ஈசனுக்கு உகந்த நாகலிங்கப் பூவின் மகிமைகள்

ஈசனுக்கு உகந்த நாகலிங்கப் பூவின் மகிமைகள்


ஓம் நமச்சிவாய நமஹ என்று 1001 முறை ஜபித்தப் பின்னரே,நாகலிங்கப் பூவைத் தொடும் அருகதை நமக்கு வருகின்றது;

அதே போல,நாகலிங்கப் பூவை ஈசனுக்கு சாத்தவேண்டும் என்று விரும்பினால்,21 சாதுக்களுக்கு அன்னதானம் செய்யவேண்டும்;அதன் பிறகு தான் நாகலிங்கப் பூவை ஈசனுக்கு சாத்தவேண்டும்;இப்படி முறைப்படி செய்தால் மட்டுமே நாகலிங்கப் பூவை ஈசனுக்கு அணிவித்த புண்ணியம் நமக்குக் கிட்டும்;

நாகலிங்கப் பூவின் மேல் பகுதியில் கோடி கன்னிகா தான சக்தியைக் கொண்டிருக்கின்றது;
நாகலிங்கப்பூவின் நடுப்பகுதி 10,000 கோவில்களின் கோபுரசக்தியைச் சேர்ந்தது;
நாகலிங்கப்பூவின் அடிப்பகுதி கோவில் குளம் வெட்டிய சக்தியைக் கொண்டிருக்கிறது;
நாகலிங்கப்பூவின் நடுவில் சிறியதாக ஒரு சிவலிங்கம் இருக்கும்;இதற்கு ஆத்மலிங்கம் என்று பெயர்;இத்தனை சிறப்புடைய நாகலிங்கப்பூவை மேலே கூறிய விதத்தில் பயன்படுத்தினால் மட்டுமே நமக்குப் புண்ணியம் கிட்டும்;

நாகலிங்கப் பூ உருவான வரலாறு 8,00,000 ஆண்டுகளைக் கொண்டது;விரிவான விளக்கம் பெற “அஷ்ட திக்கு பாலகர்கள் மகிமை-பாகம் 6”(ஏற்றம் தரும் எட்டு திக்குகள்) என்ற நூலை வாங்கி வாசிக்கவும்;வெளியீடு ஸ்ரீ ல ஸ்ரீ அகத்தியர் ஆஸ்ரமம்,திரு அண்ணாமலை விலை ரூ.20/-

சித்தர்களின் தலைவர் அகத்தியரும்,அவரின் சீடர் போகரும் உரையாடுவது போல வடிவமைக்கப்பட்டிருக்கின்றது;இக்கருத்துக்கள் இந்த நூலில் இருந்து நன்றியோடு வெளியிடப்படுகின்றது;

ஓம் அகத்தீசாய நமஹ
ஓம் அருணாச்சலாய நமஹ