வாழையிலைக் குளியல் - இயற்கை சிகிச்சை முறைகள்

      தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

*இயற்கை சிகிச்சை முறைகள்.*
***********************************
(1) வாழையிலைக் குளியல்
(2) மண் குளியல்
(3) நீராவிக் குளியல்
(4) முதுகு தண்டுக் குளியல்
(5) இடுப்புக் குளியல்
(6) கண் குவளை
(7) மூக்கு குவளை
(8) எனிமா
(9) ஈரத்துணிப்பட்டி
(10) ஈரமண் பட்டி
(11) சூரிய ஒளி குளியல்

*வாழையிலைக் குளியல்*
****************************

(1) 10லிருந்து 15 வரை முழு நீள வாழையிலை ஒரு நபருக்கு தேவைப்படும்.

(2) இந்த சிகிச்சையை பகல் 12 மணிக்கு முன்னால் செய்வது நல்லது. நல்ல சூரிய வெள்ச்சம் இந்த சிகிச்சை முறைக்கு தேவைப்படும். வியர்வையின் முலமாக இந்த சிகிச்சை முறையில் கழிவுகள் வெளியேறும். இதய நோயாளிகள் இந்த சிகிச்சையின் போது சிறிது சிறிது படபடப்பாக உணருவர். அதற்கு பயப்படத் தேவையில்லை.

(3) இந்த சிகிச்சை மூலமாக வியர்வை அதிகமாக வெளியேறுவதால் சிகிச்சைக்கு முன்னர் எவ்வளவு தண்ணிர் அருந்த முடியுமோ அவ்வளவு த ண்ணீர் அருந்தவேண்டும்.

(4) மிகவும் குறைந்த அளவு உடைகளே போதுமானது. ஒருசிறிய ஈரத்துணியை தலையின் மேல் போட்டுக் கொள்ள வேண்டும்.

(5) நல்ல சூரிய ஒளி உள்ள இடத்தில் ஒரு பாயை விரிக்கவும். அதற்கு மேல் ஒரு போர்வையை தண்ணீரில் நனைத்து போடவும்.

(6) போர்வையின் மேல் சிறிய சணல் கயிறு அல்லது நாடா போன்றவற்றை 5 (அ) 6 எடுத்து போர்வையின் மேல் சிறிது இடைவெளி விட்டு போடவும். (சிகிச்சை எடுப்பவரை வாழையிலையில் கட்டுவதற்காக). இதற்கு மேல் வாழையிலைகளை விரிக்கவும். நாம் உண்ணும் பகுதி நமது உடலின் மேல் படுமாறு இருக்க வேண்டும். சிகிச்சை எடுப்பவரை வாழையிலையில் படுக்க வைத்து மேல் பக்கத்திலும் வாழையிலையை வைத்து மூடி கீழே இருக்கும் சணல் கயிற்றினால் காற்று உள்ளே புகாதவாறு கட்டி விடவும். மூச்சு விட மூக்கின் அருகே ஒரு சிறிய துளை செய்து விட வும்.

(7) 20 முதல் 40 நிமிடங்கள் வரை இந்த சிகிச்சையை செய்யலாம். மிகவும் சிரமமாக உணர்ந்தால் கட்டுக்களை அவிழ்த்து விட்டு விடலாம்.

(8) 1/2 முதல் 1 லிட்டர் வரை கழிவுகள் வியர்வை மூலமாக வெளியேறி இருக்கும்.

(9) பிறகு காற்றோட்டமான நிழலுள்ள இடத்தினில் 1/2 மணி நேரம் ஓய்வெடுக்க வேண்டும். பிறகு பச்சை தண்ணீரில் குளிக்க வேண்டும்.

(10) உடல் பருமனுக்கு இது மிகவும் சிறந்த சிகிச்சையாகும்.

(11) இலைகளில் விஷமேறி விடுவதால் இதை செடி, கொடிகளுக்கு உரமிடுவதோ ஆடு, மாடுகளுக்கு தீவனமாக கொடுப்பதோ கூடாது.

(12) இந்த சிகிச்சை மேற்கொண்டால் சிறிது களைப்பாகவோ, தலைவலியோ இருக்கும். பயப்படத் தேவையில்லை.

(13) ஆரோக்கியமாக உள்ளவர்கள் இதை மாதம் ஒரு முறை செய்தால் போதும். நோய்க்காக சிகிச்சை எடுப்பவர்கள் 2 வாரத்திற்கு ஒரு முறை செய்யலாம். இது இரத்தத்தை சுத்தம் செய்கிறது.

*மண் குளியல்*
****************

(1) செம்மண், களிமண், புற்று மண் (அ) ஒட்டக் கூடிய தன்மை உள்ள எந்த மண்ணையும் பயன் படுத்தலாம். மண் குளியல் எடுக்க வேண்டிய நாளைக்கு முதல் நாள் இரவே மண்ணை நீரில் குழைத்து வைத்து கொள்ள வேண்டும். இது மண்ணை குளிர்ச்சி அடைய வைத்து தோலுக்கு தேவையான நல்ல பாக்டீரியாக்களை வளர்ச்சி அடைய வைக்கிறது.

(2) பகல் 12 மணிக்கு முன்னர் எடுக்க வேண்டும்.

(3) மிகக் குறைந்த அளவு ஆடைகளே அணிய வேண்டும்.

(4) தலை உட்பட எல்லாப் பகுதிகளிலும் மணலை பூசிக் கொள்ள வேண்டும். புண்களிலும் பூசலாம்.

(5) சூரிய ஒளியில் நிற்க வேண்டும்.

(6) 1/2 மணி நேரத்திற்கு பிறகு (அ) மணல் முழுமையாக காய்ந்த பிறகு நிழலில் 1/2 மணி நேரம் ஓய்வெடுக்க வேண்டும்.

(7) பிறகு பச்சை தண்ணீரில் குளிக்கவும். சோப்பு, ஷாம்பூ, சிகைக்காய் எதுவும் தேவையில்லை. மணலையே நன்றாக தண்ணீர் சேர்த்து தேய்த்து மெதுவாக மசாஜ் செய்து குளிக்கவும்.

(8) கழிவுகள் இம்முறையில் வெளியேறும். வியர்வைத் துளைகள் சுத்தமாகும். பிரஷ்ஷாக இருக்கும்.

(9) தோல் வியாதிகளான சொரியாஸிஸ், வெண் குஷ்டம் மற்றும் நரம்பு பிரச்சனைகள், வாதம், தொழு நோய் போன்றவற்றிற்கு இது நல்ல பலன் தரும்.

(10) அபார்ட்மென்ட் மற்றும் நகரங்களில் வாழும் உரம் மற்றும் பூச்சி கொல்லி மருந்து இல்லாத நல்ல மணல் கிடைக்கப் பெறாதவர்கள் ’முல்த் தானி மிட்டி‘ என கூறப் படும் மண்ணை பேன்சி ஸ்டோர்களில் வாங்கி பயன் படுத்தலாம்.

*நீராவிக் குளியல்*
********************

மழைக் காலங்களிலும், குளிர் நாடுகளிலும் நீராவிக் குளியல் பயன் தரும். இந்த இடங்களில் வியர்வை மூலமாக கழிவுகள் வெளியேறுவது மிகவும் குறைவு. இந்த குறையை நீராவிக் குளியல் போக்குகிறது. இதை வீடுகளிலேயே எடுக்கலாம். துளசியிலை, வேப்பிலை, நொச்சி இலை போன்றவற்றை பயன்படுத்தலாம். பிரஷர் குக்கர் மற்றும் கேஸ் டியூப் போதுமானது. குக்கரில் தண்ணீர் வைத்து குக்கரை சூடு ப டுத்தவும். கேஸ் டியூப்பை குக்கரில் ஆவி வரும் இடத்தில் பொருத்தவும். நீராவிக் குளியல் எடுப்பவரை ஒரு ஸ்டூல் (அ) சேரில் உட்கார வைத்து 3 (அ) 4 போர்வைகள் எடுத்து மூடவும். குக்கரில் இருந்து வரும் நீராவியை போர்வையின் வழியாக உள்ளே செலுத்தவும்.(சிகிச்சை பெறுபவர் உடலின் மேல் ஆவி படக் கூடாது). பிரஷர் குக்கர் கீழே விழாதவாறு ஒருவர் கவனித்துக் கொள்ள வேண்டும். நன்றாக வியர்க்க வேண்டும். சிகிச்சை பெறுபவர் இயன்ற வரை உள்ளே இருக்க வேண்டும். சளி, ஆஸ்த்துமா, உடல் பருமன் உள்ளவர்களுக்கு நல்ல பலன் தரும்.

*முதுகு தண்டு குளியல்*
**************************

இதை எடுக்க தேவையான சாதனம் இயற்கை சிகிச்சை மையத்தில் கிடைக்கும். 1/2 மணி நேரம் முதுகு தண்டு படுமாறு இதில் ப டுக்க வேண்டும். பிறகு பச்சை தண்ணீரில் குளிக்க வேண்டும். முதுகு வலி, முதுகு தண்டு பிரச்னை, உயர் இரத்த நோயாளிகளுக்கு இது பயன் தரும்.

*இடுப்புக் குளியல்*
*********************

இதற்கு தேவையான சாதனமும் இயற்கை சிகிச்சை மையத்தில் கிடைக்கும். அல்லது ஒருவர் கால்களை வெளியில் விட்டு உட் காரக் கூடிய வகையில் உள்ள பாத்திரத்தையும் பயன்படுத்தலாம். பாத்திரம் குட்டையாகவும் அகலமாகவும் இருந்தால் நல்லது. பாதி பாத்திரத்தில் நீரை நிரப்பி அதில் அமரவும். கால்கள் வெளியில் தரையில் படாதவாறு இருக்க வேண்டும். கால்களை மரக்கட்டைகளில் வைத்துக் கொள்ளலாம். இதனால் உடலின் காந்த சக்தி தரையில் பாயாதவாறு இருக்கும். ஒரு சிறிய துணியை வைத்து வயிற்றை மசாஜ் செய்து கொண்டே இருக்கவும். 40 நிமிடங்கள் வரை அமரலாம். 15 நிமிடங்களுக்கு பிறகு குளிக்கலாம். ஒரு முறை உபயோகித்த நீரை மீண்டும் உபயோகிக்கக் கூடாது. இது வயிறு சம்மந்தமான பிரச்னைகளுக்கு உகந்தது. வயிற்றை குளிர்ச்சி அடைய செய்து எல்லா நோய்களுக்கும் மூலகாரணமான மலச்சிக்கலை கு றைக்கிறது. தலைவலி மற்றும் காய்ச்சலின் போது இந்த சிகிச்சையை மேற்கொள்ளலாம்.

*கண் குவளை*
*****************

இது பிளாஸ்டிக்கினால் செய்யப்பட்ட ஒரு சிறிய சாதனமாகும். இது இயற்கை சிகிச்சை மையங்களில் கிடைக்கும். அல்லது ஒரு நீர் நிரம்பிய சிறிய கிண்ணத்தையும் பயன்படுத்தலாம். இது இரவு நேரம் விழித்து பணி புரிபவர்கள், கணினியில் பணி புரிபவர்கள், டி.வி. பார்ப்பவர்கள், தூசியில் பணிபுரிபவர்கள், வாகனங்கள் ஓட்டுபவர்களுக்கும் பயன்படும். இது கண்களை குளிர்ச்சி அடைய வைக்கும்.
இந்த குவளையில் கண்ணை வைத்து இடது மற்றும் வலது புறமாக சுழற்ற வேண்டும். (5 நிமிடங்கள்). முதலில் சிறிது சிரமமாக இருக்கும். இது கண்களை பாதுகாக்க ஒரு எளிய வழியாகும்.

*மூக்கு குவளை*
******************

இதற்கான சாதனமும் இயற்கை சிகிச்சை மையங்களில் கிடைக்கும். சிறிதளவு உப்பு போட்டு தண்ணீரை வெதுவெதுப்பாக்கி கொள்ளவும். அதற்கென உள்ள சாதனத்தில் இந்த நீரை ஊற்றிக் கொள்ளவும். முன்புறம் வளைந்து தலையை மேல்புறமாக திருப்பி வைத்து கொள்ளவும். வாயின் வழியாக மூச்சு விட்டுக் கொண்டு நீரை சிறிது சிறிதாக வலது நாசியில் விடவும். நீர் இடது நாசி வழியாக வெளியேறும். இதையே இடது நாசிக்கும் மாற்றிச் செய்யவும். இது சுவாச சம்பந்தமான பிரச்சனைகளான சளி, சைனஸ், ஆஸ்துமா, டிபி(காச நோய்) போன் றவைகளுக்கு பயன் தரும்.

*எனிமா*
***********

இதற்கான சாதனமும் இயற்கை சிகிச்சை மையங்களில் கிடைக்கிறது.
மலச்சிக்கல் உள்ள உடலில் கிருமிகள் உற்பத்தியாகும். எனவே இரத்தத்தில் நச்சுக்கள் ஏற்ப்படும். உடல் நோய் வாய்ப்படும். மலச்சிக்கலினால் உடல் உஷ்ணம் அடைகிறது. இது மூல வியாதிக்கு காரணம் ஆகிறது. நாம் வாய் கொப்பளிப்பது போல எனிமா குவளையை குடலை கழுவ பயன்படுத்தலாம். மலச் சிக்கல் இருந்தால் இதனை தினமும் பயன் படுத்தவேண்டும். மலச்சிக்கல் இல்லாமல் இருக்க அதிக நார்ச் சத்துள்ள உணவு(இயற்கை உணவு) உண்ண வேண்டும். இயற்கை உணவும் உண்டு நாக்கில் வெள்ளை படலமும் இல்லாமல் இருந்தால் வாரம்
1 முறை எனிமா எடுத்தால் போதுமானது. மலம் ஒட்டுவது மலச்சிக்கலை குறிக்கிறது. குழந்தைகள் கூட இதை பயன்படுத்தலாம். தலை வலி, காய்ச்சல், சளி தொந்தரவுக்கு இதை பயன் படுத்தலாம். சமையல் உணவில் இருப்பவர்களுக்கு இது பயன் தரும்.
எப்படி உபயோகப்படுத்துவது?
எனிமா கப்பை தண்ணீர் ஊற்றி தலைக்கு மேலே ஒரு உயரத்தில் தொங்க விடவும். பின் நாசில் வழியாக தண்ணீரை மலத்து வாரத்திற்குள் முன்புறம் குனிந்தவாறு செலுத்தவும். நாசிலில் சிறிது எண்ணெய் பூசிக் கொள்ளலாம். தண்ணீர் அனைத்தும் குடலுக்குள் சென்ற பிறகு 20 நிமிடங்கள் வரை அப்படியே இருக்கவும். படுத்திருந்தால் மலத்தை அடக்க எளிதாக இருக்கும். பலனும் நன்றாக இருக்கும். பிறகு மலம் கழிக்கலாம். குடலில் தேங்கியுள்ள நாட்பட்ட கழிவுகள் எல்லாம் வெளியேறும். குடிப்பதற்காக பயன் படுத்தும் நீரையே இதற்கும் பயன்படுத்த வேண்டும்.

*ஈரமண்பட்டி*
**************

சுத்தமான மண், புற்று மண், செம் மண், களி மண்(உரமும், பூச்சிகொல்லி மருந்தும் இல்லாதது) தண்ணீருடன் குழைத்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு செவ்வக வடிவத்தில் உள்ள துணியில் மண்ணை வைத்து மண் வெளியே விழாதவாறு மடித்து கொள்ள வேண்டும். 1/2 மணி நேரத்திற்கு மேலாக வைக்கலாம். பயணத்தினால் ஏற்படும் உஷ்ணம், காய்ச்சல், தலை வலி, மலச்சிக்கலுக்கு இந்த சிகிச்சை முறை சிறந்தது. சிகிச்சைக்கு பிறகு எனிமா எடுப்பது நல்ல பலன் தரும்.

*சூரிய ஒளிக் குளியல்*
*************************

குறைந்த அளவு உடை உடுத்திக் கொண்டு நின்றோ, அமர்ந்தோ, படுத்தோ இந்தக் குளியல் எடுக்கலாம். சுரிய ஒ:ளி நமக்கு நிறைய ஆற்றலை வழங்குகிறது. விட்டமின் டி சுரிய ஒளியில் உள்ளது. அது தலை வலி மூலமாகவும், வியர்வை மூலமாகவும் உடலின் அழுக்கு களை வெளியேற்றி உடலுக்கு தேவையான உஷ்ணத்தையும் தருகிறது.

சூரிய ஒளியின் நன்மைகள்:
(1) தோல் கேன்சர் சூரிய ஒளி அதிகமாக உள்ள நாடுகளில் மிகவும் குறைவு.
(2) தோல் வியாதிகள் மிகவும் குறைவு.
(3) கறுப்பு நிறத் தோலே வெளிர் நிறத்தோலை விட ஆரோக்கியமானது.
(4) காலை 9 மணிக்கு முன்னரும் மாலை 4 மணிக்கு பின்னரும் இதை எடுக்க வேண்டும். சூரியஒளி அதிகமாக உள்ள நாடுகளில் 20 நிமிடத்திற்கு மேல் எடுக்க வேண்டாம்.

*எண்ணெய் கொப்பளித்தல்*
*******************************

இது இயற்கை சிகிச்சை முறையில் வராவிட்டாலும் இது உடலிலுள்ள கழிவுகளை ஒரு எளிய முறையில் நீக்குகிறது. இது தீங்கு விளைவிக்காது. நோய் அதிகமாக இருக்கும் போது இதை உணவு உண்பதற்கு முன்னர் தினசரி 3 நேரம் செய்ய வேண்டும். பிறகு ஒரு நா¬ ளக்கு ஒரு முறை செய்தால் போதுமானது.

செய்முறை:
சமையலுக்கு பயன்படுத்த கூடிய எந்த எண்ணெய் வேண்டுமானாலும் உபயோகிக்கலாம். 1 ஸ்பூன் போதுமானது. வாயில் வை த்து 15 முதல் 25 நிமிடங்கள் கொப்பளிக்க வேண்டும். பிறகு அதை விழுங்காமல் துப்பி விட வேண்டும். விழுங்கினால் தவறேதும் இல்லை. ஆனால் விழுங்குவதை தவிர்ப்பது நல்லது. பிறகு நீரில் வாய் கொப்பளிக்கலாம். காலையில் பல் தேய்த்த உடன் இதை செய்யலாம். சவ்வூடு பரவுதல் (ஆஸ்மாஸிஸ்) மூலமாக கழிவுகள் வாய்க்கு இந்த முறையில் வந்து விடுகிறது.

சமையலுணவில் குறைக்கவேண்டியவை மற்றும் அதற்கு மாற்று உணவு
குறைக்க வேண்டியது மாற்று உணவு
(1) சர்க்கரை வெல்லம், கரும்பு சர்க்கரை கருப்பட்டி
(2) பொடி உப்பு கல் உப்பு
(3) கரையாத கொழுப்பு கரையும் கொழுப்பு
கொண்ட எண்ணெய் கொண்ட எண்ணெய்
(4) மிளகாய் மிளகு
(5) புளி எலுமிச்சை
(6) கடுகு சீரகம்
(7) காபி,டீ லெமன் டீ, ப்ளாக் டீ,
சுக்கு காப்பி, வரக்காப்பி
(8) பாலிஷ் செய்த அரிசி அவல், சிகப்பரிசி
இந்த மாற்று உணவு (மிளகு, எலுமிச்சை, சீரகம் தவிர) சமைத்த உணவை தவிர்க்க முடியாதவர்களுக்கு மட்டும். இவை இயற்கை உணவு அல்ல. இவற்றினால் சிறிது தீமை குறைவு.

*சாறு உண்ணா நோன்பு (ஜுஸ்பாஸ்டிங்)*
********************************************

வெறும் நீர் அருந்தி உண்ணா நோன்பு இருக்க முடியாத பட்சத்தில் சாறு உண்ணா நோன்பு இருக்கலாம். இதில் பழச்சாறுகள் மட்டுமே அருந்த வேண்டும்.

நன்மைகள்:
(1) உணவு திரவ வடிவில் இருப்பதால் ஜீரணத்துக்கு தேவைப்படும் ஆற்றல் மிகவும் குறைவு. எனவே உடலின் ஆற்றல் முழுவதும் கழிவுகள் வெளியேற்றத்துக்கு உபயோகப்படுத்தப் படுகிறது.
(2)உடல் எளிதாக ஆற்றலை கிரஹித்துக் கொள்ளும்.
(3)சாறுள்ள பழங்களின் ஜுஸ்கள் (திராட்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி, மாதுளம் பழம் போன்றவை) அதிகமான க்ளுக்கோஸ் சத் துக்களை கொண்டுள்ளதால்
உடல் நிலை பாதிக்கப்பட்டோர் விரைவில் குணமடைய உதவுகிறது.
(4) மிகவும் உடல்நிலை பாதிக்கப்பட்டோர் இதை ஜீரணிக்க எளிதாக உணருவர்.
சாறு உண்ணாநோன்பின் போது கவனிக்க வேண்டியவை
(1) திரவ வடிவில் இருப்பதால் நார்ச்சத்து கிடைப்பதில்லை.
(2) மலச்சிக்கல் மற்றும் மூலவியாதி இருப்பவர்களுக்கு இது உகந்தது அல்ல. அவர்கள் இயற்கை உணவை உள்ளது உள்ள படியே (நார்ச்சத்துடன்) உண்ண வேண்டும்.
(3) சாறுண்ணா நோன்பின் போது மலச்சிக்கல் ஏற்ப்பட்டால் ஒரு நாளைக்கு ஒரு முறை எனிமா எடுத்துக் கொள்ளலாம்.

*இயற்கை உணவும் இரத்தத்தின்தன்மையும்*
*************************************************

இரத்தம் காரத்தன்மை (ஆல்கலைன்) உடையது. இயற்கை உணவும் காரத்தன்மை உடையது. எனவே இயற்கை உணவு எளிதாக இரத்தத்தின் காரத் தன்மையை சமன் செய்யும். ஆனால் சமைத்த உணவு அனைத்தும் அமிலத்தன்மை (அசிடிக்) உடையது. எனவே அது இரத்தத்தை அமிலத்தன்மை உடையதாக்கும். ஆனால் உடலோ மீண்டும் இரத்தத்தை காரத்தன்மை உடையதாக்க போராடும். அந்த போராட்டத் தில் உடல் தோல்வியடையும் போது நாம் நோய்வாய்ப்படுகிறோம்.

நம் உடலில் நாளமில்லா சுரப்பிகள் உள்ளன. அவையாவன:
(1)பிட்யுட்டரி
(2)பீனியல்
(3)அட்ரீனல்
(4) பான்கிரியாஸ்
(5) நாபிச் சக்கரம்
(6) தைராய்டு
(7) பாலியல் சுரப்பிகள் ஆகும்.

இவை ஒரு மனிதனின் குணத்தை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இவை சரியாக செயல்பட்டால் ஒருவர் அன்பு, தைரியம், கருணை, வைராக்கியம், பொறுமை, எளிமை, பொது நலம், சுறுசுறுப்பாகவும் சந்தோஷமாகவும் இருப்பர். இவை சரியாக செயல் படாவி ட்டால் அதிக காமம், கோபம், பிடிவாதம், அமைதியின்மை, சிடுசிடுப்பு, ஆடம்பர பொருட்கள் மேல் மோகம், கோழைத்தனம், அதிக ஆசை, சுயநலம், சோம்பேறித்தனம், சோர்வு, தற்கொலை எண்ணம், திருடும் எண்ணம், கொடூரம், பயம் போன்றவற்றுடன் காணப்படுவர். எனவே மனரீதியான பிரச்னை உள்ளவர்கள் இயற்கை உணவு, தியானம் மற்றும் அக்குபிரஷர் (முக்கியமாக நாளமில்லா சுரப்பிகளில் எந்த சுரபி குறைபாடுடன் இ ருக்கிறது என கண்டுபிடித்து அதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்) செய்து வந்தால் வியக்கத்தக்க மாறுதல்களை காணலாம். குற்றவாளிகளை கூட இந்த சிகிச்சை முறையால் திருத்தி விட முடியும்.

நாளமில்லா சுரப்பிகளை தவிர மற்ற உறுப்புகளுக்கு கடைகளில் விற்கப்படும் அக்குபிரஷர் உருளைகளை வாங்கி பயன்படுத் தலாம். மேலும் சீப்பு, துணிகிளிப், ரப்பர் பாண்டு, மரக்குச்சி, துணி துவைக்கும் பிரஷ் கூட பயன்படுத்தலாம். இவைகளை கொண்டு நாம் டிவி பார்க்கும் பொழுதும், கணினியில் வேலை செய்யும் பொழுதும், புத்தகங்கள் படிக்கும் பொழுது கூட நேரத்தை வீணாக்காமல் அக்குபிரஷர் கொடுக்கலாம். நாளமில்லா சுரப்பிகளுக்கு மட்டும் கட்டை விரலால் செங்குத்தாக அழுத்தம் கொடுக்க வேண்டும

நாளமில்லா சுரப்பிகளை தவிர மற்ற உறுப்புகளுக்கு கடைகளில் விற்கப்படும் அக்குபிரஷர் உருளைகளை வாங்கி பயன்படுத் தலாம். மேலும் சீப்பு, துணிகிளிப், ரப்பர் பாண்டு, மரக்குச்சி, துணி துவைக்கும் பிரஷ் கூட பயன்படுத்தலாம். இவைகளை கொண்டு நாம் டிவி பார்க்கும் பொழுதும், கணினியில் வேலை செய்யும் பொழுதும், புத்தகங்கள் படிக்கும் பொழுது கூட நேரத்தை வீணாக்காமல் அக்குபிரஷர் கொடுக்கலாம். நாளமில்லா சுரப்பிகளுக்கு மட்டும் கட்டை விரலால் செங்குத்தாக அழுத்தம் கொடுக்க வேண்டும்.