தந்தை மகனுக்கு என்ன சொல்லிக் கொடுக்க வேண்டும்?
ஒரு உண்மையான மனிதனாக உங்கள் மகன் வளர்ந்து நிற்க அவனுக்குத் சில அறிவுரைகளை தர வேண்டியது அவசியம்.

உங்களின் ஒரு பகுதியையே நீங்கள் உங்கள் மகனுக்காக தியாகம் செய்ய வேண்டும். ஒரு உண்மையான மனிதனாக உங்கள் மகன் வளர்ந்து நிற்க அவனுக்குத் சில அறிவுரைகளை தர வேண்டியது அவசியம். ஒரு புதிய தந்தையாக தன் மகனுக்குப் புகட்டும் அறிவாக இந்த குறிப்புக்களைத் தெரிந்து கொள்ளுங்கள்.
உங்கள் மனைவியிடம் குழந்தையின் எதிரிலேயே நீங்கள் தவறாக நடக்க முயன்றால் அவன் அதிலிருந்து என்ன கற்றுக் கொள்வான்? எனவே பெண்களை உணர்வு மற்றும் உடல் ரீதியாக மதிக்கக் கற்றுக்கொடுக்கவும். இதன் மூலம் அவனுக்கும் அந்த மதிப்புத் திரும்பக் கிடைக்கும்.
உங்கள் நண்பர்கள், சக பணியாளர்கள் மற்றும் குடும்பதினரிடையே நீங்கள் ஒரு பாதுகாவலனாக, நல்ல பண்புகளுள்ளவராக நல்ல பழக்கங்களுள்ளவராகவும் இன்னும் பல நல்ல இயல்புகளுக்காக நல்ல பெயரை எடுத்துள்ளீர்கள். உங்கள் மகனும் அதைப் போலவே பெயரெடுக்க வேண்டும் என்று விரும்புவீர்கள் அல்லவா? எனவே தன்னம்பிக்கையுடனும், அதே வேளை பண்பாட்டுடனும் விளங்க அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.
உண்மையாய் இருக்கத் தூண்டும் நற்பண்பை, உங்கள் மகனுக்கு சிறு வயதிலிலேயே நீங்கள் சொல்லிக் கொடுப்பது அவசியம்.
வாழ்வதற்கான எளிய முறையை அதாவது கடின உழைப்பின் மூலம் வெற்றியை அடைய முடியும் என்பதை உணர்த்துங்கள். கடின உழைப்பு என்பது ஒழுக்கமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும்.
அவனை வலிமையுடன் வளர்ப்பதன் மூலம் அவன் சிறு வயதிலேயே பொறுப்புகளை ஏற்க முடியும். தன்னை மட்டுமே சார்ந்திருக்குமாறு வலிமையாக இருக்க அவனுக்குக் கற்றுக் கொடுங்கள். அவனை பொறுப்புள்ளவனாக்கினால், பிற்காலத்தில் கடினமான வாழ்க்கை சூழ்நிலைகளில் முடிவெடுக்க வேண்டிய தருணங்களில் தன்னம்பிக்கைக் குறைவால் அல்லல் படாமல் இருப்பான்.
அவனை அனைவராலும் விரும்பப்படும் மனிதனாக மாற்ற, அவனை அனைவரின் மீதும் அன்பு செலுத்த வேண்டும் என்று எடுத்துக் கூறுங்கள். இல்லாதவர்களுக்குப் பகிர்ந்தளிக்கவும் அதன் மூலம் மற்றவர்களின் துன்பங்களைப் புரிந்து கொள்பவனாக நெறியுள்ளவனாக அவன் மாறவும் கற்றுக் கொடுங்கள்.
உங்கள் மகனை ஊதாரியாய் இருக்க அனுமதிக்காதீர்கள். அவனின் முக்கியமற்ற அர்த்தமில்லாத தேவைகளைக் கட்டுப்படுத்தி பணத்திற்கு மதிப்பளிக்கக் கற்றுக் கொடுங்கள். அவனுக்கு பணத்தை சேமிப்பதன் சாதகங்களை சிறுவயது முதலே கற்றுத் தந்தால், அதனை அவன் பிடித்துக் கொண்டு தன்னுடைய வாழ்வில் பயன்பெறுவான்.