கால்சியம் குறைபாடு (Calcium Deficiency Symptoms) எப்படி தெரிந்து கொள்வது?

கால்சியம் குறைபாடு (Calcium Deficiency Symptoms) எப்படி தெரிந்து கொள்வது?


    தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

கால்சியம் உடலில் குறைவாக இருந்தால் பல் மற்றும் எலும்பு பிரச்சனைகள் வரும் என்பது மட்டும் தான் தெரியும். ஆனால் அதையும் மீறி வேறு சில பிரச்சனைகளையும் சந்திக்கக்கூடும். எலும்புகளின் வலிமைக்கும், பற்களின்  ஆரோக்கியத்திற்கும் கால்சியம் சத்து மிகவும் இன்றியமையாதது என்று தெரியும். அதே சமயம் தசைகள் மற்றும் நரம்புகளின் சீரான இயக்கத்திற்கும் கால்சியம் சத்து முக்கியமானது என்பது தெரியுமா?

உங்களுக்கு நகம் எளிதில் உடைகிறதா? அப்படியெனில் உங்களுக்கு கால்சியம் சத்து குறைவாக உள்ளது என்று அர்த்தம். நகங்கள் உடைவது மட்டுமின்றி, நகங்களில் தோல் உரிந்தாலும், அது உடலில் போதிய அளவில் கால்சியம் இல்லை  என்பதற்கான அறிகுறி.

கால்சியம் உடலில் குறைவாக இருந்தால், அடிக்கடி திடீரென்று சதைகளுக்கு இறுக்கம் ஏற்படும். அதனைத் தொடர்ந்து தசைப்  பிடிப்புகள் அல்லது வலியை உணரக்கூடும்.

கால்சியம் குறைபாட்டினால் ஞாபக மறதி ஏற்படும். ஏனெனில் கால்சியம் உடலில் குறைவாக இருக்கும் போது, அதன் எதிர்விளைவாக நரம்பு மண்டலம் மோசமாக பாதிக்கப்பட்டு, ஞாபக மறதியை ஏற்படுத்துகிறது.

உடலில் கால்சியம் சத்து குறைவாக இருக்கும் போது, நிறைய பேர் கை மற்றும் கால்கள் மதமதப்புடன் இருப்பது போல்  உணர்வார்கள். ஏனெனில் கால்சியம் குறைவாக இருப்பதால் நரம்புகள் மற்றும் தசைகள் அதன் வலிமையை இழந்து, எளிதில்  தளர்ச்சி அடைகிறது.

கால்சியம் குறைபாடு ஒருவரின் உடல் ஆரோக்கியத்தை மட்டுமின்றி, மன ஆரோக்கியத்தையும் தான் பாதிக்கும். கால்சியம்  குறைபாடு, மன இறுக்கமும், மிகுதியான அளவில் உடல் சோர்வை சந்திக்கக்கூடும். மேலும் அடிக்கடி உடல்நிலை  சரியில்லாதவாறு உணரக்கூடும்.

கால்சியம் குறைபாடு உள்ளவர்க்ள், அடிக்கடி குமட்டலுடன், பசியின்மையையும் சந்திப்பார்கள். உணவு உண்ணாமலேயே வயிறு  நிறைந்திருப்பது போன்றவையாகும்.

Symptoms for calcium deficiency:

Some of the symptoms that may occur in the absence of this important mineral are:

Joint pain and frequent fractures on the body
Brittle nails
Insomnia
Muscle cramps
Eczema
Numbness in legs and arms
If left untreated, lack of calcium can lead to osteoporosis. Osteoporosis is a disease of the skeletal system, which leads to reduced elasticity of the bones and the occurrence of fracture.