தலைவலியால் அவதிப்படுபவரா நீங்கள் ?

தலைவலியால் அவதிப்படுபவரா நீங்கள் ? இலகுவான பாட்டி வைத்தியம் !

1.விரவி மஞ்சளை விளக் கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு அதன் புகையை மூக்கின் வழியாக உரிஞ்ச நெஞ்சுவலி, தலைவலி முதலியன தலைவலி சரியாகும்.
2.தும்பைப்பூவின் இலையை கசக்கி அந்தச்சாறை முகர்ந்தால் தலை வலி உடனே சரியாகும்.
3.நல்லெண்ணெயில் தும்பைபூவை போட்டுக்காய்ச்சி தலையில் தேய்த்து குளித்து வர தலைபாரம் குறையும்.
4.ந‌ல்லெ‌ண்ணெ‌யி‌ல்
‌சிறிது ஜீரக‌த்தை‌ப் போ‌ட்டு‌க் கா‌ய்‌ச்‌சி எடுக்கவும். பின்னர்
அ‌ந்த எ‌ண்ணெ‌யை தலை‌யி‌ல் தே‌‌ய்‌த்து ‌‌சி‌றிது நேர‌ம் க‌ழி‌த்து தலை
கு‌‌ளி‌த்தா‌ல்,பி‌த்த‌த்தா‌ல் உ‌ண்டாகு‌ம் தலை சு‌ற்ற‌ல், தலைவ‌லி
குணமாகும்.
5.ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு
சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப்
போட்டால் தலைவலி குணமாகும்.
6.கொதிக்க வைத்த நீரில் வேப்பம் பூவைப் போட்டு ஆவி பிடித்தால் தலைவலி, குணமாகும்.