சித்தரத்தை(Chitharathai) - வாயு கோளாறு, இருமலை குணமாக்கும்
Gastric-problem-cough-control-chitharathai
வாயு கோளாறு, இருமல், தலைவலி, காய்ச்சல், வாந்தி, சுவாச கோளாறுகளுக்கு சித்தரத்தை நல்ல மருந்து. சித்தரத்தை எந்த முறையில் பயன்படுத்தினால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
சித்தரத்தை என்ற அழகான பெயரை கொண்ட இந்த தாவரம், இஞ்சி குடும்பத்தை சேர்ந்தது. கிழக்காசிய நாடுகளில் இதனை ‘சீன இஞ்சி’ என்று அழைக்கிறார்கள். இது காரச் சுவை கொண்டது. நம் உடலில் தொண்டை மிக முக்கியமான உறுப்பு. நோய்களை தடுக்கும் சுவர் போன்றது இது. அதனால் தொண்டையை நன்றாக பாதுகாக்கவேண்டும். அதற்கு சித்தரத்தை உதவுகிறது. இருமல் ஏற்படும்போது சிறு துண்டு சித்தரத்தையை வாயில் இட்டு மென்மையாக சுவைக்கவேண்டும். காரமும், விறுவிறுப்பும் கலந்த தன்மை அப்போது தோன்றும். இருமல் நின்றுவிடும்.
குழந்தைகள் இருக்கும் வீடுகளில் சித்தரத்தையை கட்டாயம் வாங்கி வைத்துக்கொள்ளவேண்டும். அவைகளுக்கு சளி, இருமல் ஏற்படும்போது, சிறிதளவு சித்தரத்தையை தூளாக்கி, அரை தேக்கரண்டி தேனில் குழைத்து கொடுக்கவேண்டும். இது எந்த பக்கவிளைவையும் ஏற் படுத்தாது. ஷீரணத்தை தூண்டும்.
* கால் டீஸ்பூன் அளவு சித்தரத்தைப் பொடியைத் தேனில் குழைத்து, காலை, மாலை என மூன்று நாட்கள் சாப்பிட்டால், நுரையீரலில் ஒட்டிக்கொண்டு அகல மறுக்கும் கோழைச் சளியை, இளக்கிக்கொண்டுவந்து வெளியேற்றி, இருமலைப் போக்கும்.
* இதை சிறுசிறு துண்டுகளாக்கி, அதில் நான்கைந்து துண்டுகளை, இரண்டு டம்ளர் நீர்விட்டு, மூன்று மணி நேரம் ஊறவைத்து, அந்த ஊறல் கஷாயத்தைச் சாப்பிட்டால் இருமல் போகும்.
* சின்னதாக இரண்டு துண்டு சித்தரத்தையை வாயில் அடக்கிக்கொண்டால், பேச்சுக்கிடையே வரும் இருமல் பேசாமல் அடங்கிவிடும். வறட்டு இருமல், சூட்டு இருமலுக்கு, இந்தத் துண்டுடன் பனங்கற்கண்டையும் சேர்த்து வாயில் ஒதுக்கிக்கொள்ள வேண்டும்.
* வயோதிகத்தில் வரும் மூட்டுவலிக்கும், ரூமட்டாய்டு மூட்டுவலிக்கும் (Rheumatoid Arthritis) அரத்தையையும் அமுக்கராங்கிழங்கையும் நன்றாக உலர்த்தி, பொடித்து வைத்துக்கொண்டு, கால் டீஸ்பூன் எடுத்து, தேனில் கலந்து, காலை, மாலை உணவுக்கு முன்னர் 45 நாட்கள் சாப்பிட வேண்டும். இது ஒரு சிறந்த வலி நிவாரணியாகவும் அழற்சியைப் போக்கி நோயின் தீவிரத்தைக் குறைக்கவும் இந்தப் பொடி உதவும். புற்றுநோய்க்கு, அறுவைசிகிச்சை எடுத்துக்கொண்டாலும், இந்தப் பொடியை செயல்பாடு உணவாக (Functional food) எடுத்துக்கொள்வது கூடுதல் பயனை அளிக்கும்.
* சித்தரத்தை, அதிமதுரம், தாளீசம், திப்பிலி இவற்றைச் சமபங்கு எடுத்து, வறுத்துப் பொடித்து, ஒரு கண்ணாடி பாட்டிலில் வைத்துக்கொண்டால், மூன்று மாதங்கள் இதன் திறன் குறையாது. இதன் மருத்துவச் செயல்பாட்டுக்கு, அதன் மாறாத குணம் முக்கியம். அடிக்கடி சளி, இருமல் வரும் குழந்தைகளுக்கு, இரைப்பிருமல் எனும் ஆஸ்துமாவால் அவதிப்படுவோருக்கு, இந்தப் பொடியைக் கால் டீஸ்பூன் எடுத்துத் தேனில் குழைத்து, காலையில் உணவுக்கு முன்னர் கொடுத்து வரலாம்.
நம் ஊர் நாட்டு மருந்துக்கடைகளில் சித்தரத்தை மாதிரி பல அற்புதங்கள், அழுக்குக் கோணியில் கட்டப்பட்டு வைக்கப்பட்டிருக்கின்றன. இதன் மகத்துவத்தை அறிந்து, நம் பாட்டன் வீட்டுச் சொத்தான இதை பயன்படுத்தி, பாதுகாப்பாக இருப்போம்!
* வாயு கோளாறு, இருமல், தலைவலி, காய்ச்சல், வாந்தி, சுவாச கோளாறுகளுக்கு இது நல்ல மருந்து. மேற்கண்ட பாதிப்பு கொண்டவர்கள் 10 கிராம் சித்தரத்தையை நன்கு இடித்து 200 மி.லி. நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி பருகவேண்டும். இதற்கு வலியை நீக்கும்தன்மையும் உண்டு. மூட்டுகளில் ஏற்படும் இறுக்கத்தை சீராக்கும். தசை பிடிப்பை நீக்கும். மூட்டு வலி, வீக்கம் இருப்பவர்கள் சித்தரத்தையை இடித்து, கஞ்சியில் கலந்து சாப்பிடவேண்டும்.
* சித்தரத்தை குறுஞ்செடிகளை எளிதில் வீடுகளில் தொட்டிகளிலேயே வளர்க்கலாம். இதன் பூக்கள் மிக அழகாக இருக்கும். செடியில் நறு மணம் வீசும். இதன் கிழங்குகளை சீவி, காய்கறிகளை கலந்து சூப்பாக தயார் செய்து பருகும் வழக்கம் கிழக்காசிய நாடுகளில் உள்ளது. சாலட்டாக தயார் செய்தும் சாப்பிடுகிறார்கள்.
10 கிராம் அளவுக்கு கிழங்கை எடுத்து, அரைத்து, எலுமிச்சம்பழ சாற்றில் கலந்து, தேனும் சேர்த்து சாப்பிட்டால் இருமல் குறையும். பற்களும் பளிச்சிடும்.

RUPEEDESK - SHARE MARKET TRAINING
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /MCom Coaching Classes @ Chennai - 9944811555
Financial A/c,Corporate A/c,Statistics,Cost,Mgmt A/c
இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்B Com /MCom Coaching Classes @ Chennai - 9944811555