ஏன் விநாயகரை முதலில் வணங்க வேண்டும்

 ஏன் விநாயகரை முதலில் வணங்க வேண்டும்


  தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 



 நமக்கெல்லாம் தெரிந்த விநாயகரும்(வலம்புரி
விநாயகர்,இடம்புரி விநாயகர்) மற்றும் விநாயகரைப்பற்றி தெரியாத ரகசியமும் தொடர்பான அரிய பதிவு:

ஆன்மீகத்தில் இருக்கும் விநாயகர் வழிபாடு தொடர்பான மிக ரகசியமான ஒரு விஷயத்தை இங்கே உங்களுக்காக பதிவிடுகிறேன்.

நமது மூளை வலப்பகுதி,இடப்பகுதி என இரண்டு பிரிவுகளாக உள்ளது உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும்.

மூளையின் இடது, வலது பாகங்கள்தான் நம் உடலின் அத்தனை செய்கைகளுக்கும் காரணம்.

இடப்பக்க மூளை, உடலின் வலது பாகத்தையும், வலப்பக்க மூளை, உடலின் இடது பாகத்தையும் கட்டுப்படுத்துகிறது என்கிறது விஞ்ஞானம்.

இதையே நம் சாஸ்திரம் பிங்கலை, இடங்கலை,நாடிகள் என வரையறுக்கிறது.

உடலின் செயல் வலது ,இடது என பிரிக்கப்பட்டு செயல்படுகிறது.

உங்கள் வலது பக்க மூளை செயல்படும் பொழுது உங்கள் இடது நாசி துவாரத்தில் சுவாசம் வரும்.

 அதே போல இடது பக்க மூளை இயங்கும் பொழுது வலது நாசியில் சுவாசம் வரும்.

நாடி சாஸ்த்திரத்தை பற்றி விரிவாக காண்பதல்ல நம் நோக்கம்.

இந்த நாடி சிந்தாந்தத்தை குறிக்கும் வகையில் தான் விநாயகரின் துதிக்கையை வலம்புரியாகவும் இடம்புரியாகவும் நமது முன்னோர்கள் அமைந்திருக்கின்றார்கள்

இனி கோவிலில் விநாயகரை வணங்கும் பொழுது உங்களின் நாசியில் வரும் சுவாசத்தை கவனியுங்கள்.

 விநாயகரின் துதிக்கை எந்த பக்கத்தில் இருக்கிறதோ அந்த பக்கம் உங்களின் நாசியில் சுவாசம் வரும்.

வலம்புரி விநாயகராக இருந்தால் உங்கள் வலது நாசியிலும், இடம்புரி விநாயகராக இருந்தால் உங்கள் இடது நாசியிலும் சுவாசம் வருவதை காணலாம்.

வெளியே இருக்கும் நான் தான் உன் உள்ளேயும் இருக்கிறேன் என பிள்ளையார் கூறும் விஷயம் இது.

என்ன ஆச்சரியமாக இருக்கிறதா?

விநாயகர் விக்ரஹத்தின் இந்த அரிய இரகசியத்தை முயற்சி செய்து பார்த்து உணர்ந்து கொள்ளவும்.

வலது நாசியின் வழியாக உள்ளே செல்லும் காற்றிற்கு சூரிய கலை என்றும்; இடது நாசியின் வழியாக உள்ளே செல்லும் காற்றிற்கு சந்திர கலை என்றும் நமது முன்னோர்கள் பெயர் சூட்டியுள்ளனர்.

இந்த இரண்டு சுவாசங்களுக்கும் தனித்தனிப் பண்புகளும் வெவ்வேறு வகையான செயல்பாடுகளும் உள்ளன.

வலது நாசிக் காற்று (சூரிய கலை)

* உடலுக்குத் தேவையான வெப்ப சக்தியைத் தருகின்ற பிராணன் இதுவே.

* வலது நாசியின் வழியாக சுவாசம் நடைபெறும் காலகட்டத்தில் உடலின் வெப்ப நிலை சற்றே உயரும்.

* உடல் சுறுசுறுப்படையும்; சோர்வு அகலும்.

* உடலின் வலிமை அதிகரிக்கும்.

* மூளையும் உடலும் பரபரப்பாக இயங்கும்.

* இந்த இரண்டு மணி நேரத்தில் நிதானம் குறைவாகவும், வேகம் அதிகமாகவும் இருக்கும்.

இடது நாசிக் காற்று (சந்திர கலை)

* உடலைக் குளிர்விக்கும் தன்மை கொண்டது.

* சந்திரனைப் போன்றே இந்த மூச்சுக் காற்றும் குளுமையானதாகும்.

* இடது நாசி வழியே சுவாசம் நடைபெறும் வேளையில் உடலின் வெப்ப நிலை சற்றே குறைந்து, உடல் குளிர்ச்சியடையும்.

* பரபரப்புத் தன்மை குறைந்து, மனதிலும் உடலிலும் ஒரு சாந்தத் தன்மை உருவாகும்.

* மூளை அமைதியாக சிந்திக்கத் துவங்கும்.

* அவசரத் தன்மை மறைந்து, நிதானமான மனநிலை நிலவும்.

விநாயகப்பெருமானின் கல் விக்ரஹத்திற்கு உங்கள் சுவாசம் சம்பந்தப்பட்ட சூரிய கலை மற்றும் சந்திர கலைகளை மேம்படுத்தும் இத்தகைய ஆற்றல் இருப்பதால்  தான் அவரை முதலில் வணங்க வேண்டும் என்கிறார்கள்.

பிராணன் (சுவாசம்)இல்லாமல் நாம் ஏது? அத்தகைய பிராணனை சுத்தப்படுத்தவே அவரை அரசமரத்தடியில் அமரச்செய்து அவரை வழிபடுவதன் மூலம் அரசமரம் நாளொன்றுக்கு வெளியிடும் 2400 கிலோ பிராண வாயுவை சுவாசித்தும், கருப்பை கோளாறுகளை போக்கியும்  அரசமரக் காற்றினால் மூளையின் செயல்பாடுகளை தூண்டி, மன அமைதியை பெறுகின்றோம்.

விநாயகரின் விக்ரஹ மகிமையை எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் பிள்ளையாருக்கு பிறப்பில்லை .

அதனால் தான் நாம் விநாயகர் ஜெயந்தி என கொண்டாடுவதில்லை.

விநாயகர் சதுர்த்தி என கொண்டாடுகிறோம். ..!

ஆவணி மாத சுக்லபக்‌ஷ சதுர்த்தி திதி பிரணவ மந்திரத்தின் நாளாக , பிரணவ ரூபனின் நாளாக கொண்டாடுகிறோம்.

எனவே வாருங்கள்! விநாயகப்பெருமானின் கல் விக்ரஹத்திற்கு உங்கள் சுவாசம் சம்பந்தப்பட்ட சூரிய கலை மற்றும் சந்திர கலைகளை மேம்படுத்தும்  ஆற்றல் இருப்பதால்  அவரை வணங்கி  ஞானத்தின் வழியில் சென்று அவர் கையில் இருக்கும் மோதகமாவோம்.