தேங்காயெண்ணெய்

'நல்லதைத் தடுத்துக் கெட்டதை கொடுப்பதுதான் கார்ப்பரேட் கொள்கை'
----------------------------------------
‘தேங்காயெண்ணெய்
=======================

சுத்தமாக எடுக்கப்படும் தேங்காயெண்ணெயும், தேங்காய்ப் பாலும் உலகிலேயே சிறந்த உணவாக இப்போது அனைத்து உணவு ஆராய்ய்சியாளர்களாலும் கொண்டாடப்படுகிறது. தேங்காய்ப்பாலையும், தேங்காயெண்ணெய்யையும் பயன்படுத்தினால், கொலஸ்ட்ரால் உருவாகும், இரத்த அழுத்தம் அதிகப்படும், இயதநோய் அதிகரிக்கும் என்ற பொய்ப் புரட்டுவாதங்கள், கார்ப்பரேட் முதலாளிகளாலும், அவர்களால் தயார்படுத்தப்பட்ட மருத்துவத் துறையினராலும் திட்டமிட்டு நம்நாடுகளில் இதுவரை பரப்பப்பட்டு வந்திருக்கின்றது. சூரியகாந்தி எண்ணெய், தாவர எண்ணெய் போன்ற சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்களை விற்பனைக்கு கொண்டுவந்து நம் சுகாதாரத்தை அழித்துக் கோடிக்கணக்கான பணத்தைக் கொள்ளையடிக்கும் பெருமுதலாளிகளின் விற்பனைத் தந்திரம் இது. அத்துடன் ‘மாஜரீன்’ என்னும் தாவர வெண்ணெய் வகைகளையும் விற்பனைக்குக் கொண்டுவந்த தந்திரம்.
தேங்காய்ப் பாலினாலும்,. தேங்காயெண்ணெயினாலும் நமக்குத் தீங்கு வரவே வராது. காரணம் தேங்காய்ப்பாலிலும், தேங்காயெண்ணெயிலும் இருப்பது நல்ல கொழுப்பு. உடலுக்கு மிகவும் தேவையான கொழுப்பு. இது உடலுக்குத் தீங்குகள் செய்யாமல் பல வகைகளில் நமக்கு நன்மைகளையே செய்கின்றது. அந்த அளவுக்கு நல்ல கொழுப்பு அது.
’அது என்ன நல்ல கொழுப்பு?’
நம் உடலுக்குச் செல்லும் கொழுப்பில் மூன்று வகைகள் உண்டு. அவற்றை LDL (Low Density Lipoprotein), MDL (Medium Density Lipoprotein), HDL (High Density Lipoprotein) என்பார்கள். கொழுப்பு என்பது கார்பன் (C) மூலகம் சங்கிலிபோல இணைந்து உருவாகிய ஒரு மூலக்கூறு. LDL கொழுப்பு வகைகளில், 1 முதல் 5 கார்பன்கள் இணைந்து இருக்கும். MDL கொழுப்பு வகைகளில், 6 முதல் 12 கார்பன்கள் இணைந்திருக்கும். HDL வகைக் கொழுப்புகளில், 12 க்கும் அதிகமான கான்பன்கள் இணைந்திருக்கும். இந்தக் கொழுப்புகளில் LDL என்னும் கொழுப்புத்தான் மிகவும் ஆபத்தான கொழுப்பு. தங்கத்தின் நிறத்தில் ஜொலிக்கும் வர்ணங்களில் அழகாகக் காணப்படும் ’ரீஃபைன்’ எண்ணெய்கள் என்று விற்பனை செய்யப்படும் எண்ணெய்கள் அனைத்தும் இந்த LDL கொழுப்புகள்தான். HDL என்பது மனித உடலுக்கு அவ்வளவு ஆபத்தானது அல்ல. உடலில் சேரும் LDL கொழுப்புகளை நீக்கி அகற்றும் பணியை இந்த HDL வகைக் கொழுப்புகள் செய்கின்றன. அசுத்தத்தை அகற்றும் தொழிலாளிபோலத் தொழிற்படும். ஆனால் MDL கொழுப்புகள்தான் மனிதனுக்கு மிகவும் நன்மை செய்யும் கொழுப்பாகும். இந்தக் கொழுப்பின் மூலம் கேட்டோன் (Ketone) உருவாகி, அவை மூளையெங்கும் பயணம் செய்து 'அல்ஷ்ஹைமர்’, ‘பார்க்கின்சன்’ போன்ற நோய்கள் உருவாகாமல் தடுக்கின்றன. தேங்காயெண்ணெயில் MDL கொழுப்புத்தான் இருக்கிறது. மேற்படி நோய்கள் யாருக்கும் வந்தாலும், தேங்காயெண்ணெயை தினம் மூன்றுவேளை ஒரு கரண்டியளவு உட்கொண்டு வந்தால், அந்த நோய்கள் இரண்டொரு மாதங்களில் நீங்கிவிடுகின்றன.
தேங்காயெண்ணெயினால், அல்ஷ்ஹைமர், பார்க்கின்சன் நோய்கள் மட்டுமில்லாமல், ‘ஆட்டிசம், ALS போன்ற நோய்களும் வெகுவாகக் குறைகின்றன. தேங்காயெண்ணெய் ஒரு சஞ்சீவி மருந்து. நம்மையறியாமலே அதை நாம் உணவுகளில் பயன்படுத்தி வந்திருக்கிறோம். ஆனால் இப்போது சிலரால் ஏமாற்றப்பட்டு தவிர்க்க ஆரம்பித்திருக்கிறோம்.
'நல்லதைத் தடுத்துக் கெட்டதை கொடுப்பதுதான் கார்ப்பரேட் கொள்கை'