பூவரசம் பூ
இதய வடிவ இலைகளின் நடுவே மஞ்சள் வர்ணத்தில் பூத்துக்குலுங்கும் பூவரசம் பூக்கள் எண்ணற்ற மருத்துவக்குணங்களைப் பெற்றுள்ளது. இந்த மலர்கள் உண்பதற்கு உகந்தவை என்று சித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் பூச்சிக்கடி மற்றும் வண்டுக்கடி போன்ற விஷக்கடிகளுக்கு இந்த பூக்களைப் பயன்படுத்தலாம் என்று சித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மருத்துவக்குணங்கள்
#தோல் சம்பந்தமான நோய்கள் குணமாக:
தோல் நோயினால் அவதிப்படுபவர்கள் பூவரசம் பூவை நன்கு அரைத்து அவற்றின் மீது தடவினால் தோல்நோய் குணமாகும்.
#விஷக்கடி குணமாக:
பூச்சிக்கடி, வண்டுக்கடி போன்ற விஷப்பூச்சிகள் கடிப்பதால் உண்டாகும் தோல்சம்பந்தமான நோய்கள் குணமாக வேண்டுமெனில் பூவரசம் பூவை 25 கிராம அளவு எடுத்து நன்கு அரைத்து அதில் 200 மிலி நீர் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
பின் நீர் பாதியாக வற்றியவுடன் அதனை வடிகட்டி தொடர்ந்து மூன்று நாளைக்கு காலை, மாலை என இருவேளை பருகி வந்தால் தோல்சம்பந்தமான நோய்களான ஊறல், தடிப்பு, அரிப்பு, வீக்கம், மயக்கம் மற்றும் சோம்பல் ஆகியவை குணமாகும்.
#குறிப்பு:
இவ்வகையான கஷாயத்தை உட்கொள்ளும்போது எண்ணெய், கடுகு போன்றவற்றை போட்டு தாளிக்காமல் சாப்பிட வேண்டும். மேலும் மீன் கருவாடு போன்றவற்றை சாப்பாட்டில் சேர்க்கக்கூடாது.
#மூட்டுவீக்கம் குணமாக:
மூட்டு வீக்கத்தால் துன்பப்படும் வயது முதிர்ந்தவர்கள் அனைவரும் பூவரசம் பூ, காய், பட்டை ஆகியவற்றை சமஅளவு எடுத்து நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சி வீக்கம் உள்ள இடத்தில் தடவினால் மூட்டு வீக்கம் குணமாகும்.
இத்தகைய மருத்துவக்குணங்களைப் பெற்ற இந்த “பூவரசம் பூவை” நாம் நம் உடல் ஆரோக்கியத்துக்காக உண்போம்; உலகில் நோயின்றி வாழ்வோம்.