பச்சை மிளகாய் குழம்பு - Green Chilli Curry

பச்சை மிளகாய் குழம்பு - Green Chilli Curry
காரசாரமான பச்சை மிளகாய் குழம்பு

 தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

சிலருக்கு காரசாரமாக சாப்பிட பிடிக்கும். இன்று பச்சை மிளகாயில் குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம். இந்த குழம்பை தோசை, இட்லி, சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும்.

தேவையான பொருட்கள் :

பச்சை மிளகாய் - 15,

 புளி - சிறிய எலுமிச்சை அளவு,
மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்,
கடுகு - அரை டீஸ்பூன்,
வெந்தயம் - அரை டீஸ்பூன்,
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.

வறுத்துப் பொடிக்க :

பச்சரிசி - 2 டீஸ்பூன்,
துவரம்பருப்பு - ஒரு டீஸ்பூன்,
வெந்தயம் - அரை டீஸ்பூன்,
தனியா - ஒரு டீஸ்பூன்,
பெருங்காயம் - சிறிதளவு.

செய்முறை:

வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை வெறும் வாணலியில் சிவக்க வறுத்து பொடித்து கொள்ளவும்.

பச்சை மிளகாயைக் கழுவித் துடைத்து, காம்பை பாதி ‘கட்’ செய்யவும். நுனியைக் கத்தியால் கீறவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு, இதனை நிறம் மாறும் வரை நன்றாக வதக்கி… தனியே எடுத்து வைக்கவும்.

புளியைக் கரைத்து ஒரு பாத்திரத்தில் விட்டு, அடுப்பிலேற்றிக் கொதிக்கவிடவும்.

அடுத்து அதில் உப்பு, மஞ்சள்தூள் போட்டு, புளியின் பச்சை வாசனை போனதும், வறுத்துப் பொடித்த பொடியை 2 டீஸ்பூன் போடவும்.

குழம்பு நன்றாக கொதித்த பின் இறக்குவதற்கு முன் வதக்கிய பச்சை மிளகாயைப் போட்டுக் கிளறி இறக்கவும்.

வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம் தாளித்து குழம்பில் சேர்க்கவும்.

சூப்பரான காரசாரமான பச்சை மிளகாய் குழம்பு

இந்தக் குழம்பை மோர் சாதத்துக்குத் தொட்டுக் கொள்ளலாம். சாதத்துடன் பிசைந்தும் சாப்பிடலாம்.