உங்க வீட்ல தையல் மிஷின் இருக்கா - பிரச்னையே வராம இருக்க பராமரிப்பு வழி
இப்போது நிறைய வீடுகளில் தையல் மிஷின் என்பது முக்கியமான பொருளாக மாறிவிட்டது. முன்பெல்லாம் வீட்டில் குழந்தைகள் துணி கிழிந்துவிட்டால் அதை தூக்கிக் கொண்டு டெய்லரிடம் ஓட வேண்டும். ஆனால் இப்போது அப்படியில்லை.
பெரும்பாலான வீடுகளில் தையல் மிஷின் வாங்கிப் போட்டு வைத்திருக்கிறார்கள். ஆனால் அதைப் பராமரிப்பதில் தான் அவர்களுக்குக் கொஞ்சம் சிரமமாக இருக்கும்.
இந்த தையல் மிஷின் பராமரிப்பு மிக முக்கியம். நாம் எந்த அளவுக்கு அதை பராமரிக்கின்றோமோ அந்த அளவுக்கு அது நன்றாக வேலை செய்யும்.
தையல் எந்திரத்தை தொடர்ந்து பயன்படுத்த வேண்டும். அப்படி முடியவில்லை என்றால் மாதத்திற்கு நான்கு முறையாவது ஒரு பிட் துணியை நூல் கோத்து தைத்துப் பார்க்கவேண்டும். 15 நாட்களுக்கு ஒரு முறை மிஷினை நன்றாக சுத்தம் செய்து எண்ணெய் விட வேண்டும். பெடல் செய்து பார்க்க வேண்டும்.
மொத்தமான துணிகளை தைக்கும் போது துணி ஊசி உடையும் பிரச்சினைகள் இருந்தால் அதை சரிசெய்ய சிறிது சோப்பை ஊசியின் முனையிலும் ஊசியிலும் தடவிவிட்டு தைக்கலாம்.
தையல் மிஷின் பெல்ட் ஆனது தைக்க தைக்க லூசாகிவிடும். இது சாதரணம் தான். பெல்ட்டை கழற்றி தண்ணீரில் இரவு முழுக்க ஊற வைத்துவிட்டால் போதும். பெல்ட் இறுகிவிடும்.
நீண்ட நேரம் தைக்கும் போது கையை டேபிளில் மீது வைத்து தைக்காதீர்கள், இதனால் கை மரத்துப்போய் வலி எடுக்க ஆரம்பிக்கும். இதனால் தலையணையை கொஞ்சம் பக்க பலமாக வைத்துக்கொள்ளுங்கள்.
தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே தைக்காதீர்கள், இதனால் கவனச்சிதறல் ஏற்பட்டு ஊசியில் விரல் பட்டுவிடும். சலிப்பைக் குறைக்க FM – Audio வை மட்டும் கேளுங்கள். அதுவும் உங்கள் பின்னால் இருந்து ஒலிக்குமாறு வைத்துக்கொண்டு வேலை செய்யுங்கள்.
ஊசியில் எளிய முறையில் நூல் கோர்ப்பதற்கு திரெட்டர் எனும் சிறிய டூல் உள்ளது. எனினும் அது இல்லையென்றால் நெயில்பாலிஷ் சிறிது நூலில் தடவி காயவிட்டு பின் கோர்க்கவும்.
பெண்களும் சரி ஆண்களும் சரி துணி தைக்க நகம் முக்கியம். இந்த நகம் சுருக்கங்களை துணியில் வைக்கப் பயன்படுவதோடு, நகம் ஊசியில் விரல் படாதவாறு பாதுகாக்கும்.
ஆடைகளில் ஜிப் வைக்கும் முன் அதை செல்லோ டேப்பினை கொண்டு ஒட்டிவிட்டு தைக்கப்பழகினால் எளிதாகும்.
பாபின்கள் துருப்பிடிக்காமல் இருக்க அதன் உள் மற்றும் வெளிப்பகுதிகளில் நெயில் பாலிஸ் தடவிவிடலாம். இதனால் நூல் சிக்கும் அபாயம் ஏற்படாது.
கத்திரிக்கோல் மழுங்கிவிட்டால் அதை சாணை ஏற்ற உப்புக்காகிதத்தை பலமுறை கத்தரியால் வெட்டுங்கள். இதனால் தானாகவே கத்திரிக்கோல் ஷார்ப் ஆகிவிடும்.
சின்ன காந்தம் அல்லது ஸ்பீக்கரை வைத்துக்கொள்ளவும். அதில் ஊக்கு கொக்கி, பாபின், ஊசியை ஒட்டிவைத்துக்கொள்ளலாம். கீழே ஊசி விழுந்து விட்டால் கவலை இல்லாமல் எடுத்துவிடலாம்.
சட்டையில் உள்ள பழைய பட்டனை கத்திரித்து எடுக்க பட்டனுக்கடியில் சீப்பை வைத்துவிட்டு கட்செய்துவிடவும். இதனால் எளிதாக பட்டனை பிரித்தெடுக்கவும்.
பட்டன்களை தைப்பதற்கு முன் அதில் நகப்பூச்சு வைத்து பின் அதன்மேல் பட்டனை வைத்து தைக்க வேண்டும். இதனால் பட்டன் எளிதில் பிய்த்துக்கொண்டு வராது.
மிஷின் மற்ற நேரங்களில் மூடியே இருக்கவேண்டும். வெகுநாட்கள் அதில் வேலையே இருக்க நேர்ந்தால் தலையை கழற்றி பத்திரமாக வைத்து மூடி பாதுகாக்கவேண்டும்.
தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள்
Share Market Training : Whatsapp : 9841986753
பங்கு சந்தை பயிற்சி : Whatsapp : 9094047040
Click Below Link