திருவண்ணாமலை கிரிவலம் பலன்

திருவண்ணாமலை கிரிவலம் தரும் பலன்கள்


  தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 



சூரியனும், சந்திரனும், முப்பத்து முக்கோடி தேவர்களும் வலம் வந்து வழிபட்ட அஷ்டலிங்க சன்னதிகளுக்கு நடுவே, கிரி உருவான கருணைக்கடலாக காட்சி தரும் ஜோதிமலை, வலம்வரும் பக்தர்களுக்கு வரங்களை வாரி வழங்கும் அருள்மலை.

சித்தர்களும்,ரிஷிகளும்,யோகிகளும்,மகான்களும் தவமிருந்து வழிபட்ட இன்றைக்கும் அருவமாக வலம் வந்து வழிபடுகிற அண்ணாமலையை கிரிவலம் செல்லும் பக்தர்கள், மூலிகை, சந்தனம், ஜவ்வாது, சாம்பிராணி, விபூதி, வாசமலர்களின் நறுமணங்களை உணரமுடியும். உற்சவ மூர்த்தியாகிய அண்ணாமலையார் உமையாளுடன் கார்த்திகை தீபத்தின் அடுத்த நாளும், திருவூடல் விழாவின்போதும் வலம் வரும் தனிப்பெரும் பேறு பெற்றது திருவண்ணாமலை எனும் கிரிவலமலை.

 அஷ்ட திக்கு பாலகர்களும் வலம் வந்து வழிபட்ட புனித மலை.
ஆயுட் காலத்தை அதிகரிக்கும் ஆற்றல் கொண்டது திருக்கடையூர். சனித் தொல்லையை காக்க கூடியது திருநள்ளாறு.

 பிணிகளை போக்குவது வைதீஸ்வரன் கோயில். ஆனால் ஊழ்வினை நீங்கி பெருவாழ்வு பெற அண்ணாமலையார் குடிகொண்டுள்ள திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வதாலேயே அடைய முடியும்.

பிறவிப்பிணி நீங்கச் செய்யும் வல்லமை கிரிவலத்துக்கு மட்டுமே உண்டு.


மலை வலம் செல்ல ஒரடி எடுத்து வைத்தாலே ஓரு யாகம் செய்த பலனை பெருவோம், ஈரடி எடுத்து வைத்தால் ராஜசூய யாக பலனை பெருவோம். மூன்றடி எடுத்து வைத்தால் அசுவமேத யாகம் செய்த பலனை பெறுவோம்.

நான்கடி எடுத்து வைத்தால் எல்லா யாகங்களையும் நிறைவேற்றிய பலன் பெறுவோம் என்பது சித்தர்களின் வாக்கு.

உள்ளீடற்ற உன்னதமான மலையில் இருந்து சிவந்த ஜோதி கதிர்கள் எப்போதும் வெளிபடுவதை உணர்ந்து உலகுக்கு உணர்த்தியவர் மகான் ரமணர். பவுர்ணமி நாட்களில் அது பன்மடங்காக வெளிப்படுகிறது. மலைவலம் வருவோர் அதன் பயனை உணர்கின்றனர்.

மலைச்சுற்றும்போது உள்ளமெல்லாம் இறை சிந்தனை மட்டுமே நிறைந்திருக்க வேண்டும் என்கின்றனர் சிவனடியார்கள். மலைவலம் தொடங்கும் முன்பு உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை நன்னீராட வேண்டும். திருநீறு ஆணிந்து, ஒம் நமச்சிவாய எனும் மந்திரத்தை உச்சரித்தபடியே செல்லவேண்டும்.

வெயிலுக்கோ, மழைக்கோ அஞ்சி குடை பிடித்து செல்வது பாவம். மலையை இடமிருந்து வலமாக மட்டுமே சுற்றவேண்டும். ராஜகோபுரத்தில் இருந்து மலை வலம் தொடங்குவது சிறப்பு.

இயலாதோர் தொடங்கிய இடத்தில் கிரிவலத்தை நிறைவு செய்யலாம். கோபம் பாவம் போன்ற எதிர்வினை உணர்ச்சிகள் இல்லாமல் உள்ளம் சம நிலையில் இருக்கும்படியாக ஓருமித்த சிந்தையோடு கிரிவலம் செல்ல வேண்டும்.

ஐப்பசி, கார்த்திகை, மார்கழி ஆகிய மாதங்கள் மலைச் சுற்ற ஏற்றதாகும். மாதப்பிறப்பு நாட்களில் மலை வலம் வருவது நல்லது. மலைச் சுற்றும் பாதையில் அருள்பாலிக்கும் அஷ்ட லிங்கங்களையும் தவறாமல் தரிசிக்க வேண்டும். தங்களின் ராசிக்கேற்ற லிங்கங்களுக்கு சிறப்பு பூஜை செய்வது பயன்தரும்.

கிரிவலப் பாதையில் எம லிங்கத்தை கடந்து சென்றால் நந்திகேஸ்வரர் சன்னதி அமைந்திருக்கும். மலைச்சுற்றுவோர் தவறாமல் தரிசிக்க வேண்டி சன்னதி. அதுதான் மலைச்சுற்றுவோருக்கு இறைவன் அனுப்பிய அதிகார நந்தி.

மலையை ஓட்டி வலப்புறமாக கிரிவலம் செல்வது சிறப்பு. மலைச்சுற்றி நிறைவு செய்யும்போது ஈசான்ய லிங்கத்தை தரிசித்து செல்வதே முழுப் பயனைத் தரும்.

 மலைவலம் தொடங்கும் போதும், நிறைவு செய்யும்போதும் தீபம் ஏற்றி மலையை வணங்குவது சிறப்பு. கிரிவலம் முடித்ததும் குளிப்பதையும் உறங்குவதையும் தவிர்த்தால் கிரிவலப் பயனை அடையலாம்.

★திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள அதிர்ஷ்டம் அள்ளி தரும் அஷ்டலிங்க தலங்கள்★
★இந்திரலிங்கம்★
★கிரிவல பாதையில் உள்ள முதல் லிங்கம் இந்திர லிங்கம். கிழக்கு திசையில் இக்கோவில் அமைந்து உள்ளது. கிழக்கு திசைக்கு கிரக அதிபதி சூரியன், சுக்கிரன். இங்கு வழிபாடு செய்தால் லட்சுமி கடாட்சமும், வருமானமும், நீண்ட ஆயுள் மற்றும் புகழ் கிடைக்கும் என்பது ஐதீகம்.
★அக்னி லிங்கம்★
★இது செங்கம் ரோட்டில் தாமரை குளத்திற்கு அருகே அமைந்துள்ளது. தென் கிழக்கு திசைக்கு அதிபதி சந்திரன். இங்கு வழிபாடு செய்தால் நோய், பிணி, பயம் முதலியவை விலகும். எதிரிகள், தொல்லை, மனபயம் நீங்கும்.
★எமலிங்கம்★
★கிரிவலப் பாதையில் 3-வது லிங்கம். ராஜ கோபுரத்தில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரம். கோவிலின் பக்கத்திலேயே சிம்ம தீர்த்தம் உள்ளது. தெற்கு திசையின் அதிபதி செவ்வாய். இங்கு இறைவனை மனமுருக வேண்டி பிரார்த்தனை செய்தால் பொருளாதார கஷ்டங்கள் நிவர்த்தி ஆகும்.
★நிருதி லிங்கம்★
★மலை சுற்றும் பாதை யில் 4-வது லிங்கமாகும். நிருதி லிங்கத் தின் முன்னால் உள்ள நந்தி அருகில் இருந்து மலையை பார்த்தால் மலையில் சுயம்புவாக (இயற்கையாக) அமைந்த நந்தி தெரியும். இத்திசைக்கு அதிபதி ராகு. இங்கு வழிபாடு செய்தால் குழந்தை பாக்கியம், சுகவாழ்வு, புகழ் ஆகியவையும் சங்கடமான நிலைமைகளில் இருந்து விடுதலை கிடைக்கும்.
★வருண லிங்கம்★
★ ராஜகோபுரத்தில் இருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. கோவிலின் அருகிலேயே வருண தீர்த்தம் அமைந்துள்ளது. மேற்கு திசையின் அதிபதி சனி. இங்கு வழிபட்டால் கொடிய நோயி லிருந்து விடுதலையும், புகழும் கிடைக்கும்.
★வாயு லிங்கம்★
★இக்கோவிலை அடையும் போது இயற்கையாகவே ஒரு அமைதி கிடைக்கும். காற்று தென்றலாக வீசும். திசை அதிபதி கேது. இங்கு பிரார்த்தனை செய்தால் எதிரிகள் தொல்லையில் இருந்து விடுதலை, பொறுமை, கண் திருஷ்டி, பெண்களுக்கு நல்வழி கிடைக்கும்.
★குபேரலிங்கம்★
★7-வது லிங்கமாக அமைந்துள்ளது குபேர லிங்கம். இத்திசையின் அதிபதி குரு. இங்கு இறைவனை வேண்டினால் பொருளாதாரம் உயரும். மனம் அமைதி அடையும்.
★ஈசான்ய லிங்கம்★

★கிரிவலப் பாதை யில் கடைசி லிங்கம். ஈசனே இங்கு இருப்பதால் இது ஈசான்ய லிங்கம். எல்லா நிலைகளையும் கடந்து அமைதி தேடும் இடம். இக்கோவில் நிலப்பரப்பில் இருந்து சற்று கீழ் இறங்கி இருக்கும். இத்திசையின் அதிபதி புதன். இங்கு இறைவனை வேண்டிக் கொண்டால் மனம் ஒருநிலை அடையும். இறைநிலை பெறுவதற்கு வழிகாட்டும்.