இனிப்புகள் மேல் ஒட்டப்படும் சில்வர் பாயில்

இனிப்புகள் மேல் ஒட்டப்படும் சில்வர் பாயில்... பாதுகாப்பானது தானா????


காஜோல் மற்றும் அஜய் தேவகன் நடிக்கும் விளம்பரத்தில் வரும் சில்வர் ஃபாயில் நிஜ சில்வர் போல பேசுவார்கள் அது சாத்தியமா???

இனிப்பின் மேல் ஒட்டப்படும் ஜரிகை தாளின் பெயர் ‘வராக்’!
பலவித இனிப்புகள், பான் மசாலா, சிலவகை சிரப்புகள் என இந்த சரிகை தாள் எல்லா இடங்களிலும் பரவி உள்ளது.
‘வராக்’ எனப்படும் இந்த ஜரிகைதாள் மாட்டின் குடல் கொண்டு தான் தயாரிக்கப்படுகிறது.

வராக்’ தயாரிப்பு விவரம்..
இறைச்சிக்காக மாட்டை கொன்றவுடன் அதன் குடல் பகுதியை மட்டும் தனியாக எடுத்து, அதிலுள்ள ரத்தம் மற்றும் மலம் போன்ற கழிவுகளை சுத்தம் செய்து,
இந்த ‘வராக்’ தயாரிப்பாளர்களிடம் விற்பனை செய்வார்கள்.

மாடு இறந்த உடனேயே இந்த குடல் எடுக்கப்பட்டுவிடும். இல்லையென்றால் அது விறைத்து விடும்.

#செய்முறை
ஒரு மாட்டின் குடல் 540 இன்ச் நீளமும் 3 இன்ச் அகலமும் கொண்டது. இதை சுத்தம் செய்து நீளாக வெட்டினால் 540 இன்ச்10 என விரியும்.
‘வராக்’ தயாரிப்பாளர்கள் 9ஙீ10 என்ற வீதத்தில் இதை வெட்டி ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைப்பார்கள்.
ஒரு நோட்புக் போல இது இருக்கும். இப்போது தான் ‘வெள்ளி’ வருகிறது.

மெலிசான வெள்ளி தகட்டை, வெட்டப்பட்டு அடுக்கி வைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு குடலுக்கு இடையில் வைத்து மொத்தத்தையும் ஒரு தோல் பையில் வைத்து இறுக்கி கட்டுவார்கள்.

மெல்லிய சரிகை தாளாக மாறுவது எப்படி?
இந்த தோல் மூட்டையை 1 அல்லது 2 நாள் வரை விடாது அடிப்பார்கள். இப்படி அடித்து, அடித்து அந்த வெள்ளி தகட்டை மெல்லிய தாள்களாக மாற்றுவார்கள்.
பிறகு அதை தோல் பையிலிருந்து எடுத்து, குடல்களை நீக்கி, வெள்ளி தாள்களை அடுக்கி வைப்பார்கள்.

இந்த தயாரிக்கப்பட்ட வெள்ளி சரிகை தாள்கள் மொத்தமாக ஸ்வீட் தயாரிப்பாளர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
160 வெள்ளி சரிகை தாள்கள் கொண்ட ஒரு கட்டின் விலை 200 ரூபாய்.
இந்த வெள்ளி சரிகை தாள்களைதான் ஸ்வீட்டுகளின் மேல் அழகுக்காக பரப்பிவிடுகிறார்கள்.

சைவ உணவர் இனிப்பு வகைகள்?
முட்டை கூட தொடாத சைவ பிரியர்கள் விவரம் தெரியாமலேயே இந்த ‘சரிகை தாள்’ கொண்ட இனிப்பை சாப்பிடுகிறார்கள். பாவம்...
தோல் பெட்டியில் வைத்து அடிக்கப்படும் வெள்ளி தகடுகள், மெல்லிய தாள்களாக மாறும் போது, குடலில் உள்ள திசுக்கள் இந்த தாளில் கலக்கிறது.
இப்படியாக சைவ இனிப்பு அசைவ இனிப்பாக மாறுகிறது.

ஆபத்தான #அசைவம்..

ஸ்வீட் சாப்பிடும் போது நமக்கு தெரியாமலேயே, மாட்டு குடல்களில் உள்ள கிருமிகள் மற்றும் குடல் புழுக்களின் முட்டைகள் ஆகியவற்றை நாம் சாப்பிடுகிறோம்.
அசைவம் உண்பவர்கள் கூட குடல்களை சாப்பிடுவதில்லை. இதை சாப்பிடுவதால் பல வித கொடூரமான நோய்கள் நம்மை தாக்குகின்றன.

ஏமாற்று வேலை!!!

இனிப்பு தயாரிப்பாளர்கள் தெரிந்தே மக்களை ஏமாற்றுகிறார்கள்.
இந்த வராக் எனப்படும் வெள்ளி சரிகை தாள், எப்படி தயாரிக்கிறார்கள் என்பது இனிப்பு தயாரிப்பாளர்களுக்கு மிக நன்றாக தெரியும்.

இது குறித்து எடுக்கப்பட்ட ஒரு புள்ளிவிவரத்தின்படி, ஒரு வருஷத்திற்கு 2,75,000 கிலோ ‘வராக்’ உண்கிறோம்
இதை செய்ய 275 டன் வெள்ளி தேவை படுகிறது.
5,16,000 மாடுகள் மற்றும் 17,200 கன்றுகளின் தோல்கள் தேவைபடுகிறது.

இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் இந்த வெள்ளி தாளால் மூடப்பட்ட இனிப்புகளை பரிமாறி வந்தனர்.
இந்த வெள்ளி தாள் தயாரிப்புசெய்தி அறிந்ததும் நிறுத்தி விட்டனர்.
ஆனால், இதைபற்றி அறிந்தும் இன்னும் பல பிரபல இனிப்பு நிறுவனங்கள், இந்த வெட்ககேடான செயலை செய்து வருகிறார்கள்.