தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் சாப்பிடக்கூடாத பழங்கள்!

தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் சாப்பிடக்கூடாத  பழங்கள்!

 தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

சிட்ரஸ் பழங்கள்

சிட்ரஸ் பழங்களில் உள்ள ஃப்ளேவர் தாய்ப்பாலில் கலந்து, குழந்தைக்கு வயிற்று உப்புசத்தை உண்டாக்கும். எனவே தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.

ஸ்ட்ராபெர்ரி

தாய்ப்பால் கொடுக்கும் போது ஸ்ட்ராபெர்ரி பழத்தை பெண்கள் அதிகம் சாப்பிட்டால், குழந்தைக்கு தீவிரமாக அழற்சி ஏற்படும் வாய்ப்புள்ளது. மேலும் வாய்வுத் தொல்லை, வயிற்றுப்போக்கு, எரிச்சல் போன்றவையும், சில நேரங்களில் சருமத்தில் அரிப்புக்களும் ஏற்படும். எனவே தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் இவற்றைத் தவிர்ப்பது நல்லது.

அன்னாசி

அன்னாசியில் உள்ள அசிட்டிக் தன்மை, தாய்ப்பாலுடன் கலந்தால், அது தாய்ப்பாலை நாற்றமிக்கதாக மாற்றுவதோடு, குழந்தைக்கு நாப்கின் அரிப்புக்களையும் உண்டாக்கும்.

கிவி

கிவி பழத்தை தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது குழந்தைக்கு ஆரோக்கியமானதல்ல. இப்பழத்தில் உள்ள உட்பொருட்கள் குழந்தைக்கு வாய்வுத் தொல்லையை உண்டாக்கும்.
ழங்கள்

செர்ரிப் பழங்கள்

செர்ரிப் பழங்களை அதிகமாக தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் உட்கொள்ளக்கூடாது. ஏனெனில் இதில் இயற்கையாகவே மளமிளக்கும் தன்மை உள்ளது. ஒரு வேளை அதிகமாக உட்கொண்டால், குழந்தைக்கு வயிற்றுப்போக்கு ஏற்படும் அபாயம் உள்ளது.

கொடிமுந்திரி

கொடிமுந்திரியையும் தாய்ப்பால் கொடுப்பவர்கள் அதிகமாக சாப்பிடக்கூடாது. ஏனென்றால் இது குழந்தைக்கு அடிக்கடி டயப்பரை மாற்றக்கூடியவாறு செய்துவிடும். ஒருவேளை உங்களுக்கு இப்பழத்தை உட்கொள்ள தோன்றினால், அளவாக உட்கொள்ளலாம். ஆனால் இதை அதிகமாக உட்கொள்ளக் கூடாது.

ஆப்பிள்

என்ன தான் ஆப்பிள் பழங்களிலேயே ஆரோக்கியமானதாக இருந்தாலும், தாய்ப்பால் கொடுப்பவர்கள் இப்பழத்தை அளவுக்கு அதிகமாக உட்கொள்ளக்கூடாது. ஏனெனில் இதில் உள்ள நார்ச்சத்து, குழந்தைக்கு மலச்சிக்கலை உண்டாக்கிவிடும்.