மியூச்சுவல் ஃபண்டில்(Mutual Fund) முதலீடு செய்வதற்கான பல்வேறு வழிகள் யாவை?

மியூச்சுவல் ஃபண்டில்(Mutual Fund) முதலீடு செய்வதற்கான பல்வேறு வழிகள் யாவை?


               தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 


முதலீட்டுச் சந்தையில் பல்வேறு வகையான மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள் கிடைக்கப்பெறுகின்றன. அவை உங்கள் வாழ்நாள் முழுவதற்குமான தேவைகளுக்கு ஏற்ப பொருந்தக்கூடிய பல்வேறு திட்டங்களை வழங்குகின்றன.

மியூச்சுவல் ஃபண்டு திட்டத்தில் முதலீடு செய்யும் பல்வேறு வழிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

முகவர்
இந்த முறையைப் பற்றி உங்களுக்கு மிக நன்றாகத் தெரிந்திருக்கலாம். இது தான் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும் மிகப் பழமையான மற்றும் பொதுவான வழிமுறையாகும். இந்தத் துறையில் நிபுணராக உள்ள ஒரு முகவரை நீங்கள் தொடர்பு கொள்ளலாம். செலவழித்த பணத்தின் மீது நீங்கள் அவருக்குத் தரகுப் பணம் எதுவும் தரத் தேவையில்லை. பரஸ்பர நிதி நிறுவனமே அதைச் செலுத்தும். அது செலவு விகிதத்தின் ஒரு பகுதியை உருவாக்குகிறது.

எந்தப் பரஸ்பர நிதியை வாங்க வேண்டுமென்று முகவர் உங்களுக்கு வழி காட்டுவார். உள்நுழைவு வசதிகளைக் கொண்ட பல நிறுவனங்களுடன் நிறைய முகவர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். உங்கள் பரஸ்பர நிதி எவ்வாறு செயல்படுகிறது என்பதை நீங்கள் உள்நுழைந்து பார்க்கலாம்.

ஏஎம்சி
ஏஎம்சி என்பதற்குச் சொத்து மேலாண்மை நிறுவனம் என்பது பொருளாகும். நீங்கள் ஏஎம்சி வழியாக நேரடியாக முதலீடு செய்யலாம். முதலீடு செய்வதற்கு இணைய வசதிகளை வழங்கும் நிறைய நிறுவனங்கள் இருக்கின்றன.

முதல் முறை நீங்கள் முதலீடு செய்ய நேரடியாக ஏஎம்சி அலுவலகத்திற்குச் செல்லலாம். அதன் பிறகு, நீங்கள் அந்தப் பரஸ்பர நிதி நிறுவனத்தில் அவர்களின் இணையத்தளத்தின் வழியாக இணையத்தில் முதலீடு செய்யலாம். நீங்கள் வெவ்வேறு ஏஎம்சி க்களின் நிதித் திட்டங்களில் முதலீடு செய்ய விரும்பினால் நீங்கள் அனைத்து நிறுவனங்களையும் சென்று பார்க்க வேண்டும். சொத்து மேலாண்மை நிறுவனத்தின் மூலமாக நேரடியாக முதலீடு செய்யச் சிப் முதலீட்டுத் திட்டங்கள் சிறந்த வழியாகும்.

ஏஎம்எஃப்ஐ இணையத்தளம்
நீங்கள் ஏஎம்எஃப்ஐ இணையத்தளத்திற்கு மூலமாகவும் முதலீடு செய்யத் துவங்கலாம். இந்திய மியூச்சுவல் ஃபண்டு சங்கத்தின் இணையத்தளம் நாடு முழுவதிலுமுள்ள பரஸ்பர நிதிகளின் முகவர்களின் பட்டியலைக் கொண்டுள்ளது. அங்கே முதலீட்டாளர்களின் மண்டலம் என்கிற ஒரு தலைப்பை நீங்கள் காணலாம். அதன் கீழ் ஏஆர்என் தேடல் என்கிற மற்றொரு தலைப்பைக் காணலாம். இது ஏஎம்எஃப்ஐ பதிவு எண்ணை குறிக்கிறது. அந்த எண் மீது சொடுக்குங்கள், இப்போது நீங்கள் ஒரு புதிய பக்கத்திற்கு வருவீர்கள். உங்கள் அஞ்சல் குறியீட்டு எண் அல்லது உங்கள் நகரத்தின் பெயரை வைப்பதன் மூலம் உங்கள் பகுதியில் உள்ள முகவரின் இருப்பிடத்தைக் கண்டறியலாம்.

டீமேட் கணக்கு வழியாக முதலீடு செய்தல்
நீங்கள் ஒரு டீமேட் கணக்கு வைத்திருந்தால், அது பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்வதற்கான மிக வசதியான முறைகளில் ஒன்றாகும். இங்கே நீங்கள் தரகு செலுத்த வேண்டும். சிலர் சமநிலையான கட்டணத்தை வசூலிக்கின்றனர். சிலர் சதவிகிதத்தின் அடிப்படையில் வசூலிக்கின்றனர். டீமேட் கணக்கின் வழியாகப் பரஸ்பர நிதிகளை நீங்கள் வாங்குதல் மற்றும் விற்றல் மூலமாக, நீங்கள் ஒரே இடத்திலிருந்து அனைத்தையும் கட்டுப்படுத்தலாம். ஜியோஜித் பத்திரங்கள், ஹெச்டிஎஃப்சி பத்திரங்கள், ஐசிஐசிஐ டைரக்ட், இந்தியா புல்ஸ், ஷேர் கான் போன்றவை இந்தத் துறையில் நன்கு அறியப்பட்டவை.

வலைத் தளங்கள்
உங்களை மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய அனுமதிக்கும் நிறைய இணைய வலைத் தளங்கள் இருக்கின்றன. நீங்கள் வெறுமனே அதில் ஒரு கணக்கைத் தொடங்குங்கள். அவர்கள் அனைத்து ஆவணங்களையும் உங்கள் வீட்டிற்கே அனுப்புவார்கள். நீங்கள் ஒற்றைப் பைசா கூடச் செலுத்த தேவையில்லை. ஃபண்ட்ஸ் இந்தியா, ஃபண்ட்ஸ் சூப்பர் மார்க்கெட் போன்றவை அது போன்ற இணையத் தளங்களாகும். ஏஎம்சி யிலிருந்து கிடைக்கும் பங்குத் தொகை அவற்றின் முக்கிய வருமானமாகும். பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்வதற்கு முன் உங்கள் நிதியியல் திட்டவியலாளர் அல்லது ஆலோசகரிடம் சரிபார்த்துக் கொள்ளுமாறு எப்பொழுதும் அறிவுறுத்தப்படுகிறது.

வங்கி


இப்போதெல்லாம் சில வங்கிகள் மியூச்சுவல் ஃபண்டு முகவர்களாகச் செயல்படுகின்றன. அருகாமையிலுள்ள உங்கள் வங்கிக் கிளைக்கு வருகை தந்து, அவர்கள் ஏதேனும் பரஸ்பர நிதித் திட்டங்களை விற்கிறார்களா என்று கேளுங்கள். நீங்கள் முதலீடு செய்ய விரும்பும் நிதி இல்லத்துடன் அவர்கள் கூட்டுறவு வைத்திருக்கிறார்களா என்று பாருங்கள்.