நல்ல ஜீரணத்திற்கும் நல வாழ்வுக்கும் செய்ய வேண்டியவை
1. பசித்தால் மட்டுமே உண்ண வேண்டும். இரண்டு நாட்கள் வரை பசி இல்லாமல் இருந்தாலும் அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். வெறும் தண்ணீா் அல்லது இளம் சூடான தண்ணீா் அருந்திக் கொண்டிருந்தால், உடலில் உள்ள கழிவுகள் வெளியேறுவதற்கு வாய்ப்பு அதிகமாக இருக்கும்.
2. நாம் ஒவ்வொரு முறை உண்ணும் உணவிலும் ஆறு சுவைகளும் கலந்திருக்க வேண்டும். ( இனிப்பு, கசப்பு, புளிப்பு, காரம், உவா்ப்பு, துவா்ப்பு. ) ஒவ்வொரு சுவையும் ஒரு உறுப்புடன் தொடா்புடையது. நாக்கு இந்த சுவையை உணரும்போது அந்தந்த உறுப்புகளுக்கு அது சக்தியாக மாறுகிறது. உதாரணமாக இனிப்புச் சுவை வயிறு, மண்ணீரல் தொடா்புடையது. புளிப்புச் சுவை கல்லீரல், கண் இவற்றுடன் தொடா்புடையது. எனவேதான் புளிப்புச் சுவையை நாக்கு உணரும்போது புருவங்கள் சுருங்குகின்றன.
3. ஆறு சுவைகளுள் இனிப்பு சுவையைத்தான் முதலில் உட்கொள்ள வேண்டும். இதனால் வயிறு செரிமானத்திற்குத் தயாராகி விடுகிறது, உணவை நாம் உண்ண, உண்ண எளிதில் ஜீரணமடைய ஏதுவாகிறது,
4. நாம் உணவு உண்ணும்போது இரு உதடுகளும் மூடி நன்றாக மென்று உண்ண வேண்டும். இதனால் எச்சில் உணவுடன் நன்கு கலக்க ஏதுவாகிறது. எச்சிலுடன் நன்கு கலந்த எந்த உணவும் உடம்பில் எளிதாகச் ஜீரணமடையும்.
5. உணவு உட்கொள்ளும்போது பேசுதல், படித்தல், தொலைக் காட்சி பார்த்தல் கூடாது. உண்ணும்போது நம் கவனம் முழுவதும் உணவில் இருந்தால்தான் தேவையான என்சைம்கள் சுரக்கும். இல்லையேல் செரிமானம் பாதிக்கப்படும்.
6. உணவுக்கு 30 நிமிடத்திற்கு முன், பின் தண்ணீர் குடிக்கலாம். உணவு உண்ணும் நேரத்தில் தண்ணீா் குடிக்கக் கூடாது. உண்ணும்போது தொண்டை வறண்டிருந்தால் கைப்பெருவிரல், ஆட்காட்டி விரல் இரண்டையும் சின் முத்திரையில் வைத்துக்கொண்டு ( மற்ற மூன்று விரல்களையும் நேராக நீட்டவும். ) சிறிதளவு தண்ணீா் உள்ளங்கையிலிட்டு மெதுவாகக் குடிக்கவும். இது தொண்டையின் வறண்ட தன்மையைப் போக்கும்.
7. குளித்த பின்பு 45 நிமிடம் உணவு உண்ணக் கூடாது. உண்ட பின்பு குளிப்பதானால் 2.30 மணி நேரத்திற்குப் பிறகு குளிக்கவும். உணவு செரிமானமாகக் குறைந்தது 2.30 மணி நேரம் தேவையாகும். அதற்கு முன்பாக குளித்தால் உடல் வெப்பம் தணிந்து செரிமானம் பாதிக்கும். உடம்பில் எந்தச் கூழலிலும் 37 டிகிரி செல்சியஸ் அல்லது 98.4 டிகிரி பாரங்கீட் என்ற அளவில் சூடு இருக்கும். இதை டிரிபிள் வாமா் என்ற உறுப்பு செய்கிறது. குளிப்பதால் இந்த சமநிலையைப் பாதிக்கிறது. அதை சரி செய்ய மேலே சொன்ன கால அளவு தேவைப்படுகிறது.
8. ஒவ்வொரு முறை உண்ணும் முன் கை, கால், முகம் கழுவ வேண்டும். இவற்றில் உள்ள அக்கு முனைப் புள்ளிகள் தூண்டப் பெற்று அதனால் செரிமானம் நன்றாக நடைபெற உதவும்.
9. உண்ண உட்காரும்போது இரு கால்களையும் மடக்கி, சம்மணமிட்டு தரையில் அமா்ந்து உண்ண வேண்டும். நாம் உண்ணும்போது இடுப்புக்கு மேல்தான் கூடுதல் இரத்த ஓட்டம் தேவைப்படும். நடக்கும்போது மட்டும்தான் கால்களுக்கு கூடுதல் இரத்த ஓட்டம் வேண்டும். சோபா, சோ், கட்டிலில் உட்காரும் போதும் கால்களை மடக்கியே உட்கார வேண்டும்.
10. ஒவ்வொரு உணவின்போதும் கடவுளுக்கு நன்றி கூற வேண்டும். முதல் ஏப்பம் வந்தவுடன் சாப்பிடுவதை நிறுத்தவும்.
11. காலையில் வெறும் வயிற்றிலும் இரவு படுக்கைக்குச் செல்லும் முன்பும் இரண்டுகப் இளஞ்சூடு வெந்நீா் குடிக்கவும். சிறிது தூரம் நடக்கவும். ( இது மலச்சிக்கல், வயிறு உப்புசம் இருப்பவா்களுக்கு மலம் எளிதாக வெளியேற உதவும் ) காலையில் வெந்நீா் குடித்த அரை மணி நேரம் கழித்து காப்பி, டீ குடிக்கவும். பொதுவாக மினரல் வாட்டா் குடிப்பதை முற்றிலும் தவிற்கவும்.