மெனோபாஸுக்கு பிறகும் மாதவிடாயை வரவழைக்க முடியுமா?
Can-menopause-come-after-Menses
குழந்தைப் பிறப்புக்கு இப்போது வயது வரம்பு என்பதே இல்லாமல் போய் விட்டது. மெனோபாஸுக்கு பிறகு கூட மாதவிடாயை வரவழைத்து, கருமுட்டையை தானம் பெற்று, குழந்தை உருவாகச் செய்கிற சிகிச்சைகள் பிரபலமாகி வருகின்றன.

மெனோபாஸ் என்பதே மாதவிடாய் முற்றுப் பெறுகிற ஒரு நிகழ்வு. தேவையின் அடிப்படையில் மெனோபாஸுக்கு பிறகும் மாதவிடாயை வரவழைக்க முடியுமா?‘முடியும்’ என்கிறார் மகப்பேறு மருத்துவர் ஜெயராணி. எப்படி? எதற்கு? என அதைப் பற்றிய விவரங்களை விளக்குகிறார் அவர்.
‘‘குழந்தைப் பிறப்புக்கு இப்போது வயது வரம்பு என்பதே இல்லாமல் போய் விட்டது. மெனோபாஸுக்கு பிறகு கூட மாதவிடாயை வரவழைத்து, கருமுட்டையை தானம் பெற்று, குழந்தை உருவாகச் செய்கிற சிகிச்சைகள் பிரபலமாகி வருகின்றன. ஆண்களுக்கு 80 வயதில் கூட விந்தணு உற்பத்தி இருக்கும். ஆனால், பெண்களுக்கு மெனோபாஸுக்கு பிறகு முட்டை உற்பத்தி நின்று விடும். மாதவிடாய் நின்றதும், கர்ப்பப் பை சுருங்க ஆரம்பிக்கும். அதை விரிவாக்க, ஹெச்.ஆர்.டி.
எனப்படுகிற ஹார்மோன் சிகிச்சை கொடுத்து, மாதவிலக்கை வரவழைப்போம். பிறகு தானமாகப் பெற்ற கருமுட்டையை, ஐ.வி.எஃப் முறையில் கணவரின் விந்தணுவுடன் சேர்த்து, 3 நாட்கள் இன்குபேட்டரில் வைத்திருந்து, பிறகு பெண்ணின் கருப்பையில் செலுத்தி வளரச் செய்வோம். இந்த சிகிச்சையைச் செய்வதற்கு முன்பாக பல விஷயங்களைப் பரிசீலிக்க வேண்டியது அவசியம். சம்பந்தப்பட்ட பெண்ணின் உடல், குறிப்பாக கர்ப்பப் பையின் ஆரோக்கியம் பார்க்கப்படும்.
சிறுநீரகங்கள், இதயம் என எல்லாம் சீரான இயக்கத்துடன் இருக்கின்றனவா எனப் பார்ப்போம். பெரும்பாலும் மாதவிடாய் நின்ற பின் குழந்தை பெற்றுக் கொள்கிற பெண்கள் வயதானவர்களாக இருப்பார்கள் என்பதால், வயோதிகத்தின் காரணமாக இயல்பாக அவர்களது உடலில் ஒரு தளர்ச்சி இருக்கும். கர்ப்பத்தின் காரண மாக ஏற்படும் மாற்றங்களுக்கு அவர்களது உடல் ஈடு கொடுக்குமா எனப் பார்த்துதான் இந்த சிகிச்சை யைத் தொடங்க வேண்டும். இல்லாவிட்டால், அவர்களது உயிருக்கே ஆபத்தாக முடியலாம்.
ஹெச்.ஆர்.டி. எனப்படுகிற ஹார்மோன் சிகிச்சை கொடுப்பதன் விளைவாக, உடலின் மற்ற உறுப்புகளும் பாதிப்புக்குள்ளாகலாம். அரிதாக சிலருக்கு புற்றுநோய் தாக்கும் அபாயமும் உண்டு. எனவே அதைக் கண்டறிய சில பிரத்யேக டெஸ்ட்டுகளை செய்து, புற்றுநோய்க்கான அபாயமிருக்கிறதா எனப் பார்ப்போம். பாதிப்பிருப்பது தெரிந்தால் சிகிச்சை கொடுக்க மாட்டோம். இது தவிர, கர்ப்பம் சுமக்க விரும்புகிற பெண்ணுக்கு, உறவினர் தரப்பிலிருந்து உதவிகள் இருக்குமா என்பதையும் கேட்டுத் தெரிந்து கொண்டு, கவுன்சலிங் கொடுத்த பிறகே சிகிச்சை ஆரம்பமாகும்.
6 முதல் 8 மாத காலத்துக்கு கர்ப்பப் பையை வளரச் செய்து, அதன் உள்சுவர் வளர சிகிச்சை அளித்து, பிறகுதான் கருமுட்டை தானம் பெற்று, அடுத்தடுத்த கட்ட சிகிச்சைகள் தொடரப்படும். ஹெச்.ஆர்.டி. சிகிச்சையில் சில நன்மைகளும் இருக்கின்றன. இந்த சிகிச்சையைக் கொடுப்பதன் மூலம் சம்பந்தப்பட்ட பெண்கள் இளமையாகவும், சந்தோஷமாகவும் உணர்வார்கள். அவர்களது சருமமும், கூந்தலும் அழகாக மாறும். இத்தகைய சிகிச்சையை மிக மிக நம்பகமான மருத்துவமனைகளில் மட்டுமே செய்து கொள்வது பாதுகாப்பானது

One to One Share Market Training - 9841986753
A Complete Share Market Course
தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள்

"Master your Skills " with our Research Head
For Appointment - Whatsapp - 9841986753மெனோபாஸுக்கு பிறகும் மாதவிடாயை வரவழைக்க முடியுமா?