சிறுநீர் கழிப்பது பற்றி அறியாத 15 உண்மைகள்

சிறுநீர் கழிப்பது பற்றி அறியாத 15 உண்மைகள்


தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 

சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 


மருத்துவம், வாழ்க்கைமுறை

நம் உடலில் தேவையானவற்றை ஊட்டச்சத்தாக, கொழுப்பாக பிரித்து எடுத்த பிறகு, வேண்டாதவற்றை உடல் மலமாகவும், சிறுநீராகவும் வெளியேற்றுகிறது.

மலம், மற்றும் சிறுநீர் உடலுக்கு வேண்டாதவை என்ற போதலும், ஒருவரது உடல் நலம் எப்படி இருக்கிறது? அவரது ஆரோக்கியம் சீர்குலைந்து வருகிறதா? ஒருவரது உடலில் என்ன நோய் தொற்று அல்லது நோய் தாக்கம் ஏற்பட்டுள்ளது என்பதை மலம் மற்றும் சிறுநீரில் ஏற்படும் மாற்றங்களை வைத்து கண்டறிய முடியும்!


 சிறுநீர் கழிப்பதில் இருந்து நாம் தெரிந்துக் கொள்ள வேண்டிய சில உண்மைகளை பற்றி பார்க்கலாம்…

உண்மை #1

ஒருநாளுக்கு ஒருவர் 7 முறை வரை சிறுநீர் கழிப்பது சாதாரணமாகும். இதை காட்டிலும், மிக குறைவாக அல்லது அதிகமாக சிறுநீர் கழிப்பது உங்கள் ஆரோக்கியத்தில் ஏதோ மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதன் அறிகுறி.

உண்மை #2

நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் என்றால் குறைந்தபட்சம் 7 நொடிகளாவது சிறுநீர் கழிப்பீர்கள். மிக அவசரமாக சிறுநீர் கழிப்பது போன்ற உணர்வு இருந்தும் 2 நொடிகள் மட்டும் சிறுநீர் கழிக்கிறீர்கள் என்றால் நீங்கள் ஏதோ தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என அர்த்தம்.

உண்மை #3

முதிர்ச்சி அடைந்த ஓர் நபரின் சிறுநீர்ப்பை 300 – 500 மி.லி அளவிலான சிறுநீரை அடக்கி வைத்துக் கொள்ளும் அளவிற்கும்.

உண்மை #4

ரோமர்கள் அவர்களது சிறுநீரை கொப்பளிக்கும் பழக்கம் கொண்டிருந்தனர். சிறுநீரில் இருக்கும் அமோனியா பற்களை வெள்ளையாக வைத்துக் கொள்ள உதவும் என அவர்கள் எண்ணினார்.

உண்மை #5

உங்கள் சிறுநீரின் நிறத்தை வைத்தே உங்கள் உடல்நிலையை பற்றி அறிந்துக் கொள்ள முடியும்.,

வெள்ளை (சுத்தமாக) – நீர்ச்சத்து அதிகமாக இருக்கிறது.

வெளிறிய மஞ்சள் – போதுமான அளவு நீர்ச்சத்து

மஞ்சள் – உடலில் நீரச்சத்து குறைந்து வருகிறது.

பிரவுன் – கல்லீரல் தொற்று / பழைய இரத்தம்.

சிவப்பு / பின்க் – தூய இரத்தம் சிறுநீரில் கலந்துவருகிறது / சிறுநீரக கோளாறு / புற்றுநோய்.

நீளம், பச்சை – தவறான மருந்துகள் உட்கொள்ளுதல் / உணவில் அதிகப்படியான சாயம் கலப்பு

உண்மை #6

சிறுநீர் கழிக்கும் போது இனிப்பு வாசனை வருகிறது எனில், உங்களுக்கு நீரிழிவு / சர்க்கரை நோய் ஏற்பட்டுள்ளது என்பதன் அறிகுறி.

உண்மை #7

சிறுநீர் மிகவும் துர்நாற்றம் வீசுகிறது எனில், சிறுநீரகத்தின் வழியாக க்ளூகோஸ் மற்றும் புரதம் அதிகப்படியாக வெளியேறுகிறது என்று அர்த்தம்.


உண்மை #8

மருத்துவர்கள் ஒளிகுர்யா (oliguria) எனும் ஓர் நிலை இருக்கிறது. இது, நீங்கள் போதுமான அளவு சிறுநீர் கழிப்பது இல்லை என்பதை வெளிக்காட்டுகிறது என்கின்றனர்.

உண்மை #9

நாம் கழிக்கும் சிறுநீரில் சோடியம், பொட்டாசியம் மற்றும் க்ளோரைட் போன்ற 3000 வகையிலான கூறுகள் இருக்கின்றன.

உண்மை #10

டூனா, காரமான உணவுகள், காபி போன்ற உணவுகளை அதிகமாக உட்கொள்வதால் உங்கள் சிறுநீரின் நாற்றத்தில் மாற்றம் உண்டாக்கும்.

உண்மை #11

காட்டில் அல்லது ஆட்கள் இல்லாத இடத்தில் தொலைந்து போனாலோ, கையில் நீர் இல்லாத சமையத்தில் சிறுநீரை அருந்தலாம் என சிலர் கூறுவதுண்டு. ஆனால், இது தவறு. சிறுநீரில் இருக்கும் அதிகப்படியான உப்பு, உடலில் நீர் வறட்சி உண்டாக காரணியாக அமையும்.

உண்மை #12

Parauresis எனப்படுவது சிறுநீர் கழிக்க வெட்கப்படும் நிலை ஆகும். அருகில் யாரேனும் இருந்தால் சிலர் சிறுநீர் கழிக்க சங்கோஜப்படுவார்கள்.

உண்மை #13

நீச்சல் குளத்தில் குளிக்கும் போது கண்கள் சிவப்பது குளோரின் காரணத்தால் அல்ல. நீச்சல் குளத்தில் அதிகமாக சிறுநீர் கலப்பு ஏற்பட்டிருப்பதால்.

உண்மை #14

குழந்தைகள் கருப்பையில் இருக்கும் போதே சிறுநீர் கழிக்க துவங்கிவிடுவார்கள்.

உண்மை #15

காலையில் முதன் முறை கழிக்கும் சிறுநீரில் அமிலத்தன்மை அதிகமாக இருக்கும். இதை ஆங்கிலத்தில் மார்னிங் பீ என்று கூறுகின்றனர்.