த்ரெட்டிங் பண்ணலாமா?

த்ரெட்டிங் பண்ணலாமா?



               தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 


த்ரெட்டிங் செய்துகொள்ளாத பெண்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு, இள வயது முதல் 50 ப்ளஸில் இருப்பவர்கள் வரை பலரும் புருவம் திருத்தும் முறையை விரும்பி செய்துகொள்கிறார்கள். த்ரெட்டிங் அழகு தரும் என்பதெல்லாம் சரி... ஆரோக்கியமானதுதானா? சருமநல நிபுணர் வானதி திருநாவுக்கரசுவிடம் கேட்டோம்...

‘‘Threading என்பது மிகவும் கவனமாக செய்ய வேண்டிய ஓர் அழகு சிகிச்சை. இல்லாவிட்டால் பல பிரச்னைகள் வர வாய்ப்புண்டு. சிலருக்கு ஒவ்வாமையினால் தோல் சிவந்து புண்கள் வரும். சிலருக்கு அரிப்பு ஏற்பட்டு எக்ஸிமா என்ற தோல் நோய்கூட வரலாம். இதனால் புண் ஆறியவுடன் அந்த இடம் கறுத்துப் போகவோ அல்லது வெண்ணிறமாகவோ ஆகிவிடும். வெளிப்படையாகத் தெரியாத வெண்புள்ளி நோய் த்ரெட்டிங் செய்வதால் சிறு புண் உண்டாவதன் மூலம் தூண்டப்பட்டு மற்ற இடங்களுக்கும் பரவக்கூடும். சொரியாசிஸ் உள்ளவர்களின் சருமம் மிகவும் சென்சிடிவ்வாக இருக்கும் என்பதால் த்ரெட்டிங் செய்யும்போது மிக வேகமாக முகம் முழுவதும் சொரியாசிஸ் பரவக்கூடும்.

மேலும் சிலருக்கு, மயிர்க்கால்களின் வேரில் நோய்த்தொற்று ஏற்பட்டு சிறு சிறு கொப்புளங்களும் வரக்கூடும். பொதுவாக, ஓரிரண்டு நாட்களில் இது சரியாகிவிட்டாலும் சிலருக்கு இந்த நோய்த்தொற்று மோசமாகவிடவும் வாய்ப்புண்டு. ஒருசிலருக்கு பாலுண்ணி, மரு போன்றவை நெற்றியில் இருந்தால் த்ரெட்டிங் செய்யும் இடத்தில் சிறு புண் ஏற்பட்டால் அதன்மூலமும் பரவிவிடும். த்ரெட்டிங் செய்து விடுபவர்களின் கைகளில் ஏதேனும் நோய்த்தொற்று இருந்தால் அவர்களிடமிருந்து செய்து கொள்பவர்களுக்கு பரவலாம். அதனால், த்ரெட்டிங்கை யோசித்து கவனமாகத்தான் செய்துகொள்ள வேண்டும். குறிப்பாக, கர்ப்பிணிகள் த்ரெட்டிங் செய்து கொள்வது ஆபத்தானது. எனவே, புருவ சீர்திருத்தம் மேற்கொள்ளும் முன் சம்பந்தப்பட்ட பார்லர் சுகாதாரமானதா என்பதையும், தகுதியானவர்கள்தான் த்ரெட்டிங் செய்கிறார்களா என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். வீட்டிலேயே ட்ரிம்மர் கொண்டு புருவத்தை சரிசெய்து கொள்வது இன்னும் பாதுகாப்பானது.’’