முகச்சுருக்கத்தை போக்கும் இயற்கை வழிமுறை

முகச்சுருக்கத்தை போக்கும் இயற்கை வழிமுறை


தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 

சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 



முகச்சுருக்கத்தைப் போக்க, இயற்கை வழிமுறைக்கு மாறுங்கள். இதுதான் உங்கள் சருமத்துக்குப் பாதுகாக்க சிறந்த வழியாகும்.

முகச்சுருக்கத்தைப் போக்க, இயற்கை வழிமுறைக்கு மாறுங்கள். அல்லது மருத்துவரின் ஆலோசனைபெற்று, உங்கள் சருமத்துக்கு உகந்த கிரீம்களைப் பயன்படுத்துங்கள். இதுதான் உங்கள் சருமத்துக்குப் பாதுகாக்க சிறந்த வழியாகும்.

* தினந்தோறும் குறைந்தது 3 முதல் 4 லிட்டர் வரை தண்ணீர் குடியுங்கள்.

* இளநீர், நுங்கு, தர்ப்பூசணி, புடலங்காய், பூசணி, சுரைக்காய், வெள்ளரி போன்ற நீர்ச்சத்து நிறைந்த காய், கனிகளை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

* தினமும் வைட்டமின் ஏ நிறைந்த கேரட், மூன்று நிற வகைப் பழங்கள் சாப்பிடுங்கள். சருமத்துக்குப் பொலிவைத் தந்து இளமைத் தோற்றத்தைத் தக்கவைக்கும்.

* மறக்காமல் உடற்பயிற்சி செய்யுங்கள்.

* அடிக்கடி முகத்தை நன்றாகக் கழுவிச் சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள்.

* குளித்தவுடன் முகத்தை அழுத்தித் தேய்க்காமல், துணியால் மெதுவாக ஒத்தி எடுக்க வேண்டும்.

* மனதில் கவலையைக் குறைத்துக்கொண்டாலே போதும். முகத்தில் எப்போதும் இளமையும், புத்துணர்வும் தாண்டவமாடும்.

* கிரீம்கள் வாங்கும் போது என்னென்ன ரசாயனப் பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளன, அவற்றின் நன்மை, தீமை என்ன என்பதை அறிந்துதான் கிரீமை வாங்க வேண்டும்.

*ஆல்பா ஹைட்ராக்சி ஆசிட் (Alpha hydoxy acid) என்ற ஃப்ரூட் ஆசிட் தோலின் நிறம் மற்றும் தன்மையை மாற்றக்கூடியது. வெள்ளரிக்காய், பப்பாளி, எலுமிச்சை போன்ற பழங்களால் செய்யப்பட்ட அழகு கிரீம்கள் நல்ல பலனைத் தரும். அதனால், இவற்றை நம்பி வாங்கலாம்.



*சன் புரொடக்ஷன் ஃபேக்டர் (SPF) 30 இருப்பதைத் தேர்ந்தெடுங்கள்.