டெபிட் கார்டை(Debit Card)பாதுகாப்பாகப் பயன்படுத்துவது எப்படி?

டெபிட் கார்டை(Debit Card)பாதுகாப்பாகப் பயன்படுத்துவது எப்படி?
tips-use-debit-card-safely
   தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                        Click Here : Register for free
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
               
டெபிட் கார்டுகளின் மூலமாக செய்யப்படும் ஒவ்வொரு பரிவர்த்தனையையும் தொடர்ச்சியாகக் கண்காணிக்க வேண்டும். பாரத ஸ்டேட் வங்கி டெபிட் கார்டு பயன்பாடு குறித்த அறிவுரைகளை அவ்வப்போது தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. செல்கின்ற இடம் எல்லாம் பணத்தைக் கையில் எடுத்துச் செல்ல வேண்டிய சுமை, டெபிட் கார்டுகள் மூலமாக முற்றிலும் நீங்கிவிட்டது எனலாம். கிரடிட் கார்டுகளைப் போல டெபிட் கார்டுகள் வாடிக்கையாளர்களைக் கடனாளிகளாக மாற்றுவதில்லை. வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்பப் பல்வேறு வகையான டெபிட் கார்டுகளைப் பாரத ஸ்டேட் வங்கி வழங்குகிறது. இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி பிளாட்டினம் இண்டர்னேஷ்னல் டெபிட் கார்டு, ஸ்டேட் பாங்க் ஆப் கிரெடிட் கார்டு, ஸ்டேட் பாங்க் கிப்ட் கார்டு, ஸ்டேட் பாங்க் பெஹலா கதம் மற்றும் பெஹிலி போட்டொ டெபிட் கார்டு (பதினெட்டு வயது நிரம்பாதவர்களுக்காக), எஸ்பிஐ இண்டச் டேப் அண்ட் கோ டெபிட் கார்டு போன்ற பல வகையான டெபிட் கார்டுகளை வழங்குகிறது.

உங்களுடைய டெபிட் கார்டைப் பாதுகாப்பாகப் பயன்படுத்த 5 வழிமுறைகளை இங்கு பார்ப்போம்.

கண்காணித்தல் வாடிக்கையாளர்கள் தங்களுடைய டெபிட் கார்டு பயன்பாட்டைத் தொடர்ச்சியாகக் கண்காணிக்க வேண்டும்.

குறுந்தகவல் வாடிக்கையாளர்கள் டெபிட் கார்டைப் பயன்படுத்தும் ஒவ்வொரு பரிவர்த்தனையின் போதும் பாரத ஸ்டேட் வங்கி அது தொடர்பான குறுஞ்செய்தியை அனுப்புகிறது. அந்தக் குறுஞ்செய்தியோடு தங்களுடைய பரிவர்த்தனைகளை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

ரசீதுகள் ஏடிஎம் மூலமாக ஒவ்வொரு பரிவர்த்தனை முடிந்தவுடனும் பெறப்படும் ரசீதுகளைப் பத்திரமாகப் பாதுகாக்கவேண்டும் அல்லது பிறருடைய கையில் கிடைக்காத வண்ணம் அழித்துவிட கொள்ள வேண்டும்.

விவரங்கள் டெபிட் கார்டு, அல்லது கிரெட் கார்டு எண், பின் எண், சிவிவி எண் என எந்தத் தகவல்களையும் பிறருக்கு வழங்கக் கூடாது.

கட்டுப்பாடுகள் பொதுவாக, டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி ஒரு நாளைக்கு ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் பரிவர்த்தனையில் ஈடுபட முடியாது. எனவே, டெபிட் கார்டைப் பயன்படுத்திப் பெரும் தொகையில் பொருட்களை வாங்கும் பொழுது இதனைக் கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.