தலையில் நீர்கோர்த்துவிட்டதா?
வேப்பரம் மரத்தின் இலைகள், காய், வேர் என அனைத்துமே மருத்துவ குணங்களை கொண்டது.
மருத்துவ பயன்கள்
1. வேப்பம் பூவை உலர்த்தி பொடியாக்கி மஞ்சள் தூளுடன் கலந்து தேய்த்துக் குளித்து வந்தால் தோல் வியாதி நீங்கிவிடும்.
2. தினமும் வேப்ப இலைகளை நீரில் போட்டு வைத்து விட்டு ஒரிரு மணி நேரம் கழித்து குளிக்க தோல் வியாதியே வராமல் இருக்கும்.
3.வேப்ப இலை கொத்துகள் நான்கை எடுத்து தண்டு மட்டும் வெண்ணீரில் படுமாறு செய்து கால்மணி நேரம் ஊறவையுங்கள். பிறகு அந்த சாற்றை இரண்டு நாட்கள் குடித்து வர வயிற்று எரிச்சல் நிற்கும்.
4,தலையில் நீர்கோர்த்துவிட்டால் வேப்பம் இலையை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து ஆவி பிடிக்கலாம்.
5.வேப்பிலை சாற்றை எடுத்து மோருடன் கலந்து சாப்பிட வயிற்று பூச்சிகள் ஓழியும்.
6.வேப்பம் பூவை லேசாக வாட்டி தலையில் கட்டிக் கொண்டால் பேன், பொடுகு, ஈறு போன்றவை அகன்று விடும்.
7.வேப்பிலைக் கொழுந்தை தினமும் பச்சையாகச் சிறிதளவு மென்று வந்தால் வயிறு சம்பந்தமான தொல்லைகள் வரவே வராது.
8.வேப்பிலைக் கொழுந்தை இடித்து சாறு பிழிந்து அதில் சிறிது தேனைச் சேர்த்து இரவு உணவுக்குப் பின் சாப்பிட்டு வந்தால் வயிற்றில் உள்ள பூச்சிகள் இறந்தோ உயிருடனோ உடலை விட்டு வெளியேறிவிடும்.
9.வேப்பம்பூவை ரசம் வைத்து சாப்பிட்டால் கோடை காலங்களில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்கலாம், மேலும் பார்வை சம்பந்தமான வியாதிகள் நிவர்த்தியாவதோடு, ரத்த ஓட்டமும் சீராகும்.
வேப்பம்பூ ரசம்
கடலைப்பருப்பு, தனியா, மிளகு, காய்ந்த மிளகாய் , பெருங்காயத்தூள், தக்காளி ஆகியவற்றை வறுத்து அரைத்து எடுக்கவும்.
இதனுடன் தேவையான புளித் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு, உப்பு சேர்க்கவும்.
எண்ணெயில் கடுகு, வேப்பம்பூ தாளித்துச் சேர்த்து, ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.