பங்கஜ் முத்திரை (தாமரை முத்திரை)

பங்கஜ் முத்திரை (தாமரை முத்திரை) !!!
(முதுகு தண்டுவடத்திற்கு அதிக சக்தி கொடுக்கும்)


கை விரல்கள் முத்திரை பயிற்சி மூலம், பிரபஞ்சத்திலிருந்து சக்தியை உடலுக்குள் செலுத்துகின்றன. கை விரல்களின் நுனிகள் ஒன்றோடொன்று தொடும்போது உடலுக்குள் அதற்குரிய நல்ல சக்தி செலுத்தப்பட்டு நாம் உடல் நோயிலிருந்தும் மன நோயிலிருந்தும் நிவாரணம் பெறுகிறோம்.

இன்றைய காலத்தில் முத்திரைப் பயிற்சிகள் ஒரு சில முத்திரைகள் தவிர மற்ற அனைத்து முத்திரைகளும் உட்கார்ந்துகொண்டு, நின்றுகொண்டு, படுத்துக்கொண்டு, நடந்துகொண்டு எந்த நேரத்திலும் செய்யலாம். முத்திரை பயிற்சியில் இருக்கும்போது நல்ல மூச்சுப்பயிற்சியும் இருப்பது நல்லது. உட்கார்ந்திருக்கும்போது நன்றாக நிமிர்ந்து உட்கார வேண்டும். படுத்திருக்கும்போது நேராக படுத்திருக்க வேண்டும். நாம் முத்திரைப் பயிற்சியை ஒழுங்காக முறைப்படி செய்துவந்தால் அதற்குரிய நோய்களிலிருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும்.
மருத்துவரிடமிருந்தும் மருந்துகளிடமிருந்தும் விடுதலை கிடைக்கும். முத்திரைப் பயிற்சிகள் அதிகம் இருந்தாலும் அதில் முத்தான முத்திரைகள் பற்றி பார்ப்போம்.

முத்திரைப் பயிற்சிகள் குறைந்தது 15 நிமிடங்களும் அதிகபட்சம் 45 நிமிடங்கள் வரை செய்யலாம், இங்கு 45 நிமிடங்கள் செய்தால் நோயிலிருந்து உடனடியாக நிவாரணம் கிடைக்கும். சில முத்திரைப்பயிற்சிகளை அந்த நோய் நீங்கியவுடன் தொடர்ந்து அதற்குரிய முத்திரை பயிற்சி செய்வதை நிறுத்திவிடவேண்டும். நாம் இப்பொழுது ஒவ்வொரு முத்திரைகளாக பார்ப்போம்.

பங்கஜ் என்றால் தாமரை என்று அர்த்தம். இதனால் இதை தாமரை முத்திரை என்றும் அழைக்கப்படும்.

இரண்டு கைகளையும் முதலில் சேர்த்து வைத்துக்கொள்ளுங்கள். பின் படத்தில் காட்டியபடி இரண்டு கைகளின் சிறு விரல்களையும், பெரு விரல்களையும் பக்கவாட்டில் சேர்த்துவைத்துக்கொள்ளுங்கள். மற்ற விரல்களை தாமரை விரிவதுபோல் விரித்து வைத்துக்கொள்ளுங்கள். இப்பொழுது இந்த முத்திரை தாமரை வடிவத்தில் இருக்கும்.

முதலில் மொட்டு மாதிரி கைகளை குவித்து வைத்துக்கொண்டு அதன் பின் தாமரை மலர்வது போல் விரித்துக்கொள்ளவேண்டும். கைகளை குவித்திருக்கும்போது மூச்சை உள்ளே இழுக்கவும். கைகளை விரிக்கும்போது மூச்சை வெளியே விடவேண்டும். முதலில் சில நிமிடங்கள் இவ்வாறு
மூச்சு பயிற்சி செய்துவிட்டு அதன் பின் இந்த முத்திரை பயிற்சியை செய்யவும். நல்ல பலன் கிடைக்கும்.
இந்த முத்திரையை தினமும் அதிக பட்சம் 45 நிமிடங்களும், குறைந்த பட்சம் 15 நிமிடங்களாவது செய்வது நல்ல பலனைத் தரும். இந்த முத்திரைப் பயிற்சி எந்த நேரத்திலும் செய்யலாம்.

முத்திரையினால் ஏற்படும் நல்ல விளைவுகள்:

இந்த முத்திரை பயிற்சி முதுகு தண்டுவடத்திற்கு அதிக சக்தி கொடுக்கும்.
வயிற்றில் உள்ள அல்சர் மற்றும் கட்டிகள் உருவாவதை தடுக்கும்.
மன அமைதி கிடைக்கும்.
உடலில் நீர் சக்தியும் நெருப்பு சக்தியும் சமநிலைப்படும்.
நரம்பு மண்டலம் பலப்பட்டு நரம்புகள் அதிக சக்தி பெரும்.
இரத்த சம்பந்தமான நோய்கள் நீங்கும்.
உடல் அழகுடன் விளங்கும்.
காய்ச்சல் உடன் குறையும்.
மனதில் நல்ல எண்ணங்கள் தோன்றி மனம் அமைதியுடனும் மகிழ்ச்சியுடனும் இருக்கும்.
தியானத்தின் போது இந்த முத்திரை பயிற்சி செய்தால் உலக பந்தங்களிலிருந்து மனம் விடுபடும்.
இந்த முத்திரை பயிற்சி குளிர் காலங்களில் செய்வதை தவிர்க்கவேண்டும். செய்தால் நெஞ்சில் சளி கட்டும்.
குளிர் காலங்கள் தவிர மற்ற காலங்களில் செய்வது மிகவும் நல்லது.
தொடர்ந்து செய்துவந்தால் நமது உடலும் மனமும் எப்பொழுதும் அமைதியுடன் இருக்கும்.
நாம் தனியாக இருக்கும்போதோ அல்லது நம்மை நம் நண்பர்கள், உறவினர்கள் தேவையில்லாமல் தவறாக நினைக்கும்போதோ நாம் சக்தி குறைந்து மனம் தளர்ந்து இருப்போம். அப்பொழுது இந்த முத்திரை பயிற்சி செய்தால் அந்த பிரச்சனைகளில் இருந்து நமக்கு நிவாரணம் கிடைக்கும்.
தடுமன் சளி தொந்தரவு இருப்பவர்கள் இந்த முத்திரை பயிற்சி அதிகம் செய்யவேண்டாம். குறிப்பாக குளிர்காலத்தில் செய்வதை தவிர்க்கவேண்டும்