும் உதிரியாக வடித்துக்கொண்டு தயாராக எடுத்துக் கொள்ளவேண்டும்.

ஒரு பாத்திரத்தில் வேக வைத்த வரகு, பனி வரகு, தினை அரிசியை போட்டு அதனுடன் முளைக்கட்டிய பாசிப்பருப்பு, ராகி, வேர்க்கடலை, துருவிய கேரட், உப்பு, எலுமிச்சை சாறு, மிளகு தூள் சேர்த்து நன்றாக கிளறி பரிமாறவும்.

சுவையான சிறுதானிய முளைகட்டிய பயறு சாலட்தயார்.

சிக்கன் பக்கோடா

சிக்கன் பக்கோடா
chicken-pakora
குழந்தைகளுக்கு விருப்பமான சிக்கன் பக்கோடா


   தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்


குழந்தைகளுக்கு சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று மாலை நேரத்தில் சாப்பிட சூப்பரான சிக்கன் பக்கோடா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

எலும்பில்லாத சிக்கன் - கால் கிலோ
மிளகாய் தூள் - தேவைக்கு
மஞ்சள் தூள் - சிறிதளவு
பஜ்ஜி மாவு - 3 டேபிள்ஸ்பூன்
அரிசி மாவு - 2 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லி தழை - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய், தண்ணீர் - தேவைக்கு
உப்பு - தேவைக்கு
எலுமிச்சை சாறு - சிறிதளவு

செய்முறை :

கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

சிக்கனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

சுத்தம் செய்த சிக்கனுடன் சிறிதளவு மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

பின்னர் அதனுடன் அரிசி மாவு, பஜ்ஜி மாவு, மிளகாய் தூள், கொத்தமல்லி தழை, கறிவேப்பிலை, தண்ணீர் சேர்த்து கெட்டி பதத்துக்கு பிசைந்து கொள்ள வேண்டும்.



வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சிக்கன் மாவு கலவையை சிறிது சிறிதாக எண்ணெயில் போட்டு பக்கோடாவாக பொரித்து எடுத்து பரிமாறவும்.

குழந்தைகளுக்கான வங்கி கணக்கை தொடங்குவது எப்படி?

குழந்தைகளுக்கான வங்கி கணக்கை தொடங்குவது எப்படி?
how-open-bank-account-kids


தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

பதினெட்டு வயதுக்கும் குறைவானவர்களுக்காக "மைனர் வங்கிக் கணக்கு ("minor account") வசதியை வங்கிகள் வழங்குகின்றன. இக் கணக்கின் மூலம், மிகக் குறைந்த வயதிலேயே சேமிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள இயலும். கல்விக்கான காப்பீடு, நிலையான வைப்பீடு, மற்றும் அதிகமான வட்டி விகிதம் எனப் பல சிறப்பு அம்சங்களைக் குழந்தைகளுக்கான வங்கிக் கணக்குகள் கொண்டுள்ளன. உங்களுடைய குழந்தையின் பெயரில் வங்கிக் கணக்குத் தொடங்குவதன் மூலம் அவர்களுக்குப் பொருளாதாரத்தின் முக்கியத்துவத்தை உணர்த்த முடியும்.

வங்கிக் கணக்குத் தொடங்க தேவையானவை பதினெட்டு வயது நிரம்பாத சிறுவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் மூலமாக இவ்வகையான கணக்குகளைத் தொடங்கு முடியும். குழந்தைகளுக்குக் கூட இவ்வகையான கணக்குகளைத் தொடங்கலாம். ஒரே வங்கியில் கணக்குத் தொடங்கலாம் : பெற்றோருக்குக் கணக்கு உள்ள வங்கிகளில் அவர்களுடைய குழந்தைகளுக்கும் வங்கிக் கணக்குத் தொடங்குவதைத் தான் பெரும்பாலான வங்கிகள் விரும்புகின்றன.

முகவரிக்கு ஆதாரம் ஆதார் அட்டை உட்பட அரசு வழங்கிய ஏதேனும் ஒரு அடையாள அட்டையைக் குழந்தைக்கும் பெற்றோருக்கும் சேர்த்து சமர்ப்பிக்க வேண்டும்

கையெழுத்து மாதிரி குழந்தையின் கையெழுத்து மாதிரி (பத்து வயதுக்கு மேற்பட்டு இருந்தால்) மற்றும் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் கையெழுத்து மாதிரியைச் சமர்ப்பிக்க வேண்டும்

சிறப்பு அம்சங்கள் குழந்தைகளுக்கான வங்கிக் கணக்குகள் பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளன. இது வங்கிகளுக்கு வங்கி மாறுபடும்.

தேவையான குறைந்தபட்ச இருப்பு உதாரணமாக, எச்டிஎப்சி வங்கி, மைனர் வங்கிக் கணக்குக்கான குறைந்தபட்ச இருப்புத் தொகையாக 5000 ரூபாய் என நிர்ணயித்துள்ளது.

வட்டி விகிதம் பொதுவாகச் சிறுவர்களுக்கான வங்கிக் கணக்குகளுக்கு அதிகமான வட்டி விகிதங்கள் நிர்ணயிக்கப்படும். சில வங்கிகள் பெற்றோருடன் சேர்ந்த கூட்டு வங்கிக் கணக்கு தொடங்கவும் அனுமதிக்கின்றன.

டெபிட் கார்டு வசதி கோடக் மஹிந்திரா போன்ற வங்கிகள், ஜீனியர் சேமிப்புக் கணக்குகளுக்கு, ஒரு நாளைக்கு 5000 ரூபாய் வரை பணம் எடுக்கும் வசதியுடன் கூடிய டெபிட் கார்டுகளை வழங்குகின்றன

சுழல் வைப்புநிதி வசதி பெற்றோர் அல்லது பாதுகாவலரின் கணக்கிலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகை நிலை வைப்பாகக் குழந்தைகளின் கணக்கிற்கு மாற்றப்படும்.

நிலையான வைப்புத் தொகை உதாரணமாக HDFC வங்கி சிறுவர் வங்கிக் கணக்குகளில் 25,000 ரூபாய்க்கு அதிகமான எந்தத் தொகையையும் நிலை வைப்புநிதியாக வைத்துக் கொள்ளும். குறிப்பிட்ட ஆண்டுகளுக்குப் பிறகு, இத்தொகை மிக அதிக வட்டியுடன் திருப்பி அளிக்கப்படும்

கல்விக்கான காப்பீடு முக்கியமான வங்கிகள், சிறுவர் வங்கிக் கணக்குகளுக்குக் கல்விக் காப்பீடு வசதியையும் வழங்குகின்றன. ஒரு வேளை குழந்தைகளின் காப்பாளர் இறந்துவிட்டால் குழந்தைகளின் கல்விச் செலவுக்கு இது உதவும். காசோலைகள், இணைய வங்கிச் சேவை போன்ற பிற வசதிகளும் இவ்வங்கிக் கணக்கிற்கு வழங்கப்படுகின்றன. பெரும்பாலான வங்கிகள், குழந்தைகளுக்கு 10 வயது நிரம்பியவுடன்தான் அவர்களை வங்கிக் கணக்குகளை இயக்க அனுமதிக்கின்றன.

கவனத்தில் கொள்ள வேண்டியவை குழந்தைகளுக்குப் பதினெட்டு வயது ஆனவுடன் அவர்களுடைய வங்கிக் கணக்கு வழக்கமான சேமிப்புக் கணக்காக மாற்றப்படும். இக்கணக்கை இயக்குகின்ற உரிமை காப்பாளர்களுக்கு மறுக்கப்படும். மேலும், தேவையான தகவல்கள் பெறப்பட்டு இந்த வங்கிக் கணக்குப் பதினெட்டு வயது நிரம்பியவரின் பெயரில் முழுமையான கணக்காக மாற்றப்படும். குழந்தை வங்கிக் கணக்குகளின் பரிமாற்றங்களுக்கு வங்கிகள் சில குறிப்பிட்ட வரையறைகளை விதித்திருந்தாலும், இக்கணக்கிலிருந்து காப்பாளர்கள் அதிகப்படியாகப் பணம் எடுப்பதற்கும், மேலும் சில பரிவர்த்தனைகளில் ஈடுபடுவதற்கும் வங்கிகள் அனுமதி வழங்கும்.

அவசர (Emergency Fund) நிதி என்றால் என்ன? ஏன் இது முக்கியம்?

அவசர (Emergency Fund) நிதி என்றால் என்ன? ஏன் இது முக்கியம்?
what-is-mean-emergency-corpus-why-maintain-it


         தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
 Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்


அவசர கார்பஸ் அல்லது அவசர நிதி என்பது எதிர்பார்க்காத தருணங்களின் தேவைக்காக உடனடியாக எடுத்துப் பயன்படுத்தும் விதத்தில் வைக்கப்படும் பணமாகும். இது வேலை இழப்பு, முக்கியமான மருத்துவப் பிரச்சினைகள், வருமானத்தில் தாமதம் அல்லது இறப்பு போன்ற மோசமான சூழ்நிலையில் ஒருவருக்குப் பெரிய உதவியாக இருக்கும். இந்த அவசர சூழ்நிலைகள் குறுகிய காலம் மற்றும் நீண்ட காலம் என்று பிரிக்கப்படுகிறது. மருத்துவச் செலவு, அல்லது சம்பளம் பெறுவதில் தாமதம் போன்றவை குறுகிய கால அவசர தேவைகள் ஆகும். அதே சமயம், வேலை இழப்பு போன்றவை நீண்ட கால அவசர தேவையாகும். சிறிய வர்த்தக வியாபாரங்களுக்கான, அவசர நிதி அவசியமாகிறது.

வணிகர்கள் பல சந்தர்ப்பங்களில், வணிகர்கள் பொறுப்பற்ற முறையில் தங்கள் சொந்த நிதிகளில் பெரும் பகுதியை தங்கள் வியாபாரத்தில் முதலீடு செய்கிறார்கள். பங்குச் சந்தையின் முடிவுகள் தீர்மானிக்க முடியாததாக இருப்பதால் முதலீடு செய்யும் பணம் லாபமா அல்லது நஷ்டமா என்பதை முன்கூடியே உறுதியாகச் சொல்வதற்கில்லை. புத்திசாலியான வியாபாரிகள் கூடத் திவாலாகிவிட்ட நிலைமைகளும் உள்ளன. இத்தகைய பேரழிவுகளுக்கு அவசர நிதி அவசியம்.

கடன் சிறிய வியாபாரங்கள் தோல்வியடையும் காரணங்களில் ஒன்று, கடன் அட்டைகள் அல்லது பாதுகாப்பற்ற தனிப்பட்ட கடன்களில் கடன் பெறுவது போன்ற குறுகிய காலக் கடன்களை எடுத்துக்கொள்வதற்கான ஆபத்துகளாகும். இந்தக் கடன்களின் மீதான அதிக வட்டி விகிதம் , வர்த்தகரின் வருவாயைக் கடந்துவிடும்.

உங்கள் அவசர தேவைக்குத் திட்டமிடுங்கள் ஒவ்வொரு வியாபார திட்டத்திற்கும் அவசர நிதி என்பது முகவும் முக்கியம். இதில் மற்றொரு முக்கியச் செய்தி, இந்த அவசர நிதியை எப்போது பயன்படுத்த வேண்டும் என்பது. உங்களுடைய அவசர நிதியை அணுகுவதற்கு நீங்கள் தீவிரமாகக் கருதுகிற நிகழ்வுகளின் பட்டியல் அவசியம். அவற்றுள் சில, 1) சந்தையில் திடீர் ஏற்றத்தாழ்வு 2) பொருளாதார நெருக்கடி அல்லது சரிவு 3) தனிப்பட்ட இயலாமை அல்லது உடல்நல அவசரநிலை 4) இயற்கை அல்லது மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவுகள் எவ்வாறாயினும், ஒவ்வொரு எதிர்பாராத சம்பவமும் அவசர நிதியத்தைப் பயன்படுத்துவதற்கு ஒரு தவிர்க்க முடியாத காரணியாகக் கருதப்படக்கூடாது. அவசர நிதி பயன்படுத்த உங்கள் காரணங்கள் தெளிவாக இருக்க வேண்டும். மறுபுறம், அவசர நிதியில் இருந்து கூடுதலான திரவச் சொத்துக்களைப் பராமரிப்பது, உங்களுக்கு மிகவும் இலாபகரமான வாய்ப்புகளை வழங்க உதவுகிறது. உதாரணமாக, ஒரு நல்ல IPO அல்லது ஒரு நிகழ்வு சார்ந்த பங்கு வர்த்தகம் முதலீடு நல்ல பலனைத் தரலாம். திரவச் சொத்துக்கள் , உங்கள் வணிகம் உறுதியாகவும் எளிதாகவும் பயணிக்க உதவுகிறது.

தனிக் கணக்கை பராமரிக்க வேண்டும் உங்கள் தனிப்பட்ட கணக்கு உங்கள் வணிகக் கணக்கிலிருந்து தனித்திருப்பது போலவே, உங்கள் அவசர கணக்கு உங்கள் வணிகக் கணக்கில் இருந்து பிரிக்கப்பட வேண்டும். இந்தப் பழக்கம், அவசரம் அல்லாத போது அவசர நிதி பயன்படுத்தும் சலனத்தைக் குறைக்கும். இன்னும் வலியுறுத்திக் கூற,வேண்டுமானால், சில குறிப்பிட்ட சூழ்நிலைகளுக்குத் தவிர, அவசரக்கால நிதி வரம்புகளை நிறுத்த வேண்டும். அவசர நிதியைப் பாதுகாக்க ஒரு சிறந்த இடம் சேமிப்பு கணக்கு மட்டுமே ஆகும். சில வகைக் கணக்குகளில் , பணத்தை முன்கூட்டியே திரும்பப் பெறும்போது சில அபராதம் விதிக்கப்படலாம், அல்லது பணம் கிடைப்பதில் காலத் தாமதம் ஏற்படலாம். இத்தகைய திட்டத்தில் அவசர நிதிகளை முடக்கம் செய்ய வேண்டாம். ஒரு நிலையான வைப்பு நிதியில் பணத்தைச் சேமித்து வைக்கவும் நீங்கள் நினைக்கலாம். ஆனால் உங்களுக்கு அவசர தேவை ஏற்படும்போது உங்கள் கையில் பணப்புழக்கம் இருக்கவேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ம்யுசுவல் பன்ட் முதலீடு கூட இந்த நோக்கத்தைப் பாதிக்கலாம்.

அவசர நிதி தொகை தனிப்பட்ட அவசர நிதியத்தின் முக்கிய விதி இங்கே பயன்படுத்தப்படலாம். தொடக்க நிலை வர்த்தகர்கள், உங்கள் நிறுவன இயக்கத்திற்கான மூன்று மாத தொகையை அவசர நிதியாகச் சேமித்து வைக்கலாம். இதனைச் செய்ய, உங்கள் வர்த்தக நிறுவனத்தின் ஒரு மாதத்திற்கான செலவை கணக்கிட வேண்டும். செலவுகள் உங்கள் மாதாந்திர முதலீட்டு அளவு, தரகு கட்டணங்கள் மற்றும் இதர செலவுகள் ஆகியவற்றை உள்ளடக்கியது



நீங்கள் அதிக ஆபத்தை எடுக்கும் வர்த்தகர் என்றால், அவசர நிதி அதற்கேற்ப மாற்றி அமைக்கப்பட வேண்டும். உங்களுடைய அபாயச் சூழ்நிலை மற்றும் கணக்கீடுகளையும் பொறுத்து, உங்கள் செலவினங்களில் மூன்று-ஆறு மாதங்களை உள்ளடக்கிய நிதி உருவாக்கலாம். எந்த ஒரு சந்தர்ப்பத்திற்கும் நீங்கள் தயாராக இருக்கும்பட்சத்தில், நீங்கள் நிம்மதியாக உங்கள் வர்த்தகத்தில் கவனம் செலுத்த முடியும். வருங்காலத்தை நம்பிக்கையுடன் எதிர்நோக்க முடியும்.

ஃப்ரீலான்ஸர்கள்(freelancers)எப்படித் நிதி நிர்வாகம் செய்ய வேண்டும்?

ஃப்ரீலான்ஸர்கள்(freelancers)எப்படித் நிதி  நிர்வாகம் செய்ய வேண்டும்?
how-freelancers-can-manage-their-finances



தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

சுந்தர் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒரு ஃப்ரீலான்ஸ் க்ரியேடிவ் டிசைனராகப் பணி புரிந்து வருகிறார். சுய தொழில் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் அவருடைய வேலையைக் கைவிட்டார். அவருடைய இந்தச் சுய தொழிலில், வேலை அவருக்குப் பிடித்திருந்தாலும், ஒழுங்கற்ற பண வரவு, அவருடைய பண மேலாண்மையைப் பாதித்தது.

ஒவ்வொரு முறையும் அவருக்குப் பண வரவு இருக்கும்போது அதனை அவர் செலவழித்துக் கொண்டிருந்தார். அவர் தனக்குக் கிடைக்கும் பணத்தைச் சேமிக்கக் வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தார். ஆனால் அவரால் ஒரு குறைந்த அளவு பணத்தை மட்டுமே சேமிக்க முடிந்தது. அவருடைய நிதி நிலைமையைச் சரியான பாதையில் கொண்டு வர அவர் என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்ளவும் இக்காலகட்டத்தில் விரும்பினார். சுந்தர் தனக்கு வழக்கமான வருமானம் கிடைத்தவுடன் தொடக்க நிலையில் இருக்கும் தன்னைப் போன்றவர்களுக்கு இதே நிலை இருக்கும் என்பதை உணர்ந்தார். ஆகவே ஃப்ரீலான்ஸ் எனப்படும் சுய தொழில் செய்பவர்கள் நிதி நிலையை மேம்படுத்த சில குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

இதில் முதல் படியாகத் தனது ஆண்டு வருமானத்தை மதிப்பிட வேண்டும். சுய தொழிலில் வருமானம் ஒழுங்கற்றதாக இருப்பதால், தான் எதிர்பார்க்கும் வருவாயை அடிப்படையாகக் கொண்ட ஒரு மாத சம்பளத்தைத் தானே தயாரிக்க முடிவு செய்ய வேண்டும் . ஒரு குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் ஒரு குறிப்பிட்ட தொகையைச் சம்பளமாகச் செலுத்த வேண்டும். சாத்தியமான வருவாயில் ஒரு குறைந்தபட்ச மதிப்பீடு செய்வது சிறந்தது. இல்லையெனில் தேவையானதை விடக் குறைந்த அளவு பணத்தைச் செலுத்த வேண்டிய நிலை உருவாகும்.

அடிப்படை வருமானத்தை ஏற்படுத்தியவுடன் செலவினங்களை மதிப்பீடு செய்ய வேண்டும். இது உங்களின் வருமானத்திற்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். உங்களின் செலவீனங்களை முக்கியத்துவத்தின் அடிப்படையில் முறைப்படுத்த வேண்டும். அனைத்துக் கட்டாய மற்றும் அத்தியாவசிய வாழ்க்கை செலவுகளை முன்னிலைப் படுத்த வேண்டும். உங்கள் தொழில் உறுதியாக நிலைக்கும்வரை, வாழ்க்கை முறை செலவீனங்களைக் குறைப்பது நல்லது. ஆரோக்கியம், ஆயுள் காப்பீடு, மற்றும் வரிப் பொறுப்புகள் போன்றவற்றிற்கும் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஏனெனில் இவை அனைத்தும் ஒருவரின் பொருளாதாரச் சூழ்நிலையைத் தடம் புரள வைக்கும்.

இதற்கிடையில் ஒரு அவசர  நிதி உற்பத்தி செய்வது அவசியமாகும். வருவாய்க்கும் செலவுக்கும் இடையில் எதிர்பாராத இடைவெளி ஏற்படும் போது இந்த அவசர நிதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த இடைவெளியைக் குறைக்க இந்த அவசர நிதி உங்களுக்கு உதவும். வருமானம் அதிகப்படியாக வரும்போது, ஏற்கனவே பயன்படுத்திய அவசர நிதியை மறுபடியும் விரைந்து நிரப்ப வேண்டும். சுய தொழில் செய்பவர்கள் எந்த ஒரு கட்டாய ஊழியர் சேமிப்பு திட்டத்திலும் இணைக்கப்படாததால், தனது வருமானத்தில் ஒரு பங்கை சேமித்து வைக்க முயற்சிக்க வேண்டும். சம்பளத்திற்கு மேல் அதிகரித்த வருவாய் கிடைக்கும்போது வீண் செலவுகளைச் செய்யாமல் முதலீடுகளை உருவாக்க வேண்டும்.


முதலீடுகள் செய்யும் போது நாமினி ஏன் முக்கியம்?

முதலீடுகள் செய்யும் போது நாமினி ஏன் முக்கியம்?
Importance-nominee-when-doing-investments


 தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

ஒவ்வொரு முறையும் முதலீட்டிற்கான விண்ணப்பத்தைப் பூர்த்திச் செய்யும்போது , அது நிலையான வைப்பு நிதியாக இருந்தாலும், மியூசுவல் நிதியாக இருந்தாலும், வங்கியில் புதிய கணக்குத் துவங்குவதாக இருந்தாலும் அந்தப் படிவத்தில் ஒரு தனிப் பிரிவு ஒன்று இருக்கும். அதில் உங்கள் நாமினி பற்றிய குறிப்பைத் தருமாறு வேண்டியிருப்பார்கள். இந்தப் பகுதியை பெரும்பாலும் பலர் எதுவும் எழுதாமல் காலியாவே பதிவு செய்வார்கள். ஆனால் அதனை அப்படிச் செய்வது தவறு. இது குறித்துத் தெளிவு ஏற்படுத்துவதற்காகத்தான் இந்தப் பதிவு.

நாமினி என்பவர் யார்?

நாமினி என்று உங்கள் முதலீட்டு விண்ணப்பம், அல்லது வங்கி கணக்கு விண்ணப்பத்தில் குறிப்பிடப்படும் நபர், உங்களின் எதிர்பாராத மறைவிற்குப் பிறகு உங்கள் கணக்கில் உள்ள தொகையைப் பெறுவதற்கான உரிமை உள்ளவர். நாமினியாக உங்கள் முதல்வட்ட சொந்தத்தை நீங்கள் அறிவிக்கலாம். அதாவது உங்கள் பெற்றோர், உங்கள் துணைவர், அல்லது உங்கள் உடன்பிறந்தவர்கள். சில முதலீட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட நாமினியை குறிப்பிடும்படி அனுமதிக்கப்பட்டிருக்கும். அந்த நேரத்தில் ஒவ்வொரு நபருக்கும் உங்கள் தொகையில் குறிப்பிட்ட விகிதத்தைப் பிரித்துப் பதிவு செய்யலாம். அப்படி நீங்கள் எந்த விகிதமும் குறிப்பிடாமல் இருந்தால் உங்கள் கணக்கில் உள்ள தொகை சமமாகப் பிரிக்கப்படும்.

ஏன் ஒருவரை நியமிக்கவேண்டும்? எதிர்பாராத விதமாக இறந்தவரின் வங்கி கணக்கில் மற்றும் முதலீட்டில் இருக்கும் பணம் அவருடைய சட்ட வாரிசுகளுக்கு உரிமையாகிறது. இதனைச் சொல்வதற்கு மிகவும் சுலபமாக இருந்தாலும் செயல்முறையில் இது மிகப்பெரிய காரியமாக உள்ளது. பல வித ஆவணங்கள் , இறப்புச் சான்றிதழ் சில நேரங்களில் நீதிமன்ற ஆர்டர் போன்றவையும் தேவைப்படுகிறது. வங்கிக்கு தேவையான ஆவணங்கள் கிடைக்கும் வரை, இறந்தவரின் பணம் வங்கியிலேயே வைக்கப்படும். இந்த முழுச் செயல்முறையும் முடிய சில வாரங்கள் பிடிக்கும். இருப்பினும், வங்கி கணக்குத் தொடங்கும்போது அல்லது அதற்குப் பின்னர், உங்கள் பெயர் நாமினியாக இணைக்கப்பட்டிருந்தால் இந்தச் செயல்முறை சற்று எளிதாகவும் விரைவாகவும் முடியும். வங்கியும் நியமிக்கப்பட்டவரிடம் குறைந்த ஆவணங்கள் மூலம் பணத்தைக் கொடுத்துவிடலாம்.

வங்கி லாக்கருக்கும் நாமினி உண்டு வங்கி கணக்கு மற்றும் வைப்பு நிதிகளுக்கு மட்டும் எதிர்பாராத படி இறந்தவருக்கான நாமினி தேவைப்படுவதில்லை, வங்கி லாக்கருக்கும் நாமினி தேவை. லாக்கர் கணக்கு வைத்திருப்பவரின் திடீர் மறைவிற்குப் பின், நாமினி இல்லையேல், குறிப்பிட்ட ஆவணங்கள் கொடுத்த பிறகே, லாக்கரில் உள்ள பணம் மற்றும் நகைகளை வங்கியில் இருந்து ஒப்படைப்பார்கள். இதனை இங்கே குறிப்பிடக் காரணம், இந்திய பெண்கள் தங்கள் நகைகளை வங்கி லாக்கரில் வைப்பது வழக்கம். ஆகவே இத்தகைய நெருக்கடியான சூழலில், நகைகளுக்கான தேவை அதிகமாக இருக்கும். புதிதாக மணமானவர்கள் அல்லது கூட்டுக் குடும்பத்தில் இருப்பவர்களுக்குப் பேங்க் லாக்கர் கணக்கிற்கும் நாமினி அவசியம் தேவை

பணத்தை வங்கியிடம் கோரப்படாமல் இருக்கக் கூடாது இந்திய ரிசர்வ் வங்கி ஜனவரியில் தந்த அறிக்கை பிரகாரம், ரூபாய் 8,000 கோடி கோரப்படாத நிதியாக நாடு முழுவதும் உள்ள வங்கியில் உள்ளதாகத் தெரிவிக்கிறது. உரிமையாளர் இல்லாத வைப்பு நிதி, கோரப்படாத நிதியாக அறிவிக்கப்படுகிறது. அசல் உரிமையாளர் வைப்பு நிதியின் விவரத்தை இழந்திருக்கலாம், அல்லது இறந்திருக்கலாம் அல்லது நாமினி பற்றிய தகவலை குறிப்பிடாமல் இருக்கலாம். இதன் காரணமாக இந்த நிதி கோரப்படாத நிதியாக உள்ளது. நாமினி பெயர் குறிப்பிடாமல் இருப்பதால் எவ்வளவு பிரச்சனை என்பதை இந்த மாபெரும் தொகை நமக்குத் தெரியப்படுத்துகிறது. ஒரு முறை வங்கிக்கு சென்று உங்கள் கணக்கில் நாமினி பெயர் உள்ளதா என்பதை அறிந்து கொள்ளுங்கள். அப்படி நீங்கள் குறிப்பிடவில்லை என்றால் அதற்கான படிவத்தை வாங்கி விண்ணப்பியுங்கள்.

பெண்கள் பெண்கள் இந்தப் பிரச்சனையில் அதிகம் பாதிக்கப்படுவார்கள். குடும்ப உறுப்பினரின் திடீர் மறைவால் அவர்கள் கஷ்டப்படும்போது அவர்களின் பணமும் பறிபோவது நிச்சயம் நடக்கக் கூடாத ஒன்று. இத்தகைய சூழ்நிலையை யாரும் அனுமதிக்கக் கூடாது. நீங்கள் உங்கள் குடும்ப உறுப்பினர்களின் வங்கிக் கணக்கில் நாமினியாக நியமிக்கப்பட்டுள்ளீர்கள் அல்லது உங்களுக்கு ஒரு நாமினி உள்ளார் என்பதை உங்கள் வீட்டுப் பெண்களுக்குத் தெரியப்படுத்துங்கள். இதனால் அவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். வருங்காலத்தில் ஏற்படும் நிச்சயமற்ற சூழலை சமாளிக்க ஒரு தன்னம்பிக்கை ஏற்படும்.

K Karthik Raja's Share Market Training - Difference Between TRADING and INVESTMENT

K Karthik Raja's Share Market Training - Difference Between TRADING and INVESTMENT

                                 
               தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள்                          Click Here :- Register for Free Training
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
https://share-market-training-rupeedesk.business.site

K Karthik Raja - Difference Between TRADING and INVESTMENT


K KARTHIK RAJA 

             தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

K Karthik Raja - Share Market Training, K Karthik Raja's Share Market Training ,
Chennai - Share Market Training,  Free Share Market Training,K Karthik Raja,K Karthik Raja's Quotes,K Karthik Raja's Share Market Training, Rupeedesk - share Market Training,Share Market Training,Share market Training - chennai,Stock Market Training, 

K Karthik Raja's Share Market Training - 3 Stupid Investment Mistakes to Avoid

K Karthik Raja's Share Market Training - 3 Stupid Investment Mistakes to Avoid

                                 
               தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள்                          Click Here :- Register for Free Training
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
https://share-market-training-rupeedesk.business.site

K Karthik Raja's Share Market Training - 3 Stupid Investment Mistakes 


K KARTHIK RAJA 

             தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

K Karthik Raja - Share Market Training, K Karthik Raja's Share Market Training ,
Chennai - Share Market Training,  Free Share Market Training,K Karthik Raja,K Karthik Raja's Quotes,K Karthik Raja's Share Market Training, Rupeedesk - share Market Training,Share Market Training,Share market Training - chennai,Stock Market Training, 

K Karthik Raja's Share Market Training - How Do Stocks Work

K Karthik Raja's Share Market Training - How Do Stocks Work

                                 
               தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள்                          Click Here :- Register for Free Training
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
https://share-market-training-rupeedesk.business.site

K Karthik Raja's Share Market Training - How Do Stocks Work


K KARTHIK RAJA 

             தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

K Karthik Raja - Share Market Training, K Karthik Raja's Share Market Training ,
Chennai - Share Market Training,  Free Share Market Training,K Karthik Raja,K Karthik Raja's Quotes,K Karthik Raja's Share Market Training, Rupeedesk - share Market Training,Share Market Training,Share market Training - chennai,Stock Market Training, 

K Karthik Raja's Share Market Training - The Art of Short Selling

K Karthik Raja's Share Market Training - The Art of Short Selling

                                 
               தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள்                          Click Here :- Register for Free Training
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
https://share-market-training-rupeedesk.business.site

K Karthik Raja's Share Market Training - The Art of Short Selling


K KARTHIK RAJA 

             தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

K Karthik Raja - Share Market Training, K Karthik Raja's Share Market Training ,
Chennai - Share Market Training,  Free Share Market Training,K Karthik Raja,K Karthik Raja's Quotes,K Karthik Raja's Share Market Training, Rupeedesk - share Market Training,Share Market Training,Share market Training - chennai,Stock Market Training,