குழந்தைகளுக்குக் கட்டாயம் கற்றுக்கொடுக்க வேண்டிய 9 விஷயங்கள்

குழந்தைகளுக்குக் கட்டாயம் கற்றுக்கொடுக்க வேண்டிய 9 விஷயங்கள்

    தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

அதிகத் தாமதமாவதற்கு முன் உங்கள் பிள்ளைகளுக்குப் பண விஷயங்களைப் பற்றி இப்போதே கற்றுக் கொடுங்கள். உங்கள் பிள்ளைகள் நிதிகளை நிர்வகிப்பதற்கான அடிப்படைகளைத் தெரிந்து கொள்ளாமல் அவர்கள் சுயமாக வாழத் தொடங்குவதற்கு எந்த ஒரு பெற்றோர்களும் விரும்பமாட்டார்கள்.

சரி பிள்ளைகளுக்குப் பணம் குறித்த விஷயங்களைக் கற்றுக்கொடுக்க வயது வரம்பு ஏதேனும் உள்ளதா..? என்றால் சத்தியமாக இல்லை, இதுவும் இன்றைய போட்டி மிகுந்த காலத்தில் இல்லவேஇல்லை. குழந்தைகளுக்கு ஒழுக்கத்தைச் சொல்லிக்கொடுப்பது போலவே நிதி, பணம் சார்ந்த விஷயங்களைக் கற்றுக்கொடுக்கலாம்.

அவர்கள் நிதி சார்ந்த விஷயங்களில் பொறுப்புள்ள பிள்ளைகளாக வளர்கிறார்களா என்பதை உறுதி செய்து கொள்ளவும் இந்த முயற்சி பெற்றோர்களுக்கு உதவும். அப்படிப் பெற்றோர்கள் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டிய 9 பணம் குறித்த புரிதல் அல்லது பாடத்தையே இப்போது பார்க்கப்போகிறோம்.

பண அணுகுமுறை
நீங்கள் ஒவ்வொரு நிதி முடிவிற்கும் தகுதியைக் கருத்தில் கொள்ளும் மற்றும் மிகுந்த நிதானமாகச் சிந்தித்துச் செயல்படும் வகை நபராக இருந்தால், உங்கள் பிள்ளைகளும் உங்களது அணுகுமுறையைப் பற்றிக் கொள்ளும் சாத்தியங்கள் அதிகம்.

உங்கள் பணப் பழக்க வழக்கங்களைக் குடும்பத்தோடு அமர்ந்து சிந்தியுங்கள், எனவே நீங்கள் கல்லூரிக்கு அனுப்பிய உங்கள் பிள்ளைகளிடம் என்ன எதிர்பார்க்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரிய வரும்.

பணம் மரத்தில் காய்ப்பதில்லை
ஆரம்பத்திலேயே கற்றுக் கொள்ள வேண்டிய மிக முக்கியமான ஒரே பணப் பாடம் என்னவென்றால், உங்களிடம் ஏராளமான பணம் இருந்தாலும் கூட அதற்கு மாற்றுப் பயன்பாடுகள் எப்பொழுதும் இருந்து வருகின்றன.

ஒரு மாதாந்திர படித்தொகைக்கு ஒப்புக்கொண்டு அதைக் கடைப்பிடிக்கவும். புத்தகங்கள், உறுப்பினர் சந்தா, பயணம் மற்றும் இதர பெரிய டிக்கெட் பொருட்கள் போன்ற அனைத்து இதர செலவுகளைப் பற்றியும் உங்களுக்கு நல்ல யோசனை இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் மேலும் அவற்றிற்கு முன்கூட்டியே பணத்தை வழங்கிவிடுங்கள்.

பட்ஜெட்டை தயாரிப்பு
வரவு செலவுத் திட்டம் என்பது ஒரு குடும்பக் கண்டிப்பாக இருக்க வேண்டும். அதில் எதற்காக எவ்வளவு செலவு செய்யப்படுகிறது என்பதை உங்கள் குழந்தைகளும் ஒப்புக்கொள்ள வேண்டும்.

கட்டாய மற்றும் விருப்பச் செலவுகள் உட்பட வாழ்க்கைச் செலவுகளை மதிப்பீடு செய்வதை ஒரு நடைமுறை பயிற்சியாக மேற்கொள்ளுங்கள். உங்கள் குழந்தை இதர சிறிய ஆடம்பரங்களுக்கு ஆசைப்பட்டால், பகுதி நேர வேலைகளை எடுத்துச் செய்யுமாறு பிள்ளைகளை ஊக்குவியுங்கள்.

நிதிப் பரிமாற்றங்களைப் பற்றி அவர்களுக்குக் கற்றுக் கொடுங்கள்.
எப்படி மின்னணு பணப் பரிவர்த்தனைகள் செய்ய வேண்டும், எப்படி வங்கிக் கணக்கைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும், மின்னணு வாலட்டை எப்படி நிர்வகிக்க வேண்டும் மற்றும் ரொக்கப் பணப் பயன்பாட்டை எவ்வாறு குறைக்கலாம், அதன் மூலம் கணக்கு வைப்பு எவ்வாறு எளிதாகிறது என்பதைப் பற்றி உங்கள் பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுங்கள். கணக்கு வழக்குகளை உங்களிடம் பகிர்ந்து கொள்ளுமாறு கேளுங்கள்.

கண்காணிப்பு மற்றும் கவனிப்பு
அவர்களுடைய பணப் பழக்க வழக்கங்கள் அவர்களுடைய சகோதரர்கள் மற்றும் நண்பர்களால் கவனிக்கப்படுகிறது என்பதையும் மேலும் அது ஒரு குழுவில் பணப் பரிவர்த்தனைகள் எவ்வாறு நிகழும் என்பதற்கான அடித்தளத்தை அமைக்கும் என்பதையும் உங்கள் பிள்ளைகளுக்கு நினைவுப்படுத்துங்கள். செலவுகளைச் சமமாகப் பிரிப்பது சிறந்தது என்று அவர்களுக்கு அறிவுறுத்துங்கள். நண்பர்களுக்குக் கடன் கொடுப்பதென்றால் கண்டிப்பாகக் கூடவே கூடாது என்று சொல்லுங்கள்.

காலம் தவறாமல் நடந்து கொள்ளுங்கள்
ஒரு குறிப்பிட்ட தேதியை அமைத்து, அந்தத் தேதிக்குள் வாக்குறுதி அளித்தபடி பணத்தை அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தி விட்டீர்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், இதன் மூலம் உங்கள் பிள்ளைகள் பணம் வரவில் வைக்கப்படும் தேதி வரை காத்திருக்கவும் அதைக் கொண்டு தங்களைச் சிறப்பாக நிர்வகித்துக் கொள்ளவும் கற்றுக் கொள்கிறார்கள். அவசர நெருக்கடி கால நிலைகளுக்காக ஒரு வரையறுக்கப்பட்ட தொகையைச் செலுத்தி அதை அவர்களுடைய வங்கிக் கணக்கிலேயே விட்டு வையுங்கள்.

பாதுகாப்பான வங்கியியல் நடைமுறைகள்
பாதுகாப்பான வங்கியியல் நடைமுறைகள், கிரெடிட் கார்டை பயன்படுத்துதல், ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகள் ஆகியவற்றின் அடிப்படை விதிமுறைகளை உங்கள் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுங்கள். டெபிட் கார்டுகள் தொலைந்து விட்டாலோ அல்லது அவை தவறாகப் பயன்படுத்துவதைக் கண்டறிந்தாலோ என்ன செய்ய வேண்டும் என்பதை அவர்கள் தெரிந்து வைத்திருக்கிறார்களா என்று உறுதி செய்து கொள்ளுங்கள்.

வங்கிக் கணக்கு
உங்கள் பிள்ளைகளை முதல் அல்லது இரண்டாம் கணக்குதாரராகக் கொண்ட வீட்டிற்கான பின்னணியைக் கொண்ட முதலீடுகள் செய்யப்பட்டிருந்தால், அவர்கள் 18 வயதை அடைந்த பிறகு அந்தக் கணக்குகளை உங்களால் அணுக முடியாது. அவர்கள் வீட்டை விட்டு படிப்பிற்காகவோ வேலைக்காகவோ வெளியிடங்களுக்குச் செல்லும் முன் அத்தகைய வங்கிக் கணக்குகளைச் சிறியவர்களுக்கான வங்கிக் கணக்கிலிருந்து பெரியவர்களுக்கான வங்கிக் கணக்காக மாற்றி விடுங்கள். அவர்களுடைய கையொப்பங்கள் வங்கிகளால் உண்மையானதெனச் சான்றொப்பமிட்டு உறுதி செய்யப்பட்டுச் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

நிதி சுதந்திரம்


காலப்போக்கில் நீங்கள் அவர்களுடைய நிதி சார்ந்த விஷயங்களிலிருந்து விலகி நிற்பீர்கள் என்பதை அவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள். அவர்களுடைய சம்பளம் எவ்வளவு என்பதைத் தெரிந்துக் கொள்ளவோ அல்லது அதை மற்றவர்களுடன் ஒப்பிடுவதிலோ அதிகப்படியான ஆர்வத்துடன் இருக்காதீர்கள். அவர்கள் கடுமையாக உழைத்துப் பெற்ற நிதி சுதந்திரத்தை அவர்களை மகிழ்ச்சியுடன் அனுபவிக்க அனுமதியுங்கள்.