சிறுநீரக கற்களை கரைக்கும் பழச்சாறுகள் !
கால்சியம் மற்றும் ஆக்ஸலேட் கனிமங்களால் சிறுநீரக கற்கள் உருவாகின்றது. சிறுநீரக கற்கள் மோசமான உணவு பழக்கங்களினாலும், பரம்பரை காரணமாகவும் ஏற்படுகிறது. சிறுநீரக கற்கள் இருந்தால் சிறுநீர் கழிக்கும் போது வலியை ஏற்படுத்தும். சிறுநீரக கற்களை கரைக்கும் சில இயற்கை பானங்களை பார்க்கலாம்.
துளசி டீ
துளசியில் தயாரிக்கப்பட்ட டீ அல்லது ஜூஸ் சிறுநீரகத்திற்கு நல்லது. இது சிறுநீரகத்தை சுத்தப்படுத்தி வலிமை படுத்தும் ஆற்றல் கொண்டது. மேலும் துளசி இரத்தத்தில் உள்ள யூரிக் அமிலத்தின் அளவை குறைக்கும். துளசியில் அசிட்டிக் அமிலம் உள்ளதால் இது சிறுநீரக கற்களை உடைத்தெரியும். துளசி டீயை தொடர்ந்து பருகினால் சிறுநீரக கற்களில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
மாதுளை
மாதுளை உடலுக்கு நன்மைகள் பல தரக்கூடிய பழங்களில் ஒன்று. மாதுளையை அப்படியே சாப்பிட்டாலும், ஜூஸ் செய்து பருகினாலும் பலன் உண்டு. இது இரத்தத்தில் உள்ள அசிடிட்டி யின் அளவை குறைத்து டாக்ஸின்களை வெளியேற்றும்.
ஆப்பிள் ஜூஸ்
ஆப்பிள் ஜூஸ் தினமும் குடித்து வருபவர்கள் சிறுநீரக கற்கள் அபாயத்திலிருந்து விடுபடலாம். ஆப்பிள் ஜூஸ் குடித்து வருபவர்களுக்கு மற்றவர்களைவிட சிறுநீர் கற்கள் உருவாகும் வாய்ப்பு குறைவு.
இஞ்சி
இஞ்சியில் ஆன்டி பாக்டீரியல் மற்றும் நோய் எதிர்ப்பு அழற்சி தன்மை உள்ளது. இதில் மக்னீசியத்தின் அளவும் அதிகம் உள்ளது. எனவே இதனை தினமும் குடித்து வந்தால் சிறுநீரக கற்களில் அளவு குறைந்து சிறுநீர் வழியே வெளியாகிவிடும்.
தர்பூசணி
தர்பூசணி சிறுநீரக கற்களை வெளியேற்றும் மருந்துகளில் ஒன்று. ஏனெனில் தர்பூசணியில் சிறுநீரில் உள்ள அமிலத்தின் அளவை சீராக பராமரிக்கும் பொட்டாசியம் அதிகம் உள்ளது. எனவே சிறுநீரக கற்களை வெளியேற்ற தர்பூசணியை சாப்பிட்டு வரலாம்.
எலுமிச்சை
எலுமிச்சை சிட்ரேட் என்னும் உட்பொருள் உள்ளது. இது சிறுநீரக கற்களை கரைத்து கற்களை வெளியேற்றிவிடும் தன்மை கொண்டது.