பரஸ்பர நிதி முதலீடுகளுக்கு எதிராக கடன் பெறுவது எப்படி?
how-avail-loan-against-mutual-funds-instantly
தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி
நாம் அனைவரும் பல்வேறு அவசர சூழ்நிலைகளை நம்முடைய வாழ்வில் கட்டாயம் எதிர்கொள்ள நேரிடும். அத்தகைய அவசர சூழ்நிலைகளைச் சமாளிக்க நம்முடைய நிதி நிலை கை கொடுக்காத போது, நாம் பல்வேறு வழிகளில் பணத்தைத் திரட்ட முயற்சி செய்திடுவோம். நம் முன்னே பல்வேறு வழிமுறைகள் உள்ள போதும், அதில் மிகச் சிறந்த மற்றும் சுலபமான வழியை மட்டுமே தேர்ந்தெடுப்போம். அத்தகைய சுலபமான வழிகளில் ஒன்று, நம்முடைய பரஸ்பர நிதி முதலீடுகளுக்கு ஈடாகக் கடன் பெறுவது. பரஸ்பர நிதி முதலீடுகளுக்கு எதிராகக் கடன் பெற இயலுமா? ஆம் எனில், எவ்வாறு கடன் பெறுவது? அதற்கான நடைமுறைகள் என்ன? இதைப் பற்றிய பல்வேறு விபரங்களை இந்தக் கட்டுரையில் நாம் விரிவாகக் காணலாம்.
எச்டிஎப்சி வங்கி சமீபத்தில் எச்.டி.எப்.சி வங்கி பரஸ்பர நிதிகளுக்கு (மியூச்சுவல் பண்ட்) எதிராக உடனடியாகக் கடன் வழங்கும் வசதியை தன்னுடைய இணைய வங்கி சேவையியல் இணைத்தது. இந்த வசதியை வழங்குவதற்காக, HDFC வங்கி CAMS உடன் இணைந்துள்ளது (இந்தியாவில் பரஸ்பர நிதி நிறுவனங்களுக்கான நான்கு R & T முகவர்களில் ஒருவர்).
10 மியூச்சுவல் பண்ட் தற்போது, ஹெச்டிஎப்சி வங்கியானது 10 பரஸ்பர நிதி நிறுவனங்களுடன் இணைந்து பரஸ்பர நிதிக்கு எதிராகக் கடன் வழங்கி வருகின்றது. இனி வரும் நாட்களில், என் பார்வையில், ஹெச்டிஎப்சி வங்கியானது பிற R & T முகவர்கள் மற்றும் பரஸ்பர நிதி நிறுவனங்களுடன் இணைந்து கடன் வழங்கும் வசதியை விரிவாக்க முயலும்.
ஏன் பரஸ்பர நிதியைப் பயன்படுத்தி உடனடியாகக் கடன் பெற வேண்டும்? நீங்கள் உங்களுக்கான அவசரக் கால நிதியைப் பாதுகாத்து வந்த போதிலும், உங்களுடைய திடீர் அவசரத் தேவைக்குத் தேவைப்படும் நிதியானது நீங்கள் சேமித்து வைத்திருக்கும் அவசரக்கால நிதியை விட அதிகமாக இருக்கலாம். அத்தகைய சூழ்நிலையைச் சமாளிக்க நீங்கள் உங்களுடைய நண்பர்களிடமோ, உறவினர்களிடமோ உதவிக் கேட்கலாம். அல்லது உங்களுடைய பல்வேறு முதலீடுகளை விற்க வேண்டும். இதுபோன்ற அவசரக்காலச் சூழ்நிலை மேலும் 2 அல்லது 3 மாதங்களுக்கு மட்டுமே தொடரும் என வெகு நிச்சயமாக உங்களுக்குத் தெரிந்தால், அத்தகைய சூழலில் உங்களுடைய முதலீடுகளை விற்பது, அல்லது உங்களுடைய SIP ஐ நிறுத்துவது மிகத் தவறான முடிவாகும். இத்தகைய சூழ்நிலையில், உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்கள் உங்களுக்கு உதவத் தயங்கும் பொழுது, உங்களுடைய பரஸ்பர நிதி முதலீட்டைப் பயன்படுத்திக் கடன் பெறுவது மட்டுமே உங்களுக்கான கடைசி வாய்ப்பாக அமையும்.
பரஸ்பர நிதியங்களுக்கு எதிரான கடன் பெறும் செயல் எவ்வாறு இயங்குகிறது? பரஸ்பர நிதிகளுக்கு எதிராகக் கடன் பெற நீங்கள் முடிவு செய்தவுடன், நீங்கள் வங்கிகள் அல்லது வங்கிசாரா நிதி நிறுவனங்கள் (வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள்) அணுக வேண்டும். அதற்கான பொதுவான தகுதி கீழே வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. பொதுவாக, 18 வயதிற்கு மேலான வயதிற்குட்பட்ட நபர்களுக்கு மட்டுமே கடன் வழங்கப்படும். சில வங்கிகள் கடன் வழங்க அதிகபட்ச வயது வரம்பை நிர்ணயித்துள்ளன.
தனிநபர் பங்கு நிதிகளுக்கு எதிரான கடன் அதை வைத்திருக்கும் தனிநபர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகின்றன. அதே சமயத்தில் பரஸ்பர நிதியை வைத்திருக்கும் இந்து பிரிக்கப்பதாத குடும்பம், (HUFs), நிறுவனங்கள், பங்குதாரர்கள், தனி உரிமையாளர்கள் போன்றவர்களுக்குக் கடன் வழங்கப்படுவதில்லை. எனினும், கடன் சார்ந்த பரஸ்பர நிதிகளை வைத்திருக்கும் தனிநபர்கள், பிரிக்கப்படாத இந்துக் குடும்பம் (HUFs), நிறுவனங்கள், கூட்டு ஸ்தாபனங்கள், தனி உரிமையாளர்களுக்குக் கடன் வழங்கப்படுகின்றது.
கடன் அளவு ஒவ்வொரு வங்கியும் அல்லது NBFC களும் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச கடன் தொகையை நிர்ணயிக்கின்றன. கடன் அளவு நீங்கள் வைத்திருக்கும் மொத்த நிதி மற்றும் அதனுடைய வகையைப் பொறுத்தது. கடன் அளவு பங்கு நிதிகளைப் பொருத்த வரை அதனுடைய மொத்த மதிப்பில் 50 சதவிகிதமாக இருக்கலாம். கடன் சார்ந்த பரஸ்பர நிதிகளைப் பொருத்தவரை கடன் அளவு 80% முதல் 85% வரை இருக்கலாம்.
சேவைக் கட்டணம் வங்கிகள் அல்லது என்.டி.எஃப்.சி.கள் இந்தக் கடன்களுக்குச் சில சேவை கட்டணங்களை வசூலிக்கலாம். எனவே இத்தகைய சேவைக் கட்டணங்களைப் பற்றி முழுவதுமாக அறியக் கடன் வழங்கும் வங்கி அல்லது நிதி நிறுவனங்களைத் தொடர்பு கொள்ளுங்கள். பொதுவாக, பரஸ்பர நிதியங்களுக்கு எதிரான கடன் மீதான வட்டி விகிதம் 10% முதல் 11% வரை இருக்கும்.
வங்கி கிளைகள் உங்கள் வங்கி அல்லது வங்கிசாரா நிதி நிறுவனங்கள் தன்னுடைய அனைத்துக் கிளைகளிலும் இந்தக் கடன் வழங்கும் வசதியை வழங்காது. எனவே, எந்தக் கிளையில் கடன் கிடைக்கும் என்பதைச் சரிபார்த்துக் கொள்வது மிகவும் நல்லது. வங்கிகள் பரஸ்பர நிதி அடமான கட்டணம் மற்றும் அதை விலக்கும் கட்டணம் போன்றவற்றை வசூலிக்கின்றன.
உங்களுடைய பரஸ்பர நிதிகளின் அடமானத்தை எவ்வாறு பதிவு செய்வது மற்றும் பதிவு செய்த அடமானத்தை எவ்வாறு அகற்றுவது? நீங்கள் வங்கி அல்லது வங்கிசாரா நிதி நிறுவனங்களிடம் இருந்து கடன் வாங்கியவுடன், அந்த நிறுவனம் CAMS அல்லது கார்வி போன்ற பரஸ்பர நிதி ஆர் & டி முகவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான யூனிட்களுக்கு எதிராக அடமானத்தைக் குறிப்பிட்டு, அந்த அடமான உரிமையைத் தனக்கு அளிக்கும் படி கோரிக்கை வைக்கும். R & T முகவர்கள், உங்கள் பரஸ்பர நிதி பிரிவுகளுக்கான அடமான உரிமைகளைக் குறித்த பின்னர் அந்த யூனிட்களுக்கான அடமான உரிமையைக் குறிக்கும் உறுதிப்படுத்திய பத்திரத்தை வங்கிகளுக்கு அனுப்புவதுடன் அதனுடைய ஒரு நகலை முதலீட்டாளர்களுக்கும் அனுப்பி வைக்கும். அது முடிந்தவுடன், உரிமையாளரான நீங்கள் அந்தப் பரஸ்பர நிதி அலகுகளை விற்பனை செய்யத் தகுதியற்றவர்கள் ஆகி விடுவீர்கள். யூனிட்கள் உங்களுடைய பெயரில் இருந்த போதிலும், அதில் நீங்கள் மேலும் முதலீடு செய்ய மட்டுமே தகுதி பெறுவீர்கள். ஆனால் அந்தப் பரஸ்பர நிதி அலகுகளை விற்க உங்களுக்கு உரிமை கிடையாது. ஏனெனில் அந்தப் பரஸ்பர நிதி அலகுகள் வங்கி அல்லது வங்கிசாரா நிதி நிறுவனத்தின் பெயரில் அடமானத்தில் இருக்கும். நீங்கள் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்திவிட்டால், வங்கி அல்லது வங்கிசாரா நிதி நிறுவனங்கள் அடமானத்தை விலக்கிக் கொள்வதாகப் பரஸ்பர நிதி முகவர்களுக்குக் கோரிக்கை கடிதத்தை அனுப்பும். ஒரு வேளை நீங்கள் வாங்கிய கடனில் ஒரு பகுதியை திரும்பச் செலுத்தி விட்டால், வங்கி அல்லது வங்கிசாரா நிதி நிறுவனங்கள் எந்தவொரு நிபந்தனையுமின்றி, அடமானத்தில் உள்ள அலகுகளின் ஒரு பகுதியை அடமானத்தில் இருந்து அகற்றுவதற்குக் கோரிக்கை அனுப்பலாம். அதன் படி அடமானத்தில் உள்ள மொத்த அலகுகளில் ஒரு பகுதி அலகுகளுக்கு அடமான உரிமம் அகற்றப்படும். அதன் பின்னர் அந்த அலகுகளை நீங்கள் விரும்பியபடி சந்தையில் விற்றுக் கொள்ளலாம். அதற்குரிய தகுதி உங்களுக்குக் கிடைத்து விடும்.
பரஸ்பர நிதிகளுக்கு எதிரான கடனை நீங்கள் திருப்பிச் செலுத்தாவிட்டால் என்ன நடக்கும்? வட்டி மற்றும் அசலை உங்களால் திருப்பிச் செலுத்த இயலாவிட்டால், உங்களுக்குக் கடனளித்த நிறுவனம் அடமான உரிமத்தை செயல்படுத்த தொடங்கும். அதாவது அடமான யூனிட்டுகளை விற்று, வருவாயை மீட்டெடுக்க அந்த நிறுவனங்கள் பரஸ்பர நிதி முகவர்களுக்குக் கோரிக்கையை அனுப்பும். அதன் பின்னர்ப் பரஸ்பர நிதி முகவர்கள் அடமான அலகுகளை விற்று அதற்குரிய பணத்தை உங்களுக்குக் கடன் அளித்தவர்களிடம் வழங்கி விடும்.

RUPEEDESK - SHARE MARKET TRAINING
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555